Wednesday, January 09, 2013

அக்கிரகாரத்தில் பெரியார் - பி.ஏ.கிருஷ்ணன்

‘நாம்’ என்ற அமைப்பு (ஜெகத் கஸ்பார்) சங்கம் 4 என்ற பெயரில் மார்கழி மாதம் பல தொடர் பேச்சுகளை ஏற்பாடு செய்துள்ளது. இதில் தொடக்கத்தில் ஒரு நாள், புதிய பொருளாதாரக் கொள்கையைத் தமிழர்கள் எப்படிப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி நான் பேசியிருந்தேன்.

நேற்று ஐந்து பேச்சுகள் நடப்பதாக இருந்தது. அங்கு சென்றவுடன் நான்குதான் என்று சொன்னார்கள். மற்ற பேச்சுகளைப் பற்றி நான் விரிவாக இங்கு எழுதப்போவதில்லை. எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பெரியார் பற்றிப் பேசியதை மட்டும்தான் நான் இந்தப் பதிவில் எழுதப்போகிறேன்.

பி.ஏ.கிருஷ்ணன், எழுதிவந்திருந்த ஒரு பேச்சைத்தான் படித்தார். எனவே இந்த முழு வடிவம் எழுத்துவடிவில் கிடைக்கத்தான் போகிறது. மேலும் இந்த முழு நிகழ்ச்சியும் ஏற்பாட்டாளர்களால் வீடியோ எடுக்கப்பட்டது. எனவே இணையத்திலோ, ஏதோ தொலைக்காட்சியிலோ இந்த ஒளிப்பதிவு வெளியாகலாம்.


பி.ஏ.கிருஷ்ணன் தொடக்கத்திலேயே, ‘நான் பேசப்போவது பிராமணர்களால் பெரியார் எப்படிப் பார்க்கப்பட்டார் என்பதையே; அவருடைய வாழ்க்கையைப் பற்றி முழுதாக அல்ல’ என்றார்.

பெரியார் 1920 முதல் தொடங்கி வாழ்வின் இறுதிக்காலம் வரை தன் அரசியல் வாழ்க்கையில் யாருக்கு ஆதரவாகவும் யாருக்கு எதிராகவும் இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டியபின், தன் வாழ்நாள் முழுதும் அவர் மாறாது வைத்திருந்த கொள்கைகள் இரண்டு என்றார். அவை:
  • பிராமணர் எதிர்ப்பு
  • கடவுள் மறுப்பு
தமிழகத்தில் பல நாத்திகர்கள் இருந்துள்ளனர், ஆனால் அவர்கள் பிராமண எதிர்ப்பாளர்களாக இருந்ததில்லை. அதேபோல பல பிராமண எதிர்ப்பாளர்கள் இருந்துள்ளனர், ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தனர். பெரியார் ஒருவர்தான் தன் வாழ்க்கை முடியும்வரை இந்த இரண்டு கொள்கைகளையும் சேர்ந்தாற்போல் கடைப்பிடித்தார் என்றார் பி.ஏ.கே. இதனாலேயே அவர் பிராமணர்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டார் என்றார்.

பிராமணர்கள்மீது வன்முறை

பெரியார் பிராமணர்கள்மீது வன்முறை செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்றார் பி.ஏ.கே. பெரியாரின் கருஞ்சட்டைப் படை பிராமணர்களைத் தாக்கலாம் என்ற ஒரு பயம் இருந்தது. அதுபற்றி சுதேசமித்திரனில் ஒரு தலையங்கமும் வந்திருந்தது. ஆனால் அதற்கு பதில் அளித்த பெரியார் அம்மாதிரியான எண்ணம் ஏதும் தனக்கு இல்லை; வன்முறையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தார்.

அக்காலகட்டத்தில் தூத்துக்குடியில் சில பிராமணர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் அது திட்டமிட்டு நடந்த தாக்குதல் அல்ல. அண்ணாதுரை உடனேயே அதனை எதிர்த்து ஓர் அறிக்கையும் வெளியிட்டார்.

அரசியல் செல்வாக்கு

1967-ல் திமுக ஆட்சிக்கு வரும்வரை, பெரியாருக்குப் பெரும் அரசியல் செல்வாக்கு ஏதும் இருக்கவில்லை. அவர் சொன்னதைக் கேட்டு அதன்படிச் செய்யக்கூடிய ஆட்சி எதுவும் நடக்கவில்லை. எனவே அரசியலில் அவருடைய தாக்கம் பெரிதாக இல்லை.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்கூடப் பெரியார், திமுகவைத் தூற்றிக்கொண்டே இருந்தார். எனவே திமுகவின் வளர்ச்சியில் பெரியாரின் பங்கு என்பது குறைவுதான். சொல்லப்போனால், திமுகவின் வளர்ச்சியில் அண்ணாதுரை மட்டுமல்ல, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோர் ஆற்றிய பங்கைவிட பெரியாரின் பங்கு  அதிகம் இல்லை என்றார் பி.ஏ.கே. ஆனால் இன்றுவரை பெரியாரைத் தமிழர்கள் நினைக்கின்றனர், போற்றுகின்றனர் என்றால் அதற்கு ஒரே காரணம் திமுகதான். திமுகதான் பெரியாரை தமிழ்நாடு முழுதும் அறியப்பட்ட ஒருவராக ஆக்கியது என்றார் பி.ஏ.கே.

குருகுலப் போராட்டம்

வ.வே.சு ஐயரின் குருகுலத்தில் இரு பார்ப்பனப் பையன்களுக்குத் தனியாக உணவு அளிக்கப்பட்டது தொடர்பான போராட்டம். இது ஒரு சிறு பிரச்னைதான் என்றும், ‘ஒரு சிறு துரும்பு பெரிய மலையாக்கப்பட்டதாகவும்’ பிராமணர்கள் கருதினர். பிராமண எதிர்ப்புக்கு ஒரு பெரும் ஆயுதமாகப் பெரியார் அதனைக் கையில் எடுத்துக்கொண்டார் என்று அவர்கள் கருதினர்.

பெரியார் பற்றி பெ.நா.அப்புசாமியின் கருத்து

பி.ஏ.கேயின் தந்தையின் நண்பர், அறிவியல் எழுத்தாளரான பெ.நா.அப்புசாமி. அவர் பிராமணர். தீவிர நாத்திகர். அவரிடம் பி.ஏ.கே பெரியாரைப் பற்றிப் பேசியுள்ளார். பிராமணர்களை நன்கு திட்டுவதற்கு பெரியார் சமஸ்கிருதத்தைப் படிக்கவேண்டும் என்று அப்புசாமி சொல்வாராம். உத்தர மீமாம்சை தவிர பிற இந்துத் தத்துவங்களுக்கு (பூர்வ மீமாம்சை, யோகம், சாங்கியம், நியாயம், வைசேஷிகம்) கடவுளே தேவையில்லை. சமஸ்கிருத இலக்கியங்கள் பிராமணர்களைக் கேலி செய்த மாதிரி யாரும் கேலி செய்ய முடியாது. பெரியாரின் கருத்துகளால் மக்களிடம் சிரிப்பை வரவழைக்கமுடியுமே தவிர அவர்களைக் கடவுள் மறுப்பாளர்களாக மாற்றமுடியாது என்றாராம் அப்புசாமி.

ஆனால் பெண் விடுதலை குறித்த பெரியாரின் கருத்துகளை பெ.நா.அப்புசாமி பெரிதும் பாராட்டினாராம். விபசாரி என்ற சொல் பெண்ணை அடிமையாகக் கருதுவதையே குறிக்கும் என்று பெரியார்தான் முதன்முதலில் முன்வைத்தார். அதேபோல பெண்ணுக்கு முழுமையான சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்று வெங்கடராம சாஸ்திரி என்பவர் சொன்னதை பெரியார் மிகவும் பாராட்டி எழுதியதாக அப்புசாமி சொன்னாராம்.

வெங்கடராம சாஸ்திரி என்பவர் ஒரு பார்ப்பனர். அவரை பெரியார் பாராட்டியிருப்பாரா என்று பி.ஏ.கேவுக்கு சந்தேகம். எனவே பி.ஏ.கே குடியரசு இதழ்களைத் தேடிப் பார்த்தபோது 1930-ம் ஆண்டில் ஏதோ ஒரு இதழில் பெரியார் விரிவான கட்டுரையை எழுதியிருந்தாராம். அதில் சாஸ்திரி தலைமை வகித்த ஏதோ ஒரு மீட்டிங்கில் இம்மாதிரி பெண்களுக்கான சொத்துரிமை பற்றிப் பேசியதை ஏற்றுக்கொண்டு, அவர் தொடர்ந்து இம்மாதிரியாக எழுதியிருந்தாராம். (நினைவிலிருந்து எழுதுகிறேன். சரியான மேற்கோளாக இருக்காது)
“நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் என்று ஒரு பொதுவான சிவில் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை ஆகியவற்றை வரவேற்கவேண்டும். ஆனால் முஸ்லிம்கள் இதனை ஏற்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். சாரதா சட்டம் வந்தபோது அவர்கள் இதனை எதிர்த்தனர். ஆனால் 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டு, 13-ம் நூற்றாண்டுக் கொள்கைகளை எடுத்துக்கொண்டு அதன்படிதான் மக்கள் வாழவேண்டும் என்று சொல்வது பரிகசிக்கத்தக்கது. எனவே இந்தப் பரிந்துரைகளை பார்ப்பனர்களும் பார்ப்பனர் அல்லாதவர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.”
இந்தி எதிர்ப்பு

“இந்தி என்பது பார்ப்பன பாஷை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் டிக்‌ஷனரியை எடுத்துப் பாருங்கள். இந்தியைத் திணிப்பது என்பதை மானம் உள்ள எவனும் ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்பதாக பெரியார் எழுதி, சொல்லிவந்தார். ஆனால் உண்மையில் பெரும்பாலான பார்ப்பனர்களுமே இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. காஞ்சிபுரம் பரவஸ்து ராஜகோபாலாச்சாரியார் (நீதிக் கட்சியில் இருந்த ஒரே பார்ப்பனர்) இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெகு தீவிரமாக இருந்தார்.

ஆனாலும் பெரியாரின் பார்வையில் இந்தி என்பது பார்ப்பன பாஷை என்பதாகவே இருந்தது.

கோவில் நுழைவு எதிர்ப்பு

இந்தப் பகுதியில் பி.ஏ.கே பேசியது எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. இது தொடர்பான அடிப்படைகள் எனக்கு அவ்வளவாகத் தெரியாததுதான் காரணம். பல ஆங்கில மேற்கோள்களை அவர் இதில் படித்தார். அதில் யார் எதைச் சொன்னார்கள் என்பதில் எனக்கு அவ்வளவாகத் தெளிவாகவில்லை. இருந்தும் என் குறுகிய சம்மரி இதோ:

அனைவரும் கோவில்களில் நுழைய அனுமதிக்கும் வகையில் ராஜாஜி அரசு ‘கோவில் நுழைவு மசோதா’ ஒன்றைக் கொண்டுவர முனைந்துள்ளது. ஆனால் காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற சனாதனிகள் இதனை எதிர்த்தனர். பெரியார் ராஜாஜியை ஆதரிப்பதற்குபதில் சனாதனிகளை ஆதரித்தார் (என்றார் பி.ஏ.கே.). மேலும் இந்த சனாதனிகள் நீதிக் கட்சியில் சேர்ந்துகொள்ளவேண்டும் என்று பெரியார் கூறினாராம். சனாதனிகளும் பிராமணர் அல்லாதவர்களும் தங்களுக்குள் உடன்பாடு செய்துகொள்ளலாம் என்றும் இந்த சனாதனிகள் ‘அரசியல் பார்ப்பனர்களுடன்’ (அதாவது ராஜாஜி கூட்டத்துடன்) சேரக்கூடாது என்றும் பெரியார் சொன்னாராம்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை முஸ்லிம் லீக் முன்வைத்தபின் பெரியார் திராவிடஸ்தான் பிரிவினை கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கினார். இது தொடர்பாக பெரியாரும் ஜின்னாவும் நிறையக் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தனர்.

பெரியார், ‘திராவிடர்களும் முஸ்லிம்களும் ஒரே இனம்’ என்று தொடர்ந்து சொல்லிவந்தார். ஆங்கிலோ இந்தியர்கள் என்று சிலரை அழைப்பதைப் போல, பிராமணர்களை ஆரியோ இந்தியர்கள் என்று அழைக்கவேண்டும் என்று சொன்ன அவரே, வட நாட்டு முஸ்லிம்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களும் திராவிடர்கள்தான் என்று சொல்லிவந்தார்.

ஜின்னா பெரியாருக்கு எழுதிய கடிதத்தில், திராவிடஸ்தான் கோரிக்கையைத் தான் ஆதரிப்பதாகவும், ஆனால் இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்றும், இதனை தென்னிந்தியாவில் உள்ள 90% பெரும்பான்மை மக்களேதான் முடிவெடுத்துச் செய்யவேண்டும் என்றும் சொன்னார். 

திராவிடஸ்தான் அல்லது தமிழ்நாடு தனியாகப் பிரியவேண்டும் என்பதனை ராஜாஜியும் ஆதரிக்கிறார் என்று பெரியார் சொன்னாராம். (ஜே.பி.பி.மோரேயை மேற்கோள் காட்டி) “தமிழ்நாடு தனியாகப் பிரிவது தொடர்பாக... நான் ஆசாரியருடன் பேசியுள்ளேன். பிராமணர்களும் இதனை ஆதரிப்பார்கள். வட நாட்டார் ஆதிக்கத்தில் வாழ்வதை அவர்களும் விரும்பவில்லை” என்பதாகப் பெரியார் சொன்னார். ஆனால் அந்தக் கட்டத்துக்கு முன்னதாகவே ராஜாஜி காங்கிரஸுடன் சமரசம் செய்துகொண்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்திருந்தார். (வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்து ராஜாஜி காங்கிரஸிலிருந்து பிரிந்திருந்தார்.) ஸ்வராஜ்யம் ஆறு மாதத்துக்குள்ளோ அல்லது ஆறு வருடத்துக்குள்ளோ கிடைத்தே தீரும் என்று ராஜாஜி ஏற்கெனவே சொல்லியிருந்தார். அப்படி இருக்கும்போது ராஜாஜி--பெரியார் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது; எதனால் பெரியார் இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை என்றார் பி.ஏ.கே. ராஜாஜியும் இது குறித்து எதையுமே சொல்லவில்லை.

பொதுவாக பெரியார் தொடர்பான விஷயங்களில் ராஜாஜி வெளிப்படையாக எதையுமே பேசியதில்லை என்றார் பி.ஏ.கே. இதற்கு உதாரணமாக மணியம்மை திருமணம் குறித்த விஷயம் பற்றிப் பேசினார். மணியம்மை திருமணம் காரணமாகவே திமுக பிரிந்து உருவானது. அதன்பின், ராஜாஜிதான் சூழ்ச்சி செய்து திராவிட இயக்கத்தை உடைக்கவேண்டும் என்பதற்காக பெரியார் மணியம்மை திருமணம் நடக்க உந்துகோலாக இருந்தார் என்று திமுக தொடர்ச்சியாகச் சொல்லிவந்துள்ளது. அதற்கு ராஜாஜி எந்தவிதக் கருத்தையும் கடைசிவரை தெரிவிக்கவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்குமுன் ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதத்தை வீரமணி வெளியிட்டார். அதில், இந்தத் திருமணம் வேண்டாம் என்றுதான் ராஜாஜி எழுதியிருந்தார் என்றார் பி.ஏ.கே.

திமுக ஆட்சியைப் பிடித்தபின் பெரியார்

திமுக பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை முழுதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’, ‘பிள்ளையார் சிலையை உடைக்கவும் மாட்டோம், பிள்ளையார் கோவில் வாசலில் தேங்காயை உடைக்கவும் மாட்டோம்’ என்று திமுக பேசியது. அந்தக் காலத்தில் மூன்றுவித பிராமணர்கள் இருந்தனர்.
  1. பெரியாரை ‘அவன்’, ‘இவன்’ என்று தூற்றிய பிராமணர்கள்
  2. பெரியாரை ‘மகான்’ என்று போற்றிய பிராமணர்கள். (காஞ்சி சங்கராச்சாரியார், பெரியாரின் பேச்சைக் கேட்டுத்தான் பல்லக்கில் செல்வதை விட்டுவிட்டு கால்நடையாக நடக்க ஆரம்பித்தார் என்று சில பிராமணர்கள் எழுதினார்களாம்.)
  3. பெரியாரின் (பிராமண விரோத, கடவுள் விரோத) கருத்துகளை மட்டும் எதிர்க்கும் பிராமணர்கள்
தமிழகத்தில் பெரியாரின் இடம்

தமிழகத்தின் மிக முக்கியமான நபர் யார் என்று கேட்டால், பாமரர்களாக இருந்தால் ‘எம்.ஜி.ஆர்’ என்பார்கள். படித்தவர்கள் என்றால் கட்டாயம் ‘பெரியார்’ என்றுதான் சொல்வார்கள். அண்ணா, காமராஜ், ராஜாஜி போன்ற அனைவருமே அடுத்த கட்டம்தான்.

பெரியார் பற்றி நான் (பி.ஏ.கே) என்ன நினைக்கிறேன்

இட ஒதுக்கீடு: இந்தியாவில் ஆரம்பம் முதல் கடைசிவரை தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்தவர் பெரியார்தான். இட ஒதுக்கீடு விளைவாகத்தான் இன்று தமிழகத்தில் கட் ஆஃப் மதிப்பெண்களைப் பார்க்கும்போது அனைத்துச் சாதியினருக்கும் (பிரிவினருக்கும்) கிட்டத்தட்ட ஒரே அளவு கட் ஆஃப் மதிப்பெண்களுக்குள் வரும் அளவு போட்டி ஏற்பட்டுள்ளது.

பிராமண சதி: எதற்கெடுத்தாலும் பிராமண சதிதான் காரணம் என்ற கருத்தை ஏற்படுத்தியவர் பெரியார். இதுபோல் வேறு யாரும் இந்த அளவுக்கு இம்மாதிரிப் பேசியதாகத் தெரியவில்லை. இன்று இணையத்தில் அல்லது பொதுவழக்கில் எதற்கெடுத்தாலும் பிராமணர்கள்தான் காரணம் என்பதுபோலப் பேசப்படுவதற்கு பெரியார்தான் காரணம். (இணையத்தில் ஐஸ்வர்யா ராயை பச்சன் குடும்பத்தில் மணந்துகொள்ளக் காரணம் பிராமண/உயர்சாதி சதி என்பதாகச் செல்லும் troll ஒன்றை பி.ஏ.கே. சுட்டிக்காட்டினார்.)

வந்தேறிகள்: இந்தியாவில் உள்ள அனைவருமே (ஆப்பிரிக்காவிலிருந்து அல்லது சுமேரியாவிலிருந்து வந்த) வந்தேறிகள்தான். ஆனால் இந்த மரபணு ஆராய்ச்சி பற்றி பெரியாருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பிராமண ஆதிக்கம்: சோழர்கள் காலத்தில் அரசு அதிகாரிகளில் 7% பேர்தான் பிராமணர்கள். ஆனால், 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டின் பாதி வரையிலும் பிராமணர்கள் அரசு வேலைகளில் அவர்களுடைய சதவிகிதத்தைவிட மிக அதிக இடங்களைப் பெற்றிருந்தனர் என்பதில் சந்தேகமே இல்லை. அதனைத் தடுத்து நிறுத்தி பிராமணர் அல்லாதாருக்கான வேலைவாய்ப்புகளையும் கல்வியில் சரியான இடத்தையும் வாங்கித் தந்ததில் பெரியாருக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. ஆனால் பிற சாதியினர் படிக்கக்கூடாது, வேலைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பிராமணர்கள் தடுத்தார்கள், சூழ்ச்சி செய்தார்கள் என்று சொல்வதில் நியாயமே இல்லை.

சாதிகள் பற்றிப் பேசுபவர்கள் இடக்கை, வலக்கை சாதிகளுக்கு இடையே நடந்த பிரச்னைகள் பற்றி யாருமே பேசுவதில்லை. அதில் பிராமணர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.

சூத்திரன் என்ற வார்த்தை: 1925 முதல் தன் வாழ்நாள் இறுதிவரை சூத்திரன் என்ற சொல்லின் பொருள் ‘பிராமணரின் வைப்பாட்டி மகன்’ என்று மனு ஸ்ம்ருதி 445-வது ஸ்லோகத்தில் (ஸ்லோகம் எண் சரியாக நினைவில் இல்லை) உள்ளது என்று பெரியார் திரும்பத் திரும்பச் சொல்லிவந்தார். மனு ஸ்ம்ருதி தேவையற்ற ஒன்று, மிக மோசமான கருத்துகளைக் கொண்டுள்ள ஒன்று என்பதில் எனக்கு எந்த மாற்றக் கருத்தும் இல்லை.
ஆனால் ப்யூலர் (மொழிமாற்றம் 1886), வெண்டி டோனிகர் (மொழிமாற்றம் 1991) ஆகியோரின் மொழிபெயர்ப்புகளை நான் பார்த்துவிட்டேன். பெரியார் சொன்னதுபோல் எங்குமே இல்லை. எங்கிருந்து இந்த மொழிபெயர்ப்பை எடுத்தார் என்று யாராவது சொல்லமுடியுமா?

அறிவியல் தன்மை: பெரியாருக்கு அறிவியல்மீது மிகுந்த நாட்டம் இருந்தது. கடைசிவரை ஒரு குழந்தைபோல ஆர்வத்துடன் அறிவியல் முன்னேற்றங்களைப் பற்றிப் பேசியும் எழுதியும் வந்தார். ஆனால் அறிவியல் மிக முக்கியமாக மதிக்கும் objectivity என்ற தன்மை அவரிடம் சிறிதும் இல்லை. முக்கியமாக காந்தி விஷயத்தில் அவரிடம் ஆப்ஜெக்டிவிடி இல்லவே இல்லை. கடைசிவரை (காந்தி கொல்லப்பட்ட சமயத்தைத் தவிர. அப்போது இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயர் வைக்கவேண்டும் என்று சொன்னாராம்.) அவர் காந்தியைக் கடுமையாகத் தாக்கியபடி இருந்தார். காந்தி ஜெயந்தி கொண்டாடுவது கூடாது என்றார்.

பெரியாரின் பார்வையில் பிராமணர்கள்

பெரியாரின் கடைசிப் பேச்சு (மரண சாசனம்) இணையத்தில் முழுதும் கேட்கக் கிடைக்கிறது. வாழ்நாளின் இறுதிக் கட்டத்திலும் மிகவும் passionate ஆக, அழுத்தத்துடன் அவர் பேசுகிறார். இதில் அவர் சொல்லும் பலவற்றில் பார்ப்பனர்களைப் பற்றிய இரண்டு விஷயங்கள்:

(1) பார்ப்பானைப் பார்த்தால், ‘வாப்பா தேவடியா மவனே, எப்ப வந்தே?’ என்று கேட்கவேண்டும்.

(2) சுய மரியாதை இயக்கத்தின் ஐந்து கொள்கைகள்
1. கடவுள் ஒழியவேண்டும்
2. மதம் ஒழியவேண்டும்
3. காந்தி ஒழியவேண்டும்
4. காங்கிரஸ் ஒழியவேண்டும்
5. பார்ப்பான் ஒழியவேண்டும்
ஒழி, ஒழி என்றே உருவாக்கப்பட்ட ஒன்று எந்த அளவுக்கு உலகில் நிலைத்திருக்கும்? ஓரிடத்தில் பெரியார் பிராமணர்களையும் யூதர்களையும் ஒப்பிடுகிறார். இவ்வாறு சொல்கிறாராம் பெரியார்: (approximate quote) “பிராமணர்களும் யூதர்களும் ஒன்றுதான். யூதர்கள் பல நாடுகளில் இருந்தாலும் அவர்களுக்கு எந்த நாட்டின்மீதும் பக்தியில்லை. வாழும் இடத்தில் ஆட்சியாளர்களை வளைத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்கிறார்கள். அதேபோலத்தான் பிராமணர்களும். அவர்களுக்கும் நாட்டின்மீது பக்தியில்லை. அவர்களும் ஆட்சியாளர்களை வளைத்துக்கொண்டு வேண்டியதைச் சாதித்துக்கொள்கிறார்கள்.”

***

மேலும் பல விஷயங்கள் அந்தப் பேச்சில் இருந்தன. ஆனால் முடிந்தவரை crux என்னவோ அதைப் பிடித்து எழுதிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

27 comments:

  1. //1963-ல் திமுக ஆட்சிக்கு வரும்வரை,//

    //திமுக ஆட்சிக்கு வந்த 1963 முதல் 1967 வரையிலும்கூடப் பெரியார், திமுகவைத் தூற்றிக்கொண்டே இருந்தார்.//

    திமுக 1963இல் ஆட்சிக்கு வந்ததா??? தமிழக அரசியல் வரலாற்றை ஓரளவு தெரிந்தவர்களுக்குகூட தெரியும் திமுக 1967இல் ஆட்சிக்கு வந்தது என்று .. நீங்கள் எழுதியிருப்பதில் (அல்லது பி.ஏ.கிருஷ்ணன் பேசியதில்) ஏதாவது ஒன்றிரண்டு உண்மை இருக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன் ..

    ReplyDelete
    Replies
    1. அய்யா தெய்வமே. ஒரு பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்து மாங்கு மாங்கென்று தட்டி எழுதி, அதில் ஒரு ஆண்டில் ஏதேனும் மிஸ்டேக் இருந்தால் உடனே இப்படியா எழுதுவது? ஒரிஜினல் கட்டுரை பத்திரிகையில் வரும்போது பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது மேலே உள்ளதை மாற்றி எழுதிவிடுகிறேன்.

      Delete
    2. திரு அ பிரபாகரன் அவர்களுக்கு,

      தன் உரையில் பிஏ கிருஷ்ணன் குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள் மற்றும் மேற்கோள்கள் ஒவ்வொன்றுக்கும் பிரசுரிக்கப்பட்ட தரவைக் குறிப்பிட்டு தக்க ஆதாரங்களுடனேயே பேசினார். எங்கே மிகச் சில தருணங்களில் ஆதாரம் கிடைக்கவில்லையோ, அதையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டே பேசினார். இதனால் அவர் உரையில் உண்மையை நீங்கள் “தேடவேண்டிய” அவசியம் இருக்காது, கண்களை மூடிக்கொள்வதைத் தவிர்த்தால்.

      Delete
    3. நல்ல தகவல்கள் சார்! ஒரு நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு , அதை பதிவு செய்வதில் எடுத்துக்கொண்டதில் உங்களின் சிரத்தையும், நேர்த்தியும் வியப்பு!

      //அய்யா தெய்வமே. ஒரு பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்து மாங்கு மாங்கென்று தட்டி எழுதி, அதில் ஒரு ஆண்டில் ஏதேனும் மிஸ்டேக் இருந்தால் உடனே இப்படியா எழுதுவது?// ஹா.. ஹா..

      Delete
    4. பரவாயில்லை விட்டு விடுங்கள். திறமையானவர்களிடம் ஒரு குறையை கண்டுபிடிப்பதில் நம் மக்களுக்கு ஒரு அற்ப சந்தோசம். Like prabakaran, most of our people suffer from some form of low self-esteem. People, please see the main points rather than minor typos. Even if the year was written 1763 BC, it doesn't matter, knowledgeable people would certainly know what the speaker/author trying to convey.

      Delete
    5. தமிழகத்தில் உள்ள பிராமணர்களின் நிலையை மற்ற மாநிலத்தில் உள்ள பிராமணர்களின் நிலையோடு ஒப்பிட்டு பார்த்தால் பெரியாரின் தாக்கம் புரியும்
      அவரால் அதிகம் பலனடைந்தது பிராமணர்கள் தான்.இன்றும் கடல் தாண்ட கூடாது,குழந்தை திருமணம்,பெண்கள் வேலைக்கு செல்வதற்கு பெரும் எதிர்ப்பு என மற்ற மாநிலங்களில் பெரும்பாலான பிராமணர்கள் வாழ்ந்து வருகினறனர்
      தன மகளின் புகைப்படம் வந்து விட்டதே என்று DK பட்டம்மாள் அவர்களின் தந்தை குதித்த காலத்திற்கும் இன்றுள்ள மாறிய நிலைக்கும் மிகமுக்கிய காரணம் பெரியார்
      பெண் கல்வி,வேலைவாய்ப்பு,அனைத்து துறைகளிலும் பெருமளவில் பங்கு ,தன மனதுக்கு பிடித்தவனை திருமணம் செய்து கொள்ளும் உரிமை ,சாதி மறுப்பு திருமணங்கள் என தமிழகத்தில் உள்ள பிராமண பெண்களின் நிலை மற்ற மாநிலங்களை விட பல மடங்கு அதிகம்
      திரு கிருஷ்ணன் பேசியதன் தலைப்பு பழமைவாத பிராமண ஆண்களின் பார்வையில் பெரியார் என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.பிராமண பெண்களின் பார்வையில் பெரியார் என்று பெண் பேசினால் இவற்றின் என்னத்திற்கு முற்றிலும் மாறான பார்வை வெளிப்படும்

      Delete
  2. திமுக ஆட்சிக்கு வந்தது 67ல் 63ல் அல்ல. காமராஜ் ஆட்சியை பெரியார் ஆதரித்தார்.காங்கிரஸை விட்டு ராஜாஜி விலகி தனிக்கட்சி துவங்கினார்.ராஜாஜி முதல்வராக விலகியது முதல் 1967 வரை பெரியார் காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்தார்.

    ReplyDelete
    Replies
    1. மாற்றிவிட்டேன். நான் மேலே சொன்னதுபோல சில இடங்களில் கேட்டதில் என் பிழைகள் நிறைய இருக்கலாம்.

      Delete
  3. மிகவும் சிறப்பான சுருக்கம். நன்றி. பி.ஏ. கிருஷ்ணன் உரையில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம், பெரியாரின் ஜனநாயகத் தன்மையற்ற மனப்பாங்கு. தான் நினைத்ததை வெளிப்படையாகப் பேசுவதில் அவருக்கு இருந்த முனைப்பு, மற்றவர்களைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பதில் இருந்ததில்லை. இதனால்தான் அவரைப் பின்பற்றுபவர்கள் அவரை விட்டு விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. (My paraphrase)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். இன்னும் நிறைய விட்டுப்போயிருக்கலாம்.

      Delete
  4. திமுக ஆட்சிக்கு வந்த 1963 முதல் 1967 வரையிலும்கூடப்

    //

    திமுக முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது 1967 இல்தான். எனவே 1963 இல் ஆட்சியைப் பிடித்தது என்ற தகவல் தவறு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. திருத்திவிட்டேன். வேறு ஏதேனும் தகவல் பிழை இருந்தாலும் சொல்லுங்கள். திருத்திவிடுகிறேன்.

      Delete
  5. பி.ஏ.கிருஷ்ணன் தன் உரையின் தொடக்கத்தில் இவ்வாறு கூறினார்: “நான் தமிழன். என்னை வந்தேறி என்று சொல்பவர்களுக்கு இந்த மண்மீதும் மொழிமீதும் எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை எனக்கும் இருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில்தான் இங்கு பெரியாரைப் பற்றி பேசப் போகிறேன்.” (My paraphrase)

    "பிராமணர்கள் இந்தியர்களே அல்ல. வெளியிலிருந்து வந்தவர்கள். ஆங்கிலோ இந்தியர்கள் என்று ஒரு வகுப்பு இருப்பதைப்போல பிராமணர்களைக் குறிப்பிடுவதற்கு ஆரியோ இந்தியர்கள் என்ற பதத்தைப் பயன்படுத்தவேண்டும்” என்று பெரியார் கூறியதை குறிப்பிட்ட தரவின் அடிப்படையில் கிருஷ்ணன் மேற்கோள் காட்டினார்.

    ReplyDelete
    Replies
    1. காஷ்மீரில் வாழும் பிராமணரோ ,குஜராத்தில் வாழும் பிராமணரோ,கன்யாகுமரியில் வாழும் பிராமணரோ ,பிரிவினைக்கு முன் லாஹூரில்,சிந்து ,ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த பிராமணர்களோ அனைவருக்கும் பொதுவான காஷ்யப ,பாரத்வாஜ என்று கோத்திரங்கள் இருப்பது எப்படி.கோத்திரமுள்ள இந்தியர் என்று அழைக்கலாமா
      இதே போல குஜ்ஜருக்கும் ,கள்ளருக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா
      இல்லை மீனா பழங்குடியினருக்கும்,சோரேன் பழங்குடியினருக்கும் ,தோடர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா
      பாஸ்வான்களுக்கும் ,அருந்ததியருக்கும் தொடர்பு இருக்கிறதா
      மொழிகளின் வயசு சில நூற்றாண்டுகள் தான்.ஆனால் கோத்திரங்கள் வேதங்களில் உள்ளதே
      கன்யாகுமரியில் இருந்து தான் காஷ்மீர் சென்றார்கள் என்று வாதிடலாம்,இல்லை கோத்திரங்களை அவரவர் விருப்பத்திற்கு வைத்து கொண்டோம் என்று கூறினால் தமிழுக்கு சொந்தம் கொண்டாடுவதில் ஞாயம் உள்ளது

      Delete
  6. பெரியாரை விட்டு சம்பத்தும்,அண்ணாவும் விலகியதற்கு முக்கிய காரணம் பெரியார்தான்.இனியன் சம்பத்தும் சிலரும் எழுதிய சம்பத்தின் வாழ்க்கை வரலாற்றில் (தினமணிக்கதிரில் 2012ல் வந்தது) இது பற்றிய விபரங்கள் உண்டு.சம்பத்தை தன் அரசியல் வாரிசாக அறிவித்து சொத்துகளுக்கும வாரிசாக அறிவிக்க முடிவு செய்தார் பெரியார்.அத்துடன் சம்பத்தை அவர்/தன் உறவுப்பெண்ணிற்கு திருமணம் செய்யவும் திட்டமிருந்தார்.சம்பத்
    சுலோச்சனா என்ற நாயுடு வகுப்பு பெண்ணை காதல் திருமணம் செய்ய முடிவு செய்த போது முதலில் எதிர்த்த பெரியார் பின்னர் அண்ணா உட்பட பலர் வற்புறுத்திய பின்னே அதற்கு சம்மதித்தார்.
    இதுவும் அதில் உள்ளது. பெரியாரின் பிராமண வெறுப்பின் காரணமாக விளைந்த தீமைகள் அதிகம், நன்மை ஏதுமில்லை.
    பெரியார் துவக்கிய தி.க இன்று எந்த நிலையில் உள்ளது. பெரியாரிய இயக்கங்களால் இன்று இட ஒதுக்கீடு தவிர வேறு பிரச்சினைகளில் மக்களை திரட்டி நீண்ட போராட்டத்தில் ஈடுபட வைக்க முடியாது என்பதே உண்மை.பிராமண வெறுப்பின் விளைவாக நட்பு முரண்களை பகை முரண்களாக மாற்றிய பெரியாரால் தன் இயக்கத்தின் மூலம் எத்தனை சிந்தனையாளர்களை, தத்துவ அறிஞர்களை உருவாக்கினார்.

    ReplyDelete
    Replies
    1. எந்த சீ�'B0்திருத்தவாதிக௏கும் குழந்தை பர௃வம் ஒன்று இருக்கும்.பெரியாரின் குடும்பத்தில் அவர் மிகவும் மதித்த ஆண் அலல்து பெண், ஒரு பார்ப்பனரிடம் தவறான உறவு கொண்டதை பார்த்த பாதிப்பு, வளர்ந்த பிறகு தீவிர பார்ப்பன எதிர்ப்பாக மாறியிருக்கலாம். எல்லோருமே ஒரு விதத்தில் மன நோயாளிதான். இது மேடைக்கு / வெளிச்சத்திற்கு வந்த சுயமரியாதை மன நோய.

      Delete
  7. எந்த சீர்திருத்தவாதிக்கும் குழந்தை பருவம் ஒன்று இருக்கும்.பெரியாரின் குடும்பத்தில் அவர் மிகவும் மதித்த ஆண் அலல்து பெண், ஒரு பார்ப்பனரிடம் தவறான உறவு கொண்டதை பார்த்த பாதிப்பு, வளர்ந்த பிறகு தீவிர பார்ப்பன எதிர்ப்பாக மாறியிருக்கலாம். எல்லோருமே ஒரு விதத்தில் மன நோயாளிதான். இது மேடைக்கு / வெளிச்சத்திற்கு வந்த சுயமரியாதை மன நோய.

    ReplyDelete
    Replies
    1. You seem to be an expert on "Mana Noi" Mr.Iyer!

      Delete
    2. உங்கள் கருத்தை பார்க்கும் போது நீங்களும் இவ்வாறான சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கிண்றீர்கள் போலும் MR.ஐயர்

      Delete
  8. ஆதிக்க சாதியிடம் வாங்கி தின்ன பெரியார்.

    http://oosssai.blogspot.com/2012/05/blog-post_15.html

    ReplyDelete
  9. பத்ரி,
    சிறப்பான சுருக்கவுரை. நன்றி.
    ஒரு வேண்டுகோள். மிக அழகான தமிழில் எழுதும் நீங்கள், முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கலாமே?
    // என் குறுகிய சம்மரி இதோ//

    ReplyDelete
  10. //
    பெரியார் சொன்னதுபோல் எங்குமே இல்லை. எங்கிருந்து இந்த மொழிபெயர்ப்பை எடுத்தார் என்று யாராவது சொல்லமுடியுமா?
    //

    "மனு ஸ்மிருதியில் டி வி எஸ் 50 ஓட்டும் சூத்திரனை லாரியின் அடியில் விட்டு நசுக்கவேண்டும் என்று கூட சொல்லியிருக்கிறார்கள்". இப்படி யாராவது சொன்னால் அதுவும் மெத்தப்படித்த மேதாவித்தனமாக காதர் ஜிப்பாவுடனும், ஜோல்னா பையுடனும், கொஞ்சம் தாடியுடனும் ஒரு கண்ணாடியுடனும் டி.வியில் வந்து சொன்னால் நிச்சயம் நம்பிவிடுவார்கள்....

    அந்த கேடுகெட்ட புத்தகத்தையெல்லாம் யார் படிப்பார்கள். நாமெல்லாம் உலக சினிமா பார்த்தே அறிவை வளர்ப்பவர்கள் ஆயிற்றே.

    ReplyDelete
  11. Hats of to you. Such a long and detailed post from your notes.

    ReplyDelete
  12. TRUE Love and care for people and welfare has taken a back stage, Periyar's hate hate everything attitude only resulted in the present state of One's selfish attitude

    ReplyDelete
  13. பிராமணர்களை ஹிட்லர் யூதர்கள்களை நடத்தியது போல நடத்த நினைத்தார் பெரியார் என்ற வாதம் எந்த அடிப்படையில் திருப்பி திருப்பி வருகிறது எனபது புரியவில்லை.சாதிமறுப்பு திருமணங்களை ஆதரித்தவர்,விதவை மருமணங்களை ஊக்குவித்தவர்,பிரச்சாரம் செய்தவர் பிராமண பெண்களை/ஆண்களை சாதிமறுப்பு திருமணம் செய்து கொள்ள கூடாது என்றா கூறினார்.
    மன்னர் ஆட்சியை எதிர்த்தது போல பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தார்.நல்ல மன்னன் என்று கிடையாது ,மன்னன்,இளவரசர்,முடி சூடுதல் அழிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் என்ற வாதத்தை போல நல்ல பிராமணன் என்று இருக்க முடியாது ,பிராமணன் என்று சொல்லி கொண்டாலே அது துர்செயல் தான் ,அது துறக்க வேண்டிய பட்டம் ,அழிய வேண்டிய பட்டம் என்று போராடினார் .தன பெயரில் இருந்த சாதியையும் துறந்தார்.தன வீட்டிலும் விதவை மறுமணம்,சாதிமறுப்பு திருமணங்கள் நடத்தினார் ,வன்முறையை என்றும் ஊக்குவித்தது கிடையாது.
    பிராமண இனத்தில் பிறந்த பெண்களின் சுதந்திரமான முடிவு எடுக்கும் நிலைக்கு முக்கிய காரணமாக பெரியாரை பழமைவாத பிராமணர்கள் எண்ணுவதால் அவரை வன்மத்தோடு கரித்து கொட்டும் பணி சில ஆண்டுகளாக சூடு பிடித்து உள்ளது

    ReplyDelete
  14. முக்கிய விடயம் எல்லா ஜாதியிலும் பார்ப்பனர்கள் உண்டு

    Harris David

    ReplyDelete