Friday, October 05, 2007

மியான்மார் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியாவின் நிலை

கடந்த சில தினங்களாக நமது அண்டை நாடான மியான்மாரில் (பர்மாவில்) புத்த பிக்குக்கள் ஆளும் ராணுவத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குடியாட்சி வரவேண்டும் என்று போராடும் ஆங் சான் சூ சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களும் புத்த புக்குக்களுக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கிப் போராடினர். ராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்து சிலரைக் கொன்றுள்ளது. பலரைச் சிறைபிடித்துள்ளது.

உலக நாடுகள் பல மியான்மார் அரசைக் கண்டித்துள்ளன. இந்தியா அப்படி எதையும் வெளிப்படையாகச் செய்யவில்லை.

அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் நாங்கள் தலையிடப்போவதில்லை என்று இந்தியா சும்மா இருக்க முடியாது.

மியான்மாரைச் சுற்றியுள்ள சில நாடுகளைப் பார்ப்போம். தாய்லாந்தில் ராணுவம் ஆட்சியைப் பிடித்து அங்கு அரைகுறை ராணுவ ஆட்சிதான் நடக்கிறது. பங்களாதேசத்தில் உருப்படியான குடியாட்சி அழிந்துபோக அங்குள்ள கட்சிகளின் தலைவர்கள் காலிதா ஜியாவும் ஷேக் ஹசீனாவும் பாடுபட்டு, இப்பொழுது அங்கும் கேர்டேக்கர் ஆட்சியை நடத்திவருவது திரைமறைவில் இருக்கும் ராணுவமே. சீனாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அங்கு நடப்பது ஒரு கட்சியின் ஆட்சி. அவர்களுக்கும் குடியாட்சி முறைக்கும் சம்பந்தமே இல்லை. நேபாளம் மன்னராட்சியிலிருந்து குடியாட்சி முறைக்கான டிரான்சிஷன் நிலையில் உள்ளது.

இந்தியா ஒன்றுதான் மியான்மாரை அடுத்துள்ள ஒரே குடியாட்சி நாடு - இப்பொழுதைக்கு.

இப்பொழுதைய மியான்மார் ராணுவ ஆட்சிக்கு முழு ஆதரவு தருவது சீனா. மியான்மாரின் ராணுவ ஆட்சியைக் குறைகூறினால், மியான்மார் முழுவதுமாக சீனாவின் பக்கம் சென்றுவிடும் என்று இந்தியா பயப்படுகிறது. மியான்மாரின் எண்ணெய் வளங்கள், பிற கனிம வளங்களுக்கு ஆசைப்பட்டு இந்தியா இவ்வாறு எண்ணுகிறது. அதேபோல சீனா, மியான்மாருடன் முழுவதுமாக ஒப்பந்தம் செய்துகொண்டால் இந்தியாவின் எல்லையை ஒட்டி கடல் முழுவதும் சீனாவின் ஆதிக்கம் இருக்கும் என்றும் இந்தியா பயப்படுகிறது.

ஆனால் ராணுவ ஆட்சி மியான்மாரின் என்றுமே இருக்கும் என்று சொல்லமுடியாது. அனைத்து நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சர்வாதிகாரம் ஒழிந்து குடியாட்சி முறை வந்துதான் தீரும். மியான்மாரின் அந்தத் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

தார்மீக முறைப்படியும் இந்தியா மியான்மாரின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தரவேண்டும். அதற்காக இந்தியா உடனடியாக மியான்மார் புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கவேண்டும், உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கடுமையான வார்த்தைகளில் ராணுவ ஆட்சிக்கும் அடக்குமுறைக்கும் தனது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும். சூ சியை உடனடியாக விடுவிக்குமாறு குரல் கொடுக்கவேண்டும். பிரணாப் முகர்ஜி சொல்வதுபோல மென்மையான பேச்சினால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது.

நமது அண்டை நாடுகளில் நடக்கும் பிரச்னைகளில் நாம் மூக்கை நுழைக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் தார்மீக நியாயத்தை எடுத்துக் கூறும் வண்ணம் பளிச்சென்று பேசுவதில் தவறில்லை. இதனால் சில வாய்ப்புகள் பறிபோனாலும் அதைப்பற்றிக் கவலைப்படக்கூடாது. அடுத்த நாட்டு மக்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, எனக்குக் கொஞ்சம் பெட்ரோல் கிடைக்கிறது என்று நடந்துகொள்பவர்கள் கேவலமானவர்கள். இந்திய அரசு அப்படி நடந்துகொள்ளக்கூடாது.

[மியான்மார் பற்றிய எனது முந்தைய பதிவு.]

4 comments:

 1. அடுத்த நாட்டு மக்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, எனக்குக் கொஞ்சம் பெட்ரோல் கிடைக்கிறது என்று நடந்துகொள்பவர்கள் கேவலமானவர்கள்

  Whether it is Sudan or Miyanmar the mineral/oil wealth and access to them makes countries (e.g. China,India) to ignore the human
  rights violations or simply use some soft words against them.
  It is an irony that those who accuse USA of doublespeak will
  say nothing about the doublespeak
  of these countries. Had Miyanmar
  been a muslim country India would
  have simply kept quiet. There would
  not be even a whisper against it from India. Our record is dubious-
  we supported dictatorships in east europe, supported russian invasion
  of afghanistan.

  ReplyDelete
 2. கடந்த 15, 20 வருடங்களாக
  இந்தியாவில் பஞ்சாயத்து மன்றம் முதல் பாராளு மன்றம் வரையிலான
  பயங்கர அடிதடி மற்றும் பகை அரசியல் நீண்டகாலச் சிந்தனைகளையும்
  குறிப்பாக வெளியுறவுக் கொள்கைகளையும் மழுங்கடித்து
  விட்டது என்று கருத வேண்டியுள்ளது.

  வங்காளதேசம் கூட இந்தியாவிடம்
  எகிறுகிறது.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்

  ReplyDelete
 3. தமிழர்களையும், பிற இந்தியர்களையும் அடித்து நொறுக்கி, அவர்களது சொத்துக்களை அபகரித்த அந்த பர்மீய அரசாங்கம்தானே இது? அந்த வழியில் வந்த மிலிட்டரி ஜுண்டாதானே இது? என்னத்தைச் சொல்ல நாம்.....

  //வங்காளதேசம் கூட இந்தியாவிடம்
  எகிறுகிறது.//

  அண்ணே, நேபாளமே நம் மீது எகிறுகிறது. கேட்டால், இந்திய ஏகாதிபதியம் என்கிறது.

  இலங்கையோ, இன்னமும் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறையைக் கைவிட்டதாகத் தெரியவில்லை.

  மாலத்தீவு, மொரீஷியஸ், பூட்டான்.. இவைதான் இன்னமும் நம் மீது எகிறவில்லை (பாக்கிஸ்தான், சீனா பற்றி நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா?).

  ReplyDelete
 4. Strategically our externaly policy ir right towards myanmar.Our prime concern is our country and our people's security and prosperity.
  Option 1:support democracy in myanmar today.

  reactions:
  1.seperatists in north east will get support from myanmar military rulers.
  2.Myanmar rulers alone can not stand against India and they will go and get chinese support.China is just waiting for that.will consolidate it's position in indo china border(read :Arunachal)
  3.Already we are not spending money in borders for development and infrastructure,but for waste expenses like ammunition,fencing,etc.
  4.Till date myanmar rulers are submissive and not offensive.Once they become offensive the will act like sri lanka.Threaten india that they will join with china and will get benefits and after that they will still have a more fair relationship with china than india.

  ReplyDelete