Monday, October 22, 2007

ஞாநியும் சிநேகிதர்களும்

ஞாநி தமிழக முதல்வர் கருணாநிதியைப் பற்றி எழுதிய 'ஓ பக்கங்கள்' கட்டுரை ‘விருப்பப்படி இருக்க விடுங்கள்', உள்நோக்கத்துடன் எழுதப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.

ஞாநிக்கு கருணாநிதி மீது எந்தக் கரிசனமும் கிடையாது. அவரது எழுத்துக்களைப் படித்துவருவோர் அனைவருக்கும் இது தெரியும். அப்படிப்பட்ட நிலையில் ‘வஞ்சக் கரிசனத்துடன்', “அய்யோ பாவம்! ஒரு கிழவரை இப்படிப் போட்டு வாட்டி வதைக்கிறார்களே” என்று ஞாநி எழுதினால் அதைவிட கயமைத்தனம் ஏதும் இருக்கமுடியாது.

ஞாநிக்கு பல நோக்கங்கள் இருந்திருக்கலாம்.

வயதானவர் மாநிலத்தின் முக்கியமான பதவியில் இருந்தால் மாநிலத்தின் நலனுக்குக் கேடு என்று அவர் கருதியிருந்தாரானால் அதை வெளிப்படையாக எழுத்தில் காட்டியிருக்கலாம்.

இல்லை, கருணாநிதியை தனக்குப் பிடிக்கவில்லை என்று ஞாநி நினைத்திருந்தாரானால், அதையும் நேரடியாகச் சொல்லி, இவரைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு யாரையாவது முதல்வராக்குங்கள் என்று நேரடியாகச் சொல்லியிருக்கலாம். (அது நடக்காது என்பதை ஞாநி உணர்ந்திருப்பார்.)

ஜெயமோகன் ஒருமுறை சுந்தர ராமசாமி/காலச்சுவடு பற்றி எழுதும்போது, யானைப்பாகன், கிழ யானையைக் காட்டிப் பிச்சையெடுத்து சம்பாதிப்பதைப்போல என்று (கேவலமாக) எழுதியிருந்தார். ஞாநியும் அதைப்போலவே கருணாநிதியின் பிள்ளைகள் தங்கள் தகப்பனை தங்களது சொந்த விருப்பங்கள் காரணமாக, தள்ளாத வயதிலும் தெருவில் அழைத்துவந்து அவரைச் சுரண்டி, அவரை வைத்து வித்தை காட்டிப் பிழைப்பு நடத்துகின்றனர் என்று பொருள்பட எழுதியிருப்பது கண்டனத்துக்குரியது.

ஞாநி ஒரே சீராக நடுநிலையுடன் தனது எழுத்தைச் செய்வதில்லை. கருணாநிதியை எதிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதாவை எதிர்ப்பதில்லை.

ஞாநி சில விஷயங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் குணம் உடையவர். மாற்றுக் கருத்துகள் தொடர்பாக என்ன ஆதாரம் கிடைத்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தனது கருத்தை மாற்றிக்கொள்ள மறுப்பவர்.

இப்படி ஞாநியைக் குறைசொல்ல எவ்வளவோ இருக்கிறது.

-*-

ஞாநிக்கு பேச்சு, எழுத்து சுதந்தரம் இருந்தாலும் கண்ணியமற்ற முறையில் சிலவற்றை எழுதினால் அதனால் கோபம் கொள்பவர்கள் கண்டனக் கூட்டம் நடத்துவதில் தவறில்லை. அப்படி நடந்த கூட்டம்தான் வாணி மஹாலில் சனிக்கிழமை நடந்த ஒன்று.

ஆனால் ஞாநியைக் கண்டித்த சிநேகிதர்கள் (அவர்கள் அனைவரும் ஞாநியுடன் இப்பொழுதும் நல்ல பரிச்சயம் வைத்திருப்பவர்களாம்), பல அபத்தங்களையும் வாரி உதிர்த்தனர்.

மேற்படி விஷயத்தில் ஞாநியைக் கண்டிக்க ஆயிரம் முகாந்திரங்கள் இருந்தாலும் மேலும் பலவற்றை இழுக்கவேண்டுமே. அதைச் சரியாகக் கண்டறிந்து 20-20 கிரிக்கெட் போட்டியின் தரத்தில் தடாலடியாக ஆரம்பித்து வைத்தார் தொடக்க ஆட்டக்காரரான கவிஞர் அறிவுமதி.

அதுதான் 2000 வருடப் பகைமை. தன் மூதாதையர் உழைப்பில் 'உண்டு', 'பேண்டு' இன்று சுகமாக இருக்கும் பார்ப்பனர்களை அறிவுமதி நன்றாகச் சாடினார். புரசைவாக்கமாக இந்த இடம் இல்லாமல் போய்விட்டதே, கொஞ்சம் நாகரிகமாகப் பேசவேண்டுமே என்று வருத்தப்பட்டார். ‘உங்கள் யாருக்காவது வசிக்க வீடில்லாமல் இருக்கிறதா' என்று பார்ப்பனர்களைக் கேட்டார். பார்ப்பனர்களை இவர் ஒன்றும் செய்யாவிட்டாலும் இணையத் தம்பிகள் ஒருகை பார்த்துவிடுவார்கள் என்று கோடி காட்டினார்.

அடுத்து பேசவந்தவர்களில் பலர் இந்த 2000 வருடப் பாரம்பரியச் சண்டை (அப்படி ஒன்று இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. எழுத்தாளன் சொன்னால் மேல் அப்பீல் கிடையாது) பற்றி பலரும் தொடர்ந்தார்கள்.

தோழர் மகேந்திரன் தொடர்ந்தார். பிரபஞ்சன் ஒருபடி மேலே போனார். அ.மார்க்ஸ் பற்றி சொல்லத் தேவையே இல்லை. பிரபஞ்சன் அதெப்படி ஊடகங்கள் எல்லாம் சட்டையை அவிழ்த்துவிட்டுக்கொண்டு பூணூல் போட்டுக்கொள்கிறார்கள் என்று கேட்டார்.

ஞாநிக்கான கண்டனக் கூட்டமா, தி.கவின் பார்ப்பன எதிர்ப்புக் கூட்டமா என்று புரியாத வகையில் இறையன்பன் குத்தூஸ் வந்து ஒரு பாடலைப் பாடினார். அதன் வரிகள் பின்வருமாறு:
வடக்கே ஒரு பார்ப்பன வேதாந்தி கலைஞரின் தலை கேட்கிறான்
இங்கே ஒரு பார்ப்பன அஞ்ஞாநி நஞ்சைக் கக்குகிறான்
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால்
முதலில் பார்ப்பானை அடி என்றார் தந்தை பெரியார்
நம் சிந்தையெல்லாம் நிறைந்த தந்தை பெரியார்

தொண்டால் பொழுதளக்கும் தலைவரை
இங்கு கொச்சைப்படுத்துகிறான் ஒரு தறுதலை
பொறுமை கலைஞரின் பெருந்தன்மை
இது புரிந்திடுமா அஞ்ஞாநிக்குப் பேருண்மை

யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்? இங்கே
யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்?

பார்ப்பன அரசியலைப் புரிந்துகொள்ளடா
பார்ப்பன பத்திரிகை அரசியலைப் புரிந்துகொள்ளடா

தமிழா! தமிழா! தமிழா!
இந்தப் பாடல் பாடப்படும்போது இணையப் பிரமுகர்கள் இருவர் ‘அய்யோ' என்று தலையில் அடித்துக்கொள்வதைப் பார்க்க முடிந்தது.

இதற்கடுத்து தலைமையுரை ஆற்றிய பன்னீர்செல்வம், ஞாநியின் எளிமைப்படுத்தப்பட்டு வெகுஜன ஊடகங்களில் கொடுக்கப்படும் கருத்துக்களை எதிர்க்கவேண்டும் என்றார். ஆனால் அதே எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரம்தான் இந்த கண்டனக் கூட்டத்திலும் காணக் கிடைத்தது.

ஞாநி = பார்ப்பான்
விகடன் = பார்ப்பனப் பத்திரிகை
பார்ப்பான் = 2000 வருடப் பகைமை
கலைஞர் = பெரியாரின் வழிவந்த சூத்திரத் தலைவர்
பார்ப்பான் x சூத்திரன்
(ஞாநி + விகடன்) x கலைஞர் => எனவே விகடன் கட்டுரை

எனவே... போடு பார்ப்பான் தலையில் நாலு சாத்து!

-*-

அ.மார்க்ஸ் ஒரு கான்ஸ்பிரசி தியரியை முன்வைத்தார்.
கலைஞர் x மாறன் சகோதரர்கள் பிரச்னைக்குப் பிறகுதான் விகடன் கலைஞருக்கு எதிராக எழுதுகிறது... இதற்கு விகடன் டெலிவிஸ்டா - சன் டிவி சீரியல் வழியாக ஏதேனும் தொடர்பு இருக்குமோ...
அ.மார்க்ஸ் அடுத்து கனிமொழி, இரவிக்குமார், சல்மா ஆகியோர்மீது கடுமையான ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
கலைஞர் மீது இன்று என்ன தைரியத்தில் இப்படி எல்லாம் எழுதமுடிகிறது? காலச்சுவடு கொண்டுவந்த பெரியார் சிறப்பிதழில் பெரியாரை அவமரியாதை செய்து (அவர் பெண்பித்தர்... தலித்களுக்கு எதிரானவர்...) எழுதியிருந்ததை யாருமே பெரிய அளவில் கண்டிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக இன்று யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் அவதூறாகப் பேசமுடிகிறது. இதற்கு கனிமொழியும் பிறரும் பதில் சொல்லவேண்டும்.
இரவிக்குமாரும் சல்மாவும் அடுத்து பேசினாலும் இதைத் தொட்டே செல்லவில்லை. கனிமொழி பேசவில்லை. ஆனால் அவர் சார்பாகப் பேசிய பிரபஞ்சன், அந்த இதழுக்கு அடுத்த இதழிலிருந்து கனிமொழி காலச்சுவடு ஆசிரியர் குழுவிலிருந்து விலகிவிட்டார் என்ற தகவலை வெளியிட்டார்.

-*-

தினமணி, காலச்சுவடு, கார்ட்டூனிஸ்ட் மதி ஆகியோரும் திட்டு வாங்கினர்.

-*-

பேசிய பலரும் பெரியாரையும் கலைஞரையும் ஒப்பிட்டுப் பேசினர். இரவிக்குமார் தனது 20+ நிமிடப் பேச்சில் பெரியாரைக் கொண்டுவரவேயில்லை. பார்ப்பனர்களையும் இழுக்கவில்லை.

-*-

மனுஷ்ய புத்திரன் பேசும்போது பாய்ஸ் படப் பிரச்னையின்போது ஞாநி, எழுத்தாளர் சுஜாதாவின் ‘இருதய ஆபரேஷனை' குறிப்பிட்டு கேவலமாக எழுதியதை சொன்னார்.

-*-

இருவர் (அரசு, மணி), “இந்தாளு போடற நாடகமே புரியாது” என்று, ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவை ஒரு பிடி பிடித்தனர். அதைக் கண்டிக்க தனியாக ஒரு கூட்டம் நடத்தியிருந்தால் தேவலை.

-*-

விழாவின் முக்கியமான கான்ஸ்பிரசி தியரி - கிட்டத்தட்ட அனைவருமே ஏற்றுக்கொண்டது இதுதான்.
கலைஞர் இருந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிடுவார். அதைத் தடுக்கவேண்டும். எனவே சிலர் (பார்ப்பான்கள்?) ஒன்றுசேர்ந்து திட்டம் தீட்டி இப்படி கலைஞருக்கு எதிரான காரியங்க்களில் இறங்கியுள்ளனர். பத்திரிகைகள் ஒன்றுசேர்ந்து கலைஞரைத் தாக்குவதற்கு இதுதான் காரணம். அங்கே டில்லியில் நீதிமன்றத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டு முட்டுக்கட்டை போடுகின்றனர். இங்கே இவரை எப்படியாவது துரத்திவிட நச்சைக் கக்குகின்றனர்.
-*-

கண்டனக் கூட்டத்தில் பலரும் சொன்னது:
ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் ஆட்டோ போயிருக்கும். இங்கு கண்ணியமான முறையில் எழுத்து/பேச்சு சுதந்தரத்துக்கு எந்த பங்கமும் வராத வகையில், குடியாட்சி முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைதான். ஆனால் ஆட்டோ வரும் என்றெல்லாம் பயந்து அடுத்த ஜெயலலிதா ஆட்சியில் (அப்படி ஒன்று ஏற்பட்டால்) ஆட்சியாளரின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதை நிறுத்தாதீர்கள்.

ஆட்டோ அனுப்பாத ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்போம். எந்த ஆட்சியாளர் காலத்திலும் ஆட்டோக்கள், ரவுடிகள் மூலம் நமது சுதந்தரம் தடைப்படுவதை அனுமதியோம்.

-*-

ஒலிப்பதிவுகள்
மணிகண்டன்
மதுமிதா

24 comments:

 1. //அதே எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரம்தான் இந்த கண்டனக் கூட்டத்திலும் காணக் கிடைத்தது.//

  அதான் எளிமைன்னு நீங்களே சொல்லீட்டீங்களே :)

  //கலைஞர் x மாறன் சகோதரர்கள் பிரச்னைக்குப் பிறகுதான் விகடன் கலைஞருக்கு எதிராக எழுதுகிறது... இதற்கு விகடன் டெலிவிஸ்டா - சன் டிவி சீரியல் வழியாக ஏதேனும் தொடர்பு இருக்குமோ... //

  இந்த சந்தேகம் எனக்கும் ரொம்ப நாளாகவே இருக்கிறது.

  ReplyDelete
 2. ஞானி சொல்லியிருக்க வேண்டியத்தில்லைதான் என்பது சரி! அதுக்கு பார்ப்பனர் சூது என்று சொல்லவது எனக்கு கெவலமா தெரியுது! உங்களுக்கு எப்படி??

  ReplyDelete
 3. //கலைஞர் x மாறன் சகோதரர்கள் பிரச்னைக்குப் பிறகுதான் விகடன் கலைஞருக்கு எதிராக எழுதுகிறது... இதற்கு விகடன் டெலிவிஸ்டா - சன் டிவி சீரியல் வழியாக ஏதேனும் தொடர்பு இருக்குமோ... //
  Ananda Vikadan ads are being shown with Vikadan programs in SUN TV. Earlier only Sakthi/Sutti or Motor vikadan ads used to come.

  ReplyDelete
 4. தமிழ்நாட்டு "அறிவிஜீவி"களின் priorities மடத்தனமாக இருக்கு. கருணாநிதி குடும்பத்தில் உளளான சண்டையில் 3 அப்பாவிகள் கொலை செய்யப்படார்கள். அப்போது ஒரு கணடனக்கூட்டமும் இலை. யாரோ சில வார்த்தைகள் வாராந்திர பத்திரிகைல எழுத்திட்டாராம், அதுக்கு ஒரு கண்டனக் கூட்டம். உயிர்களை விட வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தமிழ்நாட்டு "அறிவிஜீவி"கள். இது உருப்படுகிர வழியாக இல்லை.

  ReplyDelete
 5. இந்தியக் குடிமகன் விரும்பினால் இந்தியப் பிரதமரின் உடல்நிலை அறிக்கையை எப்போது வேண்டுமானாலும் அதற்குறிய விண்ணப்பம் தாக்குதல் செய்து பெற்றுக் கொள்ளமுடியும். அப்படி இருக்கையில், ஒரு மாநில முதல்வரின் உடல்நிலையைப் பற்றியும் அவரின் தள்ளாமையைப் பற்றியும் விமர்சிப்பதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.. பிரச்சனை எங்கே என்றால் .. பிறப்பால் "பார்பனராக்கப்" பிறந்த ஞானி, "சூத்திரக்" கருணாநிதியை விமர்சிப்பதுதான். "சூத்திரன்" என்று சொல்லிக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..அதை யார் விமர்சித்தாலும் ஒரு "பார்ப்பனன்" விமர்சிக்ககூடாது. Complete baloney and sad state of affairs.

  ReplyDelete
 6. கலைஞர் மீது இன்று என்ன தைரியத்தில் இப்படி எல்லாம் எழுதமுடிகிறது? காலச்சுவடு கொண்டுவந்த பெரியார் சிறப்பிதழில் பெரியாரை அவமரியாதை செய்து (அவர் பெண்பித்தர்... தலித்களுக்கு எதிரானவர்...) எழுதியிருந்ததை யாருமே பெரிய அளவில் கண்டிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக இன்று யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் அவதூறாகப் பேசமுடிகிறது. இதற்கு கனிமொழியும் பிறரும் பதில் சொல்லவேண்டும்.

  A.Marx can request his muslim friends to issue a fatwa against
  Gnani and ask for his head.
  I disagree with Badri's views.
  Gnani had been very critical of Jayalalitha during 1991-96 and 2001-2006 as well.I dont think
  he has a soft corner for her.These 'intellectuals' did not
  protest this much when three persons were killed in the violence
  unleashed by DMK goons in Madurai.
  They did not protest like this when
  Taslima was attacked.

  ReplyDelete
 7. அந்த இதழுக்கு அடுத்த இதழிலிருந்து கனிமொழி காலச்சுவடு ஆசிரியர் குழுவிலிருந்து விலகிவிட்டார் என்ற தகவலை வெளியிட்டார்.

  She was in editorial advisory board only.

  ReplyDelete
 8. ஞானி செய்தது ஒரு கேவலமான தனி மனித விமர்சனம். அதற்காக அவரின் ஜாதி குறித்து, இந்த அறிவுஜீவிகள் தாக்குதல் நடத்துவது அதைவிட கேவலமாகயிருக்கிறது.

  ReplyDelete
 9. ஒரு விசயத்தை நண்பர்கள் புரிந்துக்கொள்ளவேண்டுமென்பது என் வேண்டுகோள் ...
  ஞாநியைக் கண்டித்து நடந்தக்கூட்டதில் பேசிய அரசியல்கட்சி சாரா எழுத்தாளர்கள் அங்கேயே தெளிவுபடுத்திய விசயம் அது ..
  அறிவுமதி, அ.மார்க்ஸ், பிரபஞ்சன், ஏ.எஸ்.பன்னீர்செல்வம் போன்றவர்கள் திமுகவையும் கலைஞரையும் பல சந்தர்ப்பங்களில் விமர்சித்தவர்கள், சில நிலைப்பாடுகளுக்காக கடுமையாக எதிர்த்தவர்கள் ..
  கலைஞர் விமர்சனங்களுக்கு அப்பாற்ப்பட்டவர் என்று எவரும் எங்கும் சொல்லவில்லை ...

  ஆனால் விமர்சனத்திற்கும் முற்போக்கு முகம் மாட்டிய வஞ்சகத்திற்கும் வித்தியாத்தை நாம் உணரவேண்டும் ..

  ஞாநியைக் கண்டித்துப் பேசிய எழுத்தாளர்களில் சிலர் ஞாநியின் முன்னாள் நண்பர்கள் .. ஞாநியை தோழராகப் பார்த்தவர்கள் ...
  ஞாநி பார்ப்பனர் என்பது அவர்களுக்கு நேற்று முன்தினம்தான் தெரிந்தது போலவும், உடனே அவர்கள் கண்டனக்கூட்டம் போட்டது போலவும் பேசுகிறீர்கள் ...

  ஞாநி பார்ப்பன சாதியில் பிறந்தவர் என்று தெறிந்துதான் திராவிடர் கழகமும், பெரியார் திராவிடர் கழகமும் அவர்களது மேடைகளில், பத்திரிகைகளில் அவருக்கு இடம் கொடுத்தன ...
  அ.மார்க்ஸின் புத்தக வெளியீட்டில் ஞாநி பேசியிருக்கிறார், ஞாநியின் புத்தக வெளியீட்டில் சுபவீ பேசியிருக்கிறார் .. அவர் பார்ப்பன சாதியில் பிறந்தவர் என்று தெரிந்தேதான் இவையெல்லாம் நடந்தன ..
  ஞாநி பார்ப்பன சாதியில் பிறந்தவர் என்று தெரிந்துதான் கருணாநிதி தான் நடத்திய பத்திரிகையில் வேலைக்கு வைத்திருந்தார் .. (கருணாநிதி சின்னக்குத்தூசியுடன் இன்னமும் நட்புடன் இருக்கிறார்) ..

  'பார்ப்பன' சாதியில் பிறந்ததற்காகவே ஒருவரை பார்ப்பான் என்று ஒதுக்குவதும் மூடநம்பிக்கைதான். அதற்காகவே அவரது முற்போக்கு எழுத்துக்கண்டு அவரை நம்பினோம்.

  அறிவுமதி பேசும்போது கூட சொன்னார், ஞாநி பெரியார் போல் பேசினார், தமிழனாய் பேசினார், அவரைக்கண்டு நாங்கள் ஏமாந்தோம் என்று ...

  ----

  இரண்டு விசயங்கள்:
  1. தமிழகத்திலும் இந்தியா முழுமைக்கும் சமூகநீதியெனும் இடஒதுக்கீட்டை காப்பாற்றுவதற்கு மிக உறுதியாக செயல்படும் ஒரே தலைவர் கருணாநிதி ..
  2. இன்று இந்தியா எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்து, இந்து மதத்தின் பெயரால் முன்னேறி வரும் மதவெறி .. அந்த மதவெறிகும்பலையும் அதன் அடையாளமான ராமனையும் எதிர்க்க துணிந்த ஒரே அரசியல் தலைவர் கருணாநிதி ..

  இந்த இரண்டு விசயத்திற்க்காகதான் நான் கருணாநிதி தொடர்ந்து ஆட்சியில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் .. (இந்த விசயங்களில் ஸ்டாலினின் நிலைப்பற்றியெல்லாம் எவருக்கும் தெரியாது)

  அ.மார்க்ஸ், பிரபஞ்சன், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், அறிவுமதி போன்றவர்கள் அவர்களுக்குள்ளும், கலைஞருடனும் பல கருத்து முறண்பாடுகளைக் கொண்டுள்ளபோதும், அவர்கள் ஒன்றுபடுவது இந்த இரண்டு விசயங்களில்தான் என்பது என் கருத்து.

  இதே இரண்டு விசயத்திற்கவேதான் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, சோ, ஞாநி வகையறாக்கள் கருணாநிதி ஆட்சியில் தொடரக்கூடாது என்று துடிக்கின்றனர் ..

  வேதாந்தி போன்றவர்கள் கலைஞர் தலையை எடுக்கவேண்டும் என்கிறார்கள் ..
  சோ, சு.சாமி போன்றவர்கள் ஆட்சியை கலைக்கவேண்டுமென்கிறார்கள்..
  ஞாநி முற்போக்காளர் அல்லவா கலைஞருக்கு வயதாகிவிட்டது ஓய்வுகொடுங்கள் என்கிறார் ..
  வேதாந்தியையும் சோவையும் விட ஞாநி ஆபத்தானவர் ..
  வேதாந்தியையும் சோவையும் தமிழ்நாட்டில் ஒரு நாயும் மதிக்காது, ஆனால் ஞாநி பேச்சைக்கேட்டு ஏமாறுவதற்கு நம்மைப்போல் நிறையபேர் இருக்கிறோம் ...
  ----
  தலைமையுரையாற்றிய பன்னீர்செல்வம் முடிவில் சொன்ன ஒரு கருத்துதான் அந்த கண்டனக்கூட்டம் நடந்ததற்கும், நாம் ஞாநியைக் கண்டிப்பதற்கும் ஒரே காரணம் ..

  ஞாநி முற்போக்கு முகமூடிப்போட்டுக்கொண்டு தன் சக நண்பர்களையும் வாசகர்களையும் ஏமாற்றாமல், "சோ" போன்று தன்னுடைய நிஜ ஆர்.எஸ்.எஸ் முகத்துடன் எழுதுவாரேயானால், யாரும் அவரைக் கண்டிக்கப்போவதில்லை .. கண்டுகொள்ளபோவதுமில்லை ..

  ReplyDelete
 10. இந்தக் கூட்டமும் அவர்தம் பேச்சும் ரொம்ப பரிதாபமாக, கொச்சைத்தனமாக இருக்கிறது. ஞாநியும் அவரைப் போலுள்ள பலரும் எனக்குத் தெரியும். பார்ப்பனீயம் என்று சொல்லப்படும் ஒன்றிலிருந்து தங்களை முழுமையாக விலக்கிக்கொண்டு, தம் எண்ணங்களை, வாழ்வை கான்ஷியஸ்ஸாக,விமர்சனபூர்வமாக அமைத்துக்கொண்டவர்கள் அவர்கள்.

  அவர்கள் கருத்துக்களை எல்லாரும் விமர்சிக்கலாம். ஆனால், அவர்கள் துணிந்து விலக்கிவிட்டு வந்த ஒன்றோடு மீண்டும் மீண்டும் முடிச்சுப் போட்டுப் பேசுவது என்பது நிச்சயம் பண்பான பேச்சு அல்ல. சந்தர்ப்பவாதப் பேச்சு என்பது இதுதான்.

  ஞாநியின் கருத்து என்னைப் பொருத்தவரை தேவையற்ற ஒன்று. ஆனால், அதை சொல்ல அவருக்கு உரிமை இருப்பதைப் போலவே, கருத்தைக் கருத்து ரீதியாக எதிர்க்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் நடந்துள்ளது கொச்சைப்படுத்தும், எளிமைப்படுத்தும் செயல்.

  சாதியை விலக்கவேண்டும் என்று பேசும் அறிவுஜீவிகள், அப்படி விலக்கிவிட்டு வந்த ஒருவரை மீண்டும் மீண்டும் அதே குடுவைக்குள் (தமக்குப் பிடிக்காத கருத்தைச் சொல்லும்போது மட்டும்) அடைக்க முற்படுவது, ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்கிறது:

  சாகும்வரை சாதி என்பது உண்டு. தனிமனிதன் அதை மறுத்தாலும் சமூகம் அதை ஏற்றுக்கொள்வதே இல்லை. எப்போதும் அவனது அடையாளங்களைத் தேடியே தம் கருத்தை அமைத்துக்கொள்ளும்.

  சுயசாதி மறுப்பு, அடையாள மறுப்பு, சின்னங்களை விட்டொழித்தல் எல்லாம் ஒரு காலத்தில் பேசப்பட்டது. அதற்கெல்லாம் இப்போது என்ன அர்த்தம் என்று தெரியவில்லை!

  நேசமுடன்
  வெங்கடேஷ்

  ReplyDelete
 11. //இணையப் பிரமுகர்கள்//

  கம்ப்யூட்டரெல்லாம் வெச்சு ஜோசியம் பார்ப்பதுபோல, இணையம் வந்தும் இன்னும் 'பிரமுகர்'த்தனம் போகலையா? :(

  ReplyDelete
 12. ரஜினியை திட்டியதை சொல்லவே இல்லை :))

  ReplyDelete
 13. தருமி அய்யா பதிவில் ஏற்கனவே சொன்னதைப் போல 'இங்கே (தமிழ்ச் சூழலில்) இரண்டே பக்கங்கள் தான் இருக்கின்றன. ஒருவர் இரண்டில் ஒன்றில் சேராவிட்டால் சேர்த்துவிடப்படுவர்.'

  கூடக் கொஞ்சம் சேத்துக்கலாம்: 'இதையெல்லாம் சமாளித்து சுயமாக நின்றால் அநாதையாகிப் போய் இரண்டுபக்கமும் அடிபடுவர்:-)'

  மந்தைக் கூட்டம்!

  ReplyDelete
 14. ஞாநி முற்போக்கு முகமூடிப்போட்டுக்கொண்டு தன் சக நண்பர்களையும் வாசகர்களையும் ஏமாற்றாமல், "சோ" போன்று தன்னுடைய நிஜ ஆர்.எஸ்.எஸ் முகத்துடன் எழுதுவாரேயானால், யாரும் அவரைக் கண்டிக்கப்போவதில்லை .. கண்டுகொள்ளபோவதுமில்லை.


  He is with you folks on reservation issue. On
  Sethusamudram he wants the ecological impcats to be considered
  and is not opposing the project as
  such, nor is he supporting the case
  of Ramar Palam in this. So just because he has a different view
  on another issue you folks will
  brand him as a RSS fellow.Cant you
  find any other excuse.

  ReplyDelete
 15. ஞாநியின் தொடரை நான் படிக்காததால் அவர் பல மாதங்களாக என்ன எழுதிவருகிறார் என்று தெரியாது. ஆனால் இந்தக் கட்டுரையை நண்பர் ஒருவர் (படங்கள் அல்லாமல்) அனுப்பியதைப் படித்த போது எனக்கு ஞாநி எழுதியதில் எந்தத்தவறும் தெரியவில்லை. கலைஞர் வேட்டி நனைத்தது போன்ற தகவல்களை எழுதியவிதத்தில் தான் எனக்கு உடன்பாடு இல்லை. இதைப் பற்றி தருமியின் பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது இந்த கண்டனக்கூட்டத்தைப் பற்றிப் படிக்கிற போது (நேரமின்மையால் மூன்று ஒலிப்பதிவுகளையே இதுவரை கேட்க முடிந்தது) நான் இங்கு எழுத வந்தது, "காயம் பட்ட சமூக உளவியலில் எவ்வாறு ஞாநி போன்ற ஒருவர் தவறாகத் தாக்கப் படுகிறார்” என்று.

  'காயம் பட்ட சமூக உளவியல்' என்று குறிப்பிடுவதை அ. பிரபாகரன் இங்கு ஓரளவு சொல்லியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே கலைஞரின் அரசியல் மீது கடுமையான விமர்சனம் கொண்டிருப்பவன் நான். ஆனாலும் குடும்ப-கட்சி-மலின அரசியல்களுக்கு மத்தியிலும் திராவிட இயக்க கொள்கையடிப்படையிலான ஒருசில திட்டங்களுக்கு கலைஞரின் இந்த அரசு செயல்வடிவம் கொடுக்க முன்வந்துள்ளது. மைய அரசு நிறுவனங்களில் இடப்பங்கீடு, தமிழை முதல்மொழியாகக் கட்டாய பாடமாக்கியது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நீண்டநாளைய ஏக்கம், சேதுசமுத்திர திட்டம் என சிலவற்றை இங்கு குறிப்பிடலாம். இது திராவிட இயக்க செயல்பாடுகளை விமர்சித்து அவ்வியக்கங்களுக்கு வெளியே செயல்பட்டு வரும், ஆனால் திராவிட அரசியலை உள்வாங்கியுள்ள ஆர்வலர்கள்-போராளிகள்-அறிவுஜீவிகளிடம் கலைஞர் மீது ஒரு பற்றை ஏற்படுத்தியுள்ளது. கலைஞரிடம் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் அவரை பார்ப்பனிய அரசியலுக்கு எதிரான குறியீட்டுத்தலைவராகப் பார்க்கின்றனர். கூடவே, தள்ளாத வயதிலும், தளராமால் உழைக்கும் கலைஞரிடம் தம் சொந்த தகப்பனாரிடம் மட்டுமே ஏற்படும் ஒருவித மதிப்பும், பாசமும் உள்ளது.

  ஆனால் கலைஞரது இந்த ஒவ்வொரு முனைப்புக்கும் முட்டுக்கட்டை போடும் பார்ப்பனிய சக்திகளின் சூழ்ச்சிகளின் மேல் கடுங்கோபமும் இருக்கின்றது. இதற்காக அவர்கள் மத்திய அரசு இயந்திரம், உச்ச நீதிமன்றம், ஊடகங்கள், மதநம்பிக்கை என எல்லாவிதமான ஆயுதங்களையும் அவர்கள் கலைஞருக்கு எதிராகப் பயன்படுத்தி வருகிறார்கள். காஞ்சி ஜெயேந்திரர், சோ இராமசாமி, சுப்பிரமணியசாமி, வெங்கடராமன், எம்.கே.நாராயணன், இராம், இராமன் போன்ற பல்வடிவ பார்ப்பனிய தீயசக்திகள் திரை மறைவில் கொடுக்கும் சாமர்த்திய தொல்லைகளும் ஏராளம். ஈழத்தமிழர்க்கு ஆதரவாக கலைஞர் சிறு அளவில் ஏதாவது முணகினால் கூட இந்தக் கூட்டத்திலிருந்து மிரட்டல் வந்துவிடும். முழுநாள் அடைப்புக்கெதிராக பார்ப்பனிய உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு திராவிட அரசியல் அனுதாபிகளைக் காயப்படுத்தியுள்ளது.

  இந்தச் சூழலில், குறிப்பாக சேதுசமுத்திரத்திட்டத்தின் மூலம் இந்துத்துவ-பார்ப்பனிய இராமவெறி தூண்டப்படும் வேளையில், ஞாநி கலைஞரை இயங்கவியலாத ஒரு முதல்வராகச் சித்தரித்து வெளியேறச் சொல்வதனால் ஞாநியையும் பார்ப்பனிய சக்திகளுடன் பொருத்திப் பார்க்கிறது 'காயம் பட்ட சமூக உளவியல்'. அந்த உளவியலில் ஞாநியின் பார்ப்பனிய அரசியலுக்கெதிரான எத்தனையோ முந்தைய செயல்கள் மறக்கப் பட்டுவிட்டன. சில இடங்களில் ஞாநியின் கருத்துக்கள் அவர் எதோ உள்நோக்கில் செய்வதாக எனக்கும் இடிக்கத்தான் செய்திருக்கின்றன. இருந்தாலும் அவரது பெருவாரியான சரியான செயல்பாடுகளின் பின்னனியில் அவற்றை அவரது சறுக்கல்களாகவே எடுத்துக் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

  எனவே ஞாநியின் கருத்துக்கு எதிராக தங்கள் கருத்துக்களை விகடனுக்கே ஒட்டுமொத்தமாக எழுதி அனுப்பியிருக்கலாம். ஞாநிக்கு எதிரான பெரிய இக்கண்டனக் கூட்டம் தவறானது. பார்ப்பனியத்தை உதறி விட்டு வெளியே வந்தவர்களையும் திரும்பவும் பார்ப்பனியத்துக்குள்ளேயே தள்ளும் அபாயம்தான் தெரிகிறது. அதற்குப் பதிலாக பார்ப்பனிய உச்சநீதி மன்றத்துக்கெதிராக கண்டனக் கூட்டம் நடத்தி அருந்ததி ராய் போல ஓரிரு நாட்கள் சிறைக்குச் சென்றிருக்கலாம்.

  நன்றி – சொ. சங்கரபாண்டி

  ReplyDelete
 16. ஒரு கருத்தை எதிர்க்காமல் கருத்துச் சொன்னவரின் வாழ்க்கையை விமர்சிப்பவர்கள் கோழைகள்தானே?

  எதற்கெடுத்தாலும் சாதி பார்க்கும் தமிழர்கள் 'சமூக நீதியை' அடைந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்வது விந்தையாகயிருக்கிறது!

  ReplyDelete
 17. I listened to the speeches at the meetings and went through some blogs. I read the interview with Adavan Theetchanya in Keetru.I will
  respond to these at length as soon as possible.
  I was not surprised by the views in the speeches and in the interview. It is good that they have come out so openly and so
  candidly.
  The real face of these so called intellectuals and writers is
  visible now. The venom within their psyche is out and is there for all to see. Some from the left and the Periyarists have come together to target brahmins and spread lies and indulge in hate
  campaigns. They will stoop to any extent in this. This is evident in the speeches and in the interview.

  Despite all this I am sure that Gnani will stick to his principles and continue to defend Periyar and what he thinks as a progressive views. In my view the venom has its
  origin in the ideology expounded of Periyar. So one has start the criticism from Periyar and the ideology he put forth.

  ReplyDelete
 18. 'காயம் பட்ட சமூக உளவியல்'
  The hindu communalists defended the pogram in Gujarat by stating that it was a response to what happened in Godhra. This argument in the comments based on 'காயம் பட்ட சமூக உளவியல்' is very similar to it. It is adding insult to injury.

  ReplyDelete
 19. //It is good that they have come out so openly and so
  candidly.//

  Ravi,
  You also started as an intellectual and ended as castist when you came out openly and so candidly with your infamous "war against us" statement. Your ramblings now reminds me of the saying "pot calling the kettle black". Only difference is you were ahead of others to come out. Good luck for your proposed lengthy response.

  ReplyDelete
 20. //ravi srinivas said...
  'காயம் பட்ட சமூக உளவியல்'
  The hindu communalists defended the pogram in Gujarat by stating that it was a response to what happened in Godhra. This argument in the comments based on 'காயம் பட்ட சமூக உளவியல்' is very similar to it. It is adding insult to injury.
  //

  அறிஞர்களின் சிவப்புக் கொள்கை முகமூடி வெளுத்து காவிநிறக் கொள்கை வெளிப்படும் போது, அவர்களுக்கு எழுத்துரிமை-பேச்சுரிமைகளுக்கும் குஜராத் இனப்படுகொலைக்கும் உள்ள வேறுபாடு தெரியாதுதான். அதனால் நண்பர் இரவி ஸ்ரீநிவாஸின் திரித்தல்களை அடையாளப்படுத்துவதே இந்தப் பின்னூட்டம்.

  ஞானியின் எழுத்துரிமையையும் மேலும், அவரைக் கண்டனம் தெரிவித்தவர்களின் பேச்சுரிமையையும் நான் மதிக்கிறேன், ஆதரிக்கிறேன். அவர்களுடைய கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைத் தெரிவிக்கவே என்னுடைய முந்தையப் பின்னூட்டம். மேலும் ஞானியைக் கண்டித்துப் பேசியவர்களின் பிராமணர்/பிராமணிய அரசியலைப் பற்றிய கருத்துக்களின் மேலும் எனக்கு சில வேறுபாடுகள் இருப்பினும், அவற்றைப் பற்றி வெளிப்படையாக மேடைகளில் பேசுவதற்கான அவர்களது உரிமையையும் மதிக்கிறேன். பிராமணர் சங்கமாநாடு என்று போட்டு பிராமணர் பெருமைகளையும், மற்ற அனைவருடைய திறமையின்மையையும் நீட்டி முழக்க உரிமையிருப்பதைப் போல. இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் சாதியத்தை அங்கீகரிக்கும், ஆதரிக்கும் சாதியக் குறியீடான பூணூலைப் (ஸ்வஸ்திகாவைப் போல) அணிந்து கொண்டு இருப்பதைக் கூட அவர்களது உரிமையாக என்னால் எடுத்துக் கொள்ள முடிவதைப் போல.

  ஞானியின் எழுத்தையும், செயல்பாடுகளையும் பல ஆண்டுகளாகப் படித்து வருபவன் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்துப் பேசியிருக்கிறவன் என்ற முறையிலும், அவரைப் பார்ப்பனியக்கொள்கைகளை சமரசமின்றி எதிர்த்துச் செயல்படுபவராகவே பார்க்கிறேன். ஆனால் ஒரே ஒரு கட்டுரையின் அடிப்படையில் அவரை முழுப் பார்ப்பனியவாதியாக சித்தரித்து கண்டனம் செய்வதைத்தான் என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் விமர்சனத்திருந்தேன். அதுவும் நண்பர் இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்களை விமர்சித்திருந்தால் கண்டுகொண்டிருக்க மாட்டேன், ஏனென்றால் அதில் உண்மையிருக்கிறது என்ற என்னுடைய அனுபவப்புரிதலினால் :-) இதற்காக நண்பர் இரவி ஸ்ரீநிவாஸ் முன்பொரு முறை குறிப்பிட்டது போல் உச்சநீதி மன்றத்தை அணுகி என்னைக் களிதின்ன ஏற்பாடு செய்தாலும் சரி :-)

  நன்றி – சொ. சங்கரபாண்டி

  ReplyDelete
 21. inna seithaarai oruthal avar naana nannayam seithu vidal...

  Naam tamilarhal endraal, kalaingar mathikkum ayyan thiruvalluvar vazhiyil... ithu poandra kandana koottangal nadathaamal thamilanin ganniyathai velippaduthi irukkalaahm.. ellavatrirkkum melaaha nganiyum oru thamilar enbathai maranthu vidal aahaathu...

  ReplyDelete
 22. தாழ்ந்த குலப் பெண்களெல்லாம் ரவிக்கை போட ஆரம்பித்ததால் தான் பருத்தி கிடைப்பது அரிதாகிவிட்டதென்றும், அதே குலத்திலுள்ளோரெல்லாம் பழங்கஞ்சியை விட்டு அரிசி சோறு சாப்பிட ஆரம்பித்ததால் தான் நாட்டில் அரிசிக்குப் பஞ்சம் வந்ததென்றும் தனது பகுத்தறிவை ஆராய்ந்து "அறிவுக் கொழுந்து" அறிக்கை விட்டு வாங்கிக் கட்டிக்கொண்டவர் திரு. ஈ. வே. ராமசாமி (?!). அவர் வழியிலேயே குங்குமப் பொட்டுக்கும் மஞ்சள் துண்டுக்கும் வேளைக்கு ஒரு அறிக்கை விட்டவர்களைப் பார்த்து பேசாமலிருந்தது தானே இந்தத் தமிழகம். பார்பனர்களை எதிர்க்க வேண்டும், அவர்கள் நல்லது செய்தாலும் பரவாயில்லை. ஒரு நாளில் ஆட்டம் போட்ட அவர்களே நந்தனாரை சிவனடியாராய், நாயன்மார்களில் ஒருவராய் வழிபட்டு வருகின்றனர்.

  வந்துட்டாங்கயா...! பகுத்தறிவு பாசறைலேந்து கெளப்பிக்கிட்டு...

  அப்போ "அவா" டாக்டர், "அவா" வக்கீல், "அவா" ஆடிட்டர் எல்லரையும் ஆத்துக்கு போகச் சொல்லிட்டு இவரே பகுத்தறிவுக் கூட்டத்தை வெச்சு மேய்க்க வேண்டியதுதானே? இதுக்கெல்லாம் மட்டும் எதுக்கு அவா?

  ReplyDelete
 23. அமுதசுரபி. எந்தப் பக்கத்தை தலைப்பை தொட்டாலும். மனதில் பதிந்து வைத்துள்ள அத்தனை பிம்பங்களும் மறைந்து மறுபடியும் புதிதாய் பிறக்க வேண்டும்.


  தேவியர் இல்லம். திருப்பூர்.

  ReplyDelete
 24. I really do not understand what purpose is going to be achieved by this old time-pass game. The so called brahmin hate speech is the bread and butter of the so called Dravidian PaguththaRivu Patta Kathigal. They have to keep that mask as long as there is some people in Tamil-Nadu who get pleasure in hearing, reading and spreading any thing defamatory in nature about paparapayal. Gladly that sect is moving away and begun to see the merit of the argument who ever made it. I do not have any ill-feeling towards anybody and feel proud to listen all stuff rubbish or eternal truth with same state of mind.

  ReplyDelete