Sunday, February 04, 2007

புதிய வணிக செய்தித்தாள்

இந்தியாவின் வணிக செய்தித்தாள்கள் அனைத்துமே சுமாரான தரத்தவைதான். தி எகனாமிக் டைம்ஸ் வெற்று பந்தா. செய்திகளை ஆராய்ந்து பின்னணியை விளக்கமாகத் தர அவர்கள் முயற்சி செய்வதேயில்லை. சிதம்பரத்தை வைத்து ஒருநாள், நாராயண மூர்த்தியை வைத்து ஒருநாள், ஒருவேளை ஷில்பா ஷெட்டியை வைத்து ஒருநாள் என்று செய்தித்தாளை எடிட் செய்து அந்த விளம்பரத்தில் வாழ்க்கையை நடத்திவிடுவார்கள். பல நிறுவனங்களிலும் நெருக்கமான தொடர்பு இருப்பதால் அதைக்கொண்டு breaking news பலவற்றை முதலில் வெளியிடுவதுதான் இவர்களது சிறப்பு.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் எவ்வளவோ தேவலாம். இப்பொழுதைக்கு பிற செய்தித்தாள்களைவிட இதுதான் விஷயகனத்தில் முன்னணியில் உள்ளது என்பேன். ஹிந்து பிசினஸ்லைனுக்கு என்று சிறப்பாக ஒன்றையும் சொல்லமுடியாது. ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் முதலில் தாளின் தரத்தை அதிகப்படுத்துவதில் ஆரம்பித்து செய்யவேண்டியது நிறைய உள்ளது.

என்னைப்போன்ற பலர் (அலுவலகத்தில்) இந்த நான்கு செய்தித்தாள்களையும் வாங்கிவிடுவர். ஆனால் இரண்டை முழுதாகப் படித்து முடிப்பதற்கே எனக்கு நேரம் இருக்காது. பொதுவாக நான் பிசினஸ் ஸ்டாண்டர்டை முழுவதுமாகப் படிப்பேன்; எகனாமிக் டைம்ஸை வேகமாகப் பக்கம் புரட்டி அதிர்ச்சியாக ஏதாவது கண்ணில் படுகிறதா என்று பார்ப்பேன். பிசினஸ்லைனை அவ்வப்போது பார்ப்பதோடு சரி. ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் நேராகக் குப்பைக்குப் போனாலும் காசு கொடுத்து வாங்கிவிடுவது வாடிக்கை.

இப்பொழுது ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமமும் வால் ஸ்டிரீட் ஜர்னலும் சேர்ந்து இந்தியாவில் மிண்ட் (Mint) என்ற பெயரில் புதிய பத்திரிகையைத் தொடங்கியுள்ளனர். பிசினஸ் ஸ்டாண்டர்ட் எந்த அளவுக்கு அதன் பங்குதாரர் லண்டன் ஃபைனான்ஷியல் டைம்ஸிடமிருந்து இதழியல் நுட்பங்களைப் பெறுகிறது என்று தெரியவில்லை. மிண்ட், வால் ஸ்டிரீட் ஜர்னலிடமிருந்து நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டு அவற்றைச் செயல்படுத்தினால் ஒரே ஆண்டில் இந்தியாவின் முன்னணி வணிக செய்தித்தாளாக ஆகமுடியும்.

2 comments:

  1. //இப்பொழுது ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமமும் வால் ஸ்டிரீட் ஜர்னலும் சேர்ந்து இந்தியாவில் மிண்ட் (Mint) என்ற பெயரில் புதிய பத்திரிகையைத் தொடங்கியுள்ளனர்.//


    http://users1.wsj.com/lmda/do/checkLogin?mg=wsj-users1&url=http%3A%2F%2Fonline.wsj.com%2Farticle%2FSB108492473553815259.html%3Fmod%3Dopinion_main_commentaries

    This is what WSJ had to say about our Indian democracy when BJP lost in general election in 2004..

    " Don't waste time on the electorate. "The lesson of the past week is that if India truly wants to become an economic power it has to pay heed to the global voters known as investors, in addition to its own voters at home." We can listen to our people .

    "Don't waste time on the electorate".

    What does this above lines supposed to mean?

    ReplyDelete
  2. The Economic Times is a pink non-sense.

    Business Standard....yeah really best among the lot...but, soon they'll wind up due to their inherent commercial disadvantages...(unless someone resurrect)

    Businessline is better in reporting Logistics related news and marketing related issues

    FE....yup trash

    ReplyDelete