ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இரங்கல் இல்லை இந்தப் பதிவு.
* ஆப்பிள் அற்புதமான கணினியாக இருந்தாலும் எதையெடுத்தாலும் நான்தான், நானேதான் செய்வேன் என்று தொங்கிக்கொண்டிருந்த காரணத்தால் வளரவேயில்லை. மைக்ரோசாஃப்ட் செழித்தது; பிசி பிசினஸ் வளர்ந்தோங்கியது. இன்றும்கூட ஒரு சிறு குழுவைத் தாண்டி மேகிண்டாஷ் கணினிகள் பரவவில்லை என்பது நிதர்சனம்.
* ஜாப்ஸின் உண்மையான மார்க்கெட்டிங் மாயாஜாலம் ஐபாட், ஐட்யூன்ஸில் ஆரம்பித்தது. அதுவரையில் வெறும் தொழில்நுட்ப, அழகியல் கலைஞராக இருந்தவர் பணம் பண்ணும் ஒரு மாபெரும் ஐடியாவை எடுத்தாண்டது இந்த விஷயத்தில்தான். இன்றுவரை ஆப்பிள்தான் இந்தத் துறையில் கிங். ஆனால் இனியும் அப்படி இருக்கமுடியாது. காரணத்தை அடுத்து பார்ப்போம்.
* ஐபாட், ஐஃபோன், ஐபேட் - தமிழ்கூறும் நல்லுலகின் பாஷையில் சொல்லப்போனால், ‘சான்ஸே இல்ல’. ப்ராடக்ட் இன்னோவேஷன் + மார்க்கெட்டிங் சென்ஸ் சரியான கலவையில் கலந்து செய்த வித்தை.
* ஸ்டீவ் ஜாப்ஸின் தோல்வி - புத்தகச் சந்தையைப் புரிந்துகொள்ளாதது; அமேசானின் திறனைச் சரியாகக் கணக்கிடாதது.
* ஆப்பிளின் போட்டிக்காரன் அமேசான். ஐக்ளவுட் என்று ஆப்பிள் பேசிக்கொண்டிருக்கும்போதே அமேசான் அதனைச் செய்துமுடித்துவிட்டது. கிண்டில் ஃபயர் என்னும் கலர் டேப்ளட் ஐபேடை ஒப்பிடும்போது மிகக் குறைந்த விலை. ஆப்பிள் அதற்குப் போட்டியாக ஒன்றைச் செய்து முடிப்பதற்குள், இதுவரை ஐபேட் வாங்கியிராத உலக மக்கள் பலரும் கிண்டில் ஃபயருக்குத் தாவியிருப்பார்கள்.
* கிண்டில் ஃபயரில் என்னவெல்லாம் செய்யமுடியும்? புத்தகங்களை வாங்கி, படிக்கலாம். புத்தகம் கிளவுடில் இருக்கும். சினிமாக்களை வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். பாடல்களை இறக்கிக் கேட்கலாம். அமேசானின் கிளவுட் வழியாக வெப் பிரவுசிங் செய்யலாம். (இது எனக்குப் பிடிக்கவில்லை!) ஆப்பிள் இந்த நிலைக்கு வர கனகாலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
அடுத்த ஐந்தாண்டுகள், அமேசானின் ஆண்டுகள்.
இதில் ஆப்பிள் ஒரு லூஸர் என்றால், கூகிள் மாபெரும் லூஸர்!
Amazon > Apple > Google !
* ஆப்பிள் அற்புதமான கணினியாக இருந்தாலும் எதையெடுத்தாலும் நான்தான், நானேதான் செய்வேன் என்று தொங்கிக்கொண்டிருந்த காரணத்தால் வளரவேயில்லை. மைக்ரோசாஃப்ட் செழித்தது; பிசி பிசினஸ் வளர்ந்தோங்கியது. இன்றும்கூட ஒரு சிறு குழுவைத் தாண்டி மேகிண்டாஷ் கணினிகள் பரவவில்லை என்பது நிதர்சனம்.
* ஜாப்ஸின் உண்மையான மார்க்கெட்டிங் மாயாஜாலம் ஐபாட், ஐட்யூன்ஸில் ஆரம்பித்தது. அதுவரையில் வெறும் தொழில்நுட்ப, அழகியல் கலைஞராக இருந்தவர் பணம் பண்ணும் ஒரு மாபெரும் ஐடியாவை எடுத்தாண்டது இந்த விஷயத்தில்தான். இன்றுவரை ஆப்பிள்தான் இந்தத் துறையில் கிங். ஆனால் இனியும் அப்படி இருக்கமுடியாது. காரணத்தை அடுத்து பார்ப்போம்.
* ஐபாட், ஐஃபோன், ஐபேட் - தமிழ்கூறும் நல்லுலகின் பாஷையில் சொல்லப்போனால், ‘சான்ஸே இல்ல’. ப்ராடக்ட் இன்னோவேஷன் + மார்க்கெட்டிங் சென்ஸ் சரியான கலவையில் கலந்து செய்த வித்தை.
* ஸ்டீவ் ஜாப்ஸின் தோல்வி - புத்தகச் சந்தையைப் புரிந்துகொள்ளாதது; அமேசானின் திறனைச் சரியாகக் கணக்கிடாதது.
* ஆப்பிளின் போட்டிக்காரன் அமேசான். ஐக்ளவுட் என்று ஆப்பிள் பேசிக்கொண்டிருக்கும்போதே அமேசான் அதனைச் செய்துமுடித்துவிட்டது. கிண்டில் ஃபயர் என்னும் கலர் டேப்ளட் ஐபேடை ஒப்பிடும்போது மிகக் குறைந்த விலை. ஆப்பிள் அதற்குப் போட்டியாக ஒன்றைச் செய்து முடிப்பதற்குள், இதுவரை ஐபேட் வாங்கியிராத உலக மக்கள் பலரும் கிண்டில் ஃபயருக்குத் தாவியிருப்பார்கள்.
* கிண்டில் ஃபயரில் என்னவெல்லாம் செய்யமுடியும்? புத்தகங்களை வாங்கி, படிக்கலாம். புத்தகம் கிளவுடில் இருக்கும். சினிமாக்களை வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். பாடல்களை இறக்கிக் கேட்கலாம். அமேசானின் கிளவுட் வழியாக வெப் பிரவுசிங் செய்யலாம். (இது எனக்குப் பிடிக்கவில்லை!) ஆப்பிள் இந்த நிலைக்கு வர கனகாலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
அடுத்த ஐந்தாண்டுகள், அமேசானின் ஆண்டுகள்.
இதில் ஆப்பிள் ஒரு லூஸர் என்றால், கூகிள் மாபெரும் லூஸர்!
Amazon > Apple > Google !
Well said...But i can't readily say Amazon as a winner (though v can envisage a big question on Apple's future) More over, apple considered Music industry rather than Book Publishing....all they wanted to improve that. With increasing intensive in Facebook, we can still look for more. Also we have to consider samsung+Google's upcoming tablet!!
ReplyDeleteஅமேசான் டாப்லெட் வெளியிடப் போகிறது என்றதும் காத்திருந்தேன். சிறுது ஏமாற்றம் தான்...
ReplyDeleteஇப்போதைக்கு ஃபயர் U.S-ல் மட்டுமே விற்பனை (இப்போதைக்காக இருக்கலாம்). அங்கு வாங்கி இங்கு உபயோகப்படுத்த முடியுமா என்று தெரிந்தால் சொல்லுங்கள்.
எப்படி பிசியும் மேக்கும் இருக்கின்றதோ, அது போல் கிண்டிலும் ஐபேடும் இருக்கும். ஐ-புக் ஸ்டோரை விட அமேசானில் புத்தக எண்ணிக்கை அதிகம். ஒரு முக்கியமான விசயம்: ஸ்டீவ் ஜாப்ஸ் அப்பிள் அடுத்த 4 வருடங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற திட்டங்களை விட்டுச் சென்றுள்ளாராம்.
ReplyDeleteஅமேசானின் தலைவர் ஜெஃப் பெசோஸ் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் என்று தொழில்நுட்ப தளங்கள் புகழ்கின்றன.
//கூகிள் மாபெரும் லூஸர்!
ReplyDeleteஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட்ஐ சமாளிப்பதற்குதான் கூகுள் "Motorola Mobility"ஐ வாங்கியுள்ளது.
இவ்வுளவு நாட்களாக தன் சரக்கான "Android"ஐ பிற நிறுவனங்களின் சாதனங்களிலே உபயோகபடுத்தபட்டு வந்தது.(Sony Ericsson, Samsung)
ஆப்பிள் ஐபோன் வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டும் ஆப்பிள் தயாரிப்பு.
கூகுள் " இனி "Android" பிரபலபடுத்த நாமளும் வன்பொருள் தயாரிப்பில் இறங்கினால்தான் சரிபட்டு வரும் என்று நினைத்து "Motorola Mobility"ஐ வாங்கியுள்ளது.
Android" ஏற்கனவே பிரபலமாகியுள்ளது.
எனவே வருங்காலத்தில் ஆப்பிள்,மைக்ரோசாப்ட்ஐ விட விலை குறைவான, தரமுள்ள தொலைபேசியை கூகுள் அறிமுகப்படுத்தும்.
ஆப்பிள்,மைக்ரோசாப்ட் தங்கள் தொலைபேசி விலையை குறைக்க வாய்ப்பு இருக்கிறது. போட்டி நிச்சயம் கடுமையானதாக இருக்கும்..
http://investor.google.com/releases/2011/0815.html
The statement that Macs are used by a small group of people may be true only in the India/Global context.
ReplyDeleteIn the United States, every 4th computer is a Mac and Mac's proliferation is as fast as Windows in these days. To give an example, the company that I am working for encourages employees to bring their own computer. When we analysed one year data, 95% of the participants opted for MacBook; interesting thing is all these users are not tech-savvy. So Mac is still a dominant force in personal computing.
Steve Jobs created a strong and loyal fan base for brand Apple. That is his greatest success.
Comparing KindleFire with iPad is like comparing Apple(!) and Orange. They both cater to totally different segments. KindleFire is only a feature rich 'reader', it cant compete with business class tablets. Moreover, there are many other sub 200$ android tablets that can do the samething (or more) as Kindle Fire.
Amazon going to rule next 5 years? Definetly not, unless they come up with more compelling product/differentiating service.
The top 3 players would still remain the same Apple, Google and Microsoft (not in that order though).
The real competition will begin when MS releases it Windows 8 phone integrated with Office 365. That is going to be toughest challenge for both Apple and Google.
//* ஸ்டீவ் ஜாப்ஸின் தோல்வி - புத்தகச் சந்தையைப் புரிந்துகொள்ளாதது; அமேசானின் திறனைச் சரியாகக் கணக்கிடாதது.
ReplyDelete//
Amazon started as book selling company and moved onto retailing. So it is obvious for them to venturing in Kindle product.
But apple has iTunes music store. Hollywood is crying foul of their contract with Apple. That's apple's advantage.
//* ஆப்பிளின் போட்டிக்காரன் அமேசான். ஐக்ளவுட் என்று ஆப்பிள் பேசிக்கொண்டிருக்கும்போதே அமேசான் அதனைச் செய்துமுடித்துவிட்டது. கிண்டில் ஃபயர் என்னும் கலர் டேப்ளட் ஐபேடை ஒப்பிடும்போது மிகக் குறைந்த விலை. ஆப்பிள் அதற்குப் போட்டியாக ஒன்றைச் செய்து முடிப்பதற்குள், இதுவரை ஐபேட் வாங்கியிராத உலக மக்கள் பலரும் கிண்டில் ஃபயருக்குத் தாவியிருப்பார்கள்.
ReplyDelete// It wouldn't be difficult for apple to release iPad with same size as Fire. Dual core2 which is used in Iphone 4S can be made in bigger in size. But apple will not do it. Apple is trend setter and not follower. I dont't own iPad but I already pre-ordered Kindle Fire. The problem with Cloud is it won't be free. They will say storage is free but they will charge for bandwidth consumed to read/write any personal content onto the cloud. This is going to be a killer.
//* கிண்டில் ஃபயரில் என்னவெல்லாம் செய்யமுடியும்? புத்தகங்களை வாங்கி, படிக்கலாம். புத்தகம் கிளவுடில் இருக்கும். சினிமாக்களை வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். பாடல்களை இறக்கிக் கேட்கலாம். அமேசானின் கிளவுட் வழியாக வெப் பிரவுசிங் செய்யலாம். (இது எனக்குப் பிடிக்கவில்லை!) ஆப்பிள் இந்த நிலைக்கு வர கனகாலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDelete//
you can watch movie, read books only if you have a "Amazon prime membership" otherwise you have to pay.
And finally, Fire supports adobe Flash which kills battery life. So fire can not support battery life as it is said.
//கூகிள் மாபெரும் லூஸர்//
ReplyDeleteI totally disagree with this statement. How do you say google doesn't have cloud. I used Amazon cloud and Google's AppEngine which is same as cloud. I feel more comfortable with Google appengine than EC2. App Engine provides more infrastructure to make it easy to write scalable applications. Most of the iOS /Android applications are using Google's app engine. The advantage is most of contents available for free when you use google's AppEngine. Google slowly becoming content provider. With Massive data available in the internet google is top leader.
This decade is going to be Search, search, Search with Machine Learning, NLP supported which google employs 1000's of professors/Ph.D.s from premier institutes for last 10 years but where as Amazon just started this quarter. Amazon's existing algorithm Collaborative Filtering is not going to sustain long.
Cloud is storage medium/scale up/scale down supported and with massive you need better search algorithm.
Google >> Apple >> Amazon.
ஸ்டீவின் ஆபிச்சுவரிக்கு பதில் ஆப்பிளின் ஆபிச்சுவரியை எழுதி இருக்கிறீர்கள். அமேசானின் கிண்டில் அவ்வளவு பெரிய த்ரெட் என்று தோன்றவில்லை. வெறும் மார்கெடிங் ஹைப் என்று தான் தோன்றுகிறது. விலை பாதி என்றாலும், அளவு சிறியது, ஏற்கனவே வெளியாகி தோல்வியுற்ற ப்ளாக்பெரி ப்ளே புக் தயாரித்தவர்களே கிண்டிலையும் வடிவமைத்ததால் அதே தோற்றம், காமிரா இல்லை போன்ற பல குறைகள் கிண்டிலில்.
ReplyDeleteஸ்டீவ் புத்தக சந்தையை புரிந்து கொள்வதில் தோல்வி அடைந்தார் என்கிறீர்கள். ஆப்பிள் தனது ஐபேடை நெட்புக் நோக்கி தொடங்கியது. அமேசான் அதை தனது இ-ரீடரிலிருந்து ஆரம்பித்துள்ளது. அமேசானின் ஒரே பலம் அதன் கன்டென்ட். இருந்தாலும், அது மட்டும் போதாது. புத்தக சந்தையில் கிட்டதட்ட அதே அளவு கன்டென்ட் உள்ள பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ் தனது நூக் மூலம் தனி மார்கெட் ஷேரை ஏற்கனவே பிடித்துள்ளது. வீடியோ என்றால், சோனி அதிக அளவு வைத்துள்ளது. மேலும், நிறைய கன்டென்ட் வைத்துள்ள ஹுலு விற்பனைக்கு உள்ளது. ஆப்பிளிடம் அமேசானை விட அதிகம் காஷ் உள்ளது. எளிதில் வாங்கிவிடும். ஏன், வெறும் ஆறு பில்லியன் மதிப்புள்ள நெட்பிலிக்ஸ் அமேசானை விட மிக அதிகம் வீடியோ கன்டென்ட் கொண்டுள்ளது. அதையும் ஆப்பிள் வாங்கலாம்.
ஐபேடை எதிர்த்து இதுவரை தோல்வியுற்றவர்கள் பட்டியல் நீளம்.. மோடரோலா, சாம்சங், தோஷிபா, சோனி, ஏசர், டெல், ப்ளாக்பெரி,...
ஐபேட் வெற்றியின் ரகசியம் இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை..
கூகிள் மொடரோலாவை வாங்கியது, மோடரோலா வைத்துள்ள பேடன்ட்களுக்காக மட்டுமே. ஜனவரி மாதம் தான் இந்த சேல் முடியும். அது முடிந்தவுடன், கூகிள் மொடரோலாவை, பேடண்ட்கள் வைத்துக்கொண்டு, விற்றுவிடும் என்று சில அனலிஸ்ட் ரிபோர்ட்கள் சொல்கிறது. நானும் இதையே நம்புகிறேன். சோனி, எச் டி சி போன்றவை அதை வாங்க காத்திருக்கும் நிறுவனங்கள்.
பார்க்கலாம். we are living in interesting times!
பத்ரி, நீங்கள் ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுகிறீ ர்கள்.:)
ReplyDeleteஆப்பிள், கூகுள் இவை தொழில்நுட்ப நிறுவனங்கள். அமேசான் வர்த்தக நிறுவனம். வேறு வார்த்தைகளில் சொன்னால் ஆப்பிளின் ஐபேட்டின் செய்ய முடியும் பத்து காரியங்களில் புத்தகம் படிப்பது ஒன்று. மாறாக அமேசான் விற்கும் புத்தங்கங்களைப் படிக்க சாதனம் தேவை. எனவே ஆப்பிள் புத்தக சந்தையில் சொத்தை. கூகுளின் ஆண்ட்ராய்டை எடுத்துப் போட்டு அமேசான் இருபதாவது அட்டைக்கணினியை 'உருவாக்குகிறது'.
கணினி வரலாறை உங்கள் முதல் பத்தியைப் போல எளிமைப்படுத்த முடியாது. ஆப்பிள் பிரபலமாக்காததற்கு மேசைக்கணினிகள் உந்தம் பெற்ற 80களில் ஸ்கல்லில் ஜாப்ஸை தனிமைப்படுத்தியது பில்கேட்ஸ் வளர முக்கிய காரணம். எல்லாருடைய மேசையிலும் பில் கேட்ஸ் ஒரு கணினியை இட்டார் என்றால் ஜாப்ஸ் எல்லாருடையை சட்டைப்பையிலும் இட்டார்.
ஜாப்ஸ்க்கோ, ஆப்பிளுக்கோ வக்காலத்து வாங்க அல்ல இது. நீங்கள் வெகுவாக எளிமைப்படுத்தி ஆப்பிளை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியிருக்கிறீர்கள். நாளை நிலைமை எப்படியாகிலும் மாறலாம். ஆனால் இன்று நுட்ப நிறுவங்களின் நிலமை இதுதான் : கூகுள் >ஆப்பிள் > (அமேசான் = ஃபேஸ்புக்). வெறும் சந்தை அளவு மாத்திரம் கொண்ட கணிப்பல்ல இது, சந்தை, நுட்பத் திறமை, நிறுவனத்தின் கட்டமைப்பு, எதிர்காலத்த் திட்டங்கள் எல்லாமாகச் சேர்ந்த கணிப்பு. - வெங்கட்
I am different அல்லது நான் பெரிய புடுங்கி எனக்காட்ட விரும்புவர்களால்தான் ஆப்பிள் வண்டி ஓட்டுகிறது என்று நினைக்கிறேன் உதாரணமாக சிட்டி பகுதிகள் அல்லது கல்வி நிலையங்களில் அதிக மேக் உபயோகப்படுத்தபடுகிறது. நேட்புக்கை எடுத்தால் $1000-ல்தான் ஆரம்பிக்கிறது மேக்விலை. வெப் பிரைசிங் அல்லது வேர்ட் புராஸஸிங் போன்ற பொதுவான உபயோகத்திற்கான PC $300க்கே கிடைக்கிறது. இப்படியாக எல்லா ஆப்பிள் பொருட்களும் ஓவர் விலை. ஜாப்ஸ் ஒரு சிறந்த தொழில்நுட்பவாளர் அல்ல, அவர் ஒரு சிறந்த வியாபாரி அவ்வளவுதான். உலகமெங்கும், இந்தியா போன்ற ஏழைநாட்டுக்காரனும் கணணி உபயோகப்படுத்த வழி செய்த பில்கேட்ஸே போற்றுதலுக்கு உரியவர்
ReplyDeleteவெங்கட்: நான் ஆப்பிளை இரண்டாவது இடத்தில்தான் வைத்துள்ளேன். மூன்றாவது இடத்தில் அல்ல. ஆப்பிளையும் கூகிளையும் ஒப்பிடும்போது அமேசான் தொழில்நுட்ப நிறுவனம் கிடையாதுதான். ஆனால் எவ்வளவு வாடிக்கையாளரைக் கொண்டிருக்கிறோம், அவர்கள் பர்ஸிலிருந்து எவ்வளவு பணம் தரப்போகிறார்கள் என்ற பெரும் சந்தையைக் கையில் வைத்திருப்பவர்கள்தான் நாளை பெரிதாகக் கோலோச்சப்போகிறார்கள் என்பது என் கருத்து. அதில் கூகிள் பின்னால்தான் உள்ளது. அவர்களது சந்தை முயற்சிகள் எல்லாம் தடவல். இந்தத் துரையில் முன்னோடி ஆப்பிள்தான். அதனால்தான் ஸ்டீவ் ஜாப் ஒரு விஷனரி என்று நான் கருதுகிறேன். ஐபாட், ஐபோன், ஐபேட் மூன்றும் அதி அற்புதக் கருவிகள் மட்டுமல்ல, ஐட்யூன்ஸ் அதி அற்புதமான பிசினஸ் மாடலும்கூட என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால், ஐபேடின் பின்னால் வலுவான பிசினஸ் மாடல் இல்லை. அது ஒரு கருவி மட்டுமே. ஆண்டிராய்டில் இயங்கும் அனேக கருவிகளால் ஐபேடில் நடப்பது அனைத்தையும் கிட்டத்தட்ட செய்துவிட முடியும். இடைமுகம் கொஞ்சம் சொதப்பல், ஸ்டபிலிடி குறைவு என்றெல்லாம் சொன்னாலும்கூட காசு குறைவு என்பதாலேயே ஏகப்பட்ட பேர் அதைத்தான் வாங்கிப் பயன்பெறுவார்கள்.
ReplyDeleteஅங்குதான் அமேசான் விழித்துக்கொள்கிறது. கிண்டில் என்னும் மோனோக்ரோம் புத்தகப் படிப்பான் மாபெரும் தொழில்நுட்ப விஷயமல்ல. ஆனாலும் அதனை எண்ணற்றோர் வாங்கினர். வாங்கிய ஒவ்வொருவரும் அந்தக் கருவியை மட்டுமல்ல, மாதாமாதம் அமேசானிலிருந்து புத்தகம் வாங்குபவர்கள். (எப்படி ஐட்யூன்ஸில் பாட்டு வாங்குகிறார்களோ, அப்படி.)
ஆனால் பாட்டு, சினிமா, புத்தகம் என்ற மூன்றும் ஒன்றுசேரும்போது ஆட்டம் மாறும் என்பது என் கருத்து. அதைத்தான் கிண்டில் ஃபயர் செய்யப்போகிறது. அதற்கும் மேலாக கிண்டில் ஃபயரின் அடிமட்ட விலை (இன்னும் குறையும்!) அமேசான், கருவிகளை விற்பதால் பணம் பண்ணுவதில்லை. அதனை வாங்கியோர் மாதாமாதம் தரும் தொகையால்.
ஆப்பிள், தன் ஐபேடை அப்படி மாற்றலாம். ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. அதற்கான எஞ்சினியரிங்கைச் சரி செய்வது பெரிய விஷயமல்ல. ஆனால் தம் பிசினஸ் மாடலைப் புரட்டிப்போட ஆப்பிள் தயாரா? தம் விலையைக் குறைக்கத் தயாரா?
ஐபோனை எடுத்துக்கொள்ளுங்கள். பிரமாதமான டிவைஸ். அதற்குப் பிறகுதான் ஆண்டிராய்ட் போன்கள் தொடர்ந்து வரத்தொடங்கின. இன்று உலகில் அதிகமாக விற்பது எது? ஐபோனா அல்லது அனைத்து ஆண்டிராய்ட் போன்களும் சேர்ந்தா? 2010-லேயே ஆண்டிராய்ட் போன்கள் ஐபோனைவிட (அமெரிக்காவிலேயேகூட) அதிகம் விற்க ஆரம்பித்துவிட்டது. என்ன காரணம்? விலை.
உலகம் பணக்காரர்களால் ஆனதல்ல. மிடில் கிளாஸ் மக்களாலும் ஏழைகளாலும் ஆனது.
அடுத்த வாரம் நான் ஒரு ஆண்டிராய்ட் போன் வாங்கப்போகிறேன். மைக்ரோமேக்ஸ் போன்றவை சுமார் ரூ. 5,500-க்குள் இவற்றை விற்பனை செய்கின்றன. ஐபோன் என்றால் கிட்டத்தட்ட ரூ. 30,000 ஆகிவிடும்.
பத்ரி சார், ஆண்ட்ராய்ட் ஏன் அதிகம் விற்பனையாகிறதென்று சரியாக சொன்னீர்கள்.
ReplyDeleteஉங்களுக்கு நான் பரிந்துரைக்கும் ஆண்ட்ராயிட் ஃபோன்:-
பத்தாயிரம் ரேஞ்ச் என்றால் Dell XCD35( மிகக்குறைந்த விலையில் (Rs.8699) இதை விட ஒரு நல்ல ஃபோன் கிடையவே கிடையாது!
பதினைந்தாயிரம் என்றால் Spice Mi 410
இருபதாயிரம் என்றால் Google Nexus S
முப்பதாயிரம் என்றால் HTC Sensation, இது Samsung Galaxy S2 ஐ விட அதிக வசதி கொண்டது
Music Lovers are very high percentage than Book lovers. Kindle Fire can not have an advantage bcoz books can be bought (like iTunes Music). I will never buy Kindle fire for books reading.
ReplyDeleteImagine the kind of/ number of apps available for iOS device (still big lagging for Android marketplace. Many OS version available in different devices for Android)
Amazon american base and how long will it take to reach Indian market and content availability in India.
Now Apple announces iCloud with iOS 5. 5 GB space free and iTune Match is on chargable basis (24.99 for 1 year).
Apple is not trying to target all kind of price market. so its about your affordability only.
When Apple introduces new technology or function, it just kills. Imagine if SIRI works well in iPhone 4S.
Lets wait and see cloud function of Kindle and iPhone.
I don't see anything like Amazon Kindle will rule next 5 years.
Atleast in US now iPhone 3GS is free with contract. But no cheap android phone comes closer to iPhone 3G (forget about 4/4S)
//* கிண்டில் ஃபயரில் என்னவெல்லாம் செய்யமுடியும்? புத்தகங்களை வாங்கி, படிக்கலாம். புத்தகம் கிளவுடில் இருக்கும். சினிமாக்களை வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். பாடல்களை இறக்கிக் கேட்கலாம். அமேசானின் கிளவுட் வழியாக வெப் பிரவுசிங் செய்யலாம். (இது எனக்குப் பிடிக்கவில்லை!) ஆப்பிள் இந்த நிலைக்கு வர கனகாலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.//
Its all possible in iPad/iPhone also !!! iCloud with iOS from October 12th.
Good debate peeps.
ReplyDeleteby the way,
How can I buy your Sherlock book ? its not available in that e store. Im in UK.
Thanks
Kindle fire sold for $199, and already, teardown specialists like iFixit have estimated its unit cost and concluded that Fire is sold for loss, and the profits come for Amazon, ONLY when the users buy prime membership and keep paying for content.
ReplyDeleteThat apart, its not a regular tablet, as it doesn't have a GPS, 3G, expandable mem, Camera etc. Avid book readers those who brought Kindle and Nook, are the only customer base for Kindle Fire. Others will buy better android tablets available for $200. In India, this tablet wont Kindle any Fire among consumers. If marketed right, the reliance and airtel(beetel) tablets available slightly for less than Kindle Fire's price, will be well sold. Also the Indian Govt's tablet is also due for release, and this time it looks like the specs are better.
As of now, I don't see indian consumers vying for, and buying a tablet mainly for reading purpose. Reading market still lies within Print Media & PC(to an extent)
For those interested, Kindle Fire available for Rs.15 K, with Naaptol - http://bit.ly/oyDnkk
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteஆப்பிளாவது,அமேசானாவது!
ஜனவரி மாதம் புத்தக சந்தையில் பத்து சதவிகித தள்ளுபடியும், சரியாக மூன்று மாதம் கழித்து பெரும்பாலும் அதே புத்தகங்களுக்கு(சற்றே கசங்கி விட்டன என சொல்லி) எழுபது சதவிகித தள்ளுபடியும் கொடுக்கும் உங்கள் முன்....
அவர்கள் எம்மாத்திரம்!!
"கறை நல்லது" ....இது யூனிலீவர்
"கசங்கல் நல்லது" ....இது கிழக்குப்பதிப்பகம்
Badri,
ReplyDeleteLet's check your prediction in 2015 and 2020... I have heard similar predictions/comparisons/doomsday forecasts for tech companies many times before, and the only advantage the predictors have had is that in the ocean of Internet prophecies, they go unnoticed...
I have no doubt that your inequality -- Amazon > Apple > Google is one such meaningless prediction...
Nevertheless, lets check in the years 2015, and again in 2020...
"ஆனால் தம் பிசினஸ் மாடலைப் புரட்டிப்போட ஆப்பிள் தயாரா? தம் விலையைக் குறைக்கத் தயாரா?"
ReplyDeleteBadri,
Please apply the same logic you've applied here to the US retail market and explain why Walmart, Target and stores like Nordstrom continue to coexist.
There's a story that once a big boss at Cadillac advised his marketing team to forget about low-cost car manufacturers (Ford, Japanese co's etc.) and rather focus on buyers of precious diamonds. Those were better target customers for potential cadillac owners.
The pie is almost always large enough for strong players to share and be perfectly happy.