Wednesday, July 13, 2011

சரவணனுடன் ஒரு நேர்முகம்

சரவணன், ‘மனம் மலரட்டும்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்திவருபவர். பலரிடமிருந்து நன்கொடைகள் பெற்று, திருப்பத்தூர் பகுதியில் மாணவர்களுக்கு ட்யூஷன் வகுப்புகளை இலவசமாக நடத்திவருகிறது இந்த அமைப்பு. இதன்மூலம் பல பிள்ளைகள், பொறியியல் படிப்புகளில் சேர வழி செய்துகொடுத்துள்ளார். அதனைப் பாராட்டி சமீபத்தில் பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் இவருக்கும் இவரது அமைப்புக்கும் விருது ஒன்றைக் கொடுத்தது.

சரவணன் கையில் ஒரு பைசா இல்லாமல், பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். நிறைய தைரியம்தான்!

இன்று என்னுடன் பேச வந்திருந்தார். அதனை அப்படியே ஒரு வீடியோவாக எடுத்து உங்கள் அனைவருக்கும் காட்டலாம் என முடிவெடுத்து உடனேயே அவரைப் பிடித்துவிட்டேன். தமிழகத்தில் கல்வி பற்றி ஆர்வம் உள்ளவர்கள் இந்த வீடியோவைக் கட்டாயம் பார்க்கவும்.



சரவணனைத் தொடர்புகொள்ள: 99528-59239 அல்லது manam.malarattum@gmail.com

5 comments:

  1. இலவசமா ட்யூஷன் சொல்லிக் கொடுக்க உதவி வருகிற ஓர் அமைப்பு, தனக்கென்று ஒரு பள்ளியைத் தொடங்கிக் கல்விக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் இருக்கிறது; மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளை (கல்வி ஆர்வமுள்ள!?) தனியார்களிடம் ஒப்படைத்து, ஆசிரியர்களுக்கான சம்பளம் முதலானவற்றை அரசுதானே கொடுக்க வேண்டும் என்கிறது; ஒரு பிள்ளைக்கு 25000 ரூபாய் கூடக் கட்டணம் கட்ட வக்கில்லாதவர்கள் அப் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கே அனுப்பவேண்டும் என்றும் குழப்புகிறது, ஆனால் அரசுப் பள்ளிகளையும் கல்வி அமைப்புகளையும் குறை - மக்களாட்சி அமைப்பின் இயல்வழக்குதானே அது? - ஆம், குறைகூறி அதையே உரமாக்கி ஓர் ஆலமரத்தை வளர்த்தெடுக்க முயல்கிறது! கனிகளில் நஞ்சு ஊட்டம் இல்லாமல் இருக்குமா?

    பத்ரி ஒரு ஸ்வாமிஜியின் ரோபோவை இப்படியா திறந்துகாட்டுவது?

    நன்றி!

    ReplyDelete
  2. நல்ல வீடியோ. மிக நல்ல உதாரணம். ஒருமை வார்த்தை பிரயோகங்களை தவிர்த்து இருக்கலாம். "நீ, போ, சொல்லு" போன்றவை. முதலில் உங்களுக்கு தமிழ் சொல்லி தர பா.ரா. வை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. He is very practical. This may not be understood by many but he is advocating a civil society supervision for educational activities done by the Government paid by the Government. Obviously, he understands the living conditions and paying capabilities of the society and has comes up with this number.

    ReplyDelete
  4. Thanks for the good (patronising tone notwithstanding) interview!

    ReplyDelete
  5. பத்ரி,

    இருவரும் உரையாடுவது போல் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவரையே வெறித்துப் பார்ப்பது போல் இருக்கிறது :)

    உங்களுக்கு அவருடன் தனிப்பட்ட நெருக்கம், அறிமுகம் இருக்கும் என நினைக்கிறேன். இருந்தாலும், உரையாடல் ஒருமையில் இருப்பது உவப்பாக இல்லை.

    பாதி வரை உரையாடல் நன்றாகவே போனது. கடைசியில் நிறைய குழப்பி விட்டார். நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால், நடைமுறை இக்கட்டுகள் சரியான வழியைக் காட்டவில்லை என்று நினைக்கிறேன்.

    தரமான இலவசக் கல்வி, அல்லது மிகவும் குறைந்த கட்டணக் கல்வியே தேவை. இவர் சொல்லும் விலையை கண்டிப்பாக நகரத்தில் உள்ள நடுத்தர மக்களால் கூட கட்ட முடியாது.

    ReplyDelete