Friday, April 26, 2013

ராமதாசின் சாதி அரசியல்

தமிழகத்தில் சாதி அரசியல் இல்லாமல் எல்லாம் பிரமாதமாக இருந்தது; திடீர் என்று ராமதாஸ் முளைத்தார் என்றெல்லாம் இல்லை. ஆனால் இப்போது சாதி அரசியல் தலையெடுத்திருக்கும் அளவுக்கு இதற்குமுன் இல்லை என்று கட்டாயம் சொல்லலாம்.

பொதுவாக சாதி பார்த்துதான் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை நிற்கவைக்கின்றன. ஆனால் அவை யாவும் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசுவதில்லை. அதுவும் பொதுக்கூட்டங்களில், அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சாதி பேசுவதில்லை.

ராமதாஸ்தான் இதனை உடைத்து வெளிப்படையாக வன்னியர் சங்கம் மூலம் இட ஒதுக்கீடு கோரிப் பெரும் போராட்டம் நடத்தினார். அதுகூடப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பொது இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு வேண்டிய இடம் கிடைப்பதில்லை என்று ராமதாஸ் போராடியதன் விளைவாகத்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று 20% ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. இந்த விளைவின் காரணமாகவே போராட்டம் நியாயமான காரணங்களுக்காக ஏற்பட்டது என்று சொல்லலாம்.

ஆனால் இப்போது ராமதாஸ் இறங்கியிருக்கும் வேலை அவ்வளவு சிலாக்கியமானதாகத் தெரியவில்லை. வன்னியர் சங்கம் என்பது பாட்டாளி மக்கள் கட்சி ஆனாலும் வன்னிய அடையாளம் எப்போதுமே ராமதாசிடம் ஒட்டியபடியே இருந்தது. மாறி மாறி திமுக, அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதனால் பெரும் பலன் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்ததும் தனித்து அரசியல் செய்ய முடிவெடுத்தாலும் அதனாலும் பெரும் பலன் எதும் இல்லை என்ற நிதர்சனம் புரிய ஆரம்பித்ததும்தான் இப்போது சாதி அரசியல் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

இத்தனைக்கும் பாராட்டப்படத்தக்க பல நல்ல போக்குகளைக் கொண்டுவந்தவர் ராமதாஸ். திருமாவளவனுடன் சேர்ந்து வன்னியர்களும் தலித்துகளும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று அதற்காகப் பல முயற்சிகளை முன்னெடுத்தவர் ராமதாஸ். குடிப் பழக்கத்துக்கு எதிராக, சிகரெட் பழக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர். (அவருடைய கட்சி ஆசாமிகள் இதனைப் பின்பற்றுபவர்களா என்பது வேறு விஷயம். மாமல்லபுரத்தில் நேற்று அனைவரும் இளநீரும் மோரும் மட்டும்தான் பருகினர் என்று வைத்துக்கொள்வோம்.) இலவசங்கள் கூடாது என்று பலமுறை சொல்லியிருக்கிறார் ராமதாஸ். தன் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தகுதியானவர்களைக் கொண்டு பயிற்சிப் பட்டறை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ராமதாஸ். மாற்று பட்ஜெட் என்ற ஒன்றைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தவர்.

தனித்தனியாக இவையெல்லாம் நல்ல கருத்துகள் என்றாலும் இவை எவையும் சித்தாந்தரீதியில் எந்தக் கட்டமைப்புக்குள்ளும் வரவில்லை. இடதும் இல்லை, வலதும் இல்லை. மக்களிடம் இதுகுறித்து பாராட்டுதல்களும் இல்லை. தன் கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள், பிளவுகள். திமுக, அஇஅதிமுகவிடமிருந்து இனி அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. இவை எல்லாம் சேர்ந்து அவரை வேறு திசைக்குத் தள்ளிச் சென்றுவிட்டன போலும்.

சித்திரை முழுநிலவுப் பெருவிழா (சித்ரா பௌர்ணமி) சென்ற ஆண்டு நடந்தபோதுதான் காடுவெட்டி குருவிடமிருந்து மிகக் கொடூரமான சாதி இழிவுப் பேச்சு வெளியானது. இந்த ஆண்டு விழாவுக்குள் தர்மபுரிக் கலவரங்கள் நிகழ்ந்திருந்தன. தலித்துகளுக்கு எதிரான ஒரு அமைப்பை உருவாக்க சில சாதிக் கட்சிகளைத்தூண்டி அதற்குத் தலைமை தாங்கும் முயற்சியில் இருக்கிறார் ராமதாஸ்.

ஆனால் இந்த முயற்சியின் பலனாக ஆட்சியைக் கைப்பற்ற எவ்விதத்தில் சாத்தியம் என்று நினைக்கிறார் இவர் என்று புரியவில்லை. உத்தரப் பிரதேசம் அல்லது பிகாரில் யாதவ் சாதியினரின் எண்ணிக்கை பலத்துக்கு எந்தவிதத்திலும் அருகில் வரும் நிலையில் தமிழகத்தில் வன்னியர்கள் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் சுமார் 20 கோடி மக்கள் தொகையில், சுமார் 20-25% பேர் யாதவ் என்ற வரையறைக்குள் வருவார்கள் என்கிறார்கள். தமிழகத்தில் 1 கோடி வன்னியர்கள் இருப்பதாக ராமதாஸ் சொல்கிறார். (அதுவும் அத்தனை பேரும் மாமல்லபுரத்தில் கூடப்போவதாகவும் சொன்னார். எப்படித் தாங்கியதோ!) ஆனால் உண்மை எண்ணிக்கை அதைவிடக் குறைவானதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

உத்தரப் பிரதேச பாணியில் யாதவ் vs தலித் என்பதுபோல தமிழகத்தில் வன்னியர் vs தலித் என்று ஒரு சமன்பாட்டை இவர் முன்வைக்க விரும்புகிறார்போலும். ஆனால் உள்ளதும் போச்சுடா என்று ஆகப்போகிறது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதற்குள்ளாக தமிழகத்தை உண்டு, இல்லை என்று ஆக்கிவிடப்போகிறார்கள் என்றும் தோன்றுகிறது.

23 comments:

  1. He is pushed to a situation where he needs to do something to have some sort of nuisance value.

    ReplyDelete
  2. திரு.பத்ரி, சாதி பார்க்காமல் தமிழகத்தில் எந்தக் கட்சியுமே இல்லை. தேர்தலில் இடம் கொடுப்பது முதல், வக்காலத்து வாங்கிப் பேசுவது வரை பிராமண சாதி தவிர எல்லா சாதிகளுக்கும் எல்லாக் கட்சிகளும், குறிப்பாகத் திராவிடக் கட்சிகள், சாதி சார்ந்தே நடந்துகொண்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி தவிர.
    ராமதாஸ் என்றுமே வன்னியர் கட்சி என்றே சொல்லி வந்துள்ளார். தமிழை வளர்க்கிறேன், மரம் நடுகிறேன் என்று எல்லாம் சில நாடகங்களை நடத்திப் பார்த்தார். பயன் இல்லை. அதனால் தனது பழைய ஆயுதத்தை எடுத்துவிட்டார்.
    இவர் எவ்வளவோ தேவலாம்.வெளிப்படையாகச் செய்கிறார். மற்றவர் மறைமுகமாகச் செய்கிறார்கள். அவ்வளவே.

    ReplyDelete
    Replies
    1. இந்த சாதியை பார்த்து ஆட்களை நிறுத்துகிறார்கள் என்ற பிட் ஆதாரம் இல்லாமல் ரொம்ப நாளாக திராவிட எதிர்ப்பாளர்களால் ஒட்டப்படுகிறது.
      விஜயகாந்த் சினிமாவில் புள்ளி விவரம் தருவது போல ஒவ்வொரு தொகுதியிலும் எந்த எந்த சாதிக்காரர் கடந்த பத்து தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை பார்த்தால் இந்த வாதத்தில் உள்ள பொய் புரியும்
      சாதி தலைவர்களின்,சாதி கட்சிகளின் குற்றச்சாட்டே அவர்கள் சாதியினருக்கு வர வேண்டிய இடங்கள் திராவிட கட்சியினரால் சிறுபான்மை சாதிகளுக்கு சென்று விட்டன எனபது தான்
      மற்ற எல்லா மாநிலனகளையும் விட குறைவான எண்ணிக்கையில் இருக்கும் சாதியினர் வேறு சாதியினர் அதிகம் இருக்கும் தொகுதிகளில் செய்த்தது அதிக அளவில் தமிழகத்தில் தான்.
      தேசிய கட்சிகளில் ,மாநில முதலவர்களில் மற்ற மாநிலங்களில் நூத்துக்கு 99 பெரும்பான்மை சாதிகள் தான்.இங்கு மட்டும் தான் எண்ணிக்கை குறைவான சாதிகளின் தலைமை.

      Delete
    2. தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகம் பேர் எம் எல் ஏ ஆகிறார்கள் என்பதை குற்றமாக எண்ணினால் தவறு யார் பக்கம் உள்ளது.ஒரு தொகுதியில் மிக அதிக சதவீதத்தில் ஒரே ஒரு சாதி இருந்தால் எல்லா கட்சியிலும் பொறுப்புகள் அந்த சாதியை சேர்ந்தவரிடம் இருக்க வாய்ப்பு அதிகம்.அப்படிப்பட்ட சூழல் தான் அனைத்து ஊர்களிலும்.அப்படி இங்கு இல்லை எனபது தான் சாதி கட்சிகளின் குற்றசாட்டே .சாதி சங்கங்களின் பத்திரிக்கைகளை பார்த்தால் புள்ளி விவரத்தோடு எப்படி அவர்களின் சாதி அதிகம் இருக்கும் தொகுதிகளில் சிறுபான்மை சாதியை சார்ந்தவர்கள் திராவிடம் என்ற பெயரில் வெற்றி பெறுகிறார்கள் என்ற பொருமல் இருக்கும்.ஒரே சாதியை சார்ந்தவர் மட்டும் ஜெயத்த தொகுதிகளை தமிழகத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளில் குறிப்பிட்ட சாதி,மதத்தை சார்ந்தவர்களை தவிர வேறு யாரும் ஜெயிக்காத தொகுதிகள் அதிகம்
      வோக்களிகர்களின் கோட்டையில் தேவ கௌடாவின் ஆட்களும்,அவர் சாதிகாரர்களும் தான் ஜெயிக்க முடியும் .லின்காயத்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் அவர்கள் சாதி ஆட்கள் தான்
      ரெட்டி மட்டும் ஜெயித்த தொகுதிகள் ஆந்திரத்தில் சில டாசன் இருக்கும்.கம்மா,ராசு,காப்பு அதிக சதவீதத்தில் இருக்கும் தொகுதிகளில் வெற்றி அவர்கள் சாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான்

      Delete
    3. இதெல்லாம் சும்மா... எந்த ஜாதிக்காரர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்களோ அவர்களையே வேட்பாளர்களாக நியமிப்பதை ஆரம்பித்து வைத்ததே இந்த திராவிடக் கட்சிகள்தான். இது ஒன்றும் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு இல்லை. அதையும் மீறி வேறு ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் அது கட்சி மற்றும் தனிப்பட்ட செல்வாக்கு அல்லது க.ஓட்டு மூலமாகத் தான்.

      தமிழகத்தின் தென் பகுதிகளில் எந்தெந்தத் தொகுதியில் எந்தெந்த ஜாதிக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அவர்களே வேட்பாளர்கள். அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அவர்களிலும் நம்பர் 1 ஜாதியைச் சேர்ந்தவர், நம்ப 2 ஜாதியைச் சேர்ந்தவர் என்று நிறுத்தப்படும் போது, ஒருவர் தோற்று மற்றவர் ஜெயித்தால், அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் புலம்பிக் கட்டுரை எழுதுகின்றனர். அதுவும் சில தொகுதிகள் ‘ரிசர்வ’ ஆக இருக்கும் போது, இவர்கள் மெஜாரிட்டியாக இருந்தாலும் நிற்க, ஜெயிக்க முடியாது எனும் போது இந்தப் புலம்பல் அதிகமாகிறது. மற்றபடி இவை ஆதாரம் இல்லாதவை அல்ல. உண்மை.

      Delete
    4. பொன்.முத்துக்குமார்Sat Apr 27, 09:07:00 PM GMT+5:30

      அடடா அடடா ... பூவண்ணன் நீங்க இந்த அளவுக்கு பால்மணம் மாறா பச்சிளம் பாலகனா ?

      Delete
    5. முத்துகுமார் சார் தமிழகத்தின் 234 தொகுதிகளில் கடந்த பத்து தேர்தலில் ஜெயித்தவர்கள் சாதி விவரம் ஆங்கிலத்தில் டைப் செய்து google transliterate செய்து போடும் நிலையில் நான் இல்லை.நீங்கள் பொதுவாக பத்து தொகுதிகளை எடுத்து கொடுத்தால் அவற்றில் வென்றவர்களின் சாதி விவரங்களை தருகிறேன்
      எடியுரப்பா,கிருஷ்ணா முதல்வர்களாக இருந்தாலும் அவர்களும் அவர்கள் வாரிசுகளும் லிங்காயத் அதிகம் இருக்கும் தொகுதிகளில் தான் நிற்ப்பார்கள்.பிரதமராக இருந்தாலும் வொக்கலிகர் அதிகம் இருக்கும் தொகுதியில் தான் தேவ கெளடாவும் வாரிசுகளும் எல்லா தேர்தலிலும் நிற்கிறார்கள்.கம்முநிச்டாக இருந்தாலும் அச்சுதானந்தன் நிற்பது ஈழவர்கள் அதிகம் இருக்கும் தொகுதி தான்.ஆந்திரம்,உதர்ப்ரதேசம் ,உட்டர்க்ஹாந்த்(முதல்வராக இருந்தாலும் ராஜபுத்திர உட்கட்சி ஆட்களே தங்கள் கட்சியின் க்ஹண்டூரியை தோற்கடித்தார்கள்)எல்லாவற்றிலும் இதே கதை தான்.வங்காளத்தில் மாத்திரம் ஒதுக்கீட்டு தொகுதிகள் மீதியில் முக்கால்வாசி பிராமணர்கள்.மக்கள் தொகையில் பத்து சதவீதத்திற்கு கீழ் இருந்தாலும் 35 சதவீத இடங்கள் அவர்களுக்கு.இதை விரும்புகிறவர்கள் தான் சாதி பார்த்து ஒட்டு போடுகிறார்கள் என்ற போலியான குற்றசாட்டை வீசுபவர்கள்
      தமிழகத்தின் நிலையை பார்ப்போமா .இங்கு கட்சியை இரும்பு பிடிக்குள் வைத்திருக்கும் தலைவர் ஒருவரின் சாதியும் எந்த தொகுதியிலும் அதிக எண்ணிக்கையில் இல்லாத சாதி தான்
      கருணாநிதி,ஸ்டாலின்,மாறன்,எம் ஜி ஆர்,ஜெயா நின்ற தொகுதிகளின் பட்டியலை பார்த்தால் என் கூற்றின் உண்மை விளங்கும்

      Delete
    6. //தமிழகத்தில் நிலைமை அப்படி அல்ல.சில ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும்,பரவலான முன்னேற்றம் இருப்பதால் வன்னியரின் தலைமையை கொங்கு வேல்லாலரோ,நாடாரோ,முக்குலதொரோ ஏற்று கொள்ள மாட்டார்கள்.//பூவண்ணன் அவர்களே.........

      வேறு ஒரு தளத்தில் ,[ http://www.tamilhindu.com/2013/01/caste-clash-resons-and-remedies-2/ ] தமிழகத்தில் சாதிக்கட்சிகளின் ஆதிக்கம் குறைவாக இருப்பதற்கு திராவிட இயக்கங்களே காரண‌ம் என்று நீங்கள் குறிப்பிட்ட போது , உண்மையான காரணம் என்ன என்பதை சுட்டிக்காட்டி மேற்படி கருத்தை நான் தெரிவிட்டிருந்தேன்...அதை கருத்தை இப்போது நீங்களும் வழிமொழிகிறீர்கள்........

      நீங்கள் குறிப்பிட்டுள்ள படியே பார்த்தாலும் , அது தமிழக சமுதாய அமைப்பில் உள்ள நல்ல விஷயம்.........இதில் திராவிட இயக்கங்களின் பங்கு என்ன?

      Delete
    7. இந்த முறை சட்டசபையில் இருக்கும் எம் எல் ஏக்களில் 46 பேர் பட்டியல் இனத்தவர் (இரு பொது தொகுதிகள் உட்பட)39 பேர் வன்னியர்.36 முக்குலத்தோர்,22 பேர் கொங்கு கவுண்டர்,17 பேர் நாடார்.இங்கு நான்கு சம எண்ணிகையில் உள்ள சாதிகள் கிடையாது.சென்ற இரு முறைகளும் பா ம க அதிகம் செய்ததால் வன்னியர்கள் 43,42 பேர்.சசிகலாவின் ஆதிக்கம் இருந்தும் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் வன்னியர்கள் தான்


      சாதியை வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படும் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களை வைத்து இன்னும் முப்பது எம் எல் ஏ ஜெயிக்க வேண்டிய சாதி நம் சாதி எனபது தான் பா ம கா வின் கணக்கு.


      சென்னையில் அதன் சுற்றுபுரங்களில் மற்ற சாதியினர் அதிகம் நிறுத்தி வைக்கப்பட்டு வெற்றி பெறுகிறார்கள்.அதை தடுக்க வேண்டும் என்பதும் பாமகா வின் கணக்கு
      பா ம காவிற்கு அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குவதும் இந்த கணக்கால் தான்.சாதியின் பேரை சொல்லி முதல் தேர்தலிலேயே பல இடங்களை பிடித்த சாதி.பசும்பொன் தேவர் கட்சி கூட ஒன்று இரண்டு இடங்களுக்கு மேல் ஜெய்தது கிடையாது என்பதை நினைவு கூர்ந்தால் ஒரே சாதியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் தொகுதிகள் வட மாவட்டங்களில் அதிகம் எனபது விளங்கும்


      பட்டியல் வகுப்பினரோடு ஒன்று சேர்ந்தால் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் மண் விழுந்ததால் எலியும் பூனையுமாக இருக்கும் சாதிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடும் போது ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்ததால் சாதி வெறியேற்றும் வேலைகளுக்கு திரும்ப சென்று விட்டது.



      அனைத்து பிற்பட்ட சாதிகளிலும் பரவலான முன்னேற்றம் திராவிட இயக்கத்தின் ஆட்சியில் தான்.இங்கு தான் இரு கட்சிகளிலும் பிற்பட்ட வகுப்பு மக்கள் அதிக அளவு இடங்களை பெறுகிறார்கள் கவுன்ட்டர் பாலன்சிங் ஆக.
      கேரளாவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியில் மூன்று ஈழவ எம் எல் ஏ க்கள்.கம்யூனிஸ்ட் கட்சியில் 20திர்க்கும் மேல் ஈழவ எம் எல் ஏ க்கள்.காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற நாயர்கள் 17.கம்யூனிஸ்ட் கட்சியில் ஆறோஏழோ.
      தேவ கெளட கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் வொக்கலிகர் அதிகம் இருக்கும் தௌகுதிகளில் போட்டி.வோக்கலிகா ஒருவரை முதல்வர் ஆக்கினாலும் அவர்கள் கௌடா பின்னால் வலுவாக இருக்கிறார்கள் என்பதால் தான் பா ஜ க அவரை தூக்கி விட்டு லின்காயத்தை ஆக்கியது.இது தான் சாதி அரசியல்
      வைச்யரான ரோசையாவால் ரெட்டி வோட்டுக்கள் ஜகன் பின் செல்வதை தடுக்க முடியாது.(அங்கு ரெட்டிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற பிற்பட்டதாழ்த்தப்பட்ட சாதி வோட்டுக்களும் அதிகம்.)என்பதால் கிரண் குமார் ரெட்டி முதல்வர் ஆக்கபட்டார். இது தான் சாதிஅரசியல்.
      இங்கு ஆறு மாதம் முதல்வராக இருந்த முக்குலத்தோர் சாதியை சார்ந்த பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு மறுபடியும் ஜெயா முதல்வர் ஆன போது ஒரு சிறு சலசலப்பு கூட கிடையாது.இதுவா சாதி அரசியல்
      காமராஜ் அவர்களின் காலத்தில் கூட வன்னியர் பகுதிகளில் அவர் கட்சி ஜெயிக்கவில்லை.சாதி கட்சிகள் தான் ஜெய்த்தன.கொங்கு வெள்ளாளரும் தங்கள் சாதியை சார்ந்த சி சுப்ரமணியம் முதல்வர் ஆவதை தடுத்தவர் என்று அவருக்கு எதிர் அணி தான்.காமராஜரும் தன சாதி மக்கள் அதிகம் இருக்கும் தௌகுதியில் தான் நின்றார்.
      எம் ஜி ஆர் கருணா ஜெயா எல்லாம் அப்படியா. விஜயகாந்த் கூட வன்னியர் அதிக எண்ணிக்கையில் இருக்கும் விருத்தாசலம் ரிஷிவந்தியத்தில் ஜெய்கிறார்
      இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் அதிக வோக்கலிக எம் எல் ஏக்கள் கௌடா கட்சியில் தான் இருப்பார்கள்.பா ஜ காவில் லிங்காயத் எம் எல் ஏக்கள் தான் இப்போதைய சட்டசபையிலும் மிக அதிகம்.
      கேரளாவின் கதையை மேலே பார்த்தோம்.இங்கு அப்படியா.அதிமுக வெற்றி பெறும்போது அதில் அனைத்து சாதி மக்களும் குறிபிடத்தக்க அளவில் வெற்றி பெறுகிறார்கள்.தி மு க வெற்றி பெற்றாலும் அதே நிலை தான்.தலைமை மிக சிறுபான்மை சாதிகள்.

      Delete
  3. பொன்.முத்துக்குமார்Fri Apr 26, 10:36:00 PM GMT+5:30

    "ஆனால் உள்ளதும் போச்சுடா என்று ஆகப்போகிறது என்றுதான் தோன்றுகிறது"

    அப்படி போக வேண்டும் என்பதே என்னுடைய பேராசையும். பார்ப்போம், 'தனியே அதற்கோர் குணமுண்டு' என்று புகழப்பட்ட தமிழினம் எப்படி இதை எதிர்கொள்கிறதென்று.

    ReplyDelete
  4. பிழைத்தே ஆகவேண்டும் என்கிற நிலையில் சாதியைக் கையில் எடுத்திருக்கிறார். டாக்டர் சமுதாயத்திற்கு விஷ ஊசி போடுகிறார். இந்தாளுக வந்த வண்டியின் வேகத்தைத் தட்டிக்கேட்டதற்கு மரக்கானத்தில் அரசுப் பேருந்துகளைக் கொளுத்தி இருக்கிறார். இந்த ரவுடிப்பயபுள்ளைக கூட்டம் போடலைன்னு யார் அழுதது?

    ReplyDelete
  5. எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை.......ராமதாஸின் சாதி அரசியல் கண்டிக்கப்படவேண்டியதுதான்......அதேசமயம் தலித் லேபிளை பயன்படுத்தி திருமா கும்பல் போடும் ஆட்டத்தை எந்த அறிவு ஜீவியுமே கண்டிப்பதில்லையே ஏன்? பி .சி.ஆர் பயமா?

    ReplyDelete
    Replies
    1. ‘திருமா கும்பல்’ என்ன ஆட்டம் போடுகிறது என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள். ஆதாரத்துடன்.

      Delete
    2. உங்களுக்கு ஊர் நிலவரம் தெரிகிறதா இல்லை புரிந்தும் புரியாமல் பேசுகிறீர்களா திரு பத்ரி?? இந்த பி சி ஆர் ஆயுதத்தை கயில் வைத்து கொண்டு,,,காதல் என்ற உத்தியை பயன்படுத்தி ,,,பெண்களை காதல் வயபடுத்தி (காதல் என்ற போர்வையை) உயர் சாதி என்று அவ்ர்களால் கருத படுகிற ஆட்களிடம் ,காதலை விட்டு தர பண் பேரம் நடத்தி ஒரு குழுமம் கொழுத்து வருவது உங்களுக்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையே!!!!!

      Delete
  6. திரு.பத்ரி அவர்களே.......

    கைப்புண்ணுக்கு கண்ணாடி கேட்கிறீர்கள்.........என்னுடன் பணியாற்றும் இரு நண்பர்கள் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள்......ஒருவர் அரூர்.........மற்றவர் ஊத்தங்கரை........ஒருவர் தலித்.......மற்றவர் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த‌வர்...... அந்த பகுதியின் சமூக அமைதியை குலைப்பதில் திருமா மற்றும் ராமதாஸ் இருவருக்குமே சம பங்கு உண்டு என்பதை இருவருமே [ தலித் நண்பர் உட்பட ] ஒப்புக்கொள்கின்றனர்.......அதற்கு பல சம்பவங்களை குறிப்பிட்டுள்ளனர்.....சென்ற திமுக ஆட்சியில் தனியார் காலி இடங்களை ஆக்கிரமிப்பதும் , பின்பு அதை காலி செய்வதற்காக கணிசமான தொகை மிரட்டிப்பெறப்பட்டதும் வட மாவட்டங்களில் பொது அறிவு......அது உங்களுக்குத்தெரியாதென்றால் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம்........திருமாவளவனின் வலதுகரமான வன்னி அரசு என்பவர் மீது [ஆயுதக்கடத்தல் உட்பட ]மிகக்கடுமையான வழக்குகள் உள்ளன........

    ராமதாஸ் ம‌ட்டுமேகெட்டவர் , திருமா ஒருபாவமும் அறியாதவர் என்று நீங்கள் நம்பவிரும்பினால் அது உங்கள் இஷ்டம்....... ஆனால் அது உண்மையாகிவிடாது......

    ReplyDelete
  7. உதர்ப்ரதேசதில் பிற்பட்ட வகுப்பு மக்களின் தலைமை யாதவர்களிடம் இருக்கிறது.அவர்கள் மக்கள் தொகை 8,9 சதவீதம் தான்.பல குருங்குழுக்கலாக பிற்பட்ட மக்கள் இருப்பதால் (மொத்தமாக 40 சதவீதம்)அவர்களில் அதிக எண்ணிக்கையில் உள்ள யாதவர்கள் பிற்பட்ட குழுவின் தலைமையை வைத்து உள்ளனர்
    மாயாவதி அவர்களின் சமர் சாதியை சார்ந்தவர்கள் தான் UP மாநிலத்தில் உள்ள 22 சதவீத பட்டியல் இனத்தவரில் 16 சதவீதம்.மற்ற 80 சாதிகளை சேர்த்தால் மீதி 6 சதவீதம் .இஸ்லாமியர்கள் 18 சதவீதம்.
    http://expressindia.indianexpress.com/news/fullstory.php?newsid=73000

    She said her political heir would be someone who was at least 35 years younger to her so that he could lead the 'movement' for a longer period. "My political heir will be a member of the Chamar community," the BSP chief said.
    முன்னேற்றம் இல்லாததால் குழுவில் அதிக எண்ணிகையில் உள்ள சாதியின் தலைமையை அவர்கள் ஏற்கிறார்கள்
    தமிழகத்தில் நிலைமை அப்படி அல்ல.சில ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும்,பரவலான முன்னேற்றம் இருப்பதால் வன்னியரின் தலைமையை கொங்கு வேல்லாலரோ,நாடாரோ,முக்குலதொரோ ஏற்று கொள்ள மாட்டார்கள்.அவர்களின் தலைமையை வன்னியர் ஏற்று கொள்ள மாட்டார்கள் .பறையரின் தலைமையை பள்ளர்கள் ஏற்க மாட்டார்கள் .சிறுபான்மை இனத்தை சார்ந்த தலைவர்களின் பின் மக்கள் கூடுவதற்கு இதுவே காரணம்
    வன்னியர்,முக்குலத்தோர் போன்ற சாதிகளே ஒரு அளவிற்கு பிறபட்ட குழுவுக்குள் எண்ணிக்கைக்காக நடந்த சாதி ஒழிப்பு தான். பெண் கொடுத்து பெண் எடுக்காத மறவர்,கள்ளர் ஒன்றாகி விட்டனர்.படையாச்சி பள்ளி சாதியினரிடம் பெண் எடுக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  8. புதுச்சேரி மாநிலத்தில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அதன் மீது ஒரு கண் வைத்து பல ஆண்டுகளாக ராமதாஸ் காய் நகர்த்தி வந்தார்.
    இதுவரை வன்னியன் ஆளவில்லை என்று கூக்குரல் இட்டாலும்,கூட்டணி சேர்த்து பாதி இடங்கள் போட்டியிட்டாலும் பலன் இல்லாமல் இருந்தது
    முதல்முறையாக வன்னியர் ரெங்கசாமி முதல்வராக வந்தார்.அவர்7 ஆண்டுகள் பதவி வகித்த பின் காங்கிரஸ் கட்சி தலைமையால் மாற்றப்பட்டார்.அவர் தனி கட்சி துவங்கி போட்டியிட்ட 17 தொகுதிகளில் 15தை வென்று ஆட்சியை பிடித்தார்.சாதிரீதியாக ஒன்றிணைக்க பாடுபட்டது நாம்,பலன் அனுபவிப்பது ரெங்கசாமியா என்ற எண்ணம் பா ம க தலைமைக்கு உண்டு.தமிழ்நாட்டு அளவில் கட்சியை வளர்க்க செய்த முயற்சிகள் பலன் அளிக்காததால் குறிப்பிட்ட பகுதியில் தாதாவாக,தான் வைத்தது தான் சட்டம் என்ற நிலையை உருவாக்க இப்போது முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது
    விடுதலைக்கு பின் நடந்த முதல் தேர்தலில் ஒன்றுபட்ட மெட்ராஸ் மாகாணத்தில் வன்னியர்களுக்காக கட்சி நடத்திய மாணிக்கவேலர்,ராமசாமி அவர்களின் கட்சிகள் 18 எம் எல் ஏ இடங்களை பிடித்து பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அவர்களின் தயவை நாடிய சூழலை உருவாக்க எண்ணுகிறார்.
    டேலேங்கான போராட்டத்தின் வெற்றியும்,அதற்க்கு அந்த பகுதி மக்களின் ஆதரவும்,வட தமிழ்நாட்டை தனியாக பிரிக்கும் எண்ணத்தை பா ம க கட்சியின் குறிக்கோளாக ஆக்கி உள்ளது.

    ReplyDelete
  9. //தமிழகத்தில் 1 கோடி வன்னியர்கள் இருப்பதாக ராமதாஸ் சொல்கிறார். (அதுவும் அத்தனை பேரும் மாமல்லபுரத்தில் கூடப்போவதாகவும் சொன்னார். எப்படித் தாங்கியதோ!) //

    ‘’என்னது?’’ ‘’கழக அகத்தியர் அணின்னு பேருசார்…என்னையமாதிரி ஒரு பத்தாயிரம்பேர நேரா எதிர்த் திசைக்கு அனுப்பறது…நாங்க எடைய சமப்படுத்திருவோம்ல?’’ நான் ஆசுவாசம் அடைந்தேன். இந்தமட்டுக்கும் தமிழகத்தின் மீது அரசியல்கட்சியினருக்கு அக்கறை இருப்பதே பெரிய விஷயம். ஆனால் ஒரு சிறு ஐயம் ‘’இல்ல, உங்க கூட்டத்துக்கு டபுளா அவங்க கூட்டத்துக்கு ஆள் வரணுமானா என்ன செய்வாங்க?’’ என்றேன். ’’அது ஒண்ணுமில்ல சார்… கள்ள ஓட்டையும் சேத்தா கவுண்டு வந்திரும்’’ என்றார். இதுதான் கொஞ்சம் குழப்புகிறது.

    ReplyDelete
  10. ராமதாஸ் போட்ட கூட்டம் கூட பரவாயில்லை. இந்த மாமல்லபுரம் கோவிலில் அவரது கூட்டம் அடித்த கொட்டம் எந்த நாகரீக மனிதனும் செய்தத் துணியாத வெறிச்செயல். இதுதான் அவர்கள் தமிழ்ப்பண்பாட்டைக் காக்கும் லட்சணமோ என்னவோ ?

    ReplyDelete
  11. //வன்னியர்,முக்குலத்தோர் போன்ற சாதிகளே ஒரு அளவிற்கு பிறபட்ட குழுவுக்குள் எண்ணிக்கைக்காக நடந்த சாதி ஒழிப்பு தான். பெண் கொடுத்து பெண் எடுக்காத மறவர்,கள்ளர் ஒன்றாகி விட்டனர்.படையாச்சி பள்ளி சாதியினரிடம் பெண் எடுக்க மாட்டார்கள்.//

    தஞ்சாவூர் கள்ளர்கள் - B.C

    தென்மாவட்ட கள்ளர்கள், மறவர்கள் - M.B.C

    பெயர் ஒற்றுமையால் தவறுதலாக கள்ளர்கள் இணைக்கப்பட்டதை தஞ்சாவூர்காரர்கள் இன்றும் விரும்புவதில்லை.

    களவை தொழிலாக கொண்ட தென்மாவட்ட கள்ளர்கள் மீதும் அடங்க மறுத்த மறவர்கள் மீதும் குற்றப்பரம்பரை சட்டம் பாய்ந்து அதிலிருந்து மீண்டபோது இருவரும் தேவரின் ராஜதந்திரத்தால் ஒரே ஜாதியாகிப்போனார்கள் [பெண் கொடுக்காமல்].

    முக்குலத்தோர் என்பதே ஒரு பித்தலாட்டம்.

    ReplyDelete
  12. ஈழத்தில் வெள்ளாளர்கள் மட்டும்தான் வன்னியர் என்ற பெயருடன் இருக்கிறார்கள். கோணேசர் கல்வெட்டு குளக்கோட்டன் நியமித்த அனைத்து வன்னிமைகளும் காராளர் என்கிறது. இவர்கள் வெள்ளாளரிடம் வன்னியர் பட்டத்தை திருடிவிட்டு, (மறவர், கள்ளர், முத்தரையர் இவர்களுக்கும் உண்டு) இப்போ கவுண்டர்களிடம் இருந்து அந்த பட்டத்தை மட்டுமல்லாமல், தகடூரில் கவுண்டர்களின் கல்வெட்டு, நடுகல் என அனைத்தையும் திருட sketch போடுகிறார்கள். இது நடந்து கொண்டிருக்கும் உண்மை.

    ReplyDelete
  13. தமிழகத்தில் 1 கோடி வன்னியர்கள் இருப்பதாக ராமதாஸ் சொல்கிறார்/// அவர் எப்போ அப்படி சொன்னார்? 2 கோடிக்கும் அதிகம் என்று தான் சொல்லி இருப்பார், மேலும் கடைசியாக எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் வன்னியர்களின் ஜனத்தொகை எவ்வளவு என்று பத்ரி பார்த்திருந்தால் 1 க்கும் குறைவாக இருப்பார்கள் என்கிற ஏளனப்பேச்சு வந்திருக்காது, மாறாக ராமதாசை பகைத்துக்கொள்ளக் கூடாது என்கிற பயம் வந்திருக்கும்.

    ReplyDelete
  14. வன்னியர்கள் 1 கோடி இருப்பதாக சொல்லும் இராமதாஸ் முதலில் நன்றாக புரிந்து கொள்ளட்டும் 108 சாதிகளை உள்ளடக்கி தான் அவர் கூறி இருப்பார்...

    இராமதாஸ் அவர்கள் தன் வன்னியர் பாட்டாளி மக்கள் கட்சியை வழி நடத்திய விதம்...

    இடஒதுக்கீடு,
    வன்னியர் சங்கம்,
    பாட்டாளி மக்கள் கட்சி,
    தலித் ஆதரவு,
    பசுமை தாயகம்,
    மது ஒழிப்பு,
    தலித் எதிர்ப்பு,
    தலித் கொலை,
    திரவிட ஆட்சி எதிர்ப்பு,

    ReplyDelete