பிரிட்டனில் ஒரு காலத்தில் தீவிர சபாத் நிலவியிருக்கவேண்டும். அதாவது தேவன் ஓய்வெடுத்திருந்த ஏழாம் நாளான ஞாயிற்றிக்கிழமையன்று மனிதர்களும் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பது. பின்னர் ஏதோ ஒரு பிஷப், பத்திரிகைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருப்பார். வாரம் முழுதும் சன் என்ற டாப்லாய்ட். ஞாயிறு அன்று நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட். அதேபோல வாரம் முழுதும் தி டைம்ஸ். ஞாயிறு அன்று சண்டே டைம்ஸ். வாரம் முழுதும் கார்டியன். ஞாயிறு அன்று அப்சர்வர்.
இணையத்தைக் கரைத்து மேயும் உங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்றாலும் சுருக்கமாக இந்தப் பத்தியில் சொல்லிவிடுகிறேன். சன்னும் நியூஸ் ஆஃப் தி வேர்ல்டும் அரை நிர்வாண - முழு நிர்வாண அழகிகள், கிசுகிசு, கள்ளக்காதல், கொலை, கொள்ளை, அரசியல் ஊழல் அது இது என்று செய்திகளைப் போட்டு விற்கும் பத்திரிகைகள். இதில் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஆட்கள், கூலிப்படைகளை வைத்து, தனி மனிதர்களது டெலிஃபோன் மெசேஜ்களை ஒட்டுக்கேட்டு அதைக்கொண்டு எக்ஸ்க்ளூசிவ் ஸ்கூப் செய்திகளை எழுதினார்கள் என்பது குற்றச்சாட்டு. தனி மனிதர்கள் என்றால் இதில் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த கார்டன் பிரவுனின் தனிப்பட்ட தகவல்கள், அவரது மகனின் வியாதி, அவர் யாரிடமிருந்து எந்த விலைக்கு வீடு வாங்கினார் முதற்பட எல்லாம் அடக்கம்!
இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியாகும் அதே நேரம், ரூப்பர்ட் மர்டாக், ஸ்கை என்ற தொலைக்காட்சி விநியோக நெட்வொர்க்கையும் அதன் பல்வேறு சானல்களையும் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் இருந்தார். ஏற்கெனவே அதன் சுமார் 40% பங்குகள் அவர்களிடம்தான் இருந்தன என்றாலும் 100% பங்கையும் பெறும் முயற்சியில் இருந்தார்.
ஆனால், மேற்கண்ட குற்றச்சாட்டு வெளியாகி, அதில் உண்மை இருக்கிறது என்று தெரியவந்ததும் பல தலைகள் உருண்டுள்ளன. ஸ்கையைக் கையகப்படுத்துவதில் இருந்து விலகிக்கொண்டுள்ளார் மர்டாக். தலைமை அலுவலர்கள் சிலர் வேலையிலிருந்து விலகியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விஷயத்தை வெளியே கொண்டுவருவதில் கார்டியன் என்ற போட்டிப் பத்திரிகை பெரும் முயற்சி எடுத்துள்ளதுதான் இதில் ஆச்சரியம். பொதுவாக உலகெங்கும் உள்ள எழுதப்படாத விதி, ஒரு பத்திரிகையை இன்னொரு பத்திரிகை காட்டிக்கொடுக்காது என்பதுதான். ஆனால் அந்த விதி இங்கே மீறப்பட்டுள்ளது என்று கதறுகிறது மர்டாக்கின் மற்றொரு அமெரிக்கப் பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.
நம் ஊரையே எடுத்துக்கொள்வோம். குமுதம், விகடன், தினகரன், தினமலர் என்று பத்திரிகைக் குடும்பங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் அதைப்பற்றி எந்தச் செய்தியும் உங்களுக்குத் தெரியவராது. இப்போது தி ஹிந்து குடும்பத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குடுமிப்பிடிச் சண்டையைப் பற்றி ஏதோ ட்விட்டர் புண்ணியத்திலும் வலைப்பதிவு புண்ணியத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியவருகிறது. இந்திய இதழியல் உலகத்தின் குழப்படிகள் பற்றித் தெரியவேண்டும் என்றால் தி ஹூட், சான்ஸ் செரீஃப் போன்ற இடங்களைப் பாருங்கள். ஆனால் கட்டாயமாக மைய நீரோட்ட இதழ்களில் ஒன்றும் கிடைக்காது.
Small disagreement - Mint has been covering The Hindu issue quite regularly. Even today's paper has a well-written story on yesterday's Supreme court ruling with Ram's reaction.
ReplyDeleteOf course, you can argue if Mint qualifies as mainstream media. Apparently, anybody can write in it :-)
Aside: 'Dog eat dog' sounds horribly harsh in Tamil
Even Mint does not go beyond reporting what is said in the courts etc. Go beyond that! Dig the news, as you would for any other issue. Like what Guardian did.
ReplyDeleteMay be somebody wants to control Murdoch monopoly in the media.
ReplyDeleteThis blog http://churumuri.wordpress.com/ also related to inside stories of media world ( associate with sans serif?)
- Jagan
//நம் ஊரையே எடுத்துக்கொள்வோம். குமுதம், விகடன், தினகரன், தினமலர் என்று பத்திரிகைக் குடும்பங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் அதைப்பற்றி எந்தச் செய்தியும் உங்களுக்குத் தெரியவராது//
ReplyDeleteஞாபகனிருக்கா? முன்பு சன்னும் விகடன் குழுமமும் லேசாக உரசிக் கொண்டார்கள்.
உண்மை. பல பிரிட்டிஷ் பத்திரிகைகள் சும்மாவேனும் அலறுபவை. கிசு கிசு தவறு என்ற தனி மனித ஒழுக்கத்தை மக்கள் கடைபிடித்தாலும் பொது குணமாகிய அதை வியாபாரம் ஆக்குவதில் இப் பத்திரிகைகள் வெற்றி கண்டவை. மற்றபடி இந்த வீடு யார் வாங்கினார், என்ன விலைக்கு போயிற்று என்பவை பொது மக்களுக்கு எப்பவுமே இலவசமாக கிடைக்கும். Those informations are available in public domain all the time . சட்டப்படி அவை கிடைத்தாக வேண்டும் இலவசமாக.
ReplyDeleteஇந்தியாவில் ஏன் உரசல் இல்லை பத்திரி ???? தினமலர் அந்துமணி ஒரு விவகாரத்தில் சிக்கியபோது தினகரன், சன் குழுமம் கிழிகிழியென்று கிழிக்கவில்லையா ?? நேற்றைய இந்து பாருங்கள்... இந்துஸ்தான் டைம்ஸின் மத்தியப்பிரதேசப்பதிப்பின் பரபரப்பு அதர்மம்பற்றி அரைப்பக்கம் கிழித்துள்ளார்கள் ... இந்து, இ.டைம்சோடு வட இந்தியாவில் போட்டிபோடுகிறது என்ற டிஸ்க்கியோடு !!
ReplyDeleteஇந்தியாவில் எல்லா நாய்களும் ஒரே குடும்பத்து (இடதுவம்சாவழி) நாய்களாக இருப்பாதால் ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்துவிட்டு பொதுமக்கள் மேல் நம்பர் 1 போகிறார்கள். பத்திரிக்கை நிருபர்கள் நீரா ராடியா விஷயத்தில் மாட்டிக்கொண்ட போது சொல்லிவைத்தார் போல் அனைத்து அச்சு மற்றும் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களும் கள்ள மௌனம் காத்தது நினைவிருக்கலாம்.
ReplyDeleteநியூஸ் ஆஃப் த வர்ல்டு மேல் கார்டியன் காரர்கள் ஏக காண்டாக இருந்துள்ளனர். கார்டியன் இவ்விசயத்தில் சிரத்தையுடன் செயல்படுகிறது என்றால் அதற்கு சன்/நியூஸ் ஆஃப் த வர்ல்டு மூலம் பெரும் ஆப்புகள் அதற்கு கடந்த பல ஆண்டுகளில் வைக்கப்பட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் எடுத்து தோன்டினால் நிச்சயம் ஆதாரங்கள் கிடைக்கும்.
இப்படிப்பட்ட போட்டியோ பெரும்பலம் கொண்ட வலதுசாரிப் பத்திரிக்கைகளோ இல்லாத ஒரு நாடு இந்தியா. இங்கே எல்லா பலம் வாய்ந்த பத்திரிக்கைகளும் Leftist or left of center வகையரா தான்.
indian express, mumbai edition posted much about hindu's internal problem though the southern new indian express was silent on this
ReplyDelete