Saturday, March 15, 2008

நந்திகிராமமும் கண்ணூரும்

நேற்று கம்யூனிஸ்டுகளுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் (State Department) உலகின் எல்லா இடங்களிலும் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் பற்றி ஆண்டாண்டு ஓர் அறிக்கையை வெளியிடும். (இதில் ஐரனி என்னவென்றால் அமெரிக்காவே முன்னின்று நடத்தும் மனித உரிமை மீறல்கள் பற்றி அதில் ஒன்றும் இருக்காது!) 2007-ம் ஆண்டுக்கான அறிக்கை இங்கே.

இந்த அறிக்கையில் நந்திகிராமம் இடம் பெற்றுவிட்டது என்பது பற்றி லோக் சபாவில் பெரும் கூச்சல், குழப்பம், சண்டை. கம்யூனிஸ்டுகளுக்குக் கடும் கோபம். கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியும்கூட அமெரிக்கா இவ்வாறு நந்திகிராமத்தைக் குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை.

நந்திகிராமத்தில் நடந்தது மனித உரிமை மீறல் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் மனித உரிமை மீறல் என்றாலும் அமெரிக்கா யார் இதைப்பற்றிச் சொல்ல என்று கேட்கிறார்கள் கம்யூனிஸ்டுகள்.

சரி, இந்த அறிக்கையில் என்னதான் சொல்லியிருக்கிறார்கள் நந்திகிராமத்தைப் பற்றி என்று பார்த்தேன். பார்த்தால் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் நடந்த அத்தனை மனித உரிமை மீறல்களையும் பட்டியலிட்டுள்ளனர். இதில் கம்யூனிஸ்ட் மேற்கு வங்கம் மட்டுமல்ல, தமிழகமும் இடம் பெறுகிறது. மனித உரிமை மீறல் என்றால் அரச அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள், காவல்துறை, ராணுவம் ஆகியவை அப்பாவி மக்கள்மீது செலுத்தும் அதிகார துஷ்பிரயோகம். இந்த அறிக்கையில் இடம்பெறாத மாநிலமே கிடையாது என்று சொல்லலாம். ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள், சட்டிஸ்கார், தமிழகம், கேரளம், ஆந்திரா .... அத்தனையும் உள்ளன. சென்னையில் நடந்த ஒரு லாக்-அப் கொலை பற்றி இதோ:
On December 11, Chennai police arrested 50-year-old Syed Ali, a tea shop worker in Vadapalani, Chennai, for the alleged unlawful sale of lottery tickets. Syed died in custody. The Tamil Nadu government ordered an inquiry into the incident after Chennai shopkeepers alleged that the death was due to police torture. At year's end, the investigation was ongoing.
நந்திகிராமம் பற்றிய விஷயம் இங்கே:
From November 6 to 11, CPM members, whom human rights groups claim had state government support and direction, conducted a violent campaign of intimidation to regain control over the Nandigram area from the Bhumi Uchhed Protirodh Committee (BUPC). The BUPC included those opposed to the CPM's plan to acquire local land for industry, some former CPM supporters, and opposition party workers and was backed by the Trinamul Congress, part of the West Bengal opposition. News reports and eyewitness accounts noted that CPM cadres fired on BUPC supporters and local villagers, killing at least three and injuring others, burned many houses, and engaged in numerous rapes. On November 27, journalists reported the discovery of mass graves in the area. Following a government order on December 7, the CID initiated an inquiry into the identity of the bodies.
இதில் எங்குமே பிரச்னை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 'எங்கள் ஊரில் நாங்கள் யாரை வேண்டுமானாலும் கொல்வோம், வெட்டுவோம், அதைப்பற்றி கருத்து கூற நீ யார்' என்று அமெரிக்காமீது நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கோபம் வந்துள்ளது.

வேண்டுமென்றால் இந்திய வெளியுறவு அமைச்சகமும் ஆண்டுக்கு ஒரு ரிப்போர்ட் எழுதி அதில் அமெரிக்கா செய்யும் அட்டூழியங்களைப் பற்றி பத்தி பத்தியாக விளக்கிவிட்டுப் போகட்டும்.

இதேபோல இலங்கை அரசும் அமெரிக்க தூதரை அழைத்து வாய்க்கு வந்தபடி திட்டி அனுப்பியுள்ளது.

அமெரிக்கா, உலகத்துக்கெல்லாம் போலீஸ் கிடையாது. அவர்களும் இந்த அறிக்கையை வெளியிட்டுவிட்டு, இந்தியாவைக் கூப்பிட்டு விளக்கம் கேட்பது கிடையாது. எனவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப்பற்றி கோபம் கொள்வது தேவையற்றது. அடுத்த நாடு இந்தியாவில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி ஓர் அறிக்கைகூட வெளியிடக்கூடாது என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது!

***

அடுத்த ஆண்டு நிச்சயமாக அமெரிக்க அறிக்கையில் கண்ணூரில் இப்போது நடந்துவரும் கட்சிப் படுகொலைகளைப் பற்றி தகவல் வருவது நிச்சயம். ஆட்சியில் இருக்கும் சிபிஎம் கொலைப்படை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் 7 பேரைக் கொலை செய்துள்ளது. பதிலுக்கு ஆர்.எஸ்.எஸ் கொலைப்படையால் ஒரு சிபிஎம் தோழரை மட்டுமே கொல்ல முடிந்துள்ளது. இதுவே காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் வேறுமாதிரியாக இருக்கும் என்று சொல்கிறார் கேரள நண்பர் ஒருவர். காங்கிரஸ் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் வலுவடைவதும், பிறகு சிபிஎம் ஆட்சி வரும்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் வலுவைக் குறைக்க சிபிஎம் கொலைகளில் ஈடுபடுவதும் வாடிக்கையாம்.

இத்தனைக்கும் இதுபோல அரசியல் கொலைகள் கிட்டத்தட்ட இந்திய மாநிலங்கள் அனைத்திலுமே நின்றுபோய்விட்டன.

கம்யூனிஸ்டுகள் வலுவாக இருக்கும் மாநிலங்கள் தவிர.

7 comments:

  1. அமெரிக்காவில் இன்னமும் 23% மக்களுக்கு போதிய மருத்தவ வசதி இல்லாமல் இறக்கிறார்கள்.
    17% மக்கள் தினமும் ஒரு டாலருக்கும் குறைவான அளவு சம்பளம் வாங்குகிறார்கள். இது தவிர உலக முழுவதும்
    ஈராக், ஆப்கானிஸ்தான், வியட்நாம், சிலி, ஜப்பான் போன்ற நாடுகளில் ஏராளமான அப்பாவி மக்களை கொன்று
    குவித்த அமெரிக்காவிற்கு வக்காலத்து வாங்க வேண்டாம் முதலில் அமெரிக்கா தான் சுத்தை கழுவ சொல்லுங்கள்.பிறகு அடுத்தவர் நாத்ததை பற்றி கவலை படடும். அமெரிக்காவின் மலம்
    துடைக்க உதவும் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை.

    ReplyDelete
  2. அமெரிக்காவின் நேச நாடுகளில் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அந்த அறிக்கையில் விபரம் இருக்கும்.
    அமெரிக்காவில் அரசை விமர்சிக்கலாம், புஷ்ஷை கேலி செய்யலாம். அது போன்ற சுதந்திரம்
    சீனாவில் இல்லை.இடதுசாரிகள் தங்கள் நாடுகளில் குறைந்த பட்ச
    மனித உரிமைகளைக் கூட மக்களுக்கு தரவில்லை. இதை சொல்பவர்கள் அமெரிக்காவையும் விமர்சிக்கலாம்.
    பத்ரி அத்தான் செய்திருக்கிறார்.

    ReplyDelete
  3. சென்ற ஆண்டு வரை நரேந்திர மோடியையும் குஜராத் அரசியும் குறை கூறி அறிக்கை வெளிடப்பட்டது. அப்போது வாயை மூடிக்கிடந்தவர்கள் இப்போது இந்திய இறையண்மைக்கு கொடி பிடிக்கின்றனர்.

    பொதுவாக மற்ற நாடுகளின் உள்விவகாரங்களைப்பற்றிய Dossier ஐ வெளியிடுவது அரசுகளின் வழக்கமே. அமெரிக்கா என்பதால் விளம்பர வெளிச்சம் கிடைக்கிறது.

    ReplyDelete
  4. //
    இத்தனைக்கும் இதுபோல அரசியல் கொலைகள் கிட்டத்தட்ட இந்திய மாநிலங்கள் அனைத்திலுமே நின்றுபோய்விட்டன.

    கம்யூனிஸ்டுகள் வலுவாக இருக்கும் மாநிலங்கள் தவிர.
    //

    நல்ல பஞ்ச்.

    கம்யூனிஸ்டுகளால் எதிர்கருத்துள்ளவரை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்ற உலகறிந்த உண்மையை நிலைநாட்டும் corner stone கள் கன்னூரும், நந்திகிராமும்.


    பொதுவுடமை பேசித்திரியும் மனித குல விரோதிகள் மனித உரிமைக்குப் போராடுகிறோம் பேர்வழி என்பது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழும் கதை தான்.

    மெக்கார்த்தி போல் ஒருவர் வந்து இவர்களையெல்லாம் வங்காள விரிகுடாவிலும், அரபிக்கடலிலும், இந்துமா சமுத்திரத்திலும் தூக்கிப் போட்டுக் கொல்ல வேண்டும். இவர்களால் இந்தியாவிற்கு கிடைத்த நன்மைகளின் எண்ணிக்கை 0.

    ReplyDelete
  5. //நந்திகிராமத்தில் நடந்தது மனித உரிமை மீறல் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் மனித உரிமை மீறல் என்றாலும் அமெரிக்கா யார் இதைப்பற்றிச் சொல்ல என்று கேட்கிறார்கள் கம்யூனிஸ்டுகள் //

    Why communist really don't know who is America????? Pls let them see the song "America ... America" in You Tube atleast.

    "America decide what is right what is wrong?"

    ReplyDelete
  6. ஆளுக்கொரு நீதி?
    ஆளுக்கொரு நீதி இந்தியாவில்தான் நடக்கும். இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்தியர்கள் அனைவரும் சமம் என்று சட்ட புத்தகதில் பெயரளவில் மட்டும் எழுதி வைக்கப்பட்டு ,அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி, சிறுபான்மையினருக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதி,அரசியல்வாதிகள் சட்டசபைக்குள்ளோ அல்லது,மக்களவை உறுப்பினராக இருந்து அவைக்குள் இருந்தால் இருந்தால் அதற்கொரு நீதி என சத்தியத்திற்கு புறம்பாக நடைமுறைபடுத்தப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரியது. மறைந்த முன்னாள் நரசிம்மராவ் பதவிக்காலத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் உயர் நீதி மன்றம்பிறப்பித்த தன்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்து குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. தற்போது உலகம் முழுவதும் அனைவரும் கண்டு களித்து நம் நாட்டு மானத்தை வான் வெளி மூலம் அனைவருக்கும் வெளிப்படுத்திய லஞ்ச நாடகத்தின் கதியும் அதுபோல்தான் ஆகபோகிறது. சட்டத்தின் முன்பு என்று ஒரு சாதாரண குடிமகனும், நம் நாட்டில் உச்ச பதவி வகிப்பவரும் சமமாக நடத்த படுகின்ற நாள் என்றைக்கு வருகிறதோ அன்றுதான் இந்தியா நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் ஆகும்.அதுவரை ஏற்ற தாழ்வுகளும், போராட்டங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    ReplyDelete
  7. சில நூறு ஆண்டுகளே ஆன அமரிக்க சரித்திரம் அந்நாட்டு பூர்விக குடியினரில் பிணங்களின் மீதும், ஆப்பிரிக்க அடிமைகளின் மீதும் கட்டப்பட்ட ரத்தம் தோய்ந்த வெள்ளை நிற பேய்கள் வாழும் காடு..
    சுதந்திரம் என்று வாய் கிழிய பேசிக்கொண்டே உலகில் உள்ள அணைத்து நாடுகளின் சுதந்திரத்தை பலி கொண்ட புலிகள்
    நாசகார ஆயுதங்களை அதிகள் அளவில் உற்பத்தி செய்து உலகெங்கும் ஆயுத போட்டியை ஊக்குவித்தும், ஒவ்வொரு நாட்டின் தலையிட்டு உள்நாட்டு போர்களை நடத்தி அந்த நாடுகளை நாசம் செய்ததும்தான் அவர்கள் உலகிற்கு அளித்த கொடை.
    கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக கோடிகணக்கில் பணத்தை தண்ணீராக செலவு செய்யும் நாடு.
    மனித உரிமைகளை பற்றி வாய் கிழிய பேசும் அமரிக்க நிர்வாகம் இருபத்தைந்து லட்சம் மக்களை சிறையில் தள்ளி கொடுமைபடுத்தும் அவலம் உலகில் வேறெங்கும் கிடையாது.
    அதில் நாற்ப்பது சதவிதம் கருப்பன் இன மக்கள் என்பது உலகில் பல பேருக்கு தெரியாது.
    கறுப்பர் இன பிரதிநிதியாக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர்கள் போடும் பிட்சை காசுக்காக இந்தியாவில் இருக்கும் மீடியாக்கள் பாராட்டுவது விநோதமானது.
    அங்கு இருக்கும் கள்ள ஆயுத மாபியாக்களை மீறி எந்த ஜனாதிபதியும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது இங்கிருக்கும் ஜென்மங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
    அணு சக்தி ஒப்பந்தத்திற்காக அமரிக்கவிடம் ஒப்பந்தம் போட்ட காங்கிரஸ் கட்சி மக்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறது?
    தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக கணக்கில் வராமல் கோடிகணக்கான டாலர்களை பாகிஸ்தானுக்கு அமரிக்கா வழங்கியதையும் அந்த உதவி இந்தியாவிர்ற்கு எதிராக பயன்படுத்த பட்டது என்பதையும் ஏன் கண்டுகொள்ளவில்லை?
    இதெல்லாம் இந்திய மக்களுக்கு என்றும் புரியப்போவதில்லை
    அவர்கள் சுயமாக சிந்திக்கும் திறனை இழந்து எவ்வளவோ ஆண்டுகளாகிவிட்டது
    எப்போதும் யாராவது, சாமியார் பின்போ அல்லது நடிகர்/நடிகை பின்போ அல்லது அரசியல் கட்சிகள் பின்போ சென்று எல்லாவற்றையும் அடகு வைத்துவிட்டு பிறகு அவர்களிடமே பிச்சை எடுப்பது தேசீய கொள்கையாகிவிட்டது.
    இவர்களை இந்த சுனாமியிலிருந்து மீட்பது தற்ப்போது சாத்தியம் இல்லை.

    ReplyDelete