Thursday, February 22, 2007

விவேகானந்தா கல்லூரி பிரச்னை



சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. சுமார் பத்து நாள்களுக்கு முன் என்று நினைக்கிறேன். நான் அந்தப் பக்கமாகத்தான் தினமும் காலை அலுவலகம் செல்வேன். மாணவர்கள் கூட்டமாகத் தெருவில் நின்று கொண்டிருந்தனர். ஓரிரு நாள்கள் கழித்து செய்தித்தாளில் கல்லூரி நிர்வாகம் கல்லூரியை மூடியுள்ளதாகப் படித்தேன். தினமும் தெருவில் போகும் வழியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களைப் பார்ப்பேன்.

இன்னமும் முழுதாகத் தகவல்கள் எனக்குத் தெரியவில்லை. ஆனால் போஸ்டர்களைப் படித்தால் ஓரளவுக்குச் செய்தி உங்களுக்கே புரிந்துவிடும்.



இன்னமும் மூன்று போஸ்டர்களின் படங்களை இங்கே சென்று பார்க்கலாம்: ஒன்று | இரண்டு | மூன்று

பாஸ்டன் பாலா செய்திப் பதிவு

6 comments:

  1. பிரச்சனை இருக்கு என்று தெரிகிறது,இரண்டாவது பக்கம் தெரியாமல்- போஸ்டரை பார்த்து எதுவும் சொல்லமுடியாதே!!
    அதற்கும் ஜாதி சாயம் அடிப்பது தான் "இடிக்கிறது".
    பார்ப்போம்,பத்திரிக்கைகளில் ஏதாவது வரும்.
    அதற்குள் "தமிழ்மணத்தில்" ஜல்லி அடிக்க நிறைய பதிவுகளுக்கு இது தீனியாகட்டும்.

    ReplyDelete
  2. சென்னை விவேகானந்தர் கல்லூரி முழுமையான அளவில் பார்ப்பனத் தர்பார் கொடி கட்டி பறக்கிறது. பார்ப்பனரல்லாத மாணவர்கள் பழி வாங்கப்படுகின்றனர். மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    சென்னை மாநகரில் செயல்படும் ஆர்.கே.எம். விவேகானந்தர் கல்லூரியில் பல வருடங்களாக மாணவர்கள் மீது அக்கல்லூரி நிருவாகிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அராஜகங்கள் ஏராளம், ஏராளம்... ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரால் தேவையற்ற சட்டத்திட்டங்களை கல்லூரி மாணவர்களிடம் திணிக்கின்றனர். விடுதி மாணவர்களோ அடிமைகள்போல நடத்தப்பட்டு வருகின்றனர்.

    யாரால்? மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய சுவாமி விவேகானந்தரின் சீடர் என்ற பெயரால் செயல்படும் விவேகானந்தர் கல்லூரியின் செயலாளர் சுவாமி சத்திய பிரியானந்தா மற்றும் கல்லூரியின் முதலாளி வி.வி. சுப்பிரமணியம் மற்றும் எஸ். ரமேஷ், ஏ.எஸ். கண்ணன் என பலர்.

    இவர்கள் கொடுமையின் விளைவு, பி.எஸ்.சி., (Mathematics) முதலாம் ஆண்டு மாணவன் மணிகண்டன், சுவாமி (?) சத்திய பிரியானந்தாவின் கொடுமையைத் தாங்க முடியாமல் பிப். 2 அன்று காலை 10 மணிக்கு விடுதி அறை ஒன்றில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான். மயக்கமடைந்த மாணவனை சுரேஷ் என்ற கல்லூரியில் பணிபுரிபவர் இஸபெல்லா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனையில் ரூ. 650 பணம் கட்டி அம்மாணவனை சேர்க்க அறிவுறுத்தியும், நிருவாகம் இப்பிரச்சினையை மூடி மறைக்கும் அளவு அவனை அவன் சொந்த ஊரான ராமேசுவரத்திற்கு பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.

    அப்படியென்ன கொடுமைகள் அக்கல்லூரியில்...? அக்கல்லூரியின் விடுதியில்...? பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும்.
    அக்கல்லூரியின் விடுதியில் தவிர்க்க இயலாத காரணத்தினால் பிரார்த்தனைக்கு செல்ல இயலாத மணவர்களுக்கு தணடனையாக குறைந்தது ஒரு வாரத்திற்கு உணவளிக்க மறுப்பது,கல்லூரி பிரார்த்தனை வகுப்பில் சுவாமிஜி சமஸ்கிருதத்தில் பேசிய உரையை 10 நாள்கள் கழித்து விடுதி மாணவர்களிடம் ஞாபகப்படுத்தி கூறுமாறு அவகாசமே அளிக்காது கேள்வி கேட்கப்படுகிறது. கூற இயலாத மாணவர்களுக்கு அன்றைய உணவு கிடையாது. சுவாமிஜி அறைமுன் ஒரு மணிநேரம் மண்டியிட வேண்டும். மறுக்கும் மாணவர்களை விடுதியைவிட்டு வெளியேற்றியுள்ளனர். மற்றும் 1000 ரூபாய் அபராதமும் வாங்கியுள்ளனர்.
    தன்னிடம் வந்து ஆசி வாங்காத டி.என்.பி.எஸ்.சி. சி.ஏ. மற்றும் எம்.ஏ.டி. தேர்வுகளை எழுத சென்ற மாணவர்களுக்கு இரண்டு நாள் உணவு அளிக்க மறுப்பது, அபராதம் வசூலிப்பது என கொடுமைப்படுத்துகின்றனர். திடீரென ஒரு நாள் இரவு 11 மணிக்கு அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பி கையொப்பம் வாங்கியுள்ளனர். காரணம் கேட்டு, கையொப்பமிட மறுத்த நான்கு மாணவர்கள் இரவென்றும் பாராது விடுதியைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
    மாணவர்கள் அவசரமான சூழ்நிலையில் விடுமுறை கேட்டால் மணிக் கணக்கில் காக்க வைத்து பின் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி விடுமுறை தர மறுக்கின்றனர். மாணவர்கள் பணத்தில் Corollo Car என சொகுசு வாழ்க்கை, திருஷ்டி என்ற பெயரில் மின்சாரத்தை நிறுத்துவது என மாணவர்கள் படும் அவலம் ஏராளம்... ஏராளம்.
    மாணவர்களை அடிமைப்படுத்தி ஜனநாயகத்தை படுகொலை செய்த கல்லூரியின் செயலாளர் சுவாமி (?) சத்திய பிரியானந்தாவின் மீது நடவடிக்கை எடு! செயலாளர் பதவியிலிருந்து நீக்கு!

    இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    குறிப்பு: இப்பொழுது அக்கல்லூரி இழுத்து மூடப்பட்டுள்ளது.

    (நன்றி - விடுதலை)

    ReplyDelete
  3. Of late I feel that even small issues in colleges/schools run by religious institutions are being blown out of proportion by organisations and out fits

    If that is a Christian or Muslim School, it is RSS and VHP that pastes posters

    if that is a Hindu College, it is DYFI etc

    I am not defending any of the colleges, but I feel there is a something sinister that is going on to defame these "low fee" institutions, close them and then establish a "high fee" school or college in the same area

    (this is a general observation and I am not taking stands in these issues)

    ReplyDelete
  4. அக்கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இக்குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்காது என்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  5. Still these kind of barbarians are running educational institutions that too in Tamilnadu!

    ReplyDelete
  6. As an alumni of Viveka it is sad to see the current state of affairs. I remember from my college days when the then Pachayapas College used to face the same plight of agitation causing disruption and hardship to the students who want to attend college and come up in life. I hope better sense prevails soon. A concerned Viveka Almuni from US.

    ReplyDelete