11 ஜனவரி முதல் 23 ஜனவரி வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடக்கவுள்ளது. இம்முறை புதிய இடம். நான் பார்க்கும் மூன்றாவது இடம் இது. பல ஆண்டுகள் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடந்துவந்த புத்தகக் கண்காட்சி, சில ஆண்டுகளுக்குமுன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி வளாகத்துக்குச் சென்றது. இப்போது சென்னை மெட்ரோ வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் போக்குவரத்தைச் சமாளிக்கமுடியாது என்ற காரணத்தால் அந்த இடம் இருந்தாலும் மாநகரக் காவல்துறையிடம் அனுமதி கிடைக்கவில்லை. எனவே நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடலில் இம்முறை கண்காட்சி நடக்க உள்ளது.
இதுவரையில் கிடைத்த இடங்களிலேயே பிரம்மாண்டமான இடம் இதுதான். ஊருக்கு மிக நடுவில், எங்கிருந்துவேண்டுமானாலும் மக்கள் எளிதாக வந்துபோகும் வகையில் கிடைத்துள்ள இடம் ஒருவகையில் வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும்.
இம்முறை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான ஸ்டால்கள் உள்ளன. ஆனாலும் சில மாறுதல்கள். ஒரு குறிப்பிட்ட லாபி கடுமையாக வேலை செய்து, முன் கொடுத்துவந்த 400 சதுர அடி ஸ்டால்களின் அளவைக் குறைத்துள்ளது. அதன் காரணமாக இம்முறை 300 சதுர அடி ஸ்டால்தான் உள்ளதிலேயே பெரிய இடம். அதன்பின் 200 சதுர அடி, 100 சதுர அடி ஸ்டால்கள் எப்போதும்போல் உண்டு.
கிழக்கின் அரங்குகள்
சென்ற முறைபோல இம்முறையும் கிழக்கின் புத்தகங்கள் இரண்டு வெவ்வேறு (300 சதுர அடி) பிரைம் ஸ்டால் இடங்களில் கிடைக்கும். எண்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்: கடை எண் 115, கடை எண் 246.
கடை எண் 115, ‘New Horizon Media’ என்ற பெயரில் இருக்கும். கடை எண் 246, ‘கிழக்கு பதிப்பகம்’ என்ற பெயரில் இருக்கும். கிழக்கு பதிப்பகத்தின் அனைத்துப் புத்தகங்கள், நியூ ஹொரைஸன் மீடியா விநியோகம் செய்யக்கூடிய வைரமுத்து புத்தகங்கள், மஞ்சுள், பாரகன், ஷிவம் புக்ஸ் போன்றோரின் புத்தகங்களும் இந்த இரண்டு கடைகளிலும் கிடைக்கும்.
ஆழம் என்னும் எங்கள் அச்சு இதழுக்குச் சந்தா கட்டுவதையும் இந்தக் கடைகளில் நீங்கள் செய்யலாம். சமீபத்திய இதழை வாங்கிக்கொள்ளலாம். கூடவே சில பழைய இதழ்களையும் வாங்கலாம்.
மின் புத்தக அரங்கு
இம்முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் NHM Reader என்ற பெயரிலான மின் புத்தகப் படிப்பான் செயலியை அறிமுகம் செய்கிறோம். ஓரிரு ஆண்டுகளுக்குமுன் முதலில் Feedle என்ற பெயரிலும் பின்னர் NHM Reader என்ற பெயரிலும் Windows கணினிகளில் வேலை செய்யுமாறு ஒரு மின் புத்தகப் படிப்பானை சோதனை முயற்சியில் உருவாக்க ஆரம்பித்தோம். பின் அதனைத் தாற்காலிகமாக நிறுத்திவிட்டு, ஐஃபோன், ஐபேட் சந்தைக்கான மின் புத்தகப் படிப்பானில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.
இப்போது அதனை ஐஃபோனில் ரிலீஸ் செய்துள்ளோம். ஐபேட் வடிவம் அடுத்த வாரத்துக்குள் ஆப்பிள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று நினைக்கிறோம். எப்படியும் இம்மாத இறுதிக்குள் பல புத்தகங்களோடு இந்த மின் புத்தகப் படிப்பான் ஆப்பிள் iOS இயங்குதளங்களில் கிடைக்கத் தொடங்கும்.
ஆண்டிராய்ட் ஃபோன், டேப்லட் கணினிகளில் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதுவும் அடுத்த வாரத்துக்குள் அல்லது அதற்கடுத்த வாரத்துக்குள் கூகிள் பிளேயில் வந்துவிடலாம்.
இந்த மென்பொருளை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி மின் புத்தகங்களை வாங்குவது என்பதைச் செய்துகாட்ட என்று ஒரு ஒற்றை ஸ்டாலை (100 சதுர அடி) எடுத்துள்ளோம். ஸ்டால் எண் 188-ல் E-books என்ற பெயரில் இருக்கும். மின் புத்தகங்கள் பற்றி அறிந்துகொள்ள மறக்காமல் இந்த இடத்துக்கு வருகை தாருங்கள்.
டயல் ஃபார் புக்ஸ்
கடந்த பல மாதங்களாக டயல் ஃபார் புக்ஸ் என்ற பெயரில் போன் மூலம் புத்தகம் ஆர்டர் செய்து வீட்டிலேயே பெறும் சேவையை நடத்தி வருகிறோம். இதனை விளக்கும் வகையில் ஒரு ஸ்டாலை எடுத்துள்ளோம். இதுவும் ஒற்றை ஸ்டால், எண் 319. (இந்த 319, 188 கடைகளில் எந்தப் புத்தக விற்பனையும் நடைபெறாது. வெறும் செயல் விளக்கம் மட்டுமே.)
இந்தக் கடையில், எப்படி போன் மூலம் புத்தகங்களை ஆர்டர் செய்வது, ஆர்டர் செய்தால் வந்துசேர எத்தனை நாட்கள் ஆகும், ஏன் போன்ற பலவற்றையும் விளக்கிச் சொல்வோம். கூடவே, இந்தக் கடையில் ‘அலமாரி’ என்ற புதிய இதழ் ஒன்றை அறிமுகம் செய்கிறோம். இந்த இதழ், டேப்லாய்ட் வடிவிலான செய்தித்தாள் போன்றது. நான்கு பக்கங்கள், முற்றிலும் வண்ணம். இதுவும் மாதாந்திர இதழ். இதில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் புதிய புத்தகங்கள் (அனைத்துப் பதிப்பகங்கள்) குறித்த செய்திகள், புத்தக அட்டைகள், புத்தகம் பற்றிய தகவல்கள், எழுத்தாளர்கள் அல்லது பதிப்பாளர்களுடனான பேட்டி போன்றவை வெளியாகும்.
புத்தகங்களை வாங்க விருப்பம் உள்ளவர்களை நோக்கி உருவாக்கப்பட்டுள்ள இதழ் இது. நீங்கள் இதன்மூலம் பயன் அடைவீர்கள் என்று நம்புகிறேன்.
எனவே நந்தனம் சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் பலமுறை வாருங்கள். எங்கள் அனைத்துக் கடைகளையும் ஒரு பார்வை பாருங்கள்.
115 - New Horizon Media
246 - Kizhakku Pathippagam
188 - Ebook
319 - Dial For Books

Thanks for the info. Any new book releases by Kizhakku for the book fair ?
ReplyDeleteand we are expecting a post on your new releases. pls make that soon.
ReplyDeleteJust a quick comment on NHM Reader. It will be a platform, where an publisher can publish his/her books. Also, like Kindle singles, we wiill allow individuals to publish their Tamil books (even poetry collections!) through this platform. All coming soon...
ReplyDeleteI am liking this NHM reader concept. Existing ebook markets have a very limited collection of Tamil books. I have only one doubt. If its going to be a platform for publishing then why call it a reader. Why not we have a different name
ReplyDeleteReader app is only a reader. The publishing platform is visible only to the publisher.
DeleteI have also explained why "NHM blah" brand below. There is a fairly large community of NHM Writer users. We want to reach out to these users, by extending the same across platforms and across applications.
Deleteகிண்டில், இபப் வடிவங்களைப் படிக்க ஐஓஸ், ஆண்ட்ராய்ட் கருவிகளுக்கான இலவச செயலிகள் ஏற்கனவே உள்ளன. ஆகவே உங்கள் இ-புத்தகங்களை இந்த வடிவங்கள் ஒன்றில் அல்லது இரண்டிலும் வெளியிட்டுவிட்டால் போதுமே. தனியாக மேலும் ஒரு செயலி எதற்கு என்று புரியவில்லை. ஃபிளிப்கார்ட், தான் விற்கும் மின் புத்தகங்களைப் படிக்க ஒரு ஆண்டிராய்ட் செயலியைத் தருகிறது. அவர்களது புத்தகங்களை அதில் மட்டுமே படிக்க முடியும். இப்படி ஒவ்வொரு விற்பனையாளர், பதிப்பாளரும் தனித் தனியே பிரத்யேக செயலிகளை உர்வாக்கிக்கொண்டே போவது சரியா?!
ReplyDeleteசரவணன்
It is very difficult to present things from basic when you assume a role that you already know everything. For example, please come back to me after researching whether Kindle will deal with any non- romascript language, much less Indian languages.
DeleteAnswer: They do not.
Please go and talk to Flipkart and find out when, if at all, theyy will support Indian languages.
Answer: They do not know.
Tell me platforms that are already available that accept Indian language content with a marketplace model, wheef we can sign up and make our content available for sale today. We will do so.
Thank you for your time and research.
இந்திய மொழிகளைப் படிக்கும் செயலிகள் இல்லை என்று எனக்குத் தெரியாதுதான். சில நாட்களுக்கு முன் பேயோன் இபப் முறையில் வெளியிட்டிருந்த 'நள்ளிரவும் கடலும் நானும்' மின்னூலை வழக்கமான அடபி டிஜிட்டல் எடிஷன்ஸ் கொண்டு படிக்க முடியவில்லை--வெறும் பெட்டிகள் மட்டுமே தோன்றின. ஆனாலும் மேஜிக் ஸ்க்ரோல் என்கிற பிரவுசர் எக்ஸ்டன்ஷனை கூகுள் க்ரோமில் நிறுவிய பிறகு படிக்க முடிந்தது. எனவே தமிழ் இபப் புத்தகங்களுக்கான செயலிகள் ஏற்கனவே இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டேன். என்னிடம் ஐஓஸ் அல்லது ஆண்டிராய்ட் உள்ள ஸ்மார்ட் ஃபோன் அல்லது டேப்ளட் கருவிகள் இல்லாததால் என்க்கு நிலவரம் தெரியாது! இவ்வளவு வறட்சி நிலவியிருப்பது எனக்கு வியப்பாகவே உள்ளது. உங்களுடையதுவே தமிழ் படிக்க உதவும் முதலாவது செயலி என்றால் அதை மிகவும் வரவேற்கிறேன்! விண்டோஸ் கணினிக்கான வெர்ஷனையும் வெளியிடுங்கள்.
Deleteசரவணன்
Mobileveda has a product called Fublish. Beyond that, many people in India are working on Indian language e-reading facility. As it is too early, all of us want to jump in. Vikatan has a apps through which you can read their magazines through paid subscription. Many Tamil newspapers have free iOS apps. It is one thing to have an app to push your books through; it is another to build a platform through which you can make all Indian language publishers publish their books.
DeleteMany developers approach publishers and offer to develop unique apps for the respective publishers, through which books can be sold and a lot of free info be given through the same. That we think is not a good idea. We think a common platform through which all publishers can push their books is the best model. Over time, few of us will get killed (because our service is not up to the mark or we run out of cash!), while a few survive, and consolidate.
All of us however want to try our luck. This is after all the gold rush.
Absolutely. Well done. This reply is like a mission statement. I hope there's a copy of it hanging in the stalls and in your office :-)
DeleteGopu
NHM Writer ஐ MAC Mini யின் OS X இல் பயன்படுத்துகிற மாதிரி ஒரு வெர்ஷனை சீக்கிரம் கொண்டு வாருங்கள். Mac Mini வாங்கியும் பயன் படுத்தாமல் போட்டு வைத்திருக்கிறேன்!
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
மேக் NHM Writer நிச்சயமாக வரும். அதை எழுத இதுநாள் வரை ஆள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் ஒரிஜினல் மென்பொருளை விண்டோஸுக்காக எழுதிய நாகராஜனே இப்போது மேக் வாங்கி அதுவே தெய்வம் என்று சொல்லத் தொடங்கியதால், மேக் வெர்ஷன் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று கொள்க. சிலேட்டுக் கணினி வகைகளிலும் NHM Writer வரும்.
Deleteஇந்தக் காரணங்களால்தான் டொக்கு பிராண்ட்போல இருந்தாலும் NHM blah-blah என்ற பெயரைத் தொடர்வது என்று முடிவு செய்தோம். NHM Reader, NHm Writer... and so on.
நான் மாக் தான் வைத்திருக்கிறேன். அதில் அஞ்சல் தமிழ் ஃபாண்ட் டீஃபால்டாக வருகிறதே, தட்டச்சு செய்ய.. NHMWriter இன் அவசியம் என்ன?
Delete-ஸ்ரீனி
மேக்-கில், டீஃபால்டாக தமிழ் எழுதலாம். ஏனெனில் அதில் யூனிகோட் என்கோடிங்கிலான ஒரு தமிழ் ஃபாண்ட் உள்ளது; டீஃபால்ட் ஃபொனெடிக் கீபோர்ட் வசதி உள்ளது. ஆனால் தமிழ்99 விசைப்பலகை மாதிரியில் எழுத முடியுமா? இன்ஸ்க்ரிப்ட் கீபோர்ட், டைப்ரைட்டிங் கீபோர்ட் வேண்டும் என்றால்? ஏதோ ஒரு காரணத்துக்காக உங்களுக்கு ஸ்ரீலிபி, டாம், டாப், டிஸ்கி, டேஸ், பிராமி, டயாக்ரிடிக் போன்ற என்கோடிங்குகளில் தமிழ் எழுதவேண்டியுள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள்? NHM Writer பயன்படுத்தியிருந்தீர்கள் என்றால் அதில் வேறு பல வசதிகளும் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதனால்தான் ஏற்கெனவே விண்டோஸில் NHM Writer பயன்படுத்தியவர்கள், மேக்கிலும் அது வேண்டும் என்று கேட்கிறார்கள். குறைவான பேர்தான், என்றாலும் செய்வதாக உள்ளோம்.
Deleteஒப்பீட்டளவில் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், ஆனால் மேக் பாவிப்பவர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
Deleteநின்றி NHM.
Nice attempt. I am eager/willing to support your efforts.
ReplyDeleteI like your "dokku brand" comment.
;-)
Murali, Michigan.
list of new books being published by Kizhakku this year ?
ReplyDelete‘அலமாரி’ என்ற புதிய இதழ் ஒன்றை அறிமுகம் செய்கிறோம். இந்த இதழ், டேப்லாய்ட் வடிவிலான செய்தித்தாள் போன்றது. நான்கு பக்கங்கள், முற்றிலும் வண்ணம். இதுவும் மாதாந்திர இதழ். இதில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் புதிய புத்தகங்கள் (அனைத்துப் பதிப்பகங்கள்) குறித்த செய்திகள், புத்தக அட்டைகள், புத்தகம் பற்றிய தகவல்கள், எழுத்தாளர்கள் அல்லது பதிப்பாளர்களுடனான பேட்டி போன்றவை வெளியாகும்.
ReplyDeleteபுத்தகங்களை வாங்க விருப்பம் உள்ளவர்களை நோக்கி உருவாக்கப்பட்டுள்ள இதழ் இது
super
Dear Badri,
ReplyDeleteI really love all the arrangements. Esp. the "Alamaari", a very much needy one for the book lovers.
Salutations to your efforts.
Thanks
Muthu
// மேக் வெர்ஷன் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று கொள்க. //
ReplyDeleteWowwww. Eagerly waiting for it.
awesome....just downloaded the app....eager to see more books that I can purchase and read. Good job !
ReplyDeleteMurali, Michigan.
அலமாரியை பிடிஎஃப் ஆக டயல் ஃபார் புக்ஸ் அல்லது கிழக்கு தளத்தில் (அல்லது இந்த வலைப்பத்திலேயே) வெளியிடலாம்.
ReplyDeleteசரவணன்
Thanks Badri. Looking forward for Andriod App for Tamil E-Books. - Vimal
ReplyDeleteகடந்த நான்கு வருடங்களாக உங்கள் செயல்பாடுகளைக் கவனித்து வருகிறேன்..உங்கள் நகர்வும், தேர்ந்தெடுக்கும் திசைகளும் மகிழ்ச்சியளிப்பவை.
ReplyDeleteஎன்எச்எம் செயலியை முதலில் வெளியிட்ட போது, அதை கைத் தொலைபேசிகளுக்கும் நீட்டிக்க முடியுமா என்று பாருங்களேன் என்று ஒரு ஆலோசனை வைத்தேன்.(மூன்று வருடம் இருக்குமா?) நீங்கள் பதிலே அளிக்க வில்லையெனினும், சூழலும் கணினி|தமிழ்சூழல் வளர்ச்சியும் உங்களை அத்திசையில் செயல்பட வைத்திருக்கின்றன.
இ-படிப்பான் முயற்சிகள் நிச்சயம் வரவேற்கத் தக்கது. முதல் நிலைப் பயன்பாடு கிழக்கு'க்கு இருந்தாலும் மேலும் பல இ-புத்தக வடிவங்களையும் அது ஏற்றுக் கொள்ளும் என்ற நிலை நோக்கி உங்கள் செயல்பாடு இருக்கிறதெனில் அது வரவேற்கத்தக்கது.
பல களங்களிலும் சிந்தித்து முன்னேற்ற முயற்சிகளை எடுக்கிறீர்கள்..வாழ்த்துகள்.
எல்லா என்எச்எம் மென்பொருள்களுக்கும் 'கிழக்கு' என்று பெயர்மாற்றி விட்டால் போகிறது..என்ன போச்சு..சிறிது நாளில் பழகி விடும் !!!
NHM ரைட்டரை சுமார் 1000 பேருக்கு அறிமுகப்படுத்தியும், சுமார் 500 கணிணிகளில் தரவிரக்கமும் செய்து தமிழ் வளர்த்த எனக்கு பத்ரியும், நாகுவும் என்ன கைம்மாறு செய்வார்களென காத்திருக்கிறேன்.
ReplyDeleteநானும் மேக் மற்றும் ஐபோன் ஐபேட்-3 தான் வைத்து உள்ளேன். பிரச்சனை NHM writer இல்லாமல் என்னால் எதிலும் தமிழில் எழுத முடியவில்லை. நான் நீண்டகாலமாக பாமணி பயன்படுத்துவதால் அதற்கு வலுவான ரைட்டர் இதுதான். நான் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் இந்த ரைட்டர மேக் மற்றும் ஐபேடில். தற்சமயம் வின்டோஸ் எக்ஸ்பியில் ஏனோ இந்த ரைட்டர் வேலை செய்வதில்லை. அதற்கு எதாவது தீர்வு உண்டா?
ReplyDeleteBadri no doubt that NHM is a pioneer in the Tamil publishing industry in more than one way. Great going. One thing to check is, the pamphlet distributed in stall 188 and those inside the stall told me that the iPad version is already available but it does not seem to be so. Only the iPhone version is available now as you mentioned in the above post.
ReplyDeleteTHE BOOK-FAIR LOCATION IS GOOD BUT ACCESS TO THE FAIR
ReplyDeleteFROM THE GATE IS NOT CONVENIENT ESPECIALLY FOR OLD PEOPLE
AND CHILDREN. PLEASE INFORM THIS TO BAPASI AUTHORITIES.
AUTO FARE FROM THE GATE TO THE FAIR IS FIFTY RUPEES.THE LOCATION IS NOT AT ALL ILLUMINATED.VERY SCARY TO WALK
ON THE DARK ROADS. VERY POOR ARRANGEMENTS.
எதிர்காலத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்கங்களின் நிலை என்ன ? நான் 1000 புத்தகங்கள் சேகரித்திருக்கிறேன், அத்தனை புத்தகங்களையும் என்ன செய்வது ?
ReplyDeleteStart a library. People will come to read. Or hold your own book fair. :-)
Deletegreat work badri, கடந்த ஒருவருடமாக இப்படி ஒரு பிளாட்பார்மைத் தான் தேடிக் கொண்டிருந்தோம்..
ReplyDeleteசிறப்பான தொடக்கம்
ReplyDeleteமூன்று அரங்குகள் என்பது குறைவுதான். ஆயினும் பல்வேறு அரங்கங்களில் கிழக்கு பதிப்பகம் மற்றும் விகடன் பிரசுரம் புத்தகங்களை காண முடிந்தது. :-)
ReplyDeleteநிறைய ஸ்டால்கள் இருந்ததால் கண்காட்சி கண்ணைக் கட்டும் காட்சியாகி விட்டது. நான் சனி , ஞாயிறு இரண்டு நாட்களும் வந்தேன். இரண்டு சனி, ஞாயிறுகள் இருப்பதுமாதிரி தேதிகளை அமைத்திருக்கலாம். மற்றும் சென்னை புத்தகக் கண்காட்சியை வருடத்திற்கு இரண்டாக அமைத்து ஒன்று தென் சென்னையிலும் (YMCA / அடையார்) மற்றொன்று வடசென்னையிலுமென (St.George /அண்ணாநகர் ) அமைத்தால் இன்னும் நிறைய மக்களை கூட்ட நெரிசலின்றி வரவழைக்க முடியும்.
அ. சரவணன்
NHM ரீடரை பயன்படுத்தி பார்த்தேன். அருமையாக உள்ளது; கரைந்த நிழல்கள் புத்தகங்கள் வாங்கலாம் என்று இருக்கிறேன், ஆனால் விலை டாலரில் மட்டுமே உள்ளது, யூரோவில் விலை வருமாறு செய்ய இயலுமா??
ReplyDeleteபத்ரி வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்
ReplyDeleteHi Badri,
ReplyDeleteWhen are you releasing the android version?
Thanks