350 years after the first Tamil book was published, entrepreneurs who will take up publishing as a business have not yet emerged. Tamil authors continue to remain in a difficult situation. Publishers should read new manuscripts and decide whether they are worthwhile, to figure out whether such manuscripts have a market. They should acquire manuscripts from the authors by paying them an advance or by some other arrangement and invest money to publish them and earn profits. It is quite surprising that our entrepreneurs have not taken sufficient interest in publishing.
Books are of course being published now. And a vast number of people of course buy and read them. If the book trade is carried out in a systematic manner, people will have better books to choose from. Right now, only the books that are published by those who can afford to do so, are available to the public. There is no doubt at all that good profits will accrue from book publishing, if it is pursued with enterprise.
-- Subramanya Bharathi, Circa 1907.
Quoted by AR Venkatachalapathy, in a conference organized in New Delhi by NBT to discuss the future of Independent Publishing in India. 3rd October 2007.
மூலம், தமிழில் இருந்ததா, ஆங்கிலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.
சீனி.விசுவநாதன் கலெக்ஷனில் தேடிப் பார்க்க வேண்டும்.
வாசகனாதல்
11 hours ago
பதிப்புத் தொழில் பற்றியும் தனது புத்தகங்களை எப்படி வெளியிடவேண்டும் என்பது பற்றியும் (சிறந்த செம்பதிப்பு மற்றும் மலிவுப் பதிப்பு என இரண்டைப் பற்றியும் யோசித்து) பாரதி எழுதிய கடிதங்கள் மிக முக்கியமானவை.
ReplyDeleteகாலச்சுவடு வெளியிட்டுள்ள பாரதி கடிதங்கள் (ரா.அ.பத்மநாபன் தொகுத்தது, மறுபதிப்பு) புத்தகத்தில் உள்ளது. ஆங்கில கடிதங்களும் அதன் மொழிபெயர்ப்புகளும் உள்ளன.
//மூலம், தமிழில் இருந்ததா, ஆங்கிலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை//
ReplyDeleteஎனக்கும் தெரியலை.. ஆனால் தமிழில் தான் இருந்திருக்கும் என்பது என் ஊகம். மொழி நடையைப்பார்த்தால், பிஸின்ஸ் லைன் பத்திர்க்கையில் வருவது போல contemporary ஆக இருக்கிறது.
//They should acquire manuscripts from the authors by paying them an advance or by some other arrangement and invest money to publish them and earn profits//
மேலே கண்ட மாதிரியெல்லாம் அந்தக் காலத்திலேயே யோசிச்சுருக்காருன்னா, நெஜமாவே க்ரேட்தான்.
"தமிழ்நாட்டிலே புஸ்தகப் பிரசுரம்
ReplyDeleteதமிழ்நாட்டிலே புஸ்தகம் எழுதுவோரின் நிலைமை இன்னும் சீராகவில்லை. பிரசுரத் தொழிலை ஒரு வியாபாரமாக நடத்தும் முதலாளிகள் வெளிப்படவில்லை யாதலால், சங்கடம் நீங்காமலிருக்கிறது. புதிய புஸ்தகங்களைப் படித்துப் படித்து, 'பயன்படுமா படாதா' வென்று தீர்மானம் செய்ய வேண்டும். 'நன்றாக விலையாகுமா விலையாகாதா' என்பதை ஊகித்தறியவேண்டும். ஆசிரியரிடமிருந்து புஸ்தகத்தை முன் விலையாகவோ, வேறுவித உடன்பாடாகவோ, வாங்கிக்கொண்டு தாம் கைம்முதல் போட்டு அச்சிட்டு லாபம் பெறவேண்டும். இந்த வியாபாரத்தை நமது தேச முதலாளிகள் தக்கபடி கவனியாமலிருப்பது வியப்பை உண்டாக்குகிறது. புஸ்தங்கள் வெளிவரத்தான் செய்கின்றன. பெருந்தொகையான ஜனங்கள் வாங்கிப் படிக்கத்தான் செய்கிறார்கள். ஒரு ஒழுங்கான பிரசுர வியாபாரம் நடந்தால் ஜனங்களுக்கு நல்ல புஸ்தகங்கள் கிடைக்கும். இப்போது அச்சிடப் பணமுள்ளவர் எழுதும் புஸ்தகங்களே பொது ஜனங்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பழைய புஸ்தகங்களிலே ஆச்சரியமானவை பல எழுதப் பட்ட காலத்தில், ஆசிரியர் தனவந்தராக இருந்ததில்லை. மேன்மேலும் ஊக்கத்துடன் நடத்தினால், பிரசுர வியாபாரத்தில் நிறைய லாபம் உண்டாகுமென்பதில் சந்தேகமில்லை."
-- பாரதியார் கட்டுரைகள்
பூம்புகார் பதிப்பகம் (பதிப்பு செப், 1977)
-- பத்மப்ரியா.