Saturday, May 17, 2008

90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர்

கடந்த சில நாள்களாக கேரளத்தில் இருக்கிறேன். இங்கே சந்தோஷ் மாதவன் என்கிற சுவாமி அம்ருதானந்த சைதன்யா என்கிற ‘சாமியார்' வேடம் போட்ட பரதேசி, பணம் திருட்டு, ஏமாற்று, சிறு பெண்களை நாசம் செய்தது, அவர்களை வைத்து ‘பலான படங்கள்' தயாரித்தது ஆகியவற்றில் மாட்டி, இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்று காலை செய்தியின்படி, நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

கேரள தேவஸ்வம் போர்ட் அமைச்சர் சுதாகரன், 90% சாமியார்கள் (Godmen) பொறுக்கிகள் என்று சொல்லப்போக, உடனே ஒரு பிரச்னை எழுந்துள்ளது. சபரிமலை அர்ச்சகர்கள் பிரதிநிதி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

90% என்பது சரியான புள்ளிவிவரமாக இல்லாமல் இருக்கலாம். அது 80% ஆகவும் இருக்கலாம்; 99% ஆகவும் இருக்கலாம். ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு பொறுக்கித்தனம் செய்பவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம் என்பதை தமிழகத்தில் இருக்கும் அனைவரும் அறிவர். கொலை, திருட்டு, நிலம் அபகரிப்பு, பாலியல் வன்முறைகள், அரசியல் விளையாட்டுகள் என்று கடவுளின் அடியார்கள் ஈடுபடுவது எதனால் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

கடவுளின் தீவிர அடியார்களாக, பிரதிநிதிகளாக, பீடாதிபதிகளாக இயங்குபவர்கள்தான் வெகு சீக்கிரமாக கடவுள் நம்பிக்கை இழக்கிறார்கள். சாதாரணனைவிட சங்கராச்சாரிகள்தான் கடவுள் அவநம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் ‘தீய செயல்கள்' செய்தாலும் தமக்கு ஒன்றுமே ஆவதில்லை என்பதை முதலில் தெரிந்துகொள்பவர்கள். இப்பிறவியில் செய்யும் பாவங்களுக்கு மறுபிறவியில் தண்டனை கிடைக்கும் என்னும் கருத்தாக்கத்தை சீக்கிரமாகத் தூக்கி எறிபவர்களும் அவர்களே. உடனே இப்பிறவியின் சந்தோஷங்களுக்காக வாழ ஆரம்பிக்கிறார்கள். இறைவனடியார் வேடம் சாதாரணர்களை ஏமாற்றத் தோதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அதற்குப் பிறகு என்ன? சித்து விளையாடல்களில் இறங்கவேண்டியதுதான்.

5 comments:

  1. it is very much true.
    Atheism is not dangerous. Materialism in the garb of theism is more dangerous.
    It is the pseudo priests who are more materialistic and enjoy everything who are dangerous to society. Marxism is not materialism but humanism. People don't understand this. The only solution to this problem is to educate people with humanist marxism.

    ReplyDelete
  2. எத்தனை பேர் உங்கள் கருத்தினை எடுத்துக் கொண்டு சிந்தித்து பார்ப்பார்கள் என்பது தெரியவில்லை. மனிதனின் சிந்தனை திறனை சரியாக எடையிட்டுத்தான் இது போன்ற போலிகள் நாட்டில் நாளும் வளர்ந்துவருகின்றார்கள். இந்த விசயத்தில் யோசிக்க தெரியாத மக்களை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. இவை எல்லாம் மூட நம்பிக்கைகள் என்பதை நன்கு உணர்ந்த கல்வியறிவாளர்களும், பகுத்தறிவாளர்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தாமல், அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்று செல்வதும் இந்த ஏமாற்றுகள் தொடர்வதற்கு ஒரு வகையில் காரணமாய் இருக்கின்றன.

    எங்கிருந்தோ திடீரென முளைத்து, வேலூரில் தங்கத்தாலேயே கோயில் கட்டியுள்ள நாராயணி அம்மா(?!) போன்றவர்கள் எல்லாம் எப்படி முளைக்கின்றார்கள், அவர்கள் பின்னணி என்ன என்பதை எல்லாம் ஆராய்ந்து உங்களைப் போன்றவர்கள் புத்தகங்கள் வெளியிட வேண்டும். மக்களின் மூடநம்பிக்கைகளை வியாபாரத்திற்கு சாதகமாக்கிக் கொண்டு, புத்தகங்களை வரங்களாக வெளியிடுவதும் ஒருவகையில் மூடர்கள் வளர்ச்சிக்கு துணை நிற்கும் செயல்தான்.

    ReplyDelete
  3. 90% அரசியல்வாதிகள் பொறுக்கிகளே என்றால் அரசியல்வாதிகள் ஏற்பார்களா?. போலிகளும்,பொறுக்கிகளும் எல்லா
    துறைகளிலும் இருக்கிறார்கள். மக்களுக்குத் தேவை விழிப்புணர்வு.
    இதை ஒட்டுகளுக்கும் முஸ்லிம்கள்
    காலில் விழுந்து கிடக்கும் இடதுசாரிகள் தருவார்கள் என்று
    எதிர்பார்க்க முடியாது. தி.க ‘பகுத்தறிவுவாதிகள்' கேடு கெட்ட அரசியல்வாதிகளுக்கு பல்லக்கு
    தூக்கிகளாக இருக்கிறார்கள்.
    இந்த மானுட நேயமிக்க மார்க்ஸியம்
    எங்கே இருக்கிறது என்பதை செல்வ
    ராஜ் சொன்னால் நன்றாக இருக்கும்.
    அது நிச்சயமாக நந்திகிராமில், சீனாவில்
    இல்லை.

    ReplyDelete
  4. யாரோ ஒருவர் பிழைசெய்துவிட்டார் என்பதற்காக சாமியார் சமூகத்தையே ஒட்டுமொத்தமாகப் பழிபோடுவது என்பது ஏற்புடையதாகாது. சேற்றில் செந்தாமரை மலர்வதுபோல் ஒரு சில அரசியல் வாதிகளிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். எந்தவித ஆய்வையும் முழுமையாகச் செய்யாமல் எழுந்தமானமாக 90% சாமியார்கள் பொறுக்கிகள் என்று சொல்வது நியாயமில்லை.

    ReplyDelete
  5. //கடவுளின் தீவிர அடியார்களாக, பிரதிநிதிகளாக, பீடாதிபதிகளாக இயங்குபவர்கள்தான் வெகு சீக்கிரமாக கடவுள் நம்பிக்கை இழக்கிறார்கள். சாதாரணனைவிட சங்கராச்சாரிகள்தான் கடவுள் அவநம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் ‘தீய செயல்கள்' செய்தாலும் தமக்கு ஒன்றுமே ஆவதில்லை என்பதை முதலில் தெரிந்துகொள்பவர்கள். இப்பிறவியில் செய்யும் பாவங்களுக்கு மறுபிறவியில் தண்டனை கிடைக்கும் என்னும் கருத்தாக்கத்தை சீக்கிரமாகத் தூக்கி எறிபவர்களும் அவர்களே. உடனே இப்பிறவியின் சந்தோஷங்களுக்காக வாழ ஆரம்பிக்கிறார்கள். இறைவனடியார் வேடம் சாதாரணர்களை ஏமாற்றத் தோதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அதற்குப் பிறகு என்ன? சித்து விளையாடல்களில் இறங்கவேண்டியதுதான்.//

    ரெம்பச் சரியான உண்மை. கிறீத்துவ பாதிரியார்கள், மதப் பிரச்சாரர்களுக்கும் 100% பொருத்திப்பார்க்க முடிகிறது

    ReplyDelete