Thursday, February 21, 2008

பராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா

ஆஸ்திரேலிய பிரதமராக ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி (Labour Party) தலைவர் கெவின் ருட் சில மாதங்களுக்குமுன் பதவி ஏற்றார். அதற்கு முந்தைய ஜான் ஹாவர்ட் அரசு, இந்தியாவுக்கு யுரேனியம் தருவதற்குத் தயாராக இருந்தது. அதாவது இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் (123 ஒப்பந்தம்) கையெழுத்தாகி, அதன்பின் இந்தியா IAEA-உடன் ஒப்பந்தம் செய்துகொண்டால், ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு யுரேனியம் தரும்.

ஆனால் அப்போதே எதிர்க்கட்சித் தலைவரான கெவின் ருட், இதனை எதிர்த்தார். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty) கையெழுத்திட்ட நாடுகளுக்கு மட்டுமே ஆஸ்திரேலியா யுரேனியம் வழ்ங்கவேண்டும் என்றார். இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கிறது.

கெவின் ருட்டின் கொள்கைப் பிடிப்பை நான் வரவேற்கிறேன். ஆஸ்திரேலியத் தேர்தலில் அவர் ஜான் ஹாவர்டைத் தோற்கடித்து பதவிக்கு வந்தது ஆஸ்திரேலியாவுக்கும் உலகத்துக்கும் நல்லது என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு யுரேனியம் விஷயத்தில் இதனால் பின்னடைவுதான். இருந்தாலும் பரவாயில்லை. இன்று கெவின் ருட் வந்ததால்தான் ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு வெள்ளை ஆஸ்திரேலியர்கள் செய்த அநியாயத்துக்கு அதிகாரபூர்வ மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் என்ன செய்தாலும், இப்போதைய ஆட்சிக் காலத்தில் ஆஸ்திரேலியா இவர்கள் இருவருக்கும் ஜிஞ்சா போட்டு பின்னாலேயே செல்லாது என்று நான் நம்புகிறேன்.

அதேபோல பராக் ஒபாமாவை நான் ஆதரிப்பது. எனது பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில் வஜ்ரா இந்தச் சுட்டியைக் கொடுத்திருந்தார்: How Obama’s beedi ban affected India?

பராக் ஒபாமா, குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்ய நினைப்பது எந்தவிதத்தில் தவறானது? நமது இந்திய அரசுமே அதனைத்தானே செய்ய நினைக்கிறது? இதற்கென பல சட்டங்களை இயற்றியுள்ளது? ஆனால் அதில் எப்போதும் பலன் பெறுவதில்லை. குடிசைத் தொழில் அழிந்துவிடும், நசிந்துவிடும் என்று பேசுபவர்கள், எப்படி கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இன்றி, பச்சைக் குழந்தைகளை பீடி சுருட்டவிட்டு பணம் செய்வதை வரவேற்கிறார்கள்?

நான் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை வரவேற்கிறேன். ஆனால் இப்போதைய நிலையில் அது நிறைவேற்றப்படாது என்று நினைக்கிறேன். பராக் ஒபாமா பதவிக்கு வந்தால், அவர் கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பாமல் இருக்கலாம். அப்படியே நடந்தாலும்கூட, மொத்த உலக நன்மைக்கும், அமெரிக்க நன்மைக்கும் பராக் ஒபாமா அமெரிக்கக் குடியரசுத் தலைவராக வருவதே நல்லது என்று நம்புகிறேன் நான்.

தங்களது தேசிய நலனுக்காக உலகமெல்லாம் நாசமாகப் போகட்டும் என்று நினைப்பது மகா அபத்தமானது. இதைத்தான் அமெரிக்காவின் ரிபப்ளிகன் கட்சித் தலைவர்கள் - ரீகன், அப்பா புஷ், பிள்ளை புஷ் ஆகியோர் செய்துவந்துள்ளனர். இது கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. இந்தியா என்ற நாடு, அதிகாரபூர்வமாக மற்றொரு நாட்டில் நடக்கும் தேர்தலில் யார் ஜெயிக்கவேண்டும் என்று கருத்து சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் அது பின்னர் அரசியல், ராஜரீகத் தொடர்புகளுக்குக் குந்தகமாக அமையும். ஆனால் தனிப்பட்ட மனிதனாக நான், எனது கொள்கைகளுக்கு ஏற்ப, ஒருவரை ஆதரிக்கும்போது அதனால் இந்திய நலன்களில் சிறிது குறைபாடு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறேன். மொத்தத்தில் உலகமே பயனடையும்.

அதுவும் பராக் ஒபாமாவின் குழந்தைத் தொழிலாளர் கருத்து எனக்கு முழுதும் ஏற்புடையது. கெவின் ருட்டின் கொள்கையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிற ஒன்றே.

7 comments:

  1. //
    பராக் ஒபாமா, குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்ய நினைப்பது எந்தவிதத்தில் தவறானது?
    //

    பத்ரி அவர்களே அந்தச் சுட்டி நான் கொடுத்ததற்கான காரணம், குழந்தைத் தொழிலாளர்களை ஆதரிக்க அல்ல. 


    அதே வலைப்பதிவில் வந்த ஒரு பின்னூட்டம் இது.


    Offstumped’s position is less about bidi’s and more about America’s “liberal-progressive” face and the impact that this activism has on economics.



    Unfortunately, this paradigm of interventionism is not understood by many who fall for this liberal trap.


    In this light - for example - Obama or Hillary, if elected, could very easily continue the war in Iraq to “liberate Muslim women.”


    Once you accept the notion of interventionism, it can be used for any goal and any means, under the guise of “progress.”


    In the same light, it was England justified its oppressive rule in India, as England’s “burden” to bring “civilization” into a “decadent” India in the nineteenth century. Liberals do not understand that India’s social dysfunction was caused by an economic decline, not because of its civilization and its polity. Unless people understand this, practically anything and everything in the world, today, can become America’s “burden” to carry.


    Offstumped has given a simple and specific example of how this so-called “progressive” action by American liberals has a negative effect.

    ReplyDelete
  2. "தங்களது தேசிய நலனுக்காக உலகமெல்லாம் நாசமாகப் போகட்டும் என்று நினைப்பது மகா அபத்தமானது."

    Hear, hear!

    ReplyDelete
  3. எனக்கு தெரிந்து ஒரு கருப்பரை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இங்கே இருக்கிற மக்களுக்கு வரலைன்னு நினைக்கிறேங்க. நான் விசாரிச்ச வரையில் McCain or hillary. இன்னிக்கு நிலவரப்படி ஒபாமா வெற்றி பெரும் நிலையில் இருக்காரு. ஆனா ஓஹையோ அம்மணியோட இடம் ஆச்சுங்களே..

    ReplyDelete
  4. //
    தங்களது தேசிய நலனுக்காக உலகமெல்லாம் நாசமாகப் போகட்டும் என்று நினைப்பது மகா அபத்தமானது. இதைத்தான் அமெரிக்காவின் ரிபப்ளிகன் கட்சித் தலைவர்கள் - ரீகன், அப்பா புஷ், பிள்ளை புஷ் ஆகியோர் செய்துவந்துள்ளனர். இது கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. இந்தியா என்ற நாடு, அதிகாரபூர்வமாக மற்றொரு நாட்டில் நடக்கும் தேர்தலில் யார் ஜெயிக்கவேண்டும் என்று கருத்து சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் அது பின்னர் அரசியல், ராஜரீகத் தொடர்புகளுக்குக் குந்தகமாக அமையும். ஆனால் தனிப்பட்ட மனிதனாக நான், எனது கொள்கைகளுக்கு ஏற்ப, ஒருவரை ஆதரிக்கும்போது அதனால் இந்திய நலன்களில் சிறிது குறைபாடு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறேன். மொத்தத்தில் உலகமே பயனடையும்.
    //

    இந்திய நலன் தான் எப்போதுமே முன்னே நிற்கவேண்டும். அப்படி இல்லாமல் altruistic ஆக இருந்து யாரிடம் நல்ல பெயர் வாங்கப் போகிறீர்கள் ? அப்படிப்பட்ட நல்ல பெயரால் என்ன இலாபம் ?

    உங்களைப் போன்ற நல்லவர்கள் திரேதா யுகத்திலேயே extinct ஆகாமல் ஏன் இன்னும் கலியுகத்தில் வந்து உயிரை எடுக்குறீர்கள் ?


    உங்கள் சொந்த கொளுகைக்காக எத்தனை புத்தகங்கள் கிழக்கு பதிப்பகம் அச்சடித்துள்ளது ? பிரயோசனமில்லாத கொளுகையினால் காசை வீணாக்க நீங்களே விரும்பாத போது ஏன் இந்த இரட்டை நிலை ?

    ReplyDelete
  5. Badri

    WYou have stayed in Us and you should know the politics here.I am oin this country fir 35 years and have voted both republican and democrat.
    Barack will be a disaster for the countrey and the world.He is naive 'Idealist'.Hillary is a shrewd calculator.
    A Mccain presidency will be the best for us here.
    He is closet moderate whisch is good.He can handle the neocons and religious right and work with liberals in congress.
    The politicians abd parties esp in Tamil nadu could learn a lot from Macain.Go republicans.
    By the way Reagan was the best president of recent times.

    Ramamurthy

    ReplyDelete
  6. நல்ல பதிவு.
    பிரதமர் கெவின் ரட் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் திகதி ஆற்றிய உரை பற்றியும் "பறிக்கப்ட்ட அல்லது "திருடப்பட்ட சந்ததி" பற்றி ஒரு பதிவு போட்டீர்களானால் நல்லது.

    en.wikipedia.org/wiki/Stolen_Generation

    ReplyDelete