Tuesday, October 25, 2011

கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு

நேற்று, கிண்டி பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு என்.எஸ்.எஸ் மாணவர்களிடம் பேசினேன். நானே கொண்டுசென்றிருந்த ரெகார்டரை ஒரே இடத்தில் வைத்து ஒரே ஆங்கிளில் பிடித்த வீடியோ. ஆடியோ தரம் சுமார்தான். மைக்கிலிருந்து சற்றுத் தொலைவில் நின்றபடிப் பேசியதால் ரெகார்டிங் அப்படி ஆகியிருக்கிறது. பொறுத்தருள்க.

9 comments:

  1. உங்கள் எழுத்தைப் போலவே பேச்சும் எந்த பாசாங்கும் இல்லாமல், யதார்த்தமாக இருக்கின்றது.

    ஆடியோ தரம் சுமாராக இருக்கின்றது என் முஸ்தீபு இருந்தமையால் ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு கேட்டேன். நல்ல பேச்சு கேட்டது ஒரு பயன். வெடி சப்தம் கேட்காமல் இருந்தது அடிஷன்ல் பலன்

    வெல்டன் பத்ரி

    ReplyDelete
  2. A very good insight ... much required not just for students.. for every professional. Thanks

    ReplyDelete
  3. நேற்று இரவே இந்தக் காணொளியை ஓடவிட்டுச் சற்று நேரம் கவனித்தேன். ஆனால் இப்படி ஒரு பொறுப்பான மனிதரின் பேச்சுக்கு இது மரியாதை இல்லை என்று மூடிவிட்டேன். (ஒரு பெக் உள்ளே போயிருந்தது).

    இன்று மதியத்துக்கு மேல் இப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கையில் இரண்டு முறை மின்வெட்டு நேர்ந்துவிட்டது. இப்போதுதான் முடித்தேன்.

    மேடைப் பேச்சு, ஒரு மணி நேரத்துக்கு மேல் போகக் கூடாது: கேட்பவர்களின் மூளைக்கூர்மை மழுங்கிவிடும் என்பார்கள். கருணாநிதி முதலியோர் 45 ~ 50 நிமிடங்களில் தம் உரைகளை முடித்துக் கொள்வது வழக்கம். ஒருமணி நேரத்துக்கு மேலாகியும் உங்கள் பேச்சால் அலுப்பு வரவில்லை.

    "நான் சென்னை ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் முடித்தவன்" என்று ஓர் அடைப்படை இட்டீர்களா, அது மிகத் தேவையான ஒன்று. நீங்கள் விளக்கிய அறிவுப்பூர்வமான காரணத்துக்காக மட்டும் அல்ல, 'அட, இவரு நம்ம ஆளுடா!' என்னும் ஓர் உணர்வை முதலிலேயே அவர்களுக்கு ஏற்படுத்துவதற்காகவும்.

    இன்னொரு அருமையான தொடுகை, அவர்கள் பெயரளவிலாவது அறிந்திருக்கும் கர்னல். கோலின் பற்றிப் பேசியது.

    நல்ல காரியம் செய்கிறீர்கள், பத்ரி, உங்கள் முயற்சிகள் வெற்றியில் முடியட்டும்!

    ReplyDelete
  4. If I had listened to this when I was in CEG, my life would have been lot better.
    Congratulations and Best Wishes.

    Bharath

    ReplyDelete
  5. மரண தண்டனைக்கெதிரான குரல்கள் தமிழகத்தில் பரவலாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.

    கலைத் துறையில் மரண தண்டனைக்கெதிராக தீவிர பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு ஆவணப் படம் தயாராகியுள்ளது. இதற்கு தொடரும் நீதி கொலைகள் என தலைப்பிட்டுள்ளனர்.

    இந்த ஆவணப் படத்தின் வெளியீடு நாளை (29 October, 2011) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள கோயம்பேடு போராட்ட அரங்கில் நடக்கிறது.

    இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன் இந்தப் படத்தின் குறுந்தகடை வெளியிட, முதல் பிரதியை மதிமுக பொதுச் செயலர் வைகோ பெற்றுக் கொள்கிறார்.

    பிரபல நடிகர் / இயக்குநர் சேரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஆர் பி அமுதன் இயக்கியுள்ளார்.

    தமிழ் உணர்வாளர்கள் பலரும் பங்கேற்கும் நிகழ்ச்சி இது.

    ReplyDelete
  6. இப்பேச்சின் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் அல்லது பேச்சின் சுருக்கத்தை எழுத்திலும் தாருங்களேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. பத்ரி,உங்கள் பேச்சை இப்போதுதான் ஒரே மூச்சில் கேட்டு முடித்தேன். பேசியது நீங்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய மனசாட்சி பேசியது போல் உணர்ந்தேன்.நன்றி.

    ReplyDelete
  8. Hi Badri,

    The audio quality is good. I did not have to use any headphones...

    You have explained to them like you talk to kids. They are really lucky to have someone like you to come and meet with them and explain them.

    For others who have not listened to the video

    Badri's advice to College of Engg. kids

    1. Master the language - both English and Tamil. Both are very important when you (college grads) start your career whether you lead a team, interact with your customer or eventually start a business on your own.

    2. Develop one or more hobbies and go deep into it. Something like knowing about trees, birds, listening to any kind of music, temples etc.

    3. Read books and get to know on various topics.

    4. Give back to the society. He also told a story from his life on giving back to society and urged them to consider giving back to society also.

    If I have missed anything / misrepresented anything, it is my fault.

    Thanks

    Venkat

    ReplyDelete