Thursday, March 20, 2008

திபெத், தி ஹிந்து, தமிழ் பத்திரிகைகள்

திபெத்தில் கலவரங்கள் ஓய்ந்தமாதிரி உள்ளது. தமிழகத்தில் இருந்துகொண்டு இணையம் அல்லது பிபிசி போன்ற தொலைக்காட்சியைப் பார்க்காவிட்டால், என்ன நடக்கிறது என்பதை யாருமே தெரிந்துகொள்ளமுடியாது.

தமிழ் பத்திரிகைகள் ஆதியோடு அந்தம் எதையும் விளக்குவதில்லை. அதுவும் திபெத் எந்தப்பக்கம் என்றுகூடத் தெரியாமல் இருக்கின்றன. தி ஹிந்து, இலங்கை தொடர்பாக எழுதும் பொய் செய்திகளைப் போன்றே, திபெத் தொடர்பாக அட்டூழியம் செய்கிறார்கள். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு, சீனாவின் காசில் திபெத் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு என்.ராம் உளறித் தள்ளி கட்டுரைகள் சிலவற்றை எழுதியாகிவிட்டது. இப்போது நியூஸ் கவரேஜ் அற்புதமாக உள்ளது.

வேறு ஏதாவது காலை செய்தித்தாளை வாங்கித் தொலைப்போம் என்றால், ஒரு எழவும் உருப்படியாக இல்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியாவையா வாங்கித் தொலைக்கவேண்டும் என்று பயமாக இருக்கிறது.

செய்தித்தாள்களில் 24% வரை மட்டுமே அந்நிய முதலீடு இருக்கலாம் என்ற நிலை இப்போது. இது மாறலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன. 49% வரை உயர்த்தினார்கள் என்றால் 'தி கார்டியன்' போல் யாராவது இந்தியா வந்து, நல்ல நியூஸ்பேப்பர் நடத்துவது எப்படி என்று நமக்கு சொல்லித்தரலாம்! (அஃப்கோர்ஸ், மர்டாக்கும் வந்து கழுத்தறுப்பார்!)

5 comments:

  1. // டைம்ஸ் ஆஃப் இந்தியாவையா வாங்கித் தொலைக்கவேண்டும் என்று பயமாக இருக்கிறது.
    //

    அய்யா, முதல் வேலையா slimes of India ச்சே... Times of India க்கு ஒரு வருஷ சந்தா கட்டுங்க. உங்களை யாரு படிக்கச் சொன்னா? வருஷத்துக்கு இருநூறு ருபா கட்டினா மாசத்துக்கு நூறு ரூபாய் வரும் ( பழைய பேப்பர், கிலோ அஞ்சு ரூபாய்). இந்த மாதிரி லாபகரமான பிசினஸ் ஏதாச்சும் இருக்குமா?

    வாழ்க ஜெயின் குடும்பம்!

    ReplyDelete
  2. எங்கள் கம்பெனியில் Timesஐ நிறுத்திவிட்டு டெக்கன் க்ரோனிக்கல் வாங்க ஆரம்பிச்சி வருஷம் ஆச்சுது.

    I miss 'Page 3'அதுக்காகத்தானே டைம்ஸ் வாங்குவாங்க எல்லாரும் :) இல்லையா?

    இல்லாட்டி பிரகாஷ் சொன்னதுக்காகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  3. The south chennai morning post is one of the worst news papers in Tamil nadu, and the editor has no shame whatsoever in attending all kinds of meets that are organized to oppose FDI in press media.

    ReplyDelete
  4. நான் உணர்ந்த விசயங்கள் உங்கள் எழுத்துக்களில்.

    ReplyDelete