Saturday, May 10, 2008

NHM Converter Online

ஒரு தமிழ் எழுத்துக் குறியீட்டிலிருந்து இன்னொன்றுக்கு மாற்ற, இணையம் வழியாக இயங்கும் ஒரு சேவையை New Horizon Media நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இனி இணையம் வழியாகவே இலவசமாகவே இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். வேண்டுமென்றால், இந்த வேலையைச் செய்யும் மென்பொருளைத் தரவிறக்கி, உங்களது கணினியிலிருந்தும் செய்துகொள்ளலாம். அந்த மென்பொருளை முன்பே, New Horizon Media அறிமுகம் செய்திருந்தது.

இந்தச் சேவையைப் பயன்படுத்த நீங்கள் செல்லவேண்டிய முகவரி software.nhm.in என்பது. இந்தத் தளத்தில் Services->NHM Converter என்ற மெனுவைத் தேர்ந்தெடுங்கள்.

நேரடியாக NHM Converter இணையச் சேவையைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் இந்தச் சுட்டியை அழுத்தவேண்டும். இந்த மென்பொருள் சேவையைப் பற்றிய ஒரு பிரசண்டேஷன் இதோ.



இந்தப் புதிய தள டிசைனில், வலைப்பதிவு சேவை சேர்க்கப்பட்டுள்ளது. புது மென்பொருள்கள், சேவைகள் ஆகியவை பற்றிய தகவல்களை நாங்கள் இங்கே அளித்துக்கொண்டே இருப்போம். உங்களது கருத்துகளை இப்பொதைக்கு வலைப்பதிவின் பின்னூட்டங்கள் வாயிலாக நீங்கள் கொடுக்கலாம். விரைவில் Forum ஒன்றும் சேர்க்கப்படும்.

4 comments:

  1. இப்போதும் உபுண்டு லினக்ஸில் தான்இருக்கிறேன்.
    இதில் சரியாக வரவில்லை.

    வீடியோ லின்க் மாதிரி ஃபிளாஸ் வருகிறது,அதை சொடுக்கியவுடன் ஒன்றும் வரவில்லை.

    Just for info.

    ReplyDelete
  2. சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. Flash நிறுவப்பட்டுள்ள உலாவியில் சோதித்துப் பாருங்கள். உபுண்டு லினக்ஸிலும் வேலை செய்யும் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. ஓகே! இப்போது சரியாகிவிட்டது- உபுண்டுவில்.

    ReplyDelete
  4. NHM Writer, Converter Available for MAC os?

    ReplyDelete