Tuesday, April 02, 2013

மாணவர் போராட்டம்

இந்த வாரம் புதிய தலைமுறை இதழில் ஆசிரியர் மாலன், ஏழு மாணவர்களுடன் நடத்திய ஒரு கலந்துரையாடலின் டிரான்ஸ்கிரிப்ட் வெளியாகியிருந்தது. கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் நிகழ்ந்த பல மாணவர் போராட்டங்களின் பின்னணியில் இந்தக் கலந்துரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

போராட்டம் எதிர்பார்த்தபடியே, தனித் தமிழ் ஈழம், ராஜபட்சேவைத் தூக்கிலிடு, (இலங்கையில்) பொது வாக்கெடுப்பு, தனித் தமிழ்நாடு, காங்கிரஸை ஒழிப்போம், துரோகி கருணாநிதி, அமெரிக்காவின் இரட்டை வேடம் என்று போகத் தொடங்கியிருந்தது.

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் புரிதல் பற்றி அவர்களின் ஆரம்பக்கட்ட ஒன்பது கோரிக்கைகளைப் பார்த்தவுடனேயே எனக்குப் பெரும் வருத்தம் ஏற்பட்டிருந்தது. இறுதிவரை இந்த வருத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படாதவகையிலேயே மாணவர் பிரதிநிதிகளும் நடந்துகொண்டதுபோலவே தோன்றியது.

புதிய தலைமுறை கலந்துரையாடலில் ஒரு மாணவர் தினேஷ் (சென்னை சட்டக்கல்லூரி, ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான போராட்டக்குழு) சொல்லியுள்ள ஒரு கருத்து மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.
தினேஷ்: தலைநகர் தில்லியில், குறிப்பாக, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கங்கள் எப்போதுமே மிக வலுவாக இருக்கின்றன. காரணம், அங்கு அந்த மாணவர்கள் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் சமூகப் பிரச்னைகளையும் தொடர்ச்சியாக விவாதிக்கிறார்கள். அரசியல், சமூகப் பிரச்னைகள் மீதான ஆர்வமும் அரசியல் உணர்வும் அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. அதனால்தான் அங்கு மாணவர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. அப்படிப்பட்ட சூழல், தமிழகக் கல்வி நிலையங்களில் கிடையாது.
ஜே.என்.யூவில் எந்த அளவுக்கு மாணவர்கள் அரசியல் நிகழ்வுகளையும் பிரச்னைகளையும் அலசுகின்றனர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் மாணவர் தினேஷ் சொல்லியுள்ளபடி, தமிழகக் கல்லூரிகளில் இந்த அலசல் ஆரம்பித்துவிட்டாலே போதும். அவர்கள் எந்தக் கோணத்திலிருந்து வேண்டுமானாலும் இந்தப் பிரச்னைகளை அலசட்டும் - திராவிட, தலித், பிராமண, வலது, இடது என்று எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும். பேச ஆரம்பித்துவிட்டார்கள், வலுவாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றாலே அவர்களோடு பிறரால் உரையாட முடியும். அதிலிருந்து மாணவர்கள் ஏதேனும் ஓரிடத்தை அடைந்து அந்த அரசியலை முன்னெடுக்கட்டும்.

பாலச்சந்திரனின் படம் ஏற்படுத்திய அதிர்வுகள் சில நாளைக்குள் மறைந்துபோகலாம். ஆனால் கார்டன் வெய்ஸ் அல்லது ஃபிரான்செஸ் ஹாரிசன் எழுதிய புத்தகங்களைப் படித்து அவைபற்றி ஆழ்ந்து சிந்தித்து, மனத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் தாக்கம் வெகு நாள்களுக்கு இருக்கும்.

பொறியியல் கல்லூரிகளைவிட கலை, அறிவியல், சட்டக் கல்லூரிகளில்தான் இதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த மாணவர் போராட்டத்தின் ஒரு பெரும் நன்மையாக, மாணவர்கள் தினமும் நாட்டு அரசியலை விவாதிக்கத் தொடங்கிவிட்டாலே, ஒருவிதத்தில் நமக்கான விடிவு பிறந்துவிடும்.

9 comments:

 1. http://writersamas.blogspot.in/2013/03/blog-post_22.html

  சமஸ் கட்டுரை இது பற்றிய புரிதலை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 2. JNU is well known for student activism and debate. Whether it is SFI,ABVP or NSUI and for that matter non-CPI/CPI(M) leftist ideology student groups are active there. They hold protest marches, join hands with other protesters in Delhi and organize meetings, seminars and debate among themselves. The vibrant student activism is not put with a firm foot down by administration which intervenes only when necessary. The long tradition of students activism in JNU is an example for other universities. But is there a liberal milieu in state universities or colleges in Tamil Nadu where students can freely air their views, debate and protest. You should visit JNU and spend a few days observing student politics there. For all you know some groups may even organize a meeting if you want to speak on any issue that is related to culture/politics/education.

  ReplyDelete
  Replies
  1. Thanks for your info on JNU. I have visited there once, when but for a very brief time.

   I do agree that, in any University, the administration should encourage liberal atmosphere. It may be that the students have to start their debating societies now and move forward and test the administration on whether they will be allowed to proceed or not.

   I may not have the time to visit JNU and spend days there. Let me see if I can find some friends there and visit for couple of days or so, and talk to the student groups there.

   Delete
 3. There are two extremes in JNU too. Students with highly sobre approach and typical political thinking developed through film heroes and pseudo revolutionaries.

  The former genre dominates, though exceptions prevail everywhere.

  ReplyDelete
 4. நான் முதலில் 1984-ல் ஜேஎன்யு போனேன் - ஒரு ‘இடது சாரி’ சார் மாணவனாக. பின்னர் 88-89ல் ஒரு ஆர்கனைசராக (ஸாவ்ல் அலின்ஸ்கி தான் என் குரு) சில தடவை. 90களின் இறுதியில் - சமூகக் கட்டமைப்பு வேலைகளுக்கு ஆர்கனைசர்களாக (களப் பணி + பரந்து பட்ட அமைப்புகளைக் கட்டமைத்தல் வேலைகளுக்காக) ஆள் பிடிப்பதற்காகச் சில தடவை. 2002ல் கடைசியாகப் போனேன் - என் தனிப்பட்ட வேலைகளுக்காக. இரண்டு மாதங்கள் முன்பு, இப்போது சென்னை கணித கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பழைய ஜேஎன்யு (புத்திசாலி) மாணவர் என்னுடன் சுமார் 30 மணி நேரம் ரெய்ல் வண்டியில் பிரயாணம் செய்தார். சுவையான உரையாடல்கள்! ஆக, சென்ற 30 வருடங்களாக விட்டு விட்டு (ஒரு மாணவனாக, ஆர்கனைசராக, வேலை கொடுப்பவனாக, உடையாடுபவனாக) ஜேஎன்யுவைப் பார்த்து வரும் என்னுடைய எண்ணங்கள்:

  1. ’ப்ரொடெஸ்ட்வாலா’க்கள் அன்றும் இருந்தார்கள். அவர்கள் நம்பிய அரசியலை முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால், ஜேஎன்யு மாணவர் தலைவர்கள், பின்னர் பெரிதாக அரசியல் வானில் வளர முடியவில்லை. கடந்த பல வருடங்களில் நான் ஜேஎன்யுவிலும் சரிவைத்தான் பார்க்கிறேன்.

  2. இப்போதும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக (செந்நிறம் போய் இப்போதெல்லாம் ரோஜா நிறம் தான்) ’ப்ரொடெஸ்ட்வாலா’க்கள் ப்ரொடெஸ்ட் செய்கிறார்கள். ஆனால், பொது வாழ்வில், அரசியலில் இவர்களுடைய ’தாக்கத்து’ - இம்பேக்ட் என்பது மிகக் குறைவு. தற்காலத்தில், ஊடகங்களுக்கும் கூட இது அயர்வாக இருக்கிறது. இவர்களும் நம் தமிழக மாணவர்கள் போலத்தான், உள்ளீடற்று இருக்கிறார்கள். மேலதிகமாக, கட்சி ரீதியாக துண்டாடப் பட்டு ப்ரொடேஸ்ட், எதிர்ப்ரொடேஸ்ட், மாற்றுப்ரொடேஸ்ட் என ப்ரொடேஸ்ட் மயம்.

  3. ’ப்ரொடெஸ்ட்வாலா’க்கள் தான் அந்தக் கால இடதுசாரி அறிவுஜீவிகளின் ஊற்றுக் கண். ஆனால், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஜேஎன்யு மாணவர்களின் படிப்பறிவும், செயலுக்கமும் இன்று இல்லை. அல்துஸர், க்ராம்ஷி என்பார்கள். நிச்ச என்றெல்லாம் கூடப் பேச ஆரம்பிப்பார்கள் - ஆனால் அதற்கு மேல் கோர்வையாகப் பேச, கட்டமைக்க வராது. இப்போது EPW போன்ற பத்திரிக்கைகளில் கூட ஜேஎன்யு-வின் பங்களிப்பு மகத்தானதாக இல்லை. ஆசிரியர் தரமும், கவலைக்கிடமாகத் தளர்ந்து வருகிறது.

  4. ஜேஎன்யு நிர்வாகத்தினர் - லிபரல்கள், தாராளவாதிகள் என்றெல்லாம் இப்போது இல்லை. தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள் என்பது தான் சரி. மாணவர்களின் படிப்பறிவு, விஷயஞானம் எல்லாம் எப்போதோ வடக்கிருக்க ஆரம்பித்துவிட்டன - going south, that is.

  விதிவிலக்குகள் இருக்கிறார்கள் தான். ஆனால், விதிவிலக்குகள் சுட்டிக் காட்டுவது ஒரு பொது விதியையே. நான் சுமார் 40 வேன்கார்ட் மாணவர்களுடன் 90களின் இறுதியில் நேர்காணல் நடத்தி - ஒரு மாணவனையே (அரை மனதுடன்) தேர்வு செய்ய முடிந்தது.

  என் நோக்கில், ஜாமியா மிலியா இஸ்லாமியா, ஜாதவ்பூர், வாரணசி ஹிந்து பல்கலைக் கழகங்கள் ஜேஎன்யு-வை விட செயலூக்கம் கொண்ட, படிப்பார்வம் மிகுந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் ’ப்ரொடெஸ்ட்வாலா’க்கள் அலட்டல்கள் இவ்விடங்களில் இல்லை.

  YMMV - ஆனால் உங்கள் எதிர்கால ஜேஎன்யு க்ஷேத்ராடனத்தில், குறிப்பிடத்தக்க மாணவர்களைக் கண்டு களிக்க முடிந்தால், எனக்கும் மகிழ்ச்சியே.

  ReplyDelete
 5. தங்களது இந்த பதிவு வரவேற்க்கத்தக்கது.இந்த விசயத்தை ஏன் எந்த ஊடகங்களும் பெரிதாக காண்பிக்கவில்லை?
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 6. Writter Perumal Murugan wrote this during 2011..

  //சமூக அநீதி ஒன்றுக்கு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் துணை போய்க்கொண்டிருக்கிறது. சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் கலை அறிவியல் படிப்புகளைப் புறக்கணிக்கும் சமூகம் வரலாற்று அறிவை இழந்துவிடும்; மொழி உணர்வைப் புறக்கணித்துவிடும்; அடிப்படை மனிதாபிமான எண்ணங்களைத் தம் சிந்தனையிலிருந்தே விரட்டிவிடும். 1980களில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகக் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் எழுச்சி மிக்க போராட்டங்களை நடத்தினர். சமூகத்தின் பல தரப்பினரும் ஏதோ ஒருவகையில் ஈழப் போராட்டத்தோடு தம்மை இணைத்துக் கொண்டனர். அன்று கலை அறிவியல் பாடங்களுக்குச் சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கவே செய்தது. ஆனால் 2008இல் ஈழத்தில் மனிதப் பேரழிவு நடந்தபோது தமிழ்ச் சமூகம் சுரணையற்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததற்குக் காரணம் கலை அறிவியல் படிப்புகள் இங்கு மதிப்பிழந்து போனதுதான் என்றுகூட எனக்குத் தோன்றுகின்றது.//

  ReplyDelete
 7. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் அரசியல் உணர்வு/உரையாடல்கள்/விவாதம்/போராட்டம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். அதே விதத்தில் தமிழகத்திலும் மாணவர்களின் அணுகுமுறை இருக்குமானால் பிரச்னை இல்லை. மாறாக பத்ரி சொல்லியிருப்பது போல், அது வரவேற்கப்படவேண்டியதே. ஆனால், இது வரை தமிழகத்து கல்லூரிகளில், குறிப்பாக சட்டக் கல்லூரி மாணவர்களின் அணுகுமுறை ஒரு வழிப் பாதையாகவும் மாறுபட்ட எண்ணங்களை செவி மடுத்து, புரிந்துகொண்டு, தர்க்கரீதியாக சரியானவற்றை ஒப்புக்கொண்டு, தம் அடிப்படை அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளத் தேவையான மனநிலையைக் கொண்டதாக ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. எதிர்க் கருத்து சொல்பவர்களை கருங்காலிகள், கைக்கூலிகள் என்று வசை பாடி, வன்முறை காட்டி (அமிலம் வீசுவதும் உண்டு) அவர்களின் வாய் மூடுவதே அதிகம் கண்டிருக்கிறோம்.

  ReplyDelete
 8. Badri, Can you add the books and authors to the post? I had to google it for several minutes to find out the books.
  The Cage: The fight for Sri Lanka & the Last Days of the Tamil Tigers by Gordon Weiss
  Still Counting the Dead by Frances Harrison

  ReplyDelete