Monday, February 07, 2011

அஜந்தா - ஒரு படப் பார்வை

குதிரை லாட வடிவில் 29 குகைகள் - சைத்தியங்களும் விகாரங்களும். கீழே வாகோரா ஆறு



ஒரு விகாரம். ஒரு மாமல்லபுரம் குகைக்கோவிலுடன் ஒப்பிட்டால் பல மடங்கு பெரியது! விகாரம் என்றால் உள்ளே புத்த பிக்குகள் வசிக்கும் இடம். நடுவில் ஒரு மண்டபம். வாசலுக்கு நேராக உள்ளே புத்தருக்கு ஒரு சந்நிதி. சுற்றிலும் அறைகள். அங்குதான் பிக்குகள் வசிப்பர். மண்டபத்தில் அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வர்.



அஜந்தா என்றாலே ஓவியங்கள்தானே. விஸ்வாந்தர ஜாதகத்திலிருந்து ஒரு காட்சி.



புத்தரின் வாழ்க்கை, ஜாதகக் கதைகள், அவதானங்கள், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றன பூக்கள், கொடிகள், வளைவுகள், வண்ணங்கள்.



நாக அரசனும் மனைவியும். புடைப்புச் சிற்பங்களுக்கும் அஜந்தாவில் குறைவில்லை.



விகாரத்தின் வாசலிலிருந்து உள்ளே பார்த்தால் தெரியும் புத்தர் சிலை. கையில் உள்ள முத்திரைகளைக் கவனியுங்கள். ஒரு விகாரத்தில் உள்ள புத்தர் சிலையைப் போன்றதே பிற அனைத்து விகாரங்களிலும்.



சுவரில் காணும் இடங்களிலெல்லாம் புத்தர். கைதான் கொஞ்சம் பெரிது!



மகா பரிநிர்வாணம். கௌதம புத்தரின் இறுதி நிலை.



விகாரங்கள் புத்த பிக்குகள் வசிக்க என்றால், சைத்தியங்கள்தான் புத்தருக்கான கோவில்கள்.



சைத்தியத்தின் உள்ளே வணக்குத்துக்குரிய புத்தர். ஹீனயான காலத்தில் புத்தருக்கு உருவம் கிடையாது. பின்னர் மகாயான காலத்தில் உருவம் வந்துவிட்டது.



தரையிலிருந்து கூரை உச்சியைத் தொடும் ஸ்தூபி. சைத்தியத்தின் உள்ளே.





அஜந்தாவை விளக்குவது எளிதான காரியமல்ல. அதனை நான் இங்கு செய்யப்போவதும் இல்லை. பல புத்தகங்களைப் படித்து, விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு, பின்னர் நேரில் போய் சில நாள்களாவது தங்கிப் பார்ப்பதுதான் அஜந்தாவுக்கு நாம் அளிக்கும் மரியாதை.

ஒவ்வொரு விகாரத்தின் உள்ளும் காணப்படும் ஓவியங்களைப் படம் பிடிக்க மிக உயர்வான கேமராவும், தேர்ந்த படம் பிடிப்பவரும் வேண்டும். என்னிடம் அப்படிப்பட்ட கேமரா கிடையாது.

சுருக்கமாகச் சொல்வதானால், அஜந்தா என்பது இந்தியக் கலை வெளிப்பாட்டின் உச்சம். தமிழகத்தில் மாமல்லபுரம், பல்லவர்களின் பிற படைப்புகள், சோழர்களின் கோவில்கள், குறிப்பாக தஞ்சை பிரகதீசுவரர், கங்கை கொண்ட சோழபுரம், பாண்டிய நாட்டின் வெட்டுவான்கோவில், பாண்டியர்கள் உருவாக்கிய சித்தன்னவாசல், புதுக்கோட்டையின் பல பிற கோவில்கள், நாமக்கல் குகைகள் என்று பல உள்ளன. கர்நாடகத்தில் சாளுக்கியர்களின், ஹோய்சாலர்களின் சாதனைகள் உள்ளன. ஆனால் மகாராஷ்டிரத்தில் உள்ள அஜந்தாவும் எல்லோராவும் தனித்தன்மை கொண்டவை. அவற்றுக்கு இணை இந்தியாவிலேயே இல்லை.

அஜந்தா அனுபவம் பற்றி பின்னர் முழுமையாக எழுதுகிறேன்.

9 comments:

  1. சுவரில் காணும் இடங்களிலெல்லாம் புத்தர். கைதான் கொஞ்சம் பெரிது! - அஜான பாகு

    ReplyDelete
  2. Can we expect a book from you compiling all your posts and articles on these priceless cultural treasures ?

    ReplyDelete
  3. கல்லிலே கலைவண்ணம் தளத்தில் சித்தன்னவாசல்தான் இந்திய ஓவியக்கலையின் உச்சம் என்று அழுத்தமாக க் குறிப்பிட்டிருந்தார்கள்! அது அஜந்தாவுக்கு ஒரு படி மேல் என்றுதான் இரண்டையும் பார்த்திராத நானும் நம்புகிறேன்!

    ReplyDelete
  4. நிச்சயமாக சித்தன்னவாசல், அஜந்தாவுக்கு அடுத்த இடத்தில்தான் உள்ளது. அஜந்தாதான் உச்சம்.

    ReplyDelete
  5. Lot of thanks to these kind of special articles with your direct experience.

    jagan

    ReplyDelete
  6. there it is - the boring post from the boring and bored felow on a nice place!

    ReplyDelete
  7. புகைப்படங்கள் எடுப்பதற்காகவே ஒருமுறை அஜந்தா சென்றோம். ஆனால் அப்போது கத்து குட்டியாதலால் சரியாக எடுக்க முடியவில்லை. ஆனால் நிறைய கற்றுக் கொண்டேன் :)

    வெளிச்சத்தில் எடுத்த புகைப்படங்கள் நன்றாக உள்ளன. குறைந்த வெளிச்சத்தில் எடுத்த படங்கள் shake-ஆகி உள்ளன. ISO அதிகமாக வைத்து எடுத்தால் நடுக்கத்தை குறைக்கலாம்.

    ஓவியங்களை flash அடித்து புகைப்படம் எடுப்பது அவைகளை சேதப்படுத்தும் (அதிக வெளிச்சம் படுவதால்). உங்கள் இரு படங்கள் flash அடித்தது போல உள்ளன :)

    ReplyDelete
  8. Another term for your Leader in Tamilnadu is enough to fetch this Asset to his kitty. That Time you have more time and snap as you wish I hope. Still you keep on post all scam are based on assumption. Long live So called intellectuals. Hope amighty will come to the picture Soon and eradicate forever people like you.

    ReplyDelete
  9. அஜந்தாவுக்குப் போன உணர்வை தருகிறது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete