பிப்ரவரி 21-ம் தேதி தாய்மொழி தினத்தைக் கொண்டாடும் விழா என்பதால் வேலூர் வாசகர் பேரவையும் வி.ஐ.டி பல்கலைக்கழகமும் இணைந்து வேலூரில் இரண்டு நாள் விழாவைக் கொண்டாடுகிறது. இதில் பிப்ரவரி 20 அன்று ‘நாம் வளர தமிழ் வளர்ப்போம்’ என்ற கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் நானும் கலந்துகொள்கிறேன். கருத்தரங்கு நடக்கும் இடம்: டாக்டர் சென்னா ரெட்டி கருத்தரங்கக் கூடம், வி.ஐ.டி பல்கலைக்கழகம், வேலூர். நிகழ்வு ஆரம்பிக்கும் நேரம்: மாலை 3.00 மணி.
தலைப்புகளும் பேசுவோரும்:
தெய்வத்தமிழ்: திருமதி மா.கவிதா (அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி)
கல்வித்தமிழ்: பேராசிரியர் பா. கல்விமணி
பசுமைத்தமிழ்: திரு சு. தியோடர் பாஸ்கரன்
ஆட்சித்தமிழ்: முனைவர் அரணமுறுவல் (செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனம்)
கணித்தமிழ்: பத்ரி சேஷாத்ரி
வணிகத்தமிழ்: திரு சோம.வள்ளியப்பன்
ஊடகத்தமிழ்: திரு சுசி. திருஞானம் (புன்னகை கல்வி மாத இதழ்)
நற்றுணை கலந்துரையாடல்: இரா. முருகன்
8 hours ago
தமிழ் மொழியை காப்போம்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன