Monday, April 15, 2013

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா 2013

ஆமாம், இதுதான் இதன் அதிகாரபூர்வப் பெயர். சென்னையில் குறைந்தபட்சம் நான்கு நல்ல புத்தகக் கண்காட்சிகளை நடத்தமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் ஜனவரி புத்தகக் கண்காட்சி ஒன்றுமட்டுமே பதிப்பாளர் சங்கம் பபாசியால் தொடர்ந்து நடத்தப்பட்டுவந்துள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக, சென்னையில் இரண்டாவது புத்தகக் கண்காட்சி ஒன்றை பபாசி ஏற்பாடு செய்துள்ளது. இப்போது சென்னையில் ஒரே நேரத்தில் இரண்டு புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் லேடி வெலிங்க்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் ஒரு கண்காட்சி நடைபெறுகிறது. நேற்றே (14 ஏப்ரல் 2013, தமிழ்ப் புத்தாண்டு அன்று) இந்தக் கண்காட்சி ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் 28 வரையில் இந்தக் கண்காட்சி தொடரும்.


கிழக்கு பதிப்பகம், கடை எண் 130-131 என்ற இடத்தில் உள்ளது. கோடை விடுமுறை உள்ளவர்கள் சாவகாசமாக கண்காட்சிக்குச் சென்றுவிட்டு, அப்படியே பீச்சில் சுண்டல் வாங்கி சாப்பிட்டுவிட்டு வரலாம்.

மற்றொரு கண்காட்சியும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் நடைபெற உள்ளது. அதுகுறித்த தகவல்களை இங்கே காணலாம்.

4 comments:

  1. பத்ரி.. சித்திரைப் புத்தக்கக் காட்சியை ப்பாசி நடத்துவதாக் நீங்கள் அறிவித்திருப்பது தவறு. அதை நடத்துவது வேறொரு புதிய அறக்கட்டளை. அதற்கும் பபாசிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பபாஇருப்பது வியப்பாக இருக்கிறது. சியில் பொறுப்பில் இருக்கும் பலர் இதிலும் இருக்கிறார்கல் என்பதைத் தவிர. காட்சியில் பங்கு பெறும் உங்களுக்கு இந்தத்தகவல் தெரியாமல்

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி. இப்போதுதான் பிரசன்னாவிடம் கேட்டு உறுதி செய்துகொண்டேன். நீங்கள் சொல்வதுதான் சரி. என் பதிவில் மாற்றங்களைச் செய்துவிடுகிறேன்.

      Delete
  2. // வேறொரு புதிய அறக்கட்டளை. //
    // அதற்கும் பபாசிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பபாசியில் பொறுப்பில் இருக்கும் பலர் இதிலும் இருக்கிறார்கள் //

    பபாசி என்பது பொதுவாகப் புத்தகக் காட்சிகளை நடத்தும், தமிழக புத்தக விற்பனை சார்ந்த அமைப்பு, நீண்ட காலமாக இயங்கி வருகிறது. அந்த அமைப்பே சித்திரைப் புத்தகக் காட்சியை நடத்தாமல் வேறொரு புதிய அறக்கட்டளை நடத்துவதென்பது வியப்பும் மர்மமும் பொருந்திய ஒன்றாகத் தெரிகிறது. ஏற்கனவே இருக்கிற அமைப்பு உரிய முறையில் செயற்படவில்லையெனில் அல்லது அந்த அமைப்பின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்கள் நலன் சார்ந்து மட்டுமே அமைப்பை நடத்திச் செல்கிறார்கள் எனில் புதியதொரு அமைப்பு அல்லது அறக்கட்டளையின் வருகை ஏற்கக்கூடிய ஒன்றாகும். புதிய அறக்கட்டளையிலும் / நிர்வாகத்திலும் அதே பழைய பபாசி அமைப்பின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது எந்த அறம் சார்ந்தது என்பது தெரியவில்லை. யாரையோ ஏமாற்றுகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. கொள்கை அடிப்படையில் இரண்டாவது புதிய அமைப்புத் தோற்றம் பெற்றதாக அல்லாமல் நிர்வாகத்தில் இருப்பதனை மூலம் தனிநபர்கள் ஆதாயம் பெறுவதற்காகவே புதிய அறக்கட்டளையும் உருவாக்கப்பட்டுள்ளதும் தெரிகிறது.

    தமிழ்ப் பதிப்புலகின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்க்கும் நிலையில் ஒரு வலிமையான நல்ல அமைப்பை உருவாக்கும் நிலையில் யாரும் இல்லை.

    ReplyDelete