கனிமொழி (எம்.பி), ரவிக்குமார் (எம்.எல்.ஏ), வேறு சிலர் சேர்ந்து "நாம்" என்ற ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ளனர் (போலும்). அந்த அமைப்பின் சார்பில் இன்று சென்னையில் (இமேஜ் ஆடிட்டோரியம்) 'Limits of Judicial Authority' என்ற தலைப்பில் விவாதம் (A discussion in the background of recent judicial contempt proceedings) நடந்தது.
நிகழ்ச்சிக்கு திமுகவின் மத்திய அமைச்சர் A.ராஜா தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினர் பிரிந்தா காரத் (எம்.பி), ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி A.K.ராஜன், தி ஹிந்துவின் என்.ராம், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மனோஜ் மிட்டா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இந்த நிகழ்வை ஒலிப்பதிவு செய்துள்ளேன். ஆனால் வலையேற்ற பத்து நாள்களுக்கு மேல் ஆகலாம்.
கலந்துகொண்டவர்களுக்கு சிறிது குழப்பம் இருந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் "recent judicial contempt proceedings" என்றால் என்ன என்பதைச் சரியாக விளக்கவில்லை. பிரிந்தா காரத் தில்லி 'மிட்-டே' வழக்கு பற்றி ஒரு வார்த்தை பேசினார். மற்றபடி அக்டோபர் 1 தமிழ்நாடு பந்த் பற்றியும், பொதுவாக நீதித்துறை எப்படி பிற துறைகள்மீது தனது ஆக்கிரமிப்பை அதிகமாக்கியுள்ளது என்பது பற்றியும் பேசினார். மனோஜ் மிட்டா முழுக்க முழுக்க மிட்-டே வழக்கு பற்றி மட்டுமே பேசினார். ராம் இரண்டையும் எடுத்துக்கொண்டார். ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன், நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளையும் சுட்டாமல், எந்தெந்த வழக்குகளின்போது நீதித்துறை கொஞ்சம் கொஞ்சமாக எக்சிக்யூட்டிவின் நிர்வாக அதிகாரத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்தது என்று கோடிட்டுக் காட்டினார்.
நிறைய உபயோகம் இருந்தாலும் இந்தக் கூட்டம் சற்றே குழப்பமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது போல இருந்தது. 5.00 மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்த கூட்டம் 5.45க்குப் பிறகுதான் தொடங்கியது. திமுக அமைச்சர்கள், பிரமுகர்கள் பலரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். நிறைய திமுக தொண்டர்கள் வண்டிகளில் அழைத்துவரப்பட்டிருந்தனர். ஆனால் அமைச்சர் ராஜா தவிர அனைவரும் ஆங்கிலத்தில் பேசினர்.
பல்வேறு காரணங்களுக்காக பொதுக்கூட்டங்கள் ஆங்கிலத்தில் நடைபெற வேண்டியிருக்கும். (பிரிந்தா காரத், மனோஜ் மிட்டா ஆங்கிலத்தில்தான் பேசியிருக்க முடியும். ராம், ஏ.கே.ராஜன் ஆகியோர் மேடையில் தமிழில் பேசிப் பழக்கமில்லாதவர்கள்.) கூட்டத்தில் பலர் ஆங்கிலத்தில் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் என்று தெரிந்தது.
இதுபோன்ற முக்கியமான விஷயங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க, முழுக்க முழுக்க தமிழில் (பிற மாநிலங்களில் அந்தந்த மொழிகளில்) நடக்கும் விவாதக் கூட்டங்கள் தேவை. "நாம்" என்னும் அமைப்பின் பின்னணி, நோக்கம் ஆகியவை எத்தகையதாக இருப்பினும் நீதித்துறை பற்றிய விவாதம் பொதுமக்களிடையே நடந்தாக வேண்டும்.
-*-
அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்களின் மெத்தனம், ஊழல் ஆகிய காரணங்களால், பெரும்பான்மை மத்திய தர மக்கள், மாதச் சம்பளக்காரர்கள் நீதித்துறையின்மீது பெருமதிப்பு வைக்க ஆரம்பித்தனர்.
நெருக்கடி நிலையின்போது தரம் தாழ்ந்திருந்த/காயடிக்கப்பட்ட நீதித்துறை, அடுத்த சில பத்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நாயகன் என்ற நிலைக்கு உயர்ந்து, இன்றோ சர்வாதிகாரத் தன்மையை எட்டப் பார்க்கிறது. பல வழக்குகளில் நீதித்துறை தரும் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. அதையும் விடக் கொடுமை, அவ்வப்போது பல நீதிபதிகள் உதிர்க்கும் கருத்துகள். கொஞ்சம் கொஞ்சமாக நீதித்துறை, நிர்வாகக் கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாகவும் மாறத்தொடங்கியுள்ளது. இதற்கு மோசமாக இயங்கும் அரசாங்கமும் ஒரு காரணம் என்றாலும், நீதித்துறை தன்னிச்சையாக கமிட்டிகளை நியமித்து, மத்திய மாநில அரசுகளுக்குத் தொல்லை கொடுப்பதில் தொடங்கி, பள்ளியில் குழந்தைகளை அனுமதிக்க இன்னின்ன வரைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பது வரை நடந்துகொள்வது அனுமதிக்க முடியாத ஒன்று.
அடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என்ற அபத்தம்.
அரசியல் கட்சிகள், மக்களின் கருத்தைக் கேட்டறிந்து, நீதித்துறையின் வரம்பு என்ன என்பதை நிர்ணயித்து அதை நீதித்துறை மீறாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்யவேண்டும். அத்துடன், நீதித்துறை மீதான அவமதிப்பு என்றால் என்ன, நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் செய்யும் குற்றங்களை, தவறுகளை, ஊழல்களை யார் தண்டிப்பது ஆகியவற்றையும் சட்டமாக்கவேண்டும்.
அதற்கு, மேலும் பல விவாதங்கள் தேவை.
மீன்களின் நடனம்
57 minutes ago
உண்மையில் நீதிமன்ற அவமதிப்பு என்பது பெரும் குழப்பமாகவே இருக்கிறது. நீதிமன்றம் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்கவேண்டும் என்பது சர்வாதிகாரத்தனத்தைத்தான் கொண்டு வரும். அதேபோல் நீதிமன்றம் தரும் உபதேசங்கள் பெரும் எரிச்சல் தருபவைதான். ஒருமுறை ஒரு நீதிபதி (கற்பகவிநாயகம்???) காந்தியின் புத்தங்களை ஒரு நாள் முழுதும் படிக்க தீர்ப்பு வழங்கினார். இது தனிமனித உரிமை மீறல் இல்லையா? தண்டனை என்பதாக இதை ஏற்பதானால் காந்தியைப் படிப்பது தண்டனையா? அறிவுறுத்தும் விதமாக என்றால் தனிமனிதன் காந்தியை மறுக்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா?
ReplyDelete//ஒருமுறை ஒரு நீதிபதி (கற்பகவிநாயகம்???) காந்தியின் புத்தங்களை ஒரு நாள் முழுதும் படிக்க தீர்ப்பு வழங்கினார்//
ReplyDeleteபிரசன்னா கொஞ்சம் நன்றியும் சொல்லுங்கள். நீதிபதி கற்பகவிநாயகம் காந்தியவாதி போலிருக்கிறது.. இவரே நவீன இலக்கியவாதியாக இருந்திருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும்? :-)
the only sane institution in india is the supreme court. if the supreme court goes the way of legislature and executive (for all practical purposes they are non functioning), india will soon resemble some godforsaken african nation.
ReplyDeleteI think indian politicians and indian public need lesson in democracy 101. People have their rights not because it is a voting democracy (the so called 'people's court') but because we have a constitution and a supreme court that ensures that the rights provided to the people in the constitution are safeguarded. For those who want the 'people's court' to be more powerful than supreme court: Remember the fate minorities in the 'people's court' of gujarat a few years ago.
ReplyDeleteபிரகாஷ், :)) :))
ReplyDeleteSupreme Court has overstepped its limits, but only on few occassions.But the politicians and
ReplyDeleteexecutive overstep their limits routinely. When the Supreme Court
steps in to restrian them they see that as a threat. Contempt of court should not be used the way it is being used now.When Brinda
Karats and the left lunatics
who have no qualms in supporting DMK which engineered violence in Chennai Corporation polls talk about Supreme Court overstepping its limits it is like devil quoting scripture. Kanimozhi is the 'intellectual' face of DMK
to use a cliche fascism. Dont be
fooled by her liberal pretensions.
This N.Ram and other journos run to the court whenever the state tries to arrest them or whenever a
ReplyDeletespeaker of a assembly issue notice to them to appear before them or
orders police to arrest them. They seem to forget that politicians
want to destoy the institution of court and bring it under their
control. Rams and Badris seem to
go with the politicans in this.
இவரே நவீன இலக்கியவாதியாக இருந்திருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும்? :-)
Prakash, i have a punishment in
mind. Ask the offender to read
Gill and its archives. Is it less
(or more) cruel than reading (post)
modern Tamil literature?
// காயடிக்கப்பட்ட //
ReplyDeleteApt word !!!! Commonly used in Tirunelveli - Thoothukudi area... Wondered whether this expression is common in nagapattinam / Chennai Also
//தண்டனை என்பதாக இதை ஏற்பதானால் காந்தியைப் படிப்பது தண்டனையா?//
???? :( :(
But if you consider "Sentences" as a reforming method and not "punishment" then I think this is a good idea...
But what will happen if Judge X asks to read Gita and Judge Y Periyar's writing ????
Indian School of Social Sciences is organising VPC Memorial Lecture on Oct 19th on the subject of Judiciary and Democracy after 60 years of Independance in Kalaivanar arangam. SITARAM YECHURY is addressing the meeting. All are welcome - Ramesh, Convenor, ISS
ReplyDeleteIndian School of Social Sciences is organising VPC Memorial Lecture on Oct 19th on the subject of Judiciary and Democracy after 60 years of Independance in Kalaivanar arangam. SITARAM YECHURY is addressing the meeting. All are welcome - Ramesh, Convenor, ISS
ReplyDeleteIndian School of Social Sciences -
It is better to rename that as
Communist School of Disinformation.
தீர்ப்புகள் எப்பொழுதுமே ஒரு சாராருக்கு சாதகமாகவும், இன்னொரு பகுதிக்கு பாதகமாகவும் இருப்பது இயற்கை.
ReplyDeleteஇவர்கள்--இந்த அரசியல்வாதிகள்--சாதகமாக இருந்தால், நீதியின் மாட்சிமை குறித்துப் பெருமைப்படுகிறார்கள். பாதகமாக இருந்தால்,
பெருங்குரல் எடுத்து தெருவுக்கு வந்து ஓலமிடுகி
றார்கள்.
இதே காரியத்தை ஒரு வசதிபடைத்தப் பணக்காரன் கூட, கோர்ட் தீர்ப்பு தனக்குச் சாதகமில்லாத பட்சத்தில், 100 பேரைக்கூட்டிவைத்துக்கொண்டு ஒரு மண்டபத்தில் கூட்டம் போட்டு, கூச்சல் போடும் நிலை ஏற்பட்டுவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.
இயற்றப்பட்ட சட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரு வேலையைத் தான் நீதிமன்றங்கள் செய்கின்றன. ஒரு இடத்தில் தீர்ப்பு சரியில்லை எனில், மேல்கோர்டுகளை அணுக அதற்காகத்தான் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கார் போன்ற மேதைகள், ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
வெகுஜன மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது அவநம்பிக்கை வந்து விடக்கூடாது. அது முக்கியம்.
ஏதாவது நீதிமன்றங்களைப்பற்றிக் குறையிருந்தால், வீதிக்கு வருவதை விடுத்து, குடியரசு தலைவர் மட்டத்தில் விவாதித்து,அதற்கேற்ப சட்டங்களை நிறைவேற்றலாம் என்று நினைக்கிறேன்.