Wednesday, March 06, 2013

ஆழம் மார்ச் இதழ்

கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளிவரும் ஆழம் மாத இதழில் வந்திருக்கும் கட்டுரைகள்:
  • கமல்-இஸ்லாம்-அரசியல்: பேராசிரியர் ஜவாஹிருல்லாவுடன் ஒரு மிக சுவாரஸ்யமான நேர்காணல். ஆர். முத்துக்குமார் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்.
  • சி.சரவணகார்த்திகேயனின் விஸ்வரூபம் திரை விமர்சனம்
  • பாலச்சந்திரனின் இறுதி நிமிடங்கள் - தீபச்செல்வன்
  • நரேந்திர மோடிக்கு எதிராக மார்க்கண்டேய கட்ஜுவின் கட்டுரையின் தமிழாக்கம்.
  • பாலகுமாரனின் பேட்டி, வித்தகன் எடுத்தது.
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில நிர்வாகி எஸ். சம்பத், டீசல் விலை உயர்வு பற்றி எழுதியுள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இது எம்மாதிரியான நெருக்கடியைத் தரும் என்று விளக்குகிறார்.
  • கொல்கத்தா புத்தகக் கண்காட்சி பற்றி மருதன்
  • பிராமணியம் பற்றி அருணனின் நீண்ட கட்டுரை
  • தமிழகத்தின் காதல் கொலைகள் - புள்ளிவிவரங்களுடன் - முல்லை
  • டேவிட் பட விமர்சனம் - அரவிந்தன் சச்சிதானந்தன்
  • ஆஷிஸ் நந்தி ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பற்றித் தெரிவித்த கருத்தை ஆராயும் வினய் லாலின் டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.
  • ராஜஸ்தான் பறவைகள் சரணாலயம் ஒன்றில் கழுகுகள் வேட்டை பற்றிப் படங்களுடன் எழுதப்பட்டுள்ள கே.பி.கிருஷ்ணனின் கட்டுரை.
  • ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் குறித்து ரமணன்
  • விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழா தொடர்பாக அவரது சிந்தனைகளின் தாக்கம் குறித்து நா.சடகோபன்
  • சென்ற இதழில் அதியமான சுதந்தரச் சந்தைப் பொருளாதாரம் குறித்து எழுதியதற்கு மறுப்புக் கட்டுரை, சித்ரகுப்தன்.
  • மார்ச் 8 மகளிர் தினச் சிறப்பாக பாலினச் சமநிலை குறித்து பெ.சுப்ரமணியனின் கட்டுரை
  • இந்திய உளவுத்துறை ரா அலுவலராக இருந்த பி.ராமன் எழுதியுள்ள புத்தகத்தின் தமிழாக்கமான ‘நிழல் வீரர்கள்’ - புத்தக விமர்சனம் : ஆர். முத்துக்குமார்
மரண தண்டனை பற்றிய சிறப்புப் பகுதி
  • அப்சல் குரு தூக்கு தண்டனையை முன்வைத்து பின்னணித் தகவல்களுடன் இம்மானுவேல் பிரபு
  • வழக்கறிஞர் எஸ்பி சொக்கலிங்கம், கருணை மனு தொடர்பாக எழுதுகிறார்
  • வண்ண நிலவன் கருத்து, மரண தண்டனை குறித்து
  • ஜவாஹிருல்லாவின் கருத்து, அப்சல் குரு தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து
அஞ்சலிக் கட்டுரைகள்
  • எழுத்தாளர் மலர்மன்னன் குறித்து அசோகமித்திரன்
  • காந்தியவாதி ஜகந்நாதன் குறித்து அருண்
====

ஆழம் இதழ் மிகச் சில இடங்களில்தான் கிடைக்கிறது. 94459-01234 டயல் செய்து உங்கள் பிரதியை எப்படிப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆண்டுச் சந்தா எடுப்பது நல்ல விஷயம்.

8 comments:

  1. 'ஆழம் இதழ் மிகச் சில இடங்களில்தான் கிடைக்கிறது. 94459-01234 டயல் செய்து உங்கள் பிரதியை எப்படிப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆண்டுச் சந்தா எடுப்பது நல்ல விஷயம்.'
    இதன் மூலம் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்றால் ஆழம் இதழ் எளிதில் கிடைக்காது, அதையும் மீறி அதை வாங்குவது உங்கள் திறன் மற்றும் விருப்பம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்! குறைந்த பட்ஜெட்டில் வெளியாகும் மாத இதழ்களை விநியோகிப்பது மிகக் கடினமான காரியம். நல்ல இதழை விரும்பிப் படிக்கவேண்டும் என்றால் ஆண்டுச் சந்தாதான் சரியான வழி. விரைவில் NHM Reader வழியாக இணைய இதழ் கிடைக்கத் தொடங்கும்.

      Delete
  2. அலமாரி பிப்ரவரி இதழ் வந்துவிட்டதா? (சந்தா இருக்கிறது)

    அம்ருதா கூட கிடைப்பது கஷ்டமாகத்தான் உள்ளது.

    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. அலமாரி பிப்ரவரி இதழ் எல்லா சந்தாதாரர்களுக்கும் அனுப்பப்பட்டாயிற்றே? மார்ச் இதழே இன்று அச்சுக்குப் போய்விடும். மார்ச் இதழ் மார்ச் மாதம் இரண்டாம் வாரம் சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படும். தனியஞ்சல் அனுப்பினால் உங்களுக்கு ஏன் வரவில்லை என்பதைப் பார்த்து மாற்றுப் பிரதி கிடைக்கச் செய்கிறேன்.

      Delete
    2. Very sorry... i meant MARCH issue only, not February. Yes, February issue i got soon after i paid my subscription in Feb first week.

      Thanks.

      Saravanan

      Delete
    3. Alamari is on a mid-month cycle (to make it easier for us to manage). So you will get it next week. Every second week.

      Delete
  3. azham idhal kadakalai kidakuma?

    mannan, chidmbaram
    email: thirumannan@gmail.com

    ReplyDelete
  4. Hello Badri, I live outside India , but I am keen to read "ஆழம் இதழ்".. How can it be made possible?

    ReplyDelete