Saturday, April 20, 2013

நரேந்திர மோதி vs நிதீஷ் குமார்

நரேந்திர மோதி எதிர்ப்பாளர்கள் இப்போது தூக்கிப் பிடிப்பது நிதீஷ் குமாரை. குஜராத் மாடலுக்கு மாற்றாக ஏதோ பிகார் மாடல் என்று ஒன்று கண்டுபிடித்திருப்பதாக அவரும் சொல்கிறார், பிறரும் சொல்கிறார்கள். ஆனால் கண்ணுக்குத்தான் ஒன்றும் தெரியமாட்டேன் என்கிறது.

மோதி, குஜராத்தின் பெருமை என்பதை முன்வைக்கிறார். யார் தயவும் இன்றி தன் நிதிநிலைக்கு உள்ளாகவே, தானாகவே தன் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவருவேன், ஏற்கெனவே பெருமளவு கொண்டுவந்துள்ளேன் என்கிறார். மாறாக, நிதீஷ் குமார் முன்வைப்பது பெரும் யாசகச் சட்டியை. மத்திய அரசு நிதியுதவி அளிக்கவேண்டும் என்று ஏந்துகிறார். பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படவேண்டும் என்கிறார். உடனே ஒடிசா அடுத்து திருவோட்டைப் பெருமையுடன் ஏந்த ஒட்டுமொத்தமாக மாநில சட்டமன்றமே முன்வருகிறது. தீர்மானம் ஒன்றை இயற்றுகிறது.

இந்தக் கேடுகெட்ட சிறுமைக்கு மாற்றாக மோதி முன்வைப்பது பெருமையை. நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற பெருமித உணர்வை. அப்படித்தான் ஒரு காலத்தில் தன்னிறைவு பெற்ற அமைப்புகளாக நாம் இருந்தோம். இப்போதோ சோஷலிசச் சித்தாந்தத்தின் திருகுதாள வடிவமான ‘எனக்கு வேண்டும் entitilements, ஏனெனில் நான்தான் அதிகம் பாதிக்கப்பட்டவன்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். கையேந்து, கையேந்து, இன்னும் அதிகமாகக் கையேந்து.

மோதி ஒருவர்தான் நாட்டிலேயே அதற்கான மாற்றை வலுவாக முன்வைப்பவர். Right of Centre என்ற கருத்தாக்கத்தை இன்று பளிச்சென்று, ஜகா வாங்காமல், தைரியமாகப் பேசும் ஒரே அரசியல்வாதி அவர்தான். அதனை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிகிறது. கையேந்தும் அரசியலில் மேலிருந்து கீழ்வரை ஒருவர் மாற்றி ஒருவர் கையேந்திக்கொண்டே இருப்பதால், இந்நிலை மாற யாருமே அனுமதிப்பதில்லை. இலவச அரிசி, இலவச சேலை, இலவசப் பல்பொடி, மாதாந்தர நிதியுதவி என்று மாறி மாறி நிதியுதவி அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கேட்டால் நியோ லிபரல் பாலிசியால் யார் யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள் என்று சால்ஜாப்பு சொல்வது. ஒரு பெரும் மத்தியவர்க்கம் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருப்பதால்தான் இந்த நாடு இந்த அளவு முன்னேறியுள்ளது.

நிதீஷ் குமார் திடீர் என்று செகுலரிசம் பேசுகிறார். அத்வானி தேவலாம், ஆனால் மோதி கூடாது. என்றிலிருந்து அத்வானி செகுலரிசத்தின் ஏற்கத்தக்க முகமாக ஆகியுள்ளார்? பாஜகவுக்கு எந்த அளவுக்கு நிதீஷ் தேவையோ அதற்கும் அதிகமாக நிதீஷுக்கு பாஜக தேவை. லாலுவா, மோதியா, யார் பெரிய எதிரி என்பதை நிதீஷ் முடிவு செய்துகொள்ளவேண்டும். ஏதோ ஒரளவுக்கு முன்னுக்கு வந்துள்ள பிகார் மேலும் மேலும் முன்னேறவேண்டுமானால், அதற்கு பாஜகவின் துணை நிதீஷுக்கு மிக மிக அவசியம்.

மோதி எதிர்ப்பாளர்கள், மோதிக்கு பாஜக உள்ளேயே பெரும் எதிர்ப்பு இருக்கும், எனவே அவர் அதைத் தாண்டி வரட்டும் என்கிறார்கள். அந்த எதிர்ப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டே இருக்கின்றன. வரிசையாக பாஜக தலைவர்கள் மோதியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். பாஜகவின் வேறு எந்த முதல்வரும் ஊடகங்களின் ஆசைப்படி நடக்கப்போவதில்லை. அத்வானி, சுஷ்மா சுவராஜ் இருவரும்தான் இன்னும் தெளிவாகத் தங்கள் கருத்தைச் சொல்லவில்லை. வரும் சில மாதங்களில் அது தெளிவாகத் தெரிந்துவிடும். பாஜக மோதியின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்.

மோதி தலைமையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 140-150 இடங்களுக்குமேல் பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைக்கும். இதனால் பாஜக தலைமையில் மோதி பிரதமராக, ஒரு வலுவற்ற கூட்டணி ஆட்சிக்கு வரும். அதை வைத்துக்கொண்டு மோதியால் அதிகம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதிலிருந்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தும்போது மோதி தலைமையில் மிக வலுவான பாஜக ஆட்சி ஏற்படும். அப்போதுதான் இந்தியாவில் பெரும் மாற்றங்களைச் செய்ய முடியும். முக்கியமாக சோஷலிசக் கட்டமைப்புகள் பலவற்றை இழுத்து மூடவேண்டும். முதலாவதாக திட்டக் குழு. இதற்கு இன்று தேவையே இல்லை. நாடாளுமன்ற அமைப்புக்குள் இல்லாத இந்தத் தனி அமைப்புகளை ஒழிக்கவேண்டும். அதேபோல சோனியா காந்தி கொண்டுவந்துள்ள NAC.

கல்வி, தொழில்துறை, வரி போன்ற பலவற்றிலும் பெரும் மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும். அரசாங்கத்தைச் சுருக்கிச் சிறிதாக்கவேண்டும். ஊழல் பெருகும் இடங்களைத் தேடி தேடி அடைக்கவேண்டும்.

ஆனால் அதற்கு முன்னதாக பாஜக உள்ளேயே சில சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும். கோட்பாட்டுத் தெளிவு இல்லாத தலைவர்கள் ஒதுக்கப்படவேண்டும். பாஜக ஒரு உண்மையான வலதுசாரி இயக்கமாக, குழப்பங்கள் இன்றி, உருவாகவேண்டும்.

28 comments:

 1. சார் உங்களுக்கு யாரோ காவில சூனியம் வெச்சிட்டாங்க ஜி!

  ReplyDelete
 2. /// மோதி ஒருவர்தான் நாட்டிலேயே அதற்கான மாற்றை வலுவாக முன்வைப்பவர். ///

  வால்மார்ட்டையும், டீசல் மானியக் குறைப்பையும் எதிர்ப்பதைப் பார்த்தால் அப்படித்தெரியவில்லையே?

  அடுத்து ஒரு வலுவற்ற கூட்டணி ஆட்சி அமையும் என்பது சரிதான்; ஆனால் அது நிதிஷ் தலைமையிலேயே அமையும். அவர் கன்சென்சஸ் வேட்பாளராக உருவாகவே வாய்ப்புகள் அதிகம்.

  ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் பீகார் குஜராத்தைவிட முன்னணியில் உள்ளது. பீகார்தான் இன்று டாப் (12%) பெர்ஃபார்மர் என்பதை சவாமிநாதன் அன்கலேஷரிய ஐயர் சுட்டிக் காட்டியிருக்கிறார். http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/entry/bihar-champion-athlete-does-not-need-steroids குறைந்த அடித்தளத்திலிருந்து (லோ பேஸ்) ஆரம்பித்ததால்தான் ஒட்டுமொத்தமாக பணக்கார மாநிலமாக ஆக முடியவில்லை.

  மற்றபடி, குஜராத் மாநிலத்திற்கு முன்மொழியப்பட்ட எம.ஓ.யு.க்கள் நிஜத்தில் முதலீடான விகிதம் மிகக் குறைவு என்பதையும், குஐராத்தைவிட டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்கள் பல விஷயங்களில் நன்கு செயல்பட்டுள்ளன என்பதையும் பலர் காட்டியுள்ளார்கள்.

  மின்சாரம் தவிர்த்து பிற துறைகளில் யாரும் சாதிக்காத எதையும் குஐராத் சாதித்ததாகத் தெரியவில்லை. பெண்கள், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை தமிழ்நாட்டைவிட மோசமாக இருக்கிறது! மோடியிடம் இருப்பது பெரிய பிரச்சார பீரங்கி மட்டுமே.

  சரவணன்

  ReplyDelete
 3. பத்ரி, வழக்கமான கும்பலில் கோவிந்தா பதிவு இது. முக்கியமான 10 துறைகளை எடுத்துக் கொள்வோம். கல்வி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, கல்வியிலேயே அரம்பக் கல்வி, உயர் கல்வி, கிராமப் புற உள்கட்டமைப்பு, மின்சார வசதி, சிவில் சப்ளை இது போல். இதில் எல்லாம் குஜராத் என்ன ரேங்க் என சொல்ல முடியுமா? எதன் அடிப்படையில் மோடி சிறந்த முதல்வர்?

  ReplyDelete
  Replies
  1. I will respond in a detailed manner over the next few posts.

   Delete
 4. அவரை கொல்ல மாதாமாதம் வந்து கொண்டிருந்த தீவிரவாதிகள் அவர்களை சுட்டு வீழ்த்திய காவல்துறை உயர் அதிகாரிகள் சிறைக்கு சென்று விட்டதால் வருவதை நிறுத்தி விட்டனர்.அப்படிப்பட்ட RIGHT தான் மோடி
  டோசன் கணக்கில் காவல்துறை உயர் அதிகாரிகள் சிறைக்கு உள்ளிருக்கும் மாநிலம் எது தெரியுமா -RIGHT மாநிலமான குஜராத் தான்
  டெல்லியில் டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட்ட பெண்ணுக்காகவும்,இப்போது அதே கொடுமைக்கு உள்ளான ஐந்து வயது குழந்தைக்காக கொந்தளிப்பவர்களே RIGHT மோடி சண்டை போட்டு பொது செயலாளர் பதவி வாங்கி கொடுத்த அவரது வலது கை அமித் ஷா யார் தெரியுமா
  கௌசர் பி என்ற பெண்ணை அவர் கணவர் சொராபுத்தினோடு கடத்தி சென்று பாலியல் வன்முறை புரிந்து உடலை எரித்து கொன்ற குற்றத்தில் குற்றம் சாற்றப்பட்டுள்ள குற்றவாளி
  மனைவி மட்டும் அல்ல கடத்தலுக்கு சாட்சியான பிரஜாபதி என்பவரை பக்கத்து மாநில சிறையில் இருந்து நீதிமன்றத்தில் என் உயிருக்கு ஆபத்து என்று கதறிய கதறல்களையும் கண்டு கொள்ளாமல் போட்டு தள்ளிய Mr RIGHT
  அவருக்கு போட்டியாக இருந்த ஆர் எஸ் எஸ் ஜோஷி சி டி வெளிவந்து அவர் அரசியல் வாழக்கைக்கு முற்றுபுள்ளி வைக்க நடந்த முயற்சியில் RIGHT மோடிக்கு பெரும் பங்கு உண்டு.அவர் மறுபடியும் UP மாநில தேர்தலில் பொறுப்பு பெற்றதால் தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்த புண்ணியவான் RIGHT மோடி

  போட்டு தள்ளு போட்டு தள்ளு
  நமக்கு எதிரா இருக்கிறவன் யாரா இருந்தாலும் நம்ம கட்சி/ஆர் எஸ் எஸ் ஆ இருந்தாலும் போட்டு தள்ளு என்பதை
  விட
  கையேந்து கையேந்து இன்னும் அதிகமா கையேந்து எனபது பெரிய குற்றமா

  ReplyDelete
  Replies
  1. correct சொராபுதீன் இன்னொரு மகாத்மா காந்தி பாவம் கொலை பண்ணிடாங்க... poovannan உங்களுக்கு ஒரு விஷயம் புரியலைன்னா இப்படிதான் வாந்தி எடுப்பீங்கள .

   மோதிய எந்த வலதுசாரியும் 'இவர் எல்லா பிரச்சனையும் தீர்திடுவார்' அப்படின்னு சொல்லல. அவர 'larger than life' மனிதரா மாத்தினது உங்களைபோன்ற அரைகுறை லிபரல் ஆசாமிகள்தான். நீங்க இப்படி பேசரதனலாதான் என்னை போன்ற யாருக்கு வோட்டு போடுறதுன்னு முடிவு பண்ணாதவங்களையும் மோதிக்கு வோட்டு போட வைக்கப்போவதும் நீங்கதான்.

   Delete
  2. correct சொராபுதீன் இன்னொரு மகாத்மா காந்தி பாவம் கொலை பண்ணிடாங்க... poovannan உங்களுக்கு ஒரு விஷயம் புரியலைன்னா இப்படிதான் வாந்தி எடுப்பீங்களா

   மோதிய எந்த வலதுசாரியும் 'இவர் எல்லா பிரச்சனையும் தீர்திடுவார்' அப்படின்னு சொல்லல. அவர 'larger than life' மனிதரா மாத்தினது உங்களைபோன்ற அரைகுறை லிபரல் ஆசாமிகள்தான். நீங்க இப்படி பேசரதனலாதான் என்னை போன்ற யாருக்கு வோட்டு போடுறதுன்னு முடிவு பண்ணாதவங்களையும் மோதிக்கு வோட்டு போட வைக்கிரிங்க.

   Delete
  3. சோராபுத்தின் குற்றவாளி என்பதால் அவரோடு அவர் மனைவியை கடத்தி சென்று பாலியல் வன்முறை புரிந்து ,கொலை செய்து உடலை எரிப்பது தவறே கிடையாது. உங்கள் நியாய உணர்வு புல்லரிக்க வைக்கிறது
   இவர்களின் கடத்தலை வெளிக்கொண்டு வந்த சாட்சியை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு வந்து போட்டு தள்ளுவது தேசபக்தியின் உச்சம் அடடா

   இந்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு ,பிணையில் வெளிவந்து இருப்பவரை தவிர வேறு எந்த தலைவரும் மோடியின் கண்களுக்கு தென்படாததால் அவரை பொது செயலாளர் ஆக்கும் அப்பழுக்கற்ற மோடியின் நேர்மையை நினைத்தால் உச்சி குளிர்கிறதே
   காவல்துறை அதிகாரிகளை கைகழுவியதை போல அமித் ஷா வை கை கழுவ முடியாத அளவு வலுவான பிடி அவரிடம் இருக்கும் போல
   http://timesofindia.indiatimes.com/india/Fake-encounter-case-Tulsiram-cops-made-74-calls-to-Modis-office/articleshow/19655666.cms

   The top cops in the Tulsiram Prajapati fake encounter case were in constant tough with chief minister Narendra Modi's office during the time of encounter in December 2006. This is revealed in call details gathered by probe agency.

   Alleging that Modi was "the biggest political beneficiary of the encounters", Sohrabuddin Sheikh's brother Rubabuddin has sought further probe by the CBI into the call details that lead to the chief minister's office (CMO). Addressing newspersons, Rubabuddin's counsel Mukul Sinha said that in all 74 calls were made between two cops and the CMO during two encounters. Sohrabuddin was bumped off on November 26, 2005 and Tusliram was killed on December 28, 2006.

   Delete
  4. பொய் சொல்றதுக்கு அளவே இல்லையா. இதுக்கு மட்டும் newspaper cuttingக proof'அ தாங்க, ஆனா குஜராத் நல்லா முன்னேறி இருக்குன்னு newspaperல வந்தா 'இது பொய், காசுதந்து போட்ட நியூஸ் அப்படின்னு உளறி வையுங்க', உங்களை மாதிரி அரைகுறைகதானே இப்போ internet முழுக்க இருக்குது, அதனால கவலை இல்லாம உங்க பொய் பிரச்சாரத்த continue பண்ணுங்க.

   Delete
 5. மோடி என்பவர் முதல்வர் பதவிக்கு எப்படி வந்தார் என்பதில் இருந்து பார்க்க துவங்கினால் அவரால் வர கூடிய ஆபத்து தெளிவாக விளங்கும்
  ஒரு ஊராட்சி தேர்தலில் கூட நிற்காமல் ஆர் எஸ் எஸ் உயர் தலைவர்களை காக்காய் பிடித்து ,சூழ்ச்சி அரசியல் செய்து நேரடியாக பின்பக்கமாக முதல்வர் ஆனவர்.பல ரைட் ஆதரவாளர்களின் ,RIGHT களின் கனவு அது
  சொந்தமாக ஜெயிக்க ஒரு தொகுதி கூட கிடைக்காமல் ,ஜெயிக்க கூடிய தொகுதியாக தேர்ந்தெடுத்த தொகுதியின் எம் எல் ஏ ஹரேன் பாண்ட்யா அதற்க்கு ஒத்து கொள்ள மறுத்ததால் அவரை பதவியில் நேரடியாக உட்கார வைத்த தலைவர்களின் வேண்டகோளை புறக்கணிக்க மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாடி மிரட்டி அவர் அரசியல் வாழ்வை அழித்தவர்.அவரும் கொல்லப்பட்டது (குடும்பத்தினர் அதற்க்கு காரணம் என்று பல ஆண்டுகளாக கதறுவது யாரை பார்த்து தெரியுமா RIGHT மோடி )
  நாம் ஐந்து நமக்கு இருவத்தி ஐந்து என்று இஸ்லாமியரை நக்கல் செய்து,தேர்தலை உடனே நடத்த மறுத்த தலைமை தேர்தல் அதிகாரியை james மைகேல் lyngdoh என்று கூட்டம் கூட்டமாக முழங்கி அவர் மதத்தின் காரணமாக எதிர்க்கிறார் என்று பழி போட்ட RIGHT தான் மோடி

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்லுகின்ற மாதிரியான விசயங்களை எந்த இந்திய அரசியல்வாதி பண்ணலை. ஜாதியே இல்லைன்னு சொல்லிட்டு ஒவ்வொரு தொகுதியிலையும் ஜாதிய பாத்து வேட்பாளரை நிறுத்தும் திராவிட கட்சிகளை என்ன சொல்லுவிங்க... ஒட்டுமொத்தமா ஒரு ஆட்சியாளர் என்ன மாற்றத்தை எடுத்துட்டு வந்திருக்கிறார் என்றுதான் பார்க்கவேண்டும். 'west bengal'லில் நடந்த பாட்டாளி ஆட்சிய மறக்க முடியுமா, வரலாறு காணாத தேர்தல் தில்லுமுல்லுகள் மூலம் திரும்ப திரும்ப ஆட்சியை பிடித்த ஜோதிபாசுதான் உங்களுக்கு ஜனநாயக முதல்வர் ( சேஷனே ஒருமுறை புலம்பினார் "west bengal'லில் தேர்தலையே நடத்த முடியவில்லை என்று", தோழர்களின் வல்லமை அப்படி). இந்தியாவின் செழிப்பான ஒரு மாநிலத்தை பிச்சைக்கார மாநிலமா மாத்தினது மாதிரி மாத்தினாதான் அவர் ஒரு சரியான மக்கள் நலம் நாடும் முதல்வர் சரிதானே பூவண்ணன்.

   Delete
  2. என்னா பண்ணினார்னு/கிழிசுட்டார்னு கொஞ்சம் சொல்லுங்களேன்

   ஆ ன்னு வாயை பொளந்துட்டு நாங்களும் கேட்கிறோம்

   ஆண் பெண் சதவீதத்தில் குறைவாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை அவரின் பத்து ஆண்டு ஆட்சியில் மாற்றி விட்டாரா

   மத்திய அரசு பணிகளில் நூத்துக்கு ஒன்று ,இரண்டு குஜராத்திகள் கூட இல்லாத நிலையில் இருந்து பத்து பேராவது சேரும் அளவிற்கு மாற்றி விட்டாரா

   மற்ற மாநிலங்களை விட அதிக இடங்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்களுக்கு வேலை,கல்லூரிகளில் கிடைக்குமாறு செய்துள்ளாரா

   பழங்குடியினர்,தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் மத்திய மாநில அரசு கல்வி,வேலைவாய்ப்பில் இடம் பிடிக்க காரணமாக இருந்துள்ளாரா
   குடும்ப கட்டுப்பாடு திட்டங்களின் மூலம் பிறப்பு விகிதத்தை விரும்பிய அளவிற்கு குறைத்து விட்டாரா
   குடி தண்ணீருக்காக மக்கள் கொஞ்சம் கூட சிரமப்பட வேண்டிய தேவை இல்லாமல் செய்து விட்டாரா
   இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவம் பார்த்து கொள்ள/படிக்க/வேலை செய்ய லட்சக்கணக்கில் ஓடி வரும் நிலைக்கு மாநிலத்தை மாற்றி விட்டாரா(நம்ம ஊழல் தமிழகத்திற்கு படிக்க,மருத்துவம் பார்க்க,வேலை பார்க்க வருபவர்களில் பத்தில் ஒரு பங்காவது எட்டி இருக்கிறாரா )
   விளையாட்டு துறையில் குஜராத்திகள் அவரின் ஆட்சியில் கீழ் ஓரளவிற்காவது முந்தைய நிலையை விட முன்னேறி இருக்கிறார்களா

   மருத்துவ படிப்பு,செவிலியர் படிப்பு,பொறியியல் போன்றவற்றில் மாநிலத்தின் தேவை அளவிற்காவது அங்கு மாணவர்கள் படிக்கிறார்களா /இருக்கிறார்களா இல்லை பக்கத்து மாநிலங்களை நம்பி தான் அங்கு பள்ளிகள்/கல்லூரிகள்/மருத்துவமனைகள் இருக்கின்றதா

   Delete
  3. first இந்த problemமெல்லாம் இந்தியா முழுக்க solve ஆகிடுச்சா, சரி உங்க சீனா எப்படி, அத விடுங்க நம்ம 'West Bengal' எப்படி இருக்கு, 25 வருசமா ஜோதி பாசு என்ன பண்ணி கிழிச்சாரு கொஞ்சம் சொல்லுங்க நாங்களும் கேட்டுக்கிறோம்

   Delete
 6. பெருமை பெருமிதமா
  கிலோ என்ன விலை என்று தான் கேட்பார்

  தமாதூண்டு ஏழை மாநிலம் மணிபூர் கையேந்தும் மாநிலம் தான்
  தேசிய விளையாட்டு போட்டிகளில் 48 தங்கம்.நம்ம பெருமித பணக்கார சுயம்பு சுயமரியாதை கொண்ட குஜராத் மாநிலம் மொத்தமா ரெண்டு வெள்ளி
  கலை,அறிவியல்,விளையாட்டு,ராணுவம்,துணை ராணுவம்,மத்திய அரசு பணிகள்,விஞ்ஞானிகள்.ஆட்சி பணியாளர்கள் என்று எல்லாவற்றிலும் பூஜியதிர்க்கு அருகில் தான் குஜராத்திகள்
  ஒவ்வொரு மாவட்டத்திற்கு என்றும் ராணுவத்தில் சேர இட ஒதுக்கீடு உண்டு.அந்த இடங்கள் கூட பூர்த்தி ஆகாத மாநிலம் நம்ம குஜராத் தான்

  ReplyDelete
 7. பெரும்பாலானவர்கள் திரும்பத் திரும்ப சொல்வதை வைத்துப் பார்க்கும் போதும்.....

  இலவசங்கள் கொடுக்காமலேயே தொடர்ந்து ஒரு மாநிலத்தில் அருதிப் பெரும்பான்மையுடன் பெரிய கூட்டணி எதுவுமின்றி (இதை ஏன் சொல்கிறேன் என்றால் தமிழகத்தில் எம் ஜி ஆர் நிறைய இலவச திட்டங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தியதாலும் அப்பொழுது 15 சதவிகித வாக்கு வங்கியை வைத்திருந்த காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததாலுமே தொடர் வெற்றி பெற்றார். அதை இதனுடன் ஒப்பிடக்கூடாது என்பதால் தான்!)... ஒருவர் வெற்றி பெற்று வருகின்றார் என்றால்....

  அவருக்கு ஏன் இந்தியாவை ஆள ஒரு முறை வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கக் கூடாது? என்ற எண்ணம் வலுவக எழுகிறது. ஏதோ இப்பொழுது இந்தியா பூமாலை போன்று இருக்கிறது, அதை குரங்கு கையில் கொடுத்துவிடக் கூடாது என்பது போல் எல்லாம் சிந்திக்க எதுவும் இங்கு இல்லை.

  ஏற்கனவே இந்தியா குரங்கு கைகளில் தான் இருக்கிறது, ஒரு வேளை மோடியும் குரங்காகவே இருந்துவிட்டாலும் எந்த பாதிப்பும் இப்பொழுது இருப்பதை விட அதிகமாக வந்துவிடப்போவதில்லை! மேலும் அவருக்கு மாற்றாக இதுவரையிலும் கண்ணுக்குத் தெரிவது எல்லாமே குரங்குகளாகத்தான் இருக்கின்றார்கள். ஒரு வேளை மோடி நல்ல மனிதனாகவே இருந்து விட்டால் நமக்கெல்லாம் நன்மை தானே?! ஆகையால் மோடியிடம் ஒரு முறை இந்தியாவை தந்து பார்ப்பதில் எந்த ரிஸ்க்கும் இல்லை என்பதே என் கருத்து.

  ReplyDelete
  Replies
  1. அப்படிப் பார்த்தால் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே! பிஜேபி, காங்கிரஸ் இரண்டையும் பார்த்துவிட்டோம். புதுக் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரலாமே. (அவர் காமெடியன் அண்ணா ஹசாரேயிடம் இருந்து விலகி, நான் நடத்துவது அரசியல் கட்சிதான் என்று தெளிவாக அறிவித்து விட்டதால் சொல்கிறேன்.)

   சரவணன்

   Delete
 8. கார்த்திக்Sat Apr 20, 03:03:00 PM GMT+5:30

  //மோதி தலைமையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 140-150 இடங்களுக்குமேல் பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைக்கும் //

  மிகச்சரி.  //இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தும்போது மோதி தலைமையில் மிக வலுவான பாஜக ஆட்சி ஏற்படும் //

  எப்படி இது சாத்தியம் என்று சற்று விளக்கமுடியுமா பத்ரி?

  கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்குவங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப், காஷ்மீர்.
  இந்த மாநிலங்களில் பி.ஜே.பி மருந்துக்கும் கூட கிடையாது. இங்கு கால் ஊன்றாமல் அவர்களின் பலம் 140 விட்டு மேலே செல்லப்போவதில்லை.

  மகாராஷ்ட்ரா, குஜராத், மத்யபிரதேஷ்-சட்டிஸ்கர், உத்ரபிரதேஷ், ராஜஸ்தான், பிகார்-ஜார்கண்ட், இமாச்சல், டெல்லி இது மட்டும்தான் பி.ஜே.பி ஏரியா. வரும் தேர்தலில் இந்த மாநிலங்களில் பி.ஜே.பி எவ்வளவு இடங்களில் வெல்கிறதோ அதுதான் அதன் முழுபலம். இந்த பலம் 2 ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்பு இல்லை லேசாக சரியவே வாய்ப்பு உண்டு அத்தகைய நிலையில் 140 க்கும் கீழே போகத்தான் வாய்ப்புண்டு.

  கர்நாடகத்தில் பி.ஜே.பி இனி கேள்விக்குறிதான். பிரித்தாளும் காங்கிரஸ் கொள்கை மூலம் அங்கு இது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. அங்கு பாம் வெடித்ததை எல்லாம் மக்கள் காமெடியாக பார்க்கிறார்கள். கடந்த தேர்தலுக்கு முன்பும் பாம் பல இடங்களில் வெடித்தது. இது தேர்தல் நேர டம்மி பாம். இந்த நிலையில்தான் கர்நாடக பி.ஜே.பி உள்ளது.

  so மோதி வந்தாலும் அவர் இன்னும் ஒரு மன்மேகன்சிங்கே!

  பி.கு: இந்த கட்டுரை மறைந்த திரு. டோண்டு ராகவன் எழுதியது போலவே இருந்தது.

  ReplyDelete
 9. ஹரண் சொல்வது போல யாரோ உங்களுக்கு சூனியம் வைத்தது ஒருபுறமிருக்கட்டும். நீங்களே மோடி சூனியத்துக்குள் சிக்கிக்கொண்டீர்களோ என்று பயமாகவும் இருக்கிறது.
  ‘இந்தக் கேடுகெட்ட சிறுமைக்கு மாற்றாக மோதி முன்வைப்பது பெருமையை. நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற பெருமித உணர்வை‘ என்று சுட்டிக்காட்டுகிறீர்கள். வெறுமனே பெருமித உணர்வு என்ன பலனைத்தரும் என்பது உங்களுக்குத் தெரியாதா? வெறும்பெருமையால் மட்டுமே ஜெயித்துவிட முடியுமா?
  ‘மோதி ஒருவர்தான் நாட்டிலேயே அதற்கான (கையேந்துவதற்கு) மாற்றை வலுவாக முன்வைப்பவர்‘ என்றும் சொல்கிறீர்கள். குஜராத மாநில அரசின் வலைத்தளங்களில் மத்திய அரசிடம் வாங்கித்தான் அவரும் செய்வதாகக் குறிப்பிடப்படுள்ள தகவல்கள் நிறையவே இருக்கின்றன.
  ‘மோதி தலைமையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 140-150 இடங்களுக்குமேல் பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைக்கும்‘ என்று இந்த இடத்தில்மட்டும் மிகச்சரி யாகப் பேசுகிறீர்கள். இதுதான் இன்றைய... நாளைய.... என்றைய... நிலையும் கூட! அதற்காக இரண்டு ஆண்டுகள் மோடி பிரதமராக இருந்து... ஆட்சியைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தும்போது மீண்டும் வலுவான நிலைக்கு வருவார் என்று சொல்லுமிடத்தில்தான் உங்களுக்கு வைக்கப்பட்டுள்ள சூன்யம் வேலை செய்கிறதோ என்ற பயம் வருகிறது.

  ReplyDelete
 10. ///ஏதோ ஒரளவுக்கு முன்னுக்கு வந்துள்ள பிகார் மேலும் மேலும் முன்னேறவேண்டுமானால், அதற்கு பாஜகவின் துணை நிதீஷுக்கு மிக மிக அவசியம்./// பீகாருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது தனது மகளை பெங்களூர் பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பீகார் வாசி ஒருவரிடம் கேட்டேன், பீகார் மிகவும் முன்னேறியிருக்கிறதாமே என்று,, அவர் மிகவும் கடுப்பாக பதில் சொன்னார் 'ஆம், பத்திரிக்கைகளில் முன்னேறியிருக்கிறது என்று. மீடியாக்களிலும் செய்திகளிலும் முன்னேறிவிட்டோம் என்று அச்சடித்துக் கொள்கிறார்கள். அவ்வளவு தான்' என்றனர். பீகார் சென்று பார்த்தால் அருமையான நல்ல தார் சாலைகள் நகர் முழுவதும் இருந்தது. உள்ளூர் வாசி கூறினார் 'ரோடு போட்டே ரெண்டாவது முறையும் ஆட்சியைப் பிடித்த முதல்வர் நிதீஷாகத்தான் இருக்கும் என்று! சாலை போட்டு விடுதலே பெரிய முன்னேற்றம் என்னுமளவு பீகார் நிலை பின் தங்கி இருந்திருக்கிறது போலும்! இதற்கே நிதீஷ் குமார் பீத்திக் கொள்கிறார்.

  ///இப்போதோ சோஷலிசச் சித்தாந்தத்தின் திருகுதாள வடிவமான ‘எனக்கு வேண்டும் entitilements, ஏனெனில் நான்தான் அதிகம் பாதிக்கப்பட்டவன்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். ///


  சோஷலிஷ சித்தாந்தம் எல்லோரையும் பிச்சைக்காரர்களாக்குவது, முதலாளித்துவ சித்தாந்தம் எல்லோரையும் அடுத்தவர் வயிற்றுச் சோற்றை திருடும் கொள்ளையர்களாக ஆக்குவது. இரண்டுக்கும் நடுவே இருப்பது தான் மோடி சித்தாந்தம். அது ஹிந்துஸ்தானத்தின் சுதந்திர மக்களின் சுயசார்புள்ள சமூக வியாபாரப் பொருளாதாரம். இதனை உடைத்தெரிந்தது பிரிட்டிஷ் அரசு. அதனை மீண்டும் பாரதம் முழுதும் கட்டமைக்க வேண்டும். அதனையே மோடி வலியுறுத்துகிறார்.

  ReplyDelete
 11. தற்சார்பு பொருளாதாரத்தை முன் வைப்பது, இந்திய முதலாளிகளை மட்டும் கூட்டி முதலீடு செய்ய வைப்பது என்கிற உத்தி எந்தளவிற்கு பலன் தந்தது என்பது தெரியவில்லை. மோடி வழியை ஏன் நிதீஷ் பின்பற்றவில்லை? பீகாரில் அடிப்படை வசதிகள் சிறப்பாக இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சி அயல் முதலீடுகள் இன்றியே முன்னேற்றம் காணும் என்கிற நிதீஷின் கனவு சாத்தியப்படுகிறதா இதுவும் தெரியவில்லை. சரி மோடி, நிதீஷ், மமதா, ஜெயா, முலாயம், அத்வானி போன்ற பிரதமர் பதவி பெறக்கூடிய தலைவர்களிடம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு என்ன செயல் திட்டம் இருக்கிறது? மோடி குஜராத்தில் செய்ததை அப்படியே இந்தியா முழுதும் செய்ய முடியுமா? அல்லது அதற்கான தனித்த யோசனைகள் அவரிடமோ அல்லது சங் பரிவாரிடமோ இருக்கிறதா? தற்சார்பு என்று பேசினால் உலகமயமாக்கலை கைவிட வேண்டும். இது சாத்தியமா? இரண்டையும் எப்படி ஒரு சேர நடைமுறைப்படுத்துவது? மோடியிடம் எதிர்ப்பார்கக் கூடியது ஐமுகூவின் குளறுபடிகளை சரி செய்வது, நிலையான எரிபொருள் கொள்கை, வரி தொடர்பான சட்டங்களை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துவது, முடிந்தளவு கருப்புப்பணத்தை திரும்ப கொண்டு வருவது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது, மாநில அரசுகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்க கட்டாயப்படுத்துவது, விவசாயத்தை மீட்பது, சூழலைக் காக்கும் தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை தருவது, சீனாவுடனும், அமெரிக்காவுடனும் நெருங்கினாலும் நமது தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் இருப்பது, சண்டையை விட சமாதானத்தை முன்னெடுப்பது (இது வாஜ்பாய் உத்தி) போன்றவற்றைத்தான். வலுவான தலைமையின் கீழ் இந்தியா இருக்கிறது என்றால் பிற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை உணர்வு வரும். அதைத்தான் மோடி தலைமையிலான கூட்டணி அரசின் அதிகபட்ச நன்மையாக நான் கருதுகிறேன்.

  ReplyDelete
 12. அலட்சியம், அவநம்பிக்கை, நேர்மையின்மை, அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு, ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரம்,
  அதிகாரிகளின் நியாயமற்ற நடவடிக்கைகள், ஊழல், பொறுக்கியெடுத்த கயவர்கள் அரசின் ஆட்சிப்பணிகளில் குறுக்கிடுதல் - இப்படியே பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு மோடியின் நிர்வாகத் தெளிவு, ஆட்சியில் ஊழலின்மை, முன்னேற்றம் என்பது பற்றிய பேச்சே எப்போதும் பேசுதல், நம்பிக்கை, எதிர்காலம் பற்றிய ஒரு புரிதல் கலந்த அணுகுமுறை, சாதி சார்ந்த அரசியல் செய்யாமல் இருத்தல் -- இவற்றை எல்லாம் பார்த்தால் சற்று வியப்பாகத்தான் இருக்கும். அதனாலேயே ஆங்கில ஊடகங்களால் பழிவாங்கப்படுகிறார் மோடி.

  மோடி பற்றி வசை பாடும் வானம்பாடிகள் என்ன கூறுகிறார்கள் ? அவர் ஊழல் செய்தார் என்றா ? அவர் பணம் சுருட்டினார் என்றா ? குடும்ப அரசியல் செய்கிறார் என்றா ? இல்லை.

  இவை அனைத்தும் இல்லாமல் அரசு புரிகிறார் என்பதால்தான் அவர் மீது குற்றச்சாட்டு.

  குற்றம் சாட்டுபவர்கள் யார் ? மகாத்மா காந்தியும், காமராஜருமா ? இல்லையே ? குற்றம் சாட்டுபவருக்கும் அவ்வாறு செய்ய ஒரு அருகதை வேண்டாமா ?

  மின்சார நிர்வாகத்தில் இந்தியா எங்களிடம் கற்க வேண்டும் என்கிறார். தவறு என்ன ? குஜராத்தின் மின் நிலையங்கள் உற்பத்தித் திறன் (Plant Load Factor) இந்திய சராசரியை விட உறைந்தே உள்ளதே ! மின் மிகு மாநிலமாக உள்ளதே ( கடந்த பத்து ஆண்டுகளில் ). அது ஒரு தவறா?

  இடது சாரி சார்ந்த கருத்தாக்கங்கள் இருக்கலாம், அரசுகள் வரலாம், காங்கிரஸ் போன்ற இடதும் வலதும் இல்லாத ஒரு குழப்ப அரசும் வரலாம் ஆனால் தேசிய நலன் கருதியினும் ஒரு வலது அலறசு வரக்கூடாது என்பது ஓர் தேசத்ரோக எண்ணம்.

  அவரது பொருளியலைப் பற்றியும், நிர்வாகத் திறன் பற்றியும் ஆட்சியில் உள்ள நேர்மை பற்றியும் சிங்கபூர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் வழங்கியுள்ள நற்சான்றுகள் பல. ராஜீவ் காந்தி அறக்கட்டளை சோனியா காந்தியினால் நடத்தப்படிகிறது.அது முதற்கொண்டு குஜராத் மிகச்சிறந்த மாநிலம் என்று விருது வழங்கியுள்ளது. அது தவிர ஐக்கிய நாடுகள் சபையும்.

  இது எதுவுமே போதவில்லை என்றால், கீழே உள்ள இணைய தளத்தைப் பார்க்கவும்.
  http://www.gujaratindia.com/state-profile/awards.htm

  ReplyDelete
 13. எக்ஸ்ப்ரஸின் பிரபுசாவ்லா'வின் தலையங்கத்தின் மொழிபெயர்ப்பு போல இருக்கிறது இந்தக் கட்டுரை.

  எல்லோரும் நினைப்பது போல மோடி என்டிஏ'யின் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது எளிதல்ல; சுஷ்மா,அத்வானி கூட்டணியே மோதி ஒருங்கிணைந்த என்டிஏ'யின் வேட்பாளராக வரக் கூடாது என்பதில் ஆர்வமாக இருப்பது தெரிகிறது.

  ராஜ்நாத் மற்றும் அருண் ஜெட்லி தவிர வலிமையாக மோதியை ஆதரிப்பது யார் என்று பார்த்தால் ஒருவரும் தெரியவில்லை.

  நிதிஷ் நீங்கள் சொல்வது போல் நானும் ரவுடிதான் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்! ஆர் எஸ் எஸ் வெளிப்படையாக காய்களை நகர்த்தும் நிலையில்தான் மோதி பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு தெளிவாகும்.

  ReplyDelete
 14. நானும் ரெளடிதான் ஜீப்பில ஏத்துங்க என்கிற மாதிரி நானும் வலதுசாரிதான் மோடிக்கு ஜே சந்தைப் பொருளாதாரத்திற்கு ஜே என்று என்னதான் நீங்கள் எழுதினாலும் கண்டுகொள்ள வேண்டியவர்கள் உங்களை கண்டுகொள்வதில்லையோ :). பாஜகவில் உள்ளவர்களுக்கு அதீதவலதுசாரிகளை ஆவதில்லை. .நீங்கள் சொல்கிற வலதுசாரி சிந்தனையை பாஜக உட்பட எந்தக் பெரிய கட்சியும் இன்று ஏற்காது.ஒளிரும் இந்தியா பிரச்சாரம் தோற்றுப் போனதை நீங்கள் மறந்தாலும் அவர்கள் மறக்கவில்லை. உங்களுக்கு வலதுசாரியாக காட்டிக்கொள்வதில் ஆர்வமிருக்கலாம்,பாஜக அப்படி காட்டிக்கொள்ளாது.மோடியும் தன்னை 100% வலதுசாரியாக காட்டிக்கொள்வதில்லை.வலதுசாரியாக வெளிப்படையாக சொல்லிக்கொள்ளும் சு.சாமியின் ஜனதா கட்சிதான் உங்களது வலதுசாரி கொள்கைகளை ஏற்கும்.

  ReplyDelete
 15. அடுத்த பிரதமராக "கஞ்சா கருப்பு" வந்தாலும் பரவாயில்லை..
  "ம.மோ.சி". மட்டும் கூடாது.

  ReplyDelete
 16. 2011இல் நான் பீஹார் சென்றிருந்தேன். தலைநகர் பட்னாவில் பஸ்கள் ஒடின - பெரும்பான்மயும் மினிபஸ் மட்டுமே. பட்னாவிலிருந்து 55கிமி உள்ள வைஷாலி, 70 கிமி உள்ள ராஜகீர் (பிம்பிஸாராவின் தலைநகர் ராஜாகிருஹா), அதன் 10கிமி அருகே நாளந்தா, 50கிமி கடந்து புத்தகயா இங்கெல்லம் சென்றேன். இம்மூன்று நகரங்களிலும் மின்சாரம் உண்டு - ஒன்றிலும் பஸ் இல்லை. வைஷாலி சிறு கிராமம். கயா, ராஜ்கிர் பெரு நகரங்கள் - கோவை மதுரைப்போல. நெடுன்சாலையில் பல நூறு லாரிகளை பார்த்தேன். ஆனால் ஒரு பஸ் கூட பார்க்கவில்லை. அவ்வூர்களில் 30,40 ஆட்டேக்களும் டாடா ஏஸ் வண்டிகளும், சுமார் 300 குதிரை வண்டிகளும் இருந்தன. இலங்கை, சீனா, தாய்லந்து, ஜபான் நாட்டு புத்த் பக்தர்கள் வந்த தனியார் ஏழெட்டு ஏசி வோல்வோ பஸ்கள் மட்டும் விதிவிலக்கு.

  சென்னையிலிருந்து கோவைக்கோ மதுரைக்கோ பஸ்ஸில்லை என்றால் என்ன நினைப்போம்? பட்னா - ராஜ்கிர் 70 கிமி செல்ல நான்கு மணி நேரம் ஆனது. லாலு ஆட்சியில் 8 மணி நேரம் ஆகுமாம், மாலை 5 மணிக்கு மேல் மரண பயத்தில் ஒருவனும் வரமாட்டானாம். நிதிஷ் ஆட்சியில் இந்த பயம் இல்லை.

  24 மணிநேர தொலைக்காட்சி ஒன்றிலும் பீஹாரையோ குஜராத்தையோ ஒரு photo கூட நாம் பார்ப்பதில்லை. நாடு முழுவதும் பீஹாரி கூலிவேலைக்காரர் பரவியுள்ளனர். குஜராத்திகள் முதலாளிகளாகவோ white collar worker-களாகவோ மட்டுமே உள்ளனர்.

  இதுவரை நான் குஜராத் செல்லவில்லை.
  -ர.கோபு

  ReplyDelete
 17. இந்தியாவின் பிரதமராவதற்கு ந்ரேந்திர மோடிக்குத் தகுதி உண்டா என்பது பற்றி இனி நிதிஷ் குமார் வாய் திறக்க மாட்டார். ஏனெனில் மத்திய அரசு பீகாருக்காக ரூ 12 ஆயிரம் கோடி ஒதுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
  அடுத்த பிரதமரை மேடையிலான விவாதங்கள் மூலம் ஊடகங்கள் மூலமான் காரசாரமான விவாதம் மூலம் தீர்மானிக்க முடியாது. புதிதாக ஏற்ப்டப் போகும் மக்களவையில் பெரும்பான்மை பெறுகின்ற கட்சியின் அல்லது தேர்தலுக்குப் பிறகு கூட்டணி சேரும் க்ட்சிகளின் உறுப்பினர்கள் ( எம்பிக்கள்) தீர்மானிக்கப் போகிறார்கள். அதிலேயும் பல பேரங்கள் நடக்கலாம். ஆகவே இப்போதைய விவாதங்கள் அர்த்தமற்றவை.
  தேவே கௌடா பிரதமராக்கப்பட்ட போது பல முக்கிய தலைவர்கள் கூடிப் பேசி அவரை வற்புறுத்தி பிரதமர் பதவியை ஏற்கும்படி செய்தாரகள் என்பதை மறந்து விடக்கூடாது.
  அதற்கு முன்னர் மொரார்ஜி தேசாயை ஜெயப்பிரகாஷ் நாராயண் பிரதமராக நியமித்தார்.
  இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது பிரணவ முகர்ஜியை ஒதுக்கித் தள்ளி ராஜிவ் காந்தியை இழுத்து வந்து பிரதமராக்கினார்கள்.
  லால் ப்கதூர் சாஸ்திரி காலமான போது காமராஜர் தான் இந்திரா காந்தியை தேர்ந்தெடுத்து பிரதமராக்கினார்
  இவை ஒரு புறம் இருக்க வலுவில்லாத ஒருவரைப் பிரதமராக்கினால் தான் தங்களால் அவரை ஆட்டுவிக்க முடியும் என்ற கோணத்திலும் முடிவுகள் எடுக்கப்படுவது உண்டு.இதர்கு முன்னரும் இப்படி நடந்தது உண்டு. ஆகவே பொறுத்திருந்து பார்ப்பதே நல்லது.

  ReplyDelete
 18. பூவண்ணன் ஜி திட்ற ஒரே காரணத்துக்காகவாவது மோடியை பிரதமாக்கிடணும். தீயா வேலை செய்யணும் ஜிக்களா.

  ReplyDelete
 19. பூவண்ணன் G மாதிரி ஆளுங்க இல்லாட்டி தமிழ்நாட்டுக்கு களையே இருக்காதே!

  ReplyDelete