Friday, January 18, 2013

புத்தகக் காட்சியில் இன்று

சுமார் இரண்டு மணி நேரம் சுற்றினேன். விகடன் ஸ்டாலில்தான் நான் பார்த்ததிலேயே நிறைய புதுப் புத்தகங்கள் வந்துள்ளன என்று நினைக்கிறேன். நிறையப் புத்தகங்கள் டெமி 1/4 சைஸில் அகலமாக இருந்தன: பாரதியார் கவிதைகள், உ.வே.சாவின் என் சரித்திரம், பல்வேறு (லேப்டாப்/ஃபேஸ்புக்/ஆன்லைனில்...) A-Z புத்தகங்கள் என்று.

நான் வாங்கியது ஓவியர் சில்பியின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ இரண்டு தொகுதிகள், கெட்டி அட்டை. ஒவ்வொன்றும் டெமி 1/4 சைஸில் சுமார் 500 பக்கங்கள். ஆனாலும் இரு தொகுதியும் சேர்த்து ரூ. 550/- மட்டுமே. அதன்பிறகு டிஸ்கவுண்ட்! எப்படிக் கட்டுப்படி ஆகிறது என்று ஒரு பதிப்பாளராக எனக்குப் புரியவில்லை. மிக அற்புதமான கலெக்‌ஷன். சில்பியின் ஓவியங்கள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டியவை. கற்சிலைகளை அப்படியே வெறும் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்.

விகடனில் நிறைய பியர்சன், சேஜ் புத்தகங்கள், மால்கம் கிளாட்வெல், குர்சரண் தாஸ், தேவதத்த பட்னாயக், ரேஷ்மி பன்சால் ஆகியோரின் புத்தகங்கள் என்று நிறைய மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன.

விகடன் இயர் புக் 2013, 125 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இன்னமும் புரட்டிப் பார்க்கவில்லை.

***

நண்பர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனிடம் NHM Reader பற்றி விளக்கிச் சொன்னேன். விரைவில் ஆவி, பேய்க் கதைகளையெல்லாம் மின் புத்தகங்களாக நீங்கள் படிக்கலாம்!

***

சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரைப் பார்த்தேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரண்டு புத்தகங்களை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறாராம். அவருடைய எழுத்தைப் பார்த்து யாராலும் டைப் அடிக்க முடியாது என்பதால் அப்படியே பேசி ரெகார்ட் செய்துவிடுகிறாராம். அதனை ஒரு நண்பரிடம் மின்னஞ்சல் செய்ய, அவர் டைப் செய்து அனுப்பிவிடுவாராம்.

ஒலி=>பிரதி மாற்றி மென்பொருள் தமிழுக்கு வந்தால் இதுபோன்ற பலருக்கு மிக மிக உதவிகரமாக இருக்கும்.

***

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் பணியாற்றும் ஜெய்சக்திவேலைச் சந்தித்தேன். ஜெய்சக்திவேல் வானொலித் துறையில் அனுபவம் வாய்ந்தவர். இன்று ‘தி ஹிந்து’வில் ஒரு சீனப் பெண்மணி தமிழில் புத்தகம் எழுதியிருப்பது பற்றி வந்த செய்தியைக் குறிப்பிட்டார். அந்தப் பெண் சீன வானொலியின் தமிழ்ச் சேவையில் பணி செய்பவர். அந்தப் புத்தகம் கௌதம் பதிப்பகம் என்ற நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளது. புரட்டிப் பார்த்தேன். பிழைகள் ஏதும் தென்படவில்லை. இவரைப் போன்றவர்களை தமிழகப் பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

***

என்.சி.பி.எச்சில் சில சுவாரசியமான புத்தகங்கள் கண்ணில் தென்பட்டன. மற்றுமொரு நாள் நேரம் செலவழித்துச் சுற்றவேண்டும். ‘மார்க்ஸியப் பார்வையில் வைணவம்’ என்ற புத்தகத்தைப் பார்த்தேன். புரட்டிப் பார்த்ததில் அவ்வளவாகக் கவரவில்லை. எங்கு பார்த்தாலும் செல்வராஜின் ‘தோல்’ புத்தகம்தான் கண்ணில் பட்டது.

***

நடுவில் சன் டிவியிலிருந்து குட்டியாக ஒரு ‘பைட்’ கேட்டார்கள். தொண்டை கரகரவென்று குரலே எழும்பாமல் கட்டிக்கொண்டிருந்தது. மெதுவாகப் பேசி முடித்தேன்.

***

உயிர்மை மனுஷ்யபுத்திரனுடன் மின் புத்தகங்கள், அச்சுப் புத்தகங்கள் பற்றி நிறைய உரையாடினேன். புதிய தலைமுறை ஒன்று முழுவதுமாகவே மின்னணுச் சாதனங்களுடன் தம் வாழ்க்கையைக் கழிக்கப்போகும் நேரத்தில் தமிழ்ப் பதிப்பாளர்கள் மின் புத்தகத்தைக் கட்டாயம் கையில் எடுத்தாகவேண்டும் என்றார். அச்சுப் புத்தகங்களுக்கான சந்தை என்ற ஒன்று தொடர்ந்து இருக்கும் என்றார். மின் புத்தகங்கள் மீது அவர் பெரும் நம்பிக்கையைக் காட்டினார். மின் புத்தகங்களை ஒரு பெரும் இணைய வாசகர் கூட்டம் படிக்கும் என்றே அவரைப் போல நானும் நம்புகிறேன்.

இரு தினங்களுக்குமுன் தமிழினி வசந்தகுமார், இந்த மின் புத்தகப் படிப்பான்கள் வந்துவிட்டால் அச்சுப் புத்தகங்களின் கதி என்னவாகும் என்பதாகக் கொஞ்சம் விசனப்பட்டார். அவரும் ராஜ சுந்தர்ராஜனும் அருகருகே உட்கார்ந்திருக்க, மின் புத்தகம் எப்படி வேலை செய்யும் என்று செயல்விளக்கம் செய்து காட்டினேன். பதிப்பாளர்களின் தேவையே இல்லாது போய்விடுமோ என்று கேட்டார் வசந்தகுமார்.

நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு நல்ல பதிப்பாளர்/எடிட்டர் என்பவர் வெறும் ஒரு ஃபைனான்சியர் அல்லர். அவர் சில தேர்வுகளைச் செய்கிறார். புத்தக உருவாக்கத்தில் எழுத்தாளருடன் சேர்ந்து பங்களிக்கிறார். பிரதியைச் செப்பனிடுகிறார். அப்படி ஏதும் நடைபெறவில்லை என்னும் பட்சத்தில்தான், எழுத்தாளர் தானே நேரடியாக வாசகரைச் சென்றடைய நினைக்கலாம். மிகச் சில எழுத்தாளர்களால் மட்டுமே அது முடியும் என்று நான் நினைக்கிறேன்.

சத்யா தொடர்ந்து பதிப்பாளர்களைச் சந்தித்து, NHM Reader பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறார். நானும் பிரசன்னாவும் பதிப்பாளர்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். என் கருத்தில், 2013-ல் தமிழ் மின் புத்தகங்கள் மிகப் பிரபலமாக ஆகப் போகின்றன. பல்வேறு நிறுவனங்கள் இந்தக் களத்தில் குதிக்கப்போகிறார்கள். இதனால் எழுத்தாளர்களும் வாசகர்களும் பலன் அடைவார்கள் என்றே நம்புகிறேன்.

26 comments:

  1. //2013-ல் தமிழ் மின் புத்தகங்கள் மிகப் பிரபலமாக ஆகப் போகின்றன//

    It will gain popularity due to easy access. But for a book lover nothing beats the feeling of getting a book and reading it.

    Most of the people who buys ebook are book lovers.I think they will buy for onvenience (NRIs). I don't think it will be huge.. definitely it is a great thing to have

    ReplyDelete
  2. /* பிழைகள் ஏதும் தென்படவில்லை. இவரைப் போன்றவர்களை தமிழகப் பத்திரிகைகள் பயன்படுத்துக்கொள்ளவேண்டும். */

    Please correct it.

    ReplyDelete
  3. இன்னும் 25 வருடங்களுக்குப் பிறகு, எல்லாமே மின் புத்தகங்களாகிவிட்டால், அப்போது புக் ஃபேர் எப்படி, எந்த வடிவத்தில் நடக்கும்?!

    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. 25 வருடங்கள் என்பது மிகத் தொலைவில் உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன நடக்கும் என்பதைக் கணிப்பதே கடினம்.

      Delete
    2. பத்து நாட்களுக்குப் புத்தகங்கள் தள்ளுபடி விலையில் என்று அறிவிக்கப் படலாம். குருப்பெயர்ச்சி பலன் மிக அதிகமாகத் தரவிறக்கம் செய்யப்பட்ட மின் நூல் என்று கின்னஸ் சாதனை உருவாகலாம். எல்லாம் சரி,புத்தகங்களை வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஐஸ் க்ரீம், பாப்கார்ன், கேன்டீன் இத்யாதி? தமிழர்கள் தவித்து விடுவார்களே?

      Delete
  4. 'தமிழினி' வசந்தகுமார் ரெம்ப நாளாகவே, பதிப்புத்தொழில் முடங்கிவிடும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அன்று நீங்கள் சொன்னது அவருக்கு ஆறுதலாக அமையும் என்று நம்புகிறேன்.

    அசோகமித்திரன் 'கிழக்கு' ஸ்டாலுக்கு வர, நீங்கள் இடம்பெயர்ந்த அவசரத்தில் நான் தெளிவுபெற விட்டுப்போன ஒரு ஐயம்: ஏற்கெனவே என் வீட்டில் இருக்கும் டேப்லெட்டில் நீங்கள் பதிவேற்றித் தரும் புத்தகங்களைச் சேமிக்க முடியும் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. இன்னும் ஓரிரு வாரங்களில் ஆண்டிராய்ட் வெர்ஷனை ரிலீஸ் செய்வோம். அப்போது அதனை நீங்கள் இறக்கிக்கொண்டு சோதனை செய்து பார்க்கலாம்.

      Delete
    2. Hello Badri,

      Is the Android version released for NHM reader? I tried searching for "NHM" in Play Store but could not find any.

      Please provide the app name.

      Thanks and Regards
      Jai

      Delete
  5. Are you planning to release Ebooks with DRM or without DRM.
    Ideally speaking they should be less expensive than the printed ones and so what will be your pricing policy if a book is available in both versions. Ebooks can be widely shared, copied, stored and transferred and hence will increase access to books in tamil but may not result in increase in revenue commensurate with that.There are technical issues and resolving them is possible but other issues can cut both ways. Will you be happy if ebooks result in more readers, more books being read but less revenue when compared to printed ones.
    I have a kindle and like ebooks but I am reluctant to buy ebooks or books in tamil except fiction because I am skeptical about quality of non-fiction books in Tamil.
    Is Charu's attempt to sell through Amazon a success or not.
    Has he been able to sell at least 1000 copies of his ebooks through amazon. Downloading an ebook for free is an option that authors can explore when they dont expect much revenue from printed books and/or to create awareness among readers.

    ReplyDelete
    Replies
    1. Our platform will offer books with our own proprietary DRM. This is the only way we can satisfy the publishers and authors.

      We will be offering our (Kizhakku) books at a price lower than their print book price. We believe that e-books will only bring in additional revenue (at least for now) and are therefore not too concerned about the impact of the falling sales in the print version. We will be recommending to our partner publishers to offer the e-books at a lower price. However, they will reserve the right to price their books. We will accept their pricing.

      In terms of books you would want to read, it is up to you. We do not make any judgement on the quality of the content.

      Charu's book on Amazon kindle: I do not know.

      At this stage, I do not see this as printed book vs e-book debate. E-book opens up a new avenue, a new channel for selling.

      Delete
  6. பத்ரி!, NHM Reader-ல் படிக்கும்படியான புத்தகங்களின் லிஸ்ட் தரமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. Once we add 100 books to our e-book platform, will inform you. Right now, we have very few.

      Delete
    2. Badri!, no problem, i want to start reading books through my iPhone using NHM Reader, all available books are in pdf form, can you give me the very few's list?

      Delete
  7. பத்ரி, ஐ பேடில் இன்று NHM Reader தரவிறக்கம் செய்ய முடிந்தது. அருமையாக வந்திருக்கிறது. நீங்கள் சொன்னது போல் 2013ல் இது ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. ஒரு யோசனை. விலை கொடுத்து வாங்கும் புத்தகங்களை இந்திய ரூபாயில் விற்பனை செய்யலாமே (தற்சமயம் டாலர் மதிப்பு தான் தென்படுகிறது)

    ReplyDelete
    Replies
    1. இது குளோபல் ஸ்டோர்; எனவே விலையை ஒரு சில கரன்சிகளில்தான் வைக்கவேண்டும். அதனால் அமெரிக்க டாலரை எடுத்துக்கொண்டோம். (யூரோ, ஆஸ் டாலர், கனடா டாலர் போன்றவை சாத்தியம்.) எந்த கரன்சியை எடுத்துக்கொண்டாலும், அதில் சில தட்டுகள் உள்ளன. உங்கள் இஷ்டத்துக்கு விலையை வைக்க முடியாது. உதாரணமாக அமெரிக்க டாலராக இருந்தால், குறைந்தபட்ச விலை 0.99 $. அதன்பின், 1.99, 2.99, 3.99 என்று செல்லும். இப்போதைக்கு 1$ = 55 ரூ. என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

      மேலும் அறிந்துகொள்ள: http://docs.xamarin.com/ios/Guides/Application_Fundamentals/In-App_Purchasing/Part_1_-_In-App_Purchase_Basics_and_Configuration#Price_Tiers

      எனவே பொருள்களில் விலையை இந்த அடிப்படையில் முடிவெடுக்கப்போகிறோம். உதாரணமாக, 60-100 ரூபாய் வரையிலான புத்தகங்கள் அனைத்தையுமே 0.99$ என்ற விலைக்குத் தரப்போகிறோம். 100-க்குமேல் தொடங்கி 150 ரூபாய் வரையிலான புத்தகங்களை 1.99$ என்ற விலைக்குத் தரப்போகிறோம். சுமார் 500 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் ஒருக்காலும் 4.99$ என்ற விலைக்குமேல் போகாது என்பதே என் கருத்து. பார்க்கலாம். பொதுவாக தமிழ்ப் புத்தகங்களின் விலைகளை 5$-க்கு மேல் வைக்கவேண்டாம் என்றே நினைக்கிறேன்.

      Delete
    2. In-App pricing model implement நஷ்டம்+less flexible இல்லையா? அதுக்குபதிலா, appக்கு வெளில (voucher model - website, phone, in person) வாங்கி இங்க use பண்ணிக்கற மாதிரி இதுல படிக்கற மாதிரி இருந்தா ஈசியா இருக்குமே... Apple agreement படியும் இது புறம்பானது மாதிரி தெரியலையே, according to section 11.13?

      க்ருபா

      Delete
  8. * இவரைப் போன்றவர்களை தமிழகப் பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். *

    முக்கியமாக "தினத்தந்தி" நாளிதழ். வெல்க தமிழ் என்று முகப்பில் அச்சடித்து, கீழே தலைப்பு செய்தியாக

    * இலவச டெலிவிஷன் வழங்கினார்

    * மோட்டார் சைக்கிள் மோதி, உடல் நசுங்கி பலி

    * ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, போலீஸ் சூப்பிரெண்டு

    என்று வகைதொகையில்லாமல் தமிழை கொலை செய்கிறது!!

    இலவசக் கொத்தனாரின் "ஜாலியா தமிழ் இலக்கணம் படிக்கலாம்" நூலை தினத்தந்திக்கு விரைவஞ்சல் செய்தால் தமிழ் காப்பாற்றப்பட வாய்ப்புண்டு..

    ReplyDelete
  9. பைரசிய தடுக்க முடியுமா?? இமெயில் மூலமாக புத்தகத்தை அனுப்புவதை எப்படி தடுக்கப் போகிறீர்கள் ??

    ReplyDelete
  10. அன்புள்ள பத்ரி, சில சமகாலத் தமிழிலக்கிய நூல்களின் விலை படிக்கும் ஆர்வமுள்ள பலருக்கு எட்டாததாக உள்ளது. இவற்றை மின் நூல்களாக வெளியிடும் போது விலை குறைய வாய்ப்புண்டா? பதிப்பாளர் என்ற முறையில் அச்சு நூலை விட மின் நூலின் விலை குறைத்து நிர்ணயிப்பது உங்களுக்கு ஏற்புடைய விஷயமா?

    ReplyDelete
  11. || ஒலி=>பிரதி மாற்றி மென்பொருள் தமிழுக்கு வந்தால் இதுபோன்ற பலருக்கு மிக மிக உதவிகரமாக இருக்கும். ||

    ஆப்பிளின் சிரி போன்ற ஒரு மென்பொருள் தமிழுக்கு வாய்த்தால் அதை விட நல்ல விதயம் எதுவும் இருக்காது..தமிழின் ஒலிப்பான்கள் முழுவதையும் அடைப்பது கடினமானதாக இருக்கலாம்..ஆனால் முயற்சிப்பவர்கள் நிச்சயம் தொண்டு செய்பவர்களாவார்கள். :)

    ReplyDelete
  12. அச்சுப் புத்தகங்களின் மார்கெட்டை மின்புத்தகங்கள் ஓவர்டேக் செய்ய முடியாது. உதாரணம் கல்கியின் எல்லா புத்தகங்களும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. ஆனாலும் எல்லா புத்தகக் கண்காட்சியிலும் 'எவர்கிரீன் ஸ்டார்' கல்கியின் புத்தகங்களே. வாசகர்கள் பொக்கிஷமாக கருதும் புத்தகங்களை அச்சு வடிவில் வாங்கி வீட்டில் அடுக்கி வைப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள்.. கருதுவார்கள்.

    அ. சரவணன்.

    ReplyDelete
  13. Can you please upload the pamphlets about NHM Reader which you distributed during Bookfair?

    Or any other user guide about it/

    Thanks

    ReplyDelete
  14. IPad இல் தரவிறக்கிப் பயன்படுத்தி ஐஸ்டீன் பற்றிப்படித்தேன். :) பக்கங்களைப் புரட்டுவதில் Smooth இல்லை என்பது போலத்தோன்றியது. (kindle, Ibook போன்றவற்றுடன் ஒப்பிடும்போது)-
    இப்பொழுது விகடன் காலச்சுவடு எல்லாம், தமது Layoutஇனை அப்படியே மின்னணு சாதனங்களில் படிக்க வழிசெய்கின்றன. அவ்வாறு படிக்கும்போது புத்தகத்தைப்படித்த feel ஒன்று உருவாகிறது. அவ்வாறில்லாத தனியே text படிக்கும்போது, புத்தகம் படித்த feel உருவாகவில்லை. இது எனது மனப்பிரம்மையாகவும் இருக்கலாம். :)-

    அதே நேரம், மின் சாதனங்களில் ஒவ்வொரு பக்கத்தினையும் screenshot எடுத்துப்பரப்புதலை ஒரு பதிப்பாளராக எப்படிப் பார்ப்பீர்கள்.. ? (புத்தகங்களை photocopy எடுப்பதை விட மின்சாதனங்களில் பிரதிசெய்தல் மிக இலகு)

    ReplyDelete
  15. விகடன், புத்தகங்களை ‘Glazed News Print'ல் ‘வெப் ஆப்செட்’ல் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சடிப்பதால் மலிவாக தர முடிகிறதென்று நினைக்கிறேன். ஆனால், 5 வருடஙளுக்கு முன்னால் அவரிகளிடம் வாங்கிய புத்தகங்கள் இன்று நிறம் மங்கிப்போய், பழைய ஆனந்த விகடன் பிரதிகள் போல் தான் உள்ளன.

    பாக்கெட் நாவல் போல் தான் அவற்றை கருத முடிய்ம் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. இந்த கருத்திற்கு நானும் உடன்படுகிறேன், புத்தகங்கள் வடிவமைப்பு மற்றும் தரத்தில் காலச்சுவடு அடுத்து கிழக்கு முன்னிற்கின்றன!

      Delete