Tuesday, January 29, 2013

எப்படியெல்லாம் பிறரைப் புண்படுத்தலாம்?

முணுக் என்றால் எல்லோருக்கும் கோபம் வந்துவிடுகிறது. காவல் நிலையம் சென்று கைது செய்யச் சொல்லிப் புகார் கொடுக்கிறார்கள். இல்லை என்றால் நேராக நீதிமன்றம் சென்று வழக்கே தொடுத்துவிடுகிறார்கள்.

இப்போது நான் இப்படிச் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்வோம்: ‘வக்கீல்கள் எல்லாம் தம் கட்சிக்காரர்களை ஏமாற்றிப் பணம் பிடுங்குகிறார்கள். வழக்கு முடிவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை.’ இப்படி நான் சொல்வதை வைத்து என்மீது வழக்கு தொடுக்கமுடியுமா? சரி, இதைக் கொஞ்சம் நீட்டிப்போம்.

பள்ளிக்கூட ஆசிரியர்கள் எல்லோரும் தகுதியற்றவர்கள். அவர்கள் வகுப்புகளில் ஒழுங்காகப் பாடம் நடத்துவதில்லை.

மருத்துவர்கள் ரத்தம் உறிஞ்சிகள். உயிரைக் காப்பாற்றுகிறார்களோ இல்லையோ, பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள். சட்டம் ஒழுங்கு குலைவதற்கு இவர்களே காரணம்.

அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் எல்லோருமே ஊழல் பெருச்சாளிகள். இந்த நாடு குட்டிச்சுவராகப் போனதற்குக் காரணமே அரசியல்வாதிகள்தான்.

மேலே உள்ள கேரிகேச்சர் எல்லாமே நாம் தினம் தினம் பேசுவதுதானே? ஒரு குறிப்பிட்ட தொழில்துறை பற்றிய ஒரு பிம்பம் நமக்குத் தோன்றுவதற்குக் காரணம் என்ன? நம்மில் ஒரு சிலரின் தனிப்பட்ட அனுபவங்கள். பின் அவை பதிவு செய்யப்பட்டு, கை, கால், மூக்கு, காது வைக்கப்பட்டு இதழ்களில் கதைகளாக, ஜோக்குகளாக, திரைப்படங்களில் பாத்திரங்களாக ஆகி, பெரும்பாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகிறது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாலேயே மீண்டும் மீண்டும் reinforce செய்யப்படுகிறது.

பிற அடையாளங்களுக்கு வருவோம். சாதி, மதம், பாலினம்.

பெண்கள் என்றால் பின்புத்திக்காரர்கள், பசப்பு வார்த்தை பேசிக் காதலித்து ஏமாற்றுபவர்கள், துய்ப்பதற்கான பண்டங்கள் என்பதாகவே திரைப்படங்கள் இன்றுவரை அவர்களைக் காட்டிவருகின்றன. இன்றும் நாயக மையப் படங்கள் அனைத்திலும் குத்தாட்டத்துக்கும் தொட்டுக்கொள்ளவும் மட்டும்தான் நாயகியின் தேவை உள்ளது.

திரைப்படங்களில் காமெடி பாத்திரங்களாக பார்ப்பனர்கள் பயன்பட்டு வந்துள்ளனர். பிற சாதிக்காரர்களைக் குறிப்பிட்டுக் கேலி செய்துவிட முடியாது தமிழகத்திலே. தலித்துகள் அடையாளப்படுத்தப்படுவார்கள். ஆனால் அவர்களின் சாதி குறிப்பிட்டுச் சொல்லப்படுவதில்லை. சேரிகள் எரிக்கப்படுவதாகக் காட்டப்பட்டாலும் அது அடையாளம் தெரியாத ‘ஏழை’ சேரியாக இருக்குமே தவிர, பள்ளர்கள், பறையர்கள் அல்லது அருந்ததியர்கள் என்று தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி இருக்காது. அதே சமயம் பார்ப்பனர்கள் உயர்ந்தோராகக் காட்டப்படுவதையும் காணலாம். தேவர் சாதியினரும் உயர்வாகக் காட்டப்படுகிறார்கள். மற்ற சாதிகளை எளிதில் ஒரு திரைப்படத்தில் என்னால் கண்டுகொள்ள முடிந்ததே இல்லை.

மதம் சார்ந்து பார்த்தால், இந்து மதத்தின் பல்வேறு கூறுகளைக் கேலி பேசுவது தமிழ்த் திரைப்படங்களில் எப்போதுமே நடந்துவந்துள்ளது. அவற்றில் பல வரவேற்கக்கூடியவையும்கூட. ஆரம்பகாலத்தில் வில்லன்கள் கிறிஸ்தவர்களாகச் சித்திரிக்கப்பட்டிருந்தனர். அதேபோல குறையாடை அணிந்து உடலைக் குலுக்கும் பெண்ணுக்கு ரீட்டா என்று பெயரும் கழுத்தில் சிலுவையும் இருக்கும். ஸ்மக்லிங் செய்பவர்கள் கட்டாயம் முஸ்லிம்களாக இருப்பர்.

இவை எல்லாமுமே சமுதாயத்தில் பரவலாக இருக்கும் ஸ்டீரியோடைப்கள்தாம். அதனாலேயே இவை உண்மை அல்ல. இந்த ஸ்டீரியோடைப்கள் அவ்வப்போது மாற்றம் அடைவதையும் பார்க்கிறோம். இந்த ஸ்டீரியோடைப் பாத்திரப் படைப்பு நம்மைத் தனிப்பட்ட முறையில் கேலி செய்வதுபோலத் தோன்றினால் நமக்குக் கோபம் வருவது இயல்பே. அதனால் நம் மனம் புண்படுவதும் ஓரளவுக்கு நியாயமே.

***

வார்த்தைகளால் பிறரைப் புண்படுத்தவே கூடாது என்று சட்டமெல்லாம் இயற்றமுடியுமா? நாத்திகம் என்பது அனைத்து மதங்களுக்கும் எதிரானது. நாத்திகக் கூற்றுகள் பொதுவாக அனைத்து மத நம்பிக்கையாளர்களையும் புண்படுத்தத்தான் செய்யும். தமிழகத்தில் குறிப்பாக திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க இந்து மதத்துக்கு எதிரானது. அதேபோல திராவிட இயக்கத்தவர் மற்றும் பெரியார் பற்றிய தீவிர இந்துக்களின் கருத்துகள் அவ்வியக்கத்தோரைக் கடுமையாகப் புண்படுத்தும். இரு சாராரும் மற்றவரைப் புண்படுத்துவதில் சளைத்தவர்கள் அல்லர். எனக்குத் தெரிந்த பல இந்துக்கள் முஸ்லிம்களைப் பற்றி மிக மோசமான அபிப்ராயம் கொண்டவர்கள். எனக்கு நிறைய முஸ்லிம்களை நெருக்கமாகத் தெரியாது. எனவே இந்துக்களைப் பற்றி அவர்களிடம் எம்மாதிரியான கருத்துகள் உள்ளன என்பது அவ்வளவாகத் தெரியாது. இந்த இரு மதங்களும் பல தளங்களில் எதிரெதிர் கருத்துகளைக் கொண்டவை. எனவே இம்மதங்களைப் பின்பற்றுவோர் மாற்று மதத்தவர்மீது எதிர்மறை அபிப்ராயம் கொண்டிருப்பது இயற்கையே. இவற்றையெல்லாம் மீறித்தான் இம்மதங்களைச் சேர்ந்தோரிடையே நட்பும் சில நேரங்களில் காதலும் ஏற்படுகிறது.

திரைப்படம் ஒரு கதையைச் சொல்ல முற்படுகிறது. அந்தக் கதையில் நிஜப் பாத்திரங்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களுடைய பல்வேறு அடையாளங்கள் மொன்னையாக்கப்பட்டாலும் ஒருசில அடையாளங்கள் அவசியமாகின்றன. கூரிய வித்தியாசங்களை ஒட்டுமொத்தமாக மொன்னையாக ஆக்கிவிட முடியாது. மாறாக வித்தியாசத்தை அதிகப்படுத்திக் காட்ட சில அடையாளங்களைக் கூர்மையாக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, காதல் திருமணப் பிரச்னையை அதிகப்படுத்திக் காட்ட பார்ப்பன - கிறிஸ்தவ அல்லது பார்ப்பன - தலித் காதலர்கள் காட்டப்படுகிறார்கள். பார்த்தவுடனேயே வித்தியாசங்கள் பட்டென்று புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும் என்று ஒரு வெகுஜன இயக்குநர் யோசிக்கிறார்.

***

இதெல்லாம் இருக்கட்டும். முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக ஒரு படத்தில் காட்டலாமா, கூடாதா? அப்படிக் காட்டுவதால் முஸ்லிம் சமுதாயத்தை அவமதிப்பதாக ஆகுமா? சமீபத்தில் வந்த துப்பாக்கி படத்தில் காஷ்மீரைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் (எனவே முஸ்லிம்...) மும்பையில் ஒரு பெரிய தீவிரவாத ஸ்லீப்பர் செல் நெட்வொர்க்கை வைத்திருக்கிறான். அந்த ஸ்லீப்பர் செல் நெட்வொர்க்கில் இருப்போர் அனைவரும் இயல்பாகவே, முஸ்லிம்கள். இதற்கு வராத எதிர்ப்பு ஏன் கமல் ஹாசன் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படத்துக்கு வந்துள்ளது? ஏற்கெனவே படம் திரையிடப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஆஃப்கனிஸ்தானில் உள்ள தாலிபன் தீவிரவாதிகளும் அவர்களுடைய செயல்களும்தான் கதையின் களம் என்று தெரியவருகிறது. இதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கு என்ன பெரிய பிரச்னை இருக்கமுடியும்? அப்படியே பிரச்னைகள் இருந்தாலும் இந்தப் படத்தால் தமிழகத்தில் உள்ள மத இணக்கச் சூழல் கெட்டுவிடும் என்று சொல்லும் அளவுக்கு என்ன இருக்கிறது?

இப்போது ஏட்டிக்குப் போட்டியாக ஆதிபகவன் படம் இந்துக்களை அவமதிக்கிறது என்பதாக ஆரம்பித்துள்ள விவகாரத்தால், இனி எல்லாப் படங்களுமே இதுபோன்ற சிக்கல்களுக்கு உள்ளாகும் நிலைக்குத் திரையுலகத்தைத் தள்ளியுள்ளது. வேலை வெட்டி இல்லாதவர்கள் நீதிமன்றம் போய் எந்தப் படத்தையும் தாமதப்படுத்தலாம்.

இதைத் தாண்டி, ஜெயலலிதா, ஜெயா டிவி கோணம் என்றெல்லாம் வேறு சொல்கிறார்கள். தமிழக அரசு வழக்கறிஞர் வாதங்களைப் படிக்கும்போது சின்னப்புள்ளைத்தனமாகத்தான் தெரிகிறது.

கமலுக்கு என் அனுதாபங்கள். ஒரு தொழிலதிபராக எண்ணற்ற கோடிகளை முடக்கித் தொழில் செய்யும்போது இதுபோன்ற சோதனைகளை எதிர்கொள்வது எளிதல்ல. இந்தப் படம் ஏதோ ஒருவிதத்தில் அவருக்கு லாபம் தரவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்குகிறது. பொதுவாக தமிழ் சினிமாப் படங்களை நான் இப்படி அணுகுவதில்லை. ஆனால் இப்போது நடக்கும் அரசியல்தனமான காய் நகர்த்தல்கள் அராஜகமாகத் தெரிகிறது.

என் எதிர்ப்பைப் பதிவு செய்ய இந்தப் படத்தை இரண்டு தடவையாவது தியேட்டர் சென்று பார்ப்பது என்று முடிவு செய்துள்ளேன்.

தனக்குப் பிடிக்காததை உடனடியாகத் தடை செய்யவேண்டும்; சம்பந்தப்பட்ட நபர்களைச் சிறையில் தள்ளவேண்டும் என்றெல்லாம் யோசிக்கும் முட்டாள்களே! நாளை உங்களுக்கே இதே நிலைமை ஏற்படலாம். முற்றுமுழுதான கருத்துச் சுதந்தரம்தான் நமக்கு ஒரே நம்பிக்கை. அது நமக்குப் பிடிக்காத கருத்தாக இருந்தாலும் சரி. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வோம். தடையால் அல்ல.

69 comments:

 1. இடஒதுக்கீட்டையே அபத்தமாக்கி ஜெண்டில்மேன் வரவில்லையா? பார்ப்பனரல்லாதோர் ஊழல்வாதிகள் என்பதை சுட்டிக்காட்டி அந்நியன் வரவில்லையா?

  அப்போதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வராத ரோஷம் விஸ்வரூபத்துக்கு மட்டும் ஏன் வரவேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. அது தானே...ஏன் வரவேண்டும் ?

   அப்ப நீங்கள் தானே முன்னின்று அந்த கோபத்துக்கு வடிகாலாக அமைந்திருக்கவேண்டும். ஜென்டில் மேனுக்கும் அன்னியனுக்கும் எதிராக கேஸ் போட்டிருக்கவேண்டும் ?
   ...
   .
   .
   .
   .
   யோவ் யுவகிருஷ்ணா .. என்னய்யா செல்ஃப் கோல் அடிக்கிற !!

   Delete
  2. புரியவில்லை திரு.யுவ,

   பார்ப்பானர் அல்லாதோரும்...இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களும் ரோஷம் கெட்டவர்கள் என்கிறீர்களா ?

   அப்போது அவர்களுக்கெல்லாம் வராத ரோஷம் இப்போது இஸ்லாமியருக்கு மட்டும் ஏன் வருகிறது என்று கேட்கிறீர்களா ?

   Delete
  3. //பார்ப்பனரல்லாதோர் ஊழல்வாதிகள் என்பதை சுட்டிக்காட்டி அந்நியன் வரவில்லையா?// படத்தை இன்னொரு தடவை நல்லாப் பாருங்க யுவா. நந்தினி கேரக்டர் லஞ்சம் கொடுத்து லேண்ட் விலையைக் கம்மியா ரிஜிஸ்டெர் பண்ற மாதிரியும் அந்நியன் அவளையும் தூக்கிட்டுப் போற மாதிரியும் ஒரு சீன் வரும். அவளை மட்டும் கொல்லாம விட்டுட்டாரேன்னு அழாதீங்க. ஏன்னா அவங்க ஹீரோயின். இன்னும் நாலு பாட்டு, டான்ஸ் இருக்கேன்னு டைரக்டர் விட்டுட்டார். ரெமோ வந்து காப்பாத்தற மாதிரி காட்டித் தொலைச்சுட்டார்.(அல்லது சதா உண்மை வாழ்க்கைல சிறுபான்மைங்கறதாலயும் இருக்கலாம்)யார் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன். என் மனசுக்குப் படறத மட்டும் தான் சொல்லுவேன்னு பெரியார் படத்தைப் போட்டுட்டு அடம் பிடிச்சா இப்படித்தான் ஆகும்.

   Delete
  4. இட ஒதுக்கீடே ஒரு அபத்தம், அப்புறமென்ன "இடஒதுக்கீட்டையே அபத்தமாக்கி ஜெண்டில்மேன் வரவில்லையா?"

   Delete
 2. சுதந்திரத்துக்கும் பொறுப்பு இருக்கில்லையா? கட்டுப்பாடுகள் அவசியமில்லையா.. போகிற போக்கில் விஷமத்தனமாக எதையாவது போட்டுவிட்டு போவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் கலவரங்களும் உண்டானால் அதற்கு யார் பொறுப்பு.

  ஒரு படைப்பு அது சினிமாவோ டிராமாவோ எதுவோ.. அது எத்தனை கோடிகள் செலவழித்து வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும்.. ஆனால் அதன் மூலமாக சமூகத்தில் இருபிரிவினரிடையே தேவையற்ற மோதல்களை உருவாக்க வழிவகுக்கும் என்று நினைத்தால் அதற்கு தடைவிதிப்பதில் என்ன தவறு?

  நாளைக்கே அந்த படைப்பினால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அதை படைத்தவர் வந்து நஷ்ட ஈடு வழங்குவாரா?

  இங்கே எல்லாருக்கும் எல்லாவித சுதந்திரங்களும் உண்டுதான். ஆனால் ராமதாஸ் தெருவுக்கு தெரு மேடைபோட்டு சாதிவெறியை தூண்டும்வகையில் பேசுவார்.. அதற்கு தடைவிதித்தால் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது என ஒப்பாரி வைத்தல் முறையாகுமா?

  படைப்புகளை வெளியிடுவதும் அதன்மூலமாக லாபம் சம்பாதிப்பதும் படைப்பாளிக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட மக்களுடைய பாதுகாப்பும் அவர்களுடைய அமைதியை காப்பதும் அரசுக்கு முக்கியம்.

  ReplyDelete
  Replies
  1. ராமதாஸ் தெருவுக்குத் தெரு மேடை போட்டு சாதிவெறியைத் தூண்டுவதுபோலப் பேசுவதற்கும் நமது சமுதாயம் அனுமதிக்கவேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு நாம் கொடுக்கும் விலை. ஆனால் அந்தப் பேச்சைக் கேட்டு யாரும் கலவரத்தில் ஈடுபடாமல் தடுக்க காவல்துறையையும் நாம் விழிப்புடன் வைத்திருக்கவேண்டும். இதுவும் நாம் ஜனநாயகத்துக்காகக் கொடுக்கும் ஒரு விலையே.

   Delete
  2. //இங்கே எல்லாருக்கும் எல்லாவித சுதந்திரங்களும் உண்டுதான். ஆனால் ராமதாஸ் தெருவுக்கு தெரு மேடைபோட்டு சாதிவெறியை தூண்டும்வகையில் பேசுவார்.. அதற்கு தடைவிதித்தால் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது என ஒப்பாரி வைத்தல் முறையாகுமா? //
   well said Athisha!!!!!!

   Delete
  3. ராமதாஸ் தெருவுக்குத் தெரு மேடை போட்டு சாதிவெறியைத் தூண்டுவதுபோலப் பேசுவதற்கும் நமது சமுதாயம் அனுமதிக்கவேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு நாம் கொடுக்கும் விலை.//

   :-(((

   Delete
  4. நாளைக்கே அந்த படைப்பினால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அதை படைத்தவர் வந்து நஷ்ட ஈடு வழங்குவார? /// யாரினால் அசாம்பாவிதம் வரும் ??

   நான் வன்முறையில் இரங்குவேன் சொல்றத சூசகமா சொல்றது தான் இது ..

   Delete
  5. இந்த குறிப்பிட்ட படத்தில் ஒரு சமூகம் தவறாக காட்ட படுகிறது என்ற தவறான ஒரு கருத்து இருக்கிறது.

   ஆணால் இப்படம் மதத்தை தவறாக பயண்படுத்துவர்களை சுட்டிக் காட்டி உள்ளது ...

   இப்படத்தில் கோபம் காட்டும் முன் இஸ்லாமிய சகோக்களே நீங்கள் யூ டூபில் இந்த ஆவணபடங்களை பார்க்கவும்

   1.Children of Taliban
   2.Secret Pakistan
   3.Radical Islam

   Delete
  6. ஆதிபகவன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே...அவர்களுக்கும் இதே போன்று உங்கள் பசப்பு இருக்கும் என்று நம்புகிறேன் அதிஷா !!

   Delete
  7. தெருவுக்கு தெரு ஜாதி வெறியை தூண்டவும், தலித்களை கேவலமாக பேசவும் உரிமை இருக்கக்கூடாது, அது சட்டப்படி குற்றமாக வேண்டும் என்பதுதான் என் கருத்து. ஆனால் அதற்கு ம் விஸ்வரூப பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாலிபானகளை பற்றிய சித்திரிப்பை ஒட்டுமொத்த முஸ்லீமகள் பற்றிய சித்தரிப்பாக சொல்லும் இவர்கள்தான் ஒட்டுமொத்த முஸ்லீம்களை பற்றி மோசமான சித்தரிப்பை முன்வைக்கிறார்கள். இந்த பதில் பத்ரிக்கு மட்டுமான எதிர்வினை.

   Delete
  8. வேண்டுமென்றே பிரச்சனை திசை திருப்பப்படுகிறது; பத்ரியும் அதற்கு உதவுகிறார். தெரு தெருவாக சாதிவெறி பிரச்சாரம் செய்யும் உரிமையும், தலித்களை கேவலமாக பேசும் உரிமையும் யாருக்கும் இருக்கக்கூடாது, அது சட்டப்படி குற்றமாக இருக்கவேண்டும் என்பதுதான் என் கருத்து. அதற்கும் இந்த விஸ்வரூப பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மொத்த இஸ்லாமியர்களை தரக்குறைவாக பேசும் வசனம் எதுவும் படத்தில் இருப்பதாக இன்னமும் யாரும் சொல்லவில்லை. தாலிபான்களை பற்றிய சித்தரிப்பை ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் பற்றிய சித்தரிப்பாக சொல்வதன் மூலம் ஒட்டுமொத்த முஸ்லீம்களை தாலிபான்கள் என்பதாக இவர்கள்தான் முன்வைக்கிறார்கள். இது பத்ரிக்கு மட்டுமான என் பதில்.

   Delete
  9. /// ராமதாஸ் தெருவுக்குத் தெரு மேடை போட்டு சாதிவெறியைத் தூண்டுவதுபோலப் பேசுவதற்கும் நமது சமுதாயம் அனுமதிக்கவேண்டும். ///

   சரியே. பதிலுக்கு அவருக்கு பதில் சொல்லும் விதமாகச் சாதி மறுப்பாளர்கள் மறுநாள் அதே இடத்தில் மேடை போட்டு சாதியை எதிர்த்து, சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்துப் பேசலாம். அதுதான் ஜனநாயக வழி.

   சரவணன்

   Delete
  10. மன்மதன் அம்பு படத்தில் இடம் பெறுவதாக இருந்த, கமலஹாசன் தானே எழுதிப் பாடிய ஒரு பாடல் அல்லது கவிதை தீவிர இந்து மத வாதிகளின் அச்சுறுத்தலால் நீக்கப்பட்டது. தயாரிப்பாளர் தானே முன்வந்து அதை நீக்கியதாப நினைக்கிறேன். அது ஒரு மோசமான முன்னுதாரணம்.

   சரவணன்

   Delete
  11. Dear Adisha and others who defended the ban, please take a look at this op-ed in The Hindu.

   http://www.thehindu.com/news/national/the-land-of-the-unfree/article4373058.ece

   Delete
 3. //அதுதான் ஜனநாயகத்துக்கு நாம் கொடுக்கும் விலை// very true

  ReplyDelete
 4. அய்யா நீங்க சொன்ன எல்லா காரணங்களையும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் முல்லா ஒமர் தமிழ் நாட்டில் ஒரு வருடம் ஒழிந்து இருந்ததாகவும் அவருக்கு நாங்கள் அடைக்கலம் கொடுப்பது போலவும் காட்டிருக்கிறார். அதையும் நாங்க போருத்துக்கிடனுமா. ஆப்கானிஸ்தான் பற்றி படம் எடுத்தா அங்கே நிறுத்திக்கிட வேண்டியதுதானே சகோதரா. கொஞ்சம் மனசாட்சி தொட்டு பேசுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. யோவ் அந்தாள் தமிழ் பேசனும்னா தமிழ்நாட்டுக்கு வந்து தானேயா ஆகணும்....அது வெறும் கதைய்யா...சம்பவங்கள், கதாப்பாத்திரங்கள் எல்லாம் கற்பனை என்று டிஸ்கி போடுறான்ல ?

   கமல் படத்துல பேசுற வசனங்கள் தமிழ்ல இருந்தாலே பாதிபேருக்கு புரியமாட்டேங்குது....இதுல வில்லன் ஆஃபானி மொழில பாதி படத்துக்கு பேசுனா எவனுக்குய்யா புரியும்... ?

   இதெல்லாம் கலைச்சுதந்திரம்....தம்பி....! அவதார் ஏலியன் இங்கிலீஷ்ல பேசுறத வுட்டுட்டு பார்க்குற மாதிரி லூஸ்ல வுடனும்...படம் ஆளவந்தான் மாதிரி 10 நாள்ல பொட்டில சுருண்டுருக்கும்...

   இப்படியே குதிச்சீங்கன்னா படம் சில்வர் ஜூப்லி நிச்சயம்.

   Delete
  2. பொன்.முத்துக்குமார்Tue Jan 29, 11:01:00 PM GMT+5:30

   ஐயா Anonymous அவர்களே,

   "ஆனால் முல்லா ஒமர் தமிழ் நாட்டில் ஒரு வருடம் ஒழிந்து இருந்ததாகவும் அவருக்கு நாங்கள் அடைக்கலம் கொடுப்பது போலவும் காட்டிருக்கிறார்."

   முல்லா ஓமர் தமிழகத்தில் ஒளிந்திருந்ததாக ஒருவரி வசனமாக மட்டும்தான் சொல்லி இருக்கிறார், அவ்வளவுதான். நீங்கள் அடைக்கலம் கொடுப்பது போல எல்லாம் சொல்லவும் இல்லை, காட்டவும் இல்லை. அப்படி எல்லாம் நீங்களாக உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட வேண்டாம்.

   இது அந்த வில்லன் கதாபாத்திரம் தமிழ் பேசவேண்டிய தேவைக்காக செய்யப்பட ஒரு திரைப்பட உத்தி. அவ்வளவே. இதற்கெல்லாம் ஆதாரம் தா என்று கேட்டால் எங்கே போவது ? இது பொழுதுபோக்கு திரைப்படம் ஐயா. ஆவணப்படம் அல்ல, வரிக்கு வரி ஆதாரம் தந்துகொண்டே போவதற்கு.

   Delete
  3. It is not Mullah Omar. His name is Omar only. He said that he lived in Coimbatore and other 2 cities only.

   In order to understand the dialague for ordinary people, Normally all the non tamilian characters in all the movie said that "I know tamil - I lived in there for few years"

   Delete
 5. General defamation is not actionable Be free to deride Advocates to your heart's content :-)

  ReplyDelete
 6. "Aathuku vandheLaa, vaango aNNaa,etcc... can be seenin a Tamil movie as a comedy cos people say Brahmins talk in a different way.Even Hindu god have been shown as a comedy piece (PKSammandham). These movie makers cannot take a movie in which having dialogues as "vaappa(father), ammi(mother), etcc...
  In Vishwaroopam KH has portrayed Talibanism. Talibans opposed education, women coming outside, killed people who dont agree with their ideologies/ thinkings. They have sent vdos which shown beheading people ( Now, a set of people will start saying those were done by US/ western medias/ Govts. Talibans were raised by US to fight against Russia, etc...)
  Back to this movie KH has shown people doing namaaz n attacking people. It's like warriors saying "jai hanuman, jai mata di, jai bhatra kaLi,etc... )

  ReplyDelete
 7. அற்புதம். அடிப்படை உரிமையை சினிமாக்காரர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இதுபோல் பல முட்டாள்தனமான காரணங்கள் கூறி தடை வாங்கிக் கொண்டே போனால், அபத்தக் கருத்துக்கள் கொண்ட கலைப் படைப்புகள் மட்டுமே இங்கு வெளிவரும். தேவர்மகன் சாதீய அடையாளத்தைக் காண்பித்தாலும் அதன் மையக்கருத்து கோபத்தை தவிர்த்து பண்படுதல் தேவை என்பதே. ஆனால், இப்போது துணிவாக அப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா ? சரி, இப்போது அப்படி ஒரு படம் ஏன் தேவை என்று கேள்வி வருமானால், தேவர்ஜெயந்தியை ஒட்டி நடந்த சம்பவங்கள் ஏன் நடந்தது ? சாதிமாறி கல்யாணம் பண்ணிய குற்றத்துக்காக தன் பெண்ணையே ஏன் தந்தை கொன்றான் ? சாதிவெறி மிக்க ஆணாதிக்க கருத்துக்கள் மங்க ஏன் கலைப்படைப்புகள் வரக்கூடாது ? இந்த 2013 ல் கூட என்னை விட தாழ்ந்தசாதி ஆட்களை நான் வெறுக்கிறேன் என்று ஒரு பொது ஊடகத்தில் சொல்ல ஒருத்தனுக்கு/ஒருத்திக்கு எப்படி துணிவு வருகிறது ? இவர்கள் முகத்தில் அறைய ஒருவர் படம் எடுத்தால், உடனே அதற்கு இன முலாம் பூசி தடுப்பீர்களா ? கலவரம் வரும், கலவரம் வரும் என்று மூட்டைபூச்சிகள் பயம் காட்டினால் அதற்கு ஏன் இரும்பு உலக்கையை கையில் வைத்திருக்கும் அரசு பயப்பட வேண்டும் ?

  ReplyDelete
 8. //படைப்புகளை வெளியிடுவதும் அதன்மூலமாக லாபம் சம்பாதிப்பதும் படைப்பாளிக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட மக்களுடைய பாதுகாப்பும் அவர்களுடைய அமைதியை காப்பதும் அரசுக்கு முக்கியம்.//
  athishavin pathilil unmaiyum samooka poruppum irukkirathu......yuva krishna .....thuveshaththudan pathivu seikiraar.....varu mun kaappathe arasin kadamai...Badri.Nadakam nadaththubavarkal script-tai police-l oppadaiththu anumathi peravendum.....adippadai sattam ozhungu.....pesa vittu...adakkuvathu puththisaaliththanam alla.

  ReplyDelete
 9. "I do not agree with what you say, but I will fight for your right to say it." quote attibuted to Voltaire.

  ReplyDelete
 10. //தனக்குப் பிடிக்காததை உடனடியாகத் தடை செய்யவேண்டும்; சம்பந்தப்பட்ட நபர்களைச் சிறையில் தள்ளவேண்டும் என்றெல்லாம் யோசிக்கும் முட்டாள்களே! நாளை உங்களுக்கே இதே நிலைமை ஏற்படலாம்.//
  Very very true

  // முற்றுமுழுதான கருத்துச் சுதந்தரம்தான் நமக்கு ஒரே நம்பிக்கை. அது நமக்குப் பிடிக்காத கருத்தாக இருந்தாலும் சரி. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வோம். தடையால் அல்ல.//
  Well said

  ReplyDelete

 11. // முற்றுமுழுதான கருத்துச் சுதந்தரம்தான் நமக்கு ஒரே நம்பிக்கை. அது நமக்குப் பிடிக்காத கருத்தாக இருந்தாலும் சரி. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வோம். தடையால் அல்ல.//
  Well said

  ReplyDelete
  Replies
  1. The problem with countering ideas with ideas is that, power and influence are unevenly distributed. A popular figure like Kamal with his massively influential mass medium like cinema can wield disproportionate sway over ideas. Individuals and even organizations don't stand a chance.

   Delete
 12. Thought provoking write up on wholesome freedom of expression
  kudos badri sir!

  ReplyDelete
 13. Thought provoking write up on wholesome freedom of expression
  kudos badri sir!

  ReplyDelete
 14. very good badri.
  " ஆனால் முல்லா ஒமர் தமிழ் நாட்டில் ஒரு வருடம் ஒழிந்து இருந்ததாகவும் அவருக்கு நாங்கள் அடைக்கலம் கொடுப்பது போலவும் காட்டிருக்கிறார்."
  cinematic liberty என்று ஒரு விஷயம் இருக்கிறது. தமிழ் பேசுவற்காக வைக்கப்பட்டுள்ள காட்சி அது.
  ஜெயமோகன் சொன்னது ஞாபகம் வருகிறது.
  “ஒரு மாற்றுக்கருத்தால் நாம் ஏன் புண்படுகிறோம், நாம் நம்பும் ஒன்றை இன்னொருவர் நிராகரித்தால் ஏன் கொந்தளிப்படைகிறோம்? அது எந்தவகையான மனப்பலவீனம்? அதை மட்டும் நினைத்தாலே போதும் நாம் இருக்கும் அறிவார்ந்த தளம் என்ன நம் ஆன்மீக நிலை என்ன என்று புரியும்.
  விவாதங்களில் கருத்துக்களுக்காகப் புண்படுவதென்பது அறிவுநிலையின் மிகத்தாழ்ந்த படி.”

  ReplyDelete
 15. // எனக்குத் தெரிந்த பல இந்துக்கள் முஸ்லிம்களைப் பற்றி மிக மோசமான அபிப்ராயம் கொண்டவர்கள். //

  Thank you for the honest comment - I am a Tamil Muslim and lived my younger life in Chennai. Regarding the view from the other side, my point of view is that while there's genuine pride in our way of life, I didn't detect any real animosity against non-Muslims in our family circle. Maybe I was/am naive and maybe the sample set is too small to make such a sweeping conclusion but for what its worth, its true.

  Compared to other states in India, tamil muslims really take pride in being identified as both a Tamilian and Muslim. I think this distinguishes them against the Muslim brethren across other states. For example, I used to work in Bangalore and I used to cringe when I see my muslim brothers who dont speak the local Kannada language and only speak Urdu - Same is the case in Hyderabad as well. Most of our family members dont know a word of urdu which is what people assume when they first think of a muslim. For example, we used to go to mosques where the sermon happens only in Tamil. The common magazines in our house are a.v and kumudam etc., I know I am beating a dead horse here....

  Now coming to the pride part of the equation, this must be true for everybody who is a believer for their respective religion. In that spirit, I have to say that there are elements in the everyday life of Islam that makes you really feel lucky that you are part of this. Of course, others may disagree with this since for every believer, they feel their way is superior.

  Now coming to the issue in hand, in my opinion, the guys like PJ and others overplayed their card - while its one thing to raise a voice of protest which he is entitled to do and let the film release though. Its not like its insulting the Prophet or anything.
  I think the film would have died a natural death if he didn't interfere and we wouldn't be even talking about this -something like the fate of dasavatharam. Now he has unwittingly played a part in making everybody eagerly await this movie and potentially make this a success.

  And obviously there are political calculations behind this - i find it hard to believe that the best friend of NaMo would suddenly be worried about "preserving the social fabric" of the state when she could have easily gone the other way - i think its all a prelude to 2014.

  Also, I think Tamil Muslims have lived on the fringes for a long time without much of a voice - Over the past decade though , there's a section of media which exclusively caters to them (programmes in win tv, imayam tv etc.) Initially it started with religion and now its slowly entering the political realm. They are testing the waters here in terms of what they can do with their newly found clout. There would be mistakes made along the way (attack on manushyaputhran, this episode) but if I think of the longer term implications, i think that as long as they dont incite violence and behave responsibly and with restraint, its a good thing.

  ReplyDelete
 16. பத்ரி அவர்களுக்கு,
  இங்கு எல்லாமே ஒருவித விளம்பர நோக்குடனே செய்யப்படுகிறது. அது எதிர்ப்பாக இருந்தாலும் சரி, ஆதரவாக இருந்தாலும் சரி! கண்ணை மூடிக்கொண்டு கருத்து தெரிவி! வருவதைப் பிறகு பார்க்கலாம்! இதே விஸ்வரூபம் படக்கருவை ஒரு கோடியில் யாரேனும் ஒரு புதுமுக நடிகரை வைத்து எடுங்கள்... ஒருவனும் சீண்டமாட்டன். காய்க்கும் மரத்திற்கே கல்லடி படும்!

  ReplyDelete
 17. //முற்றுமுழுதான கருத்துச் சுதந்தரம்தான் நமக்கு ஒரே நம்பிக்கை. அது நமக்குப் பிடிக்காத கருத்தாக இருந்தாலும் சரி. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வோம். தடையால் அல்ல.//
  முற்று முழுதான கருத்து சுதந்திரம் என்று ஒன்று இருக்கிறதா, சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் கருத்துகள் நச். கமல், ரஜினி, ஏன் சினிமாவையே பிடிக்காதவர்களுக்குக் கூட கருத்துரீதியான இந்த அராஜகம் எரிச்சல் தருகிறது.

  ReplyDelete
 18. ஏன் தலைவரே.... இம்பூட்டு "ஐடியாலஜிக்கலா" சனநாயகம், கருத்து சுதந்திரம்னு போட்டுத் தாக்கறீங்களே..... அப்ப இங்கயும் தமிழ்ப் பேப்பரிலும் ஏன் நெறியாளராக மாடரேட் செய்ரீங்களாம் ?? எவனும் எதையாச்சும் எழுதிரக்கூடாதுன்னுதான ?? சில நூறு, ஆயிரம் பேரு படிக்கற ஒங்க வலைப்பக்கத்துக்கே மாடரேஷன் தேவைப்படும்போது ... பல கோடிப் பேர் பல இன,மொழி, மத நம்பிக்கையோட வாழுற பொது வாழ்வில் அது தேவையில்லையா?? நீங்க எப்படி கருத்து சுதந்திரம்தான் என்னோட ஐடியாலஜி ஆனா கமர்சியல், பிராக்டிகல் காரணத்துக்காக இங்கே காம்ப்ரமைஸோட மாடரேட்/ எடிட் செய்யுறேன்னு சொன்னா நாங்களும் கருத்து சுதந்திரம்தான் எங்களோட ஐடியாலஜி ஆனா சாதி, மத நம்பிக்கைக் காரணமாக படைப்பாளிகளைக் காம்ப்ரமைஸ் செஞ்சு சில காட்சிகளை நெறிப்படுத்துங்கள்னு சொல்றோம்... அது மட்டும் தப்பா ?? உங்க வாய் வாதமும் அதற்கு நேர்மாராக நடவடிக்கைகளும் ......லாஜிக்கே இல்லியே நைனா ????

  ReplyDelete
  Replies
  1. Well, why don't you start your own magazine or website or blog and air your opinions? Editor of magazine/paper has every right to decide what goes into his/her paper. Whether a paper compromises or not has nothing to do with other's (YOUR!) right.

   Delete
  2. Hello, stupid argument. Badri is talking about unfettered freedom of expression and doing the exact opposite in his own blog. That is what is being highlighted by kandasami. On one hand I'll voice for unfettered freedom of expression and on the other hand I'll moderate views in my own blog, for whatever good reason, is sheer hypocrisy. I hope Badri sheshadri will give an honest answer ???

   Delete
  3. Anon: You have unfettered freedom to publish anything you want in your own space. When I run a magazine (online or offline) I have some goals. It is not a bulletin board for others to run THEIR propaganda. Even in my own blog, I want to write what I feel like writing. In my blog, I follow a certain rule (for my own convenience) on what comments to approve and what not to. In fact I approve almost all the comments, I rarely censor comments. I remember in all blocking 3 comments (one at the request of one other person) in the last 10 years of blogging.

   We follow a stricter method with respect to magazines run by my company. I am sure you realise that a company has its own goals.

   You cannot demand that I publish your 10 page content (useful or junk, whatever may be), in my print magazine - because I pay for it. Likewise, I pay for my server space and web design for my online magazine, and I will decide what goes into it.

   I am demanding everyone's right to say what he/she feels, but let him/her do that from the space available to them. I cannot give you space wherever you want. That is not within my scope, nor is it your right to demand space in my house to say what you want to say. Keeping you away from my space is also my right.

   I am not however looking at stopping you from saying whatever you are saying from your space.

   Delete
  4. If unfettered freedom of expression is your IDEOLOGY as stated in your post (முற்றுமுழுதான கருத்துச் சுதந்தரம்தான் நமக்கு ஒரே நம்பிக்கை), you should allow it everywhere .... there is no question of my space or your space.

   Delete
  5. "The right to swing your fist ends where the other man's nose begins."
   - attributed to Oliver Wendell Holmes, Jr.

   Delete
  6. Unfettered freedom of expression does not mean that I let you use my "space" in whatever way you please - when I say 'space', it includes website/blog/paper/book. Say, I publish reader comments on my book - does it mean I put whatever crap you want it on it? What if you want full book length content of yours in MY book? At some point, I'd say "please write your own book/blog/..." I don't see how that is against freedom of expression.

   Delete
 19. பொன்.முத்துக்குமார்Tue Jan 29, 11:04:00 PM GMT+5:30

  இதில் தமிழக அரசு செய்திருப்பதுதான் மிக வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.

  தேவையில்லாமல் எதிர்ப்பு, போராட்டம் என்று கருத்து சுதந்தரத்துக்கு தடை இடும் அபாயகரமான போக்குக்கு வித்திடுவோரை தடுத்து நிறுத்துவதை விடுத்து அரசும் அவர்களோடு சேர்ந்துகொண்டு கருத்து சுதந்தரத்தின் குரல்வளை நெறிக்கும் வகையில் பாசிச மனப்போக்கோடு செயல்படுவது பயங்கரமான செயல்.

  ReplyDelete
 20. கருத்துரிமை என்பது என்றுமே ஒரு கட்டுக்கு அடங்கியதுதான். உதாரணம் -- நெரிசலான கூட்டம் கூடிய அரங்கத்தில் நெருப்பு என்று கூச்சல் போட எவரும் உரிமை கொண்டாட முடியாது. கருத்துரிமைடன் இணைந்தது அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் பொறுப்பு என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதே.

  ஆனால், ஏதோ ஒரு பகுதி மக்களின் மனம் புண்பட்டு அவர்கள் வன்முறையில் இடுபட்டாலும் படலாம் என்று முன்கூட்டியே தடை விதிக்க வேண்டுவதும், அல்லது அவ்வாறு தடைவிதிப்பது சரி என்று எண்ணுவதும், ஒரு முற்போக்கு ஜனநாயக சமுதாயத்தின் அழிவுக்கு முதல் படி.

  சிந்தியுங்கள், எவை எவை பிறர் மனத்தை புண்படுத்தி அவர்களை வன்முறையில் இறங்கத் தூண்டும் என்று யார் முடிவுசெய்வது? இந்த அதிகாரத்தை அரசுக்கு, அதாவது, ஆளும் கட்சிக்கு, கொடுத்தால் அதனால் வருவது ஆபத்து, எல்லோருக்கும்.

  பேச்சுரிமை உத்திரவாதம் நமது அரசியில் சாசனத்தில் உள்ளது. இருந்தும், சால்மன் ரஷ்டியின் நூலை மத்திய அரசே தடை செய்துள்ளது. சில எளிய அறிவுரைக்காக செருப்படி வாங்கினார் நடிகை குஷ்பு. இந்த கேவல நிலை மாற கல்வி அறிவுடைய நடு நிலை மக்கள் பேச்சுரிமையை எந்தவிதத்திலும் நீர்க்க விட்டுவிடக்கூடாது.

  திலீபன்

  ReplyDelete
 21. I fully support authur viewpoint. If not, what Maushiyaputhiran view about sharia law is wrong ? please go and read comments about Manushaputhiran by PJ.

  ReplyDelete
 22. i m following u long time. i m very much agreeing with u. only very few people are there in our society like you. sorry state of affairs.

  ReplyDelete
 23. என்னவோ ஒமர் என்னும் தீவிரவாதி கோவையில் தங்கியதாய் கமலஹாசன் காட்சிவைத்துள்ளார் என்று பொங்கும் நண்பர்களே .... 90களின் இறுதியில் கோவையின் கோட்டைமேடு பகுதி போலீஸ்கூட உள்ளே புக முடியாத அளவு மர்மதேசமாய் இருந்தது உண்மையா இல்லையா?? இன்றும் நாட்டில் பல இடங்களில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளதா இல்லையா ????

  ReplyDelete
  Replies
  1. அனானி உளறாதீர்கள். நான் பிறந்து வளர்ந்தது அந்த பகுதியில்தான். 90களில் நீங்கள் சொல்கிற படியெல்லாம் ஒரு மர்மும் அங்கே இருந்ததில்லை. சொல்லப்போனால் அந்தப்பகுதியில் இஸ்லாமியர்கள் வெறும் 30 சதவீதம்தான். மீதி இந்துக்களும் கிறித்தவர்களும்தான் வசிக்கிறார்கள்.

   Delete
  2. அப்படியா ? அந்த 'வெறும் 30 சதவீத' இஸ்லாமியர்கள் எப்படி 96-ல் நடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெறும் செய்தி வர ஆரம்பித்ததுமே கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்பு சோதனைக்காக அரசு வைத்திருந்த செக்-போஸ்டை அடித்து நொறுக்கினார்கள் ? எப்படி வந்தது 'வெறும் 30 சதவீத' இஸ்லாமியர்களுக்கு ?

   Delete
  3. @அதிஷா
   பிறந்த வளர்ந்த கோவையின் கோட்டைமேடு பகுதியில் என்ன நடந்தது என தெரியாமல் அடுத்தவனை உளராதே என்கிறார். இந்த லட்சணத்தில் இவர் பத்தரிக்கையாளர் வேறு. இவரு ரிப்போரட் பண்ணி தமிழக மக்கள் படிச்சு தெரிஞ்சு... விளங்கீரும்!

   Delete
 24. பல இந்துப் பழக்கவழக்கங்களையும், இந்து மத தெய்வங்களையும் நாத்திகம் என்ற பேரிலும் "பொயட்டிக் லைசன்ஸ்" என்ற பெயரிலும் அவமதித்தும், தொடர்ந்து என்னவோ இந்துக்கள் எல்லாம் கொடுமையானவர்கள் போலும், கிறித்தவர்கள் எல்லாம் தேவதூதர்கள் போன்றும் சித்தரித்து .... எந்த்ப் பிரச்சனையும் இல்லாமல் அசால்ட்டாய் நாடகம் போட்டுவந்த ஆளுக்கு கடசீயா ஆண்டவரு வெச்சாரு பாரு ஆப்பு ..... நீ சொத்தை விற்று நாட்டை விட்டுப்போனாலும் கவலையில்லை .... எல்லாப் புகழும் இறைவனுக்கே ..... எத்தனை நாளுடா சும்மா போனாப்போவுதுன்னு பொறுமையாய் இருக்கற சமூகத்த சீண்டுவீங்க ??? இன்னைக்கு தேண்கூடுல கை வெச்ச மாதிரி இருக்கா ?? கொட்டட்டும் கொட்டட்டும் ..... இவ்வளவு நாள் ஒரு இந்துவாக என்னால் உன்னை எதிர்க்க முதுகெலும்ப்பில்லாம் வருந்தினாலும், இன்று ஒரு இசுலாமிய சகோதரன் உனக்கு ஆப்படிப்பதைக்கண்டு மகிழ்கிறேன்.

  ReplyDelete
 25. I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it. - Voltaire

  ReplyDelete
 26. regarding freedom of expression , your views are perfectly correct. nobody is having the right to demand your space for throwing his waste.
  regarding viswaroopam, jayalalitha wants to get minority votes. definitely she can not get it.
  My personal opinion, that Tamilnadu is now having a conducive atmosphere for terrorist actvities. gopalasamy

  ReplyDelete
 27. And in between we have conveniently forgotten 16hrs power cut!!!

  ReplyDelete
 28. 92-96 சரிதம் திரும்புகின்றது. இறுதிப் பக்கத்தில் மக்கள் பாடமும் தயாராய் இருக்கின்றது என்பதை அந்த பெண்மணி உணர்வாரா என்பது தெரியவில்லை. அவரை உணர வைக்கவேண்டிய கட்டம் இது. ரஜினிக்கு கிடைத்துள்ள மற்றொரு சந்தர்ப்பம். இந்த முறையாவது இதை அவர் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விஜய்காந்த் தமிழக அரசியலில் காமெடியனாக போய்விட்ட இந்த கால கட்டத்தில், வாரிசு சண்டையில் என்ன நடக்கும் என்று தெரியாத புதிராய் திமுக இருக்கின்ற நிலையில், சாதி கட்சிகள் தங்களுக்குள் அடித்துக் கொன்று கொண்டிருக்கும் சூழலில், மக்கள் எதிர்பார்க்கும் ஒரு நியாயமான மாற்றத்தை இப்போதைக்கு ரஜினி கொடுக்க முடியும். இத்தனை நாட்கள் ரஜினியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று வலியுறுத்தி வந்த கமல், இப்போதாவது அவரை முன்னிறுத்தி, தனது ஆதரவையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். உடனே புதிய கட்சி தொடங்க வேண்டும். அது மதவாத சக்திகளுக்கும், ஜாதிய சக்திகளுக்கும், அராஜக அரசியல்வாதிகளுக்கும் சாட்டையடி கொடுக்கும் கட்சியாக இருக்க வேண்டும். இன்று தமிழகம் முழுவதும் இருக்கும் ஒரு எழுச்சி வேகத்தில் இது நடந்தால்தான் இன்னும் சிறப்பாக இருக்கும். லோக்சபா எலெக்சனிலியே அத்தனை பேருக்கும் பாடம் புகட்ட முடியும். ரஜினி யோசிப்பாரா?

  நொந்த தமிழன்

  ReplyDelete
  Replies
  1. Romba tooooooooo much, innuma namburinga!

   Delete
 29. I enjoted the article annd comments

  ReplyDelete

 30. அன்பான நண்பர் திரு அதிஷா - நலமா?
  எதோ நம்மால் முடிந்தது

  //சுதந்திரத்துக்கும் பொறுப்பு இருக்கில்லையா? கட்டுப்பாடுகள் அவசியமில்லையா.. போகிற போக்கில் விஷமத்தனமாக எதையாவது போட்டுவிட்டு போவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் கலவரங்களும் உண்டானால் அதற்கு யார் பொறுப்பு. //

  - உங்க அபிமான நண்பர் மற்றும் சக பத்திரிகையாளர் திரு லக்கி இந்து மதத்தை பற்றி தாறுமாறாக எழுதியதை படிக்கவில்லை போலும்! இந்து என்றால் திருடன் எண்டு உங்க நண்பரின் தெய்வம் சொல்லியது புரியவில்லை போலும்! இதெல்லாம் பகுத்தறிவு, அனால் தப்பித்தவறி இசுலாம் பற்றி எவனாவது விமர்சித்தால் அது பகையை உண்டாக்கும், புகையை உண்டாக்கும் என்று நீட்டி முழக்குவது உங்களின் நேர்மயின்ம்மையின் முதல் படி!

  //ஒரு படைப்பு அது சினிமாவோ டிராமாவோ எதுவோ.. அது எத்தனை கோடிகள் செலவழித்து வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும்.. ஆனால் அதன் மூலமாக சமூகத்தில் இருபிரிவினரிடையே தேவையற்ற மோதல்களை உருவாக்க வழிவகுக்கும் என்று நினைத்தால் அதற்கு தடைவிதிப்பதில் என்ன தவறு? //

  இந்த ஞாயம் சினிமாவிற்கு மட்டும்தானா? ஏன் புத்தகங்களை விட்டு விட்டீர்கள், ஏன் மேடை பேச்சுகளை விட்டு விட்டீர்கள்! இஸ்லாமிய மற்றும் கிருத்துவ பிரச்சார புத்தகங்களை படித்த்ருக்கீரீகளா? அவர்கள் ஜெபமோ, அல்லது பிரசங்கமோ முடித்தபின் கொடுக்கும் சீடிகளை பார்திருகிரீர்களா? அதை விடுங்க உங்கள் அபிமானர் திரு லக்கி இந்து மதத்தை பற்றி தாறுமாறாக எழுதியதை பதிவுகளால் தேவையற்ற மோதல்கள் வராலாம் என்று அதை நிறுத்த சொல்லியிருந்தால் நீங்கள் நேர்மை உள்ளவர்! அதை எதுவும் செய்யாமல், இசுலாம் விமர்சிகபட்டால் ஏதோ நல்லவன் போல உளறுவது நேர்மையின்மையின் இரண்டாம் படி !

  //நாளைக்கே அந்த படைப்பினால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அதை படைத்தவர் வந்து நஷ்ட ஈடு வழங்குவாரா? //

  ஆகமொத்தம் உங்க படைப்பிலக்கணம் அசம்பாவிதத்தினால் மட்டுமே நிரனயிக்கப்படுகின்றது! நேர்மையினால் அல்ல! நண்பர் ஒருவர் சொன்னது போல, உதைக்காதவனுக்கு மட்டுமே வசை, உதைப்பவனுக்கு என்றும் ஜால்ரா இசை! இது நேர்மையின்மையின் அடுத்த கட்டம்!
  ,
  //இங்கே எல்லாருக்கும் எல்லாவித சுதந்திரங்களும் உண்டுதான். ஆனால் ராமதாஸ் தெருவுக்கு தெரு மேடைபோட்டு சாதிவெறியை தூண்டும்வகையில் பேசுவார்.. அதற்கு தடைவிதித்தால் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது என ஒப்பாரி வைத்தல் முறையாகுமா? //

  அட நல்லவரே! வீதிக்கு வீதி ஒரு மதத்தை, கலாசாரத்தை தாறுமாறாக திட்டும் கலையை தொடங்கியது யாரு? அதை கேள்வி கேட்டால் அது கருத்து சுதந்திரத்திற்கு இட்ட திரை என்று புலம்பியது மறந்து விட்டதா? திருப்பி அடிகாதவன திட்டி பேசினால், எழுதினால் அது கருத்து சுதந்திரம், செருப்பை எடுதத்து திருப்பி அடிப்பவனை விமர்சித்தால் அது உரிமைமீறலா ? ஏன் ஜாமி உங்களக்கு நெஞ்சத்தில நேர்மை என்பதே கிடையாதா? உங்களின் நேர்மையின்மையின் அடுத்த கட்டம் இது!

  //படைப்புகளை வெளியிடுவதும் அதன்மூலமாக லாபம் சம்பாதிப்பதும் படைப்பாளிக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட மக்களுடைய பாதுகாப்பும் அவர்களுடைய அமைதியை காப்பதும் அரசுக்கு மு//

  மன்னிக்கவும் வாந்தி வருகிறது, கொஞ்சம் எடுத்து விட்டு வருகிறேன்!

  ReplyDelete

 31. நண்பர் திரு அதிஷாவின் பதில்!

  // ராமதாஸ் தெருவுக்குத் தெரு மேடை போட்டு சாதிவெறியைத் தூண்டுவதுபோலப் பேசுவதற்கும் நமது சமுதாயம் அனுமதிக்கவேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு நாம் கொடுக்கும் விலை.//

  :-(((
  //

  அதாவது நண்பர் அதிஷா இதை மிகவும் சோகமாக பார்க்கிறாராம்!

  மேலே உள்ள இராமதாசின் பெயரை எடுத்து விட்டு உங்க பகுத்தறிவு களஞ்சியம் யாராவது ஒருவரின் பெயரை போடுங்க ஐயா! அதாவது நண்பர் லக்கியின் போன்றோரின் பெயரை போடுங்க ஐயா! அப்படி செய்தபோது நீங்க அதுகெல்லாம் வருத்தப்பட்டதாக தெரியவிலையே! வசை பாடியதை கண்டு மகிழ்ந்தீர்களே!(லக்கி போன்றவர்கள் பல வருடங்களுக்கு முன் திராவிட கழக மீடிங்குல பேசியதை நீங்கள் கேட்டிருக்கீகளா? - ரொம்ப நல்லா இருக்கும் ஜாமி!

  ReplyDelete
 32. படத்தில் அவர் என்ன / எப்படி சொல்லியிருக்கிறார் என்பது எனக்கோ உங்களுக்கோ தெளிவாக தெரியாது. ஒருவேளை உண்மையிலேயே 'வரம்பு' மீறியிருந்தால்... (இருக்காது என்றே நம்புவோம்...தணிக்கை சான்று பெற்று வந்திருப்பதால்!)


  அன்பே சிவம் படத்தில் நாசர் ஒரு பழுத்த சிவ பக்தன் போல அடிக்கடி 'தென்னாடுடைய சிவனே போற்றி.. ' என்று சொல்லிக்கொண்டே நயவஞ்சகமான வில்லத்தனங்கள் செய்வார். அதை பார்க்கும்போது எனக்கு கொஞ்சம் 'சுருக்' என்றுதான் இருந்தது.. ஆனால் சிவபக்தர்களையே கமல் களங்கப்படுத்திவிட்டார் என்று BRM-தனமாக (அ)சின்னப்புள்ளைத்தனமாக புலம்பவில்லை. நல்லவர் போல் வேடமிடும் கயவர்களும் உலகில் உண்டு.. நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற செய்தியாகத்தான் நான் எடுத்துக் கொண்டேன். BRM போன்ற இந்துத்துவ வாதிகள் என்னை ரோஷங்கெட்டவனாக நினைப்பார்கள்.

  இதே கதைதான் இஸ்லாமியர்கள் இடத்திலும். யதார்த்த நிலையை புரிந்து கொண்டு ஜீரணிக்கத் தெரிந்தவர்கள் 'ரோஷமில்லாதவர்கள்'. எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் 'தீவிரவாதிகளின் கூட்டாளிகள்'.

  ஆக, சென்சிட்டிவான விஷங்களில்... இந்துவோ முஸ்லீமோ, இருதலைக் கொள்ளி எறும்பு போல தவிப்பதுதான் என்னைப்போன்ற சாமானியர்களின் நிலை.

  அ. சரவணன்.

  ReplyDelete
 33. I have watched the movie here in Colorado, US. I heard in some other pages, that the bad guys are portrayed to be praying/reading Koran before doing bad things. They conveniently forget that Kamal will also pray, before he along with his FBI friends, wait for the bad guy to finish off the prayer. And when one agent asks about what Kamal is doing, the other guy will say, that Kamal is praying, and he is doing so for us too. I have not seen a mention of this anywhere by anyone. So folks are bending the facts to their convenience to oppose a movie.
  There are many hollywood movies, which had much big crime and terrorism scenes by many muslim characters, and they were all released, made money and we moved on.
  I dont associate myself with a Hindu in a movie, whether he is a good guy or a bad guy, so we dont get hurt. A religion is not that week to be destroyed by an opinion or a scene/scenes in a movie. The religions have survived centuries on the onslaught of many such incidents. The Human race is much more resilient than a petrol bomb or a ban.

  ReplyDelete
 34. I watched the movie (here in US). The film has a non-linear(?) story telling/screenplay. Whether you like it or not - you need to watch it at least twice to understand the nuances of the film. As far as I understand, this also added fuel to the already burning fire. I certainly think those (opposing) leaders who watched the movie didn't understand it completely. Moreover, they are arguing based on certain dialogues looked in isolation (which obviously leads to incorrect conclusions). Also, I find the interpretations of certain portions of the film by them to be completely wrong!

  Certain scenes in the film looked incomplete and certain pieces didn't fit together. There were a few scenes which were not completely logical. May be the director has left certain things open as there is a second part(?) to it?? I watched the movie only once and I can't really say anything further.

  Having said that, Cinematography, Action, Music, Choreography, Acting - were all truly world class. Definitely it is a bold attempt. I really liked the afghan portion of the movie. Also, I personally didn't find anything in movie that is offensive to any community. In fact, there are two very subtle scenes in the movie which implies that the movie is just against terrorism and not against ISLAM.

  ReplyDelete
 35. அருமையான பதிவு. இதில் தமிழக/இந்திய இஸ்லாமிய சகோதரர்கள் கோபப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. இவர்கள் வீணாக வெட்டி அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

  ReplyDelete
 36. கமல் சிக்கன் சீனை பிராமணர்களை விமர்சிக்க வைத்திருக்கமாட்டார். மாறாக தமிழகத்தின் பிராமணர் அல்லாத மற்றவர்களை திருப்திப் படுத்த வைத்திருப்பார்.

  பிராமணர் அல்லாத தமிழர்களின் பொதுப்புத்தி - தனக்குப் பிடிக்காத அல்லது தனக்கு வசதியாக இல்லாத ஏதாவது ஒன்றை எதிர்கொள்ள அல்லது கடந்து செல்ல - அதை செய்தவர் பிராமணராக இருக்கும் பட்சத்தில் (அவர் எவ்வளவு தான் முற்போக்காக அது வரை வாழ்ந்திருந்தாலும்) "நீ ஒரு பாப்பான் தானே உன் புத்தியைக் காட்டிட்டே " என்பதாகவே இருக்கும்.

  இந்த "பாப்பான்" விமர்சனத்தை தவிர்க்க அல்லது எதிர்கொள்ள தேவையான தற்காப்பே அந்த சீன்.

  "எனக்கு தெரிந்த பார்ப்பன நண்பர்கள் சாப்பிடுவார்கள் அதிலென்ன புண்படுதல், பாப்பாத்தின்னு சொல்லலாமா, சொன்னா என்ன" என்பது போன்ற வாதங்களுடன் சேர்த்து அறிவு ஜீவிகள் மௌனமாகவாவது இதை ஒத்துக் கொண்டால் நலம்.

  - கோதை ராகவன்

  ReplyDelete
 37. "பாப்பாத்தியமா ... நீ சா(ப்)ட்டு சொல்லு உப்பு காரம் போதுமான்னு." இது ஒரு டயலாக். இதில் கமல் யாரை திருப்தி செய்ய விரும்புகிறார். தி.க-வா , தி.மு.க-வா ? புரியாதவர்க்கு உள்செய்தி (சில வருடங்கள் முன்பு செல்வி ஜெயலலிதா மாட்டு கறி சமைத்து படைத்து மற்றும் உண்டதாக செய்திகள் ...தி.க. எப்பவும் போல காலைல வெளிய சரியா போலன்ன அது பார்பனர் சதி என்று கூறும்). உலக படம் எடுக்குற நாய்க்கு உள்ளூர் விவகாரம் எதுக்கு? குரங்கு ஆப்ப எடுத்த கதையா ஆகி போச்சுல்ல, நீ உலக தரத்துல எடுத்தது?

  ReplyDelete
 38. சிந்திப்பவன்Mon Feb 04, 07:18:00 AM GMT+5:30

  All the sixty eight comments only indicate one thing VERY CLEARLY..
  This country has a VERY LONG WAY to go..
  Sorry,but not in my life time..
  God Bless..

  As I type this ,The Hindu's front page says.."Viswaroopam Ban lifted"
  So back to Viswaroopams of
  Shortage of electricity,ethics,morals and good governance
  and abundance of arrack,corruption,murders,deoities,rapes and unwanted expenses of governments..

  கதையும் முடிஞ்சது கத்தரிக்காய் காய்ச்சுது.

  ReplyDelete
 39. விஸ்வரூபம் வெளியாகி விட்டது. அதனால் காவிரியில் தண்ணீர் வந்து விட்டது,முல்லைப் பெரியார் பிரச்சினை தீர்ந்து விட்டது, தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு போய்விட்டது , அரசுப் பள்ளிகளில் எல்லாம் கழிவறை வந்து விட்டது, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தினந்தோறும் பள்ளி சென்று வருகிறார்கள். எல்லாம் சுபிட்சம்.சுபம்.

  ReplyDelete