Monday, May 13, 2013

பள்ளிக் கல்வி – தமிழ் வழியிலா, ஆங்கில வழியிலா?

[தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று அஇஅதிமுக அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக எனக்குச் சில கருத்துகள் உள்ளன.

சென்ற மாதம், ஒரு கல்வியியல் கல்லூரியில் எம்.எட் படித்ததுக்கொண்டிருக்கும் மாணவர்களிடையே பேசினேன். அந்தப் பேச்சைக் கீழே தந்துள்ளேன். இது சற்றே எடிட் செய்யப்பட்ட வடிவம்.] 

***

நண்பர்களே,


நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் மிகப் பெருமைவாய்ந்த ஒரு கல்வியியல் கல்லூரியில் பட்டம் பெறப் போகின்றீர்கள். விரைவில் வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் ஆசிரியப் பணியைத் தொடங்கப்போகிறீர்கள். உங்களில் பலர் ஏற்கெனவே பல ஆண்டுகள் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். நீங்கள் பெற்றிருக்கும் பட்டத்தின் காரணமாக உங்களில் பலரும் எதிர்காலத்தில் உங்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்கப்போகிறீர்கள். இந்தப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இருக்கலாம், அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருக்கலாம் அல்லது சுயநிதி தனியார் பள்ளிகளாக இருக்கலாம். எதிர்காலத்தில் தமிழகத்தின் கல்விக்கொள்கையை வடிவமைத்து, செயல்படுத்தும் பணி உங்கள் கைகளில் இருக்கும்.

இன்று நான் உங்களிடம் பேச வந்திருப்பது நடைமுறைக்கு மாறான, சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தைப் பற்றியது.

ஜெர்மன் மொழியில் ஸெய்ட்கீஸ்ட் (Zeitgeist) என்ற வார்த்தை ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் அதனை spirit of the time என்று மொழிபெயர்க்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஆன்மா என்று இதனை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆன்மாதான் அந்தக் காலகட்ட்த்தின் பல நிகழ்வுகளை வழிநடத்தும். ஒரு சமூகமே ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிச் செல்லும். சமூகத்தின் அனைத்துவிதமான விசைகளும் இந்தக் கருத்தியக்கத்துக்குக் கடுமையான வலு சேர்க்கும்விதமாக நடந்துகொள்ளும். அதற்கு எதிரான கருத்து கொண்ட தனி நபர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படுவார்கள். அவர்களது மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கான களம்கூட இருக்காது.

இன்று இந்தியாவில் ஆங்கில மொழி அப்படிப்பட்ட ஒரு கருத்தாக்கமாக உள்ளது. ஆங்கில மொழியைப் படித்துப் புரிந்துகொண்டு அதிலேயே பேசவேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டுமல்ல, அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலம் வழியாக மட்டுமே கற்றாகவேண்டும் என்று இன்று மக்கள் அனைவரும் நினைக்கிறார்கள். அதன் காரணமாகவே தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் சேர்க்கவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். எத்தனை பணம் செலவானாலும் பரவாயில்லை என்கிறார்கள் பெற்றோர்கள்.

அவர்களுடைய ஆசையைப் புரிந்துகொள்ளும் தனியார் கல்விநிலையங்கள் பலவும் ஆங்கில வழிக் கல்வியை அளிக்க முன்வருகின்றன. அந்தக் கல்வியின் தரம் குறித்தோ, அதில் படிக்கும் பிள்ளைகளின் விருப்பம் குறித்தோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

நாட்டின் மிகச் சிறந்த அறிவுஜீவிகள் அனைவரும் இந்தியாவின் கல்வி ஆங்கில வழியிலேயே இருக்கவேண்டும் என்கிறார்கள். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியாக இருக்கட்டும், அல்லது பிரதாப் பானு மேத்தாவாக இருக்கட்டும். இந்தியப் பிரதமர், திட்டக் குழுவின் துணைத் தலைவர் என்று தொடங்கி தொழில்துறைத் தலைவர்கள் பலரும் இந்தியாவின் படித்த ஆங்கில வர்க்கத்தை வெகுவாகப் பாராட்டுகிறார்கள். முக்கியமாக தகவல் தொடர்புத் துறையின் அடிமட்ட வேலைகளான கால் செண்டர், டேட்டா எண்ட்ரி போன்ற வேலைகளை இந்தியா பெறுவதற்கு இந்திய மாணவர்களின் ஆங்கிலக் கல்வி உதாரணமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.

படித்தவர்கள் என்றாலே ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்ற எண்ணம் காரணமாக, அவர்களால் தமிழில் நன்றாகப் பேசமுடியும் என்றாலும் அவர்கள் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ள முற்படுகிறார்கள். அது மிக மோசமான ஆங்கிலம் என்றாலும்கூட. பெரும்பாலான இடங்களில் வேலைக்கான நேர்முகத்தின்போது ஆங்கிலத்திலேயே கேள்விகள் கேட்கப்பட்டு அரைகுறை ஆங்கிலத்திலேயே பதிலும் அளிக்கப்படுகிறது.
சரி, இதனால் யாருக்கு என்ன நஷ்டம்? அவரவர் விருப்பம் என்னவோ, அதனை அவரவர் பின்பற்றிவிட்டுப் போகட்டுமே?

உண்மைதான். ஆங்கிலம் படிக்கவேண்டும் என்று விரும்பும் பலரை நீ ஆங்கிலம் படிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் தேவையே இல்லாத நிலையிலும் ஆங்கிலத்தை வற்புறுத்திப் புகுத்தும் நிலை நம் மாநிலத்துக்கு, நம் நாட்டுக்குச் சரிதானா என்ற கேள்வியை, விவாதத்தை உங்கள்முன் வைப்பதே என் நோக்கம். இதைப் பற்றி நீங்கள் சிந்தித்தால் மட்டும் போதும்.

உதாரணமாக, பள்ளிக் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். நமக்கு இரண்டு மொழிப் பாடங்கள் உள்ளன. ஒன்று தமிழ், இன்னொன்று ஆங்கிலம். இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே இருந்துவரும் ஒன்று. இன்றுவரை மாறவில்லை. சொல்லப்போனால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே இருந்தது. அதுவும் ஹைஸ்கூல் எனப்படும் ஆறாம் வகுப்பிலிருந்துதான் மொழிப்பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கல்லூரிக் கல்வி முழுதும் ஆங்கில வழியில்தான் இருந்தது. ஆனால் இன்றோ, ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், ஆங்கில வழிக் கல்வியே வந்துவிட்டது.

இப்படியெல்லாம் இருந்தும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மிக அதிகமான பேர் எந்தப் பாடத்தில் தோல்வி அடைகிறார்கள்? ஆங்கிலப் பாடத்தில்தான். அதோடு அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக் கல்வியிலிருந்து விலகிவிடுகிறார்கள். அவர்கள் பள்ளியில் படிக்கும்போதே பெரும்பாலானோருக்கு மிகவும் கடினமான பாடமாக இருப்பது ஆங்கிலம்தான்.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இன்றைய காலத்தில், உலகில் வெகு சில நாடுகளில்தான் ஓர் அந்நிய மொழியையும் கட்டாயம் படித்துப் பாஸ் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள். பெரும்பாலும் காலனிய நாடுகளில்தான் இந்த நிலைமை. பிரிட்டனில் இந்தப் பிரச்னை இல்லை. பிரான்ஸில் இந்தப் பிரச்னை இல்லை. அமெரிக்காவில் இந்தப் பிரச்னை இல்லை. ஜெர்மனியில் இந்தப் பிரச்னை இல்லை. ஜப்பானில், சீனாவில் என்று எங்கு பார்த்தாலும் இந்தப் பிரச்னை இல்லை. அங்கெல்லாம் மக்கள் அவரவர் மொழியில் படிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அனைவரும் தமிழில்தான் படிக்கவேண்டும் என்பதல்ல என் கருத்து. ஆங்கிலம் அவர்கள்மீது திணிக்கப்படக்கூடாது என்பதுதான் என் கருத்து.

ஆங்கிலம் படித்தால்தான் வேலை என்பது உண்மையல்ல. ஆங்கிலம் படித்தால்தான் மேற்கொண்டு கல்லூரியில் நன்றாகப் படிக்கமுடியும் என்பதும் உண்மையல்ல.

நம்முடைய நோக்கம் என்ன? நாட்டில் உள்ள அனைவரும் நல்ல கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் வளமான ஒரு நாட்டை, வளர்ந்த ஒரு நாட்டை உருவாக்க முடியும். இந்தக் கல்வியில் ஆங்கிலத்தின் பங்கு ஒருசிறிதும் இல்லை என்பதுதான் என் கருத்து.

ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகப் படிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தனியாக, கல்விக்கூடத்துக்கு வெளியே எடுத்துப் படித்துக்கொள்ளலாம். ஆங்கில வழியில், அல்லது ஏன், பிரெஞ்சு வழியில்கூடக் கல்வி பயில விரும்புபவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஏதேனும் கல்விக்கூடங்கள் இருந்தால் அதில் சேர்ந்து படித்துக்கொள்ளலாம். அவர்களை அரசு எக்காரணம் கொண்டும் தடுக்கக்கூடாது. ஆனால் பிற அனைவரும் ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக எடுத்துப் படிக்கவேண்டும் என்று வற்புறுத்துதல் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.

ஆங்கிலம் தேவையே இல்லை, சீனாவைப் பார், ஜப்பானைப் பார் என்று சிலர் சொல்லும்போது அதற்கு மாற்றாகச் சிலர் கருத்துகளை முன்வைக்கவும் செய்கிறார்கள். என் நண்பர் ஒருவர் சொல்கிறார், ‘ஆங்கிலம் தெரியாததால்தான் ஜப்பான் இப்போது நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது; சீனாவில் இப்போதே ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்’ என்று!

ஆனால் அது உண்மையல்ல. ஜப்பான் இந்தியாவைவிட மிக மிக உயர்ந்த நிலையில்தான் உள்ளது. சீனாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளச் சொல்வது பள்ளிக்கு வெளியேதான். அடிப்படைப் பள்ளிக் கல்வியைக் கற்க சீன மொழி (மாண்டரின் அல்லது காண்டனீஸ்) தெரிந்திருந்தால் போதும்.

உலகை வெல்ல ஆங்கில அறிவு நிச்சயம் அவசியம். அது தேவை என்று நினைப்பவர்களால் அதனை எந்நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத் தொழிலில் கால் செண்டரை நிர்வகிக்க சில லட்சம் பேர் தேவை என்பதால் பல கோடிப் பேர்மீது ஆங்கில மொழி திணிக்கப்படவேண்டும் என்று வேண்டுவது எந்தவிதத்தில் நியாயம்?

ஆங்கிலம் ஓர் அந்நிய மொழி. அதனை இந்தியாவில் ஒரு சிலரால் மட்டுமே திறம்படப் பேச முடியும்.

நான் சுமார் ஆறு ஆண்டுகள் அமெரிக்காவிலும் இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்திலும் வசித்திருக்கிறேன். ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுவேன் (என்று நினைக்கிறேன்). ஆனால் நான் ஆங்கிலத்தில் எழுதுவது இலக்கண சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கை இன்றுவரை எனக்கு இல்லை. பேச்சிலும் நிறைய இலக்கணப் பிழைகள் இருக்கும். சரி, நாம் ஒன்றும் இல்லை. ஆனால், பி..கிருஷ்ணன் என்ற ஓர் எழுத்தாளர் இருக்கிறார். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் நன்றாக எழுதக்கூடியவர். அவர் ஆங்கிலத்தில் எழுதி இரு நாவல்கள் வெளியாகியுள்ளன: The Tiger Claw Tree (Penguin), The Muddy River (Westland). அவை ஆங்கிலத்தில் வெளியான பின்னரே அவற்றைத் தமிழில் எழுதுகிறார். அவரும் இவ்வாறே சொல்கிறார். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதில் எங்கேனும் ஏதேனும் தவறு இருக்கலாமோ என்று அவர் எப்போதும் நினைப்பதாக. ஆனால் தமிழில் அவருக்கு அம்மாதிரி எந்தக் கவலையும் இல்லை. எனக்கும்கூட அப்படியேதான். தமிழில் எழுதும்போது ஒருவித assurance உள்ளது. அப்படியே தவறு இருந்தாலும் அதனை யாரேனும் திருத்தினால் உடனே அதனைப் புரிந்து உள்வாங்கி, மீண்டும் தவறே ஏற்படாத வகையில் எழுதமுடியும் என்று.

ஒரு மொழியின்மீதான ஆளுமையும் நம்பிக்கையும்தான், தெளிவாகவும், திடமாகவும், பயமின்றியும் அம்மொழியைப் பேச, எழுத, நம் கருத்துகளை, சிந்தனைகளை வெளிப்படுத்த உதவுகின்றன. அதுதானே நாம் விரும்புவது? இன்று நம் மாணவர்களிடையே காணப்படும் அச்சம் எதன் காரணமாக வருகிறது? நான் எண்ணற்ற கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசுகிறேன். அவர்களால் தமிழிலும் சரியாகப் பேச முடிவதில்லை, ஆங்கிலத்திலும் சரியாகப் பேச முடிவதில்லை. எனவே அவர்கள் வாயே திறப்பதில்லை. வாய் திறந்தால் உளறிவிடுவோமோ என்று பயம். பிறகு soft skills எங்கிருந்து வரும்?

மொழித்திறன் இல்லை என்பதால் மென்திறன் இல்லை, எனவே தன்னம்பிக்கை இல்லை. எனவே உளவியல்ரீதியாக ஒருவர் அழுத்தத்துக்கு உள்ளாகிறார். இதன் காரணமாக ஒரு மாணவர் தன்னுடைய உண்மையான சாதனைகளை ஒருபோதும் செய்வதில்லை. அதன்விளைவாக அவர் குறை-வாழ்க்கையையே வாழ்கிறார். இதனால் அவருடைய குடும்பமும் நாடும் பொருளாதாரரீதியாக பாதிக்கப்படுகிறது.

ஆங்கிலம் தெரியாவிட்டால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று ஒரு பெரும் பட்டியலையே ஒருவர் அளிக்கலாம். முக்கியமாக கல்லூரியில் படிக்கும்போது, அல்லது ஆராய்ச்சி செய்யும்போது, அல்லது வெளிநாடுகளுக்குப் போகும்போது அல்லது ஐடியில் வேலை தேடும்போது என்று இப்படியாக.

ஆனால் ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேரும் 100 பேரில் எத்தனை பேர் இன்று கல்லூரிக்குப் போகிறார்கள் தெரியுமா? இந்திய அளவில் 13.8 பேர்தான். தமிழகத்தில் சுமார் 19 பேர். அதில் எத்தனை பேர் ஆங்கிலம் வழியாகக் கல்வி கற்கிறார்கள் என்று பார்த்தால் மிகக் குறைவுதான். அதில் எத்தனை பேர் ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளட்டுமே? நான்கூட என் ஆராய்ச்சிப் படிப்பின்போது சில பிரெஞ்சு ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்துப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக பிரெஞ்சு மொழி கற்றுக்கொண்டேன். (இப்போது அது தேவையில்லை என்பதால் மறந்துவிட்டேன்.)

உலக அறிவு அனைத்தும் தமிழில் இருக்காது என்று கவலைப்படுவோர் பலர் இருக்கிறார்கள். உண்மைதான். தரமான மொழிபெயர்ப்புகள்மூலமாக மட்டுமே அவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். அப்படி மொழிபெயர்ப்பவர்களுக்குப் பன்மொழி அறிவு கட்டாயம் வேண்டும். ஆனால் அனைவருக்கும் அல்ல.

இறுதியாக ஆங்கில வழிக் கல்விக்கு வருவோம். இன்று தேசமே ஒரு திசை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த அலையில் அடித்துச் செல்லப்படுவோர் அனைவரும் தனக்கு மேலானவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ, அவர்கள் என்ன செய்கிறார்களோ அதனைத் தாங்களும் நகல் எடுக்கவேண்டும் என்று முயன்றே இதனைச் செய்கிறார்கள். அவர்களிடம் சென்று, ‘வேண்டாம் வேண்டாம் நீங்கள் தமிழிலேயே கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர்கள் கட்டாயம் கேட்கமாட்டார்கள். என்னைத்தான் திரும்பக் கேட்பார்கள். ‘நீ மட்டும் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறாய். உன் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வி பயில வைக்கிறாய். நீயும் உன் குடும்பமும் மட்டும் உயரவேண்டும், நாங்கள் மட்டும் தாழவேண்டுமா?’ என்பார்கள். இதற்கான பதில் என்னிடம் இல்லை. இதன் காரணமாக நான் ஆங்கிலம் படிப்பதை நிறுத்தப்போவதில்லை. அல்லது என் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வி கற்பதிலிருந்து தடுக்கப்போவதில்லை.

நீ நம்புவதை நீயே செய்யாவிட்டால்? அப்போது உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா?

நான் ஆரம்பத்தில் சொன்னதை ஞாபகத்தில் வையுங்கள். நான் முன்வைப்பது ஒரு சிந்தனை மட்டுமே. இப்போது நாம் ஒரு திசையில் வெகு தூரம் வந்துவிட்டோம். இதிலிருந்து சட்டென்று திரும்பி, வேறு திசையில் சென்றுவிட முடியாது. ஆனால் நாம் செல்லும் திசை மிக மோசமானது, இது எண்ணற்ற மக்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது என்பதை உணர்கிறேன்.

உதாரணமாக மூன்று விஷயங்களை மட்டும் சொல்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் தரத்தைப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மத்திய வர்க்கம், தம் பிள்ளைகளை அப்பள்ளிகளுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டது. காரணமாக மிக ஏழைக் குழந்தைகள் மட்டுமே அப்பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். அப்பள்ளிகளின் கல்வித் தரம் மட்டுமல்ல, அங்குள்ள வசதிகளும் குறைந்துகொண்டே போகின்றன.

இன்னொரு பக்கம், புற்றீசல்போலப் பெருகும் தரம் குறைந்த தனியார் ஆங்கிலப் பள்ளிகள். இங்கு ஆங்கில வழியில் கற்றுத் தருவதாகச் சொல்கிறார்களே தவிர அங்கு பணிபுரிவோருக்கோ அல்லது அங்கு படிப்போருக்கோ ஆங்கிலத்தைச் சரியாகப் பேசக்கூடத் தெரியாது.

மூன்றாவதாக, எலீட் பள்ளிகள்மேட்டுக்குடிப் பள்ளிகள். இங்கே தமிழ் என்பது மருந்துக்குக்கூடச் சொல்லித்தரப்படுவதில்லை. இப்பள்ளிகளில் தமிழில் பேசினாலே அது குற்றமாகக் கருதப்படுகிறது. தமிழ் என்றால் அசிங்கம், ஆங்கிலம் என்றால் உசத்தி என்ற கருத்தாக்கம் கொண்ட பள்ளிகள் இவை. இங்கு படிப்போர் வெளியே வரும்போது தமிழ் பேசுவோர்மீது கொண்டிருக்கும் மரியாதை எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

இவை மூன்றும் சமூகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் தன்மை கொண்டவை. ஆனால் இன்று இவை மூன்றும்தான் வெகுவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கருத்துகள்.

இவற்றை மாற்றவேண்டும் என்று நீங்கள் கருதினால், என் கருத்தைச் சற்றே யோசித்துப் பாருங்கள்.

பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி, ஆறாம் வகுப்பு முதல் ஒருவர் விரும்பினால் மட்டுமே ஆங்கிலமும் ஒரு மொழிப்பாடம், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் இல்லை, கல்லூரியில் ஒருவர் விரும்பினால் ஆங்கில வழிக் கல்வி... இவற்றைக் கொண்டுவருவதால் நாம் எதையுமே இழக்கப்போவதில்லை. இதன்மூலம் நம் நாட்டின் கல்வித்தரத்தை வெகுவாக உயர்த்தமுடியும் என்று நம்புகிறேன். நம் மாணவர்களின் தன்னம்பிக்கையையும் வெகுவாக உயர்த்தமுடியும் என்று நம்புகிறேன்.

நன்றி.

59 comments:

  1. மிகச் சிறப்பான கட்டுரை/ உறை

    ReplyDelete
  2. தமிழ்நாட்டில் ஹிந்தியை ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும் என்று விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் ,ஆங்கிலமே தேவையில்லை என்கிற உங்களின் கருத்து சிந்திக்க வைப்பதாக உள்ளது.

    ReplyDelete
  3. நான் 1965ல் 11 வது பள்ளியிறுதித் தேர்வு எழுதியவன். ஒன்று முதல் 4ம் வகுப்பு வரை நகராட்சிப் பள்ளிப் படிப்பு. 5ம் வகுப்பு முதல் அரசு மானியம் பெறும் தனியார் பள்ளி. ஆங்கில எழுத்துக்கள் 5ம் வகுப்பில்தான் அறிமுகம்.11ம் வகுப்புவரை அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியில்தான். ஆங்கிலம் ஒரு பாடம் மட்டுமே. 8ம் வகுப்புத் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலக் கட்டுரை/பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளேன்.ஆங்கில இலக்கண‌ வகுப்பு வேப்பங்காயகக் கசந்தது உண்டு.ஆனாலும் அதனை எளிமையாக ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். தினமும் தி ஹிந்து, தி மெயில், தி இண்டியன் எக்ஸ்ப்ரெஸ்,பத்திரிகைகளை வாய்விட்டு உறக்கப் படிக்கும் அப்பா. அதனால் நிறைய ஆங்கிலச் சொற்கள் அறிமுகமும், வாக்கியங்களை நன்கு அமைக்கவும் இயல்பாக அறிய முடிந்தது.

    1969ல் தமிழ் பாடத்தில் இளங்கலையின் போது முதல் வகுப்பில் தேறினேன்.
    இன்று தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் என் மனத் திருப்திக்கு ஏற்றபடி எழுதவும் பேசவும் முடிகிறது.

    1985 ல் நான் வாழ்ந்த பகுதியில் ஒரு அரசு மானியம் பெறும் தனியார் தமிழ் வழிக் கல்விப் பள்ளியைத் துவங்க பலருடன் ஒத்துழைத்தேன். என் மூன்று பெண்களும் என் அண்ணன் பெண்கள் மூவரும் அப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தார்கள். இன்று எல்லோரும் நல்ல முறையில் வாழ்வில் நிலைத்து விட்டார்கள். ஒரு பெண் இலண்டனில் குடியேறியுள்ளாள்.
    மற்றொறு பெண் பாஸ்டனில் பணியாற்றுகிறாள். அந்த அந்த நாட்டு வட்டார‌ வழக்கு ஆங்கிலப் பேச்சு வகையில் இருவருமே பேச அறிந்துள்ளார்கள்.
    எனவே ஆங்கில வழியில் படித்தால்தான் ஆங்கிலம் நன்றாக வரும் என்பது மாயையே







    ReplyDelete
  4. மொழிபற்று என்பதை தாண்டி, அவரவர்களுக்கு எளிதாய் வருவதை, எளிதாய் சிந்திக்க கூடிய மொழியில் அவர்கள் கற்கலாம், என்ற கருத்து ஏற்புடையதாய் உள்ளது.

    இதை நடைமுறை யோசனையில் பார்த்தல் சாத்தியப்பட வாய்ப்புகள் குறைவே.நடுத்தர மக்கள் எப்பொதும் சுற்றத்தின் ஒப்பீடு, மற்றும் அழுத்ததுடனே வாழ்பவர்கள். 10 குழந்தைகள் மத்தியில் ஒத்தை குழந்தையாய் ஆங்கில வார்த்தை புரியாமல் இருக்க அல்லது உரையாடல் மேற்கொள்ளாமல் நம் பெற்றோரோகள் தயாராக இருப்பதில்லை.

    எதிலும் ஒரு நம்பகத்தன்மை, அல்லது ஒரு நிச்சிய வெற்றி பாதை (proven way of success) இல்லை என்றால் இது கருத்தளவில் மட்டும் நின்றுவிடாதா?

    ReplyDelete
  5. Can history be reversed? In particular, English serves as link language in India - the countries you mentioned (China, German..) don't have this sort of multilingual issue. Yes - we could choose an Indian language for link (say Hindi), but then that would be useful only for that purpose - not for world link. English as link language also provides level playing for all non-Hindi speakers. I understand the point of introducing English a bit late - say in third standard (I studied in Tamil medium. English-as-a-language started in 3'rd standard) or fifth/sixth standard. But, I am not sure I can support the idea of making English as completely optional.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே....ஆங்கிலத்தை நீக்கினால், இந்தியாவுக்கு தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பது ரொம்ப தவறு
      தமிழகத்திலிருந்து எத்தனை பேர் வட இந்தியா செல்கிறார்கள்...எத்தனை பேர் வட இந்தியாவிலிருந்து தமிழகம் வருகிறார்கள்... அதிக பட்சம் 5 சதவிதம் ... இதற்கு எதுக்கு தொடர்பு மொழி. அதை என் அனைவரும் படிக்கனும்.. ஒருவருக்கு கட்டய தேவைன்ன அவரு பள்ளிக்கு வெளிய படிப்பதுதான நியாயம் ?

      Delete
  6. கல்வி திறனுக்கும் அதில் மாணவனுடைய தன்னம்பிக்கைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. என் பள்ளி வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கும்போது , ஆங்கிலம் கடினம் , ஆங்கிலத்தில் பேசினால் மதிப்பு, ஆங்கிலப் பிழை வெட்க கேடு என்ற மாயைகளை அகற்றி தன்னம்பிக்கைக்கு அவைகள் ஒருபோதும் இடையூறாக இல்லாமல் செய்தாலே போதும் பள்ளிகளில், என்று தெரிகிறது.

    அமெரிக்காவில் ஒருவருக்கு ஆங்கிலம் இரண்டாம் மொழியாக இருந்து , அதில் அவர் சரளமாக பேசமுடியாமல் இருந்தால் அதை இயல்பாக அந்த நாடு பார்க்கிறது.அதில் குறை ஒன்றுமில்லை. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள நம்மில் சில ஆசிரியர்களுக்கு இந்த இயல்பு இல்லை. ஆங்கில ஆசிரியருக்கு இந்த "இயல்பு" இல்லை என்றால் அது இழிவு. ஆசிரியர்களிடம் இல்லாத இந்த இயல்பு ஒரு மாணவனின் தன்னம்பிக்கையை நசுக்குகிறது.


    நான் கணினித் துறையில் முதுகலை பயின்ற போதும் ஆங்கிலத்தில் திறம்பட பேசியது இல்லை. இப்போதும் அவ்வாறே. எனக்கு அது எந்த விதத்திலும் குறையானதாக தெரியவில்லை. ஒருவேளை நான் ஆங்கிலத்தை ஆண்டிருந்தால் என் நிலை இன்னும் சற்று உயர்ந்திருக்குமோ என்ற கேள்வியை விட ஆங்கிலத்தால் கிழப்பப் பட்ட பீதியால் எத்தனை பேர் இதுவரைக்கும் தங்கள் நிலையை இழந்துள்ளனர் என்ற கேள்வியே ஒரு சமுதாயத்திற்கு முக்கியம் ஆகும் என்று எண்ணுகிறேன்.இரண்டாம் கேள்வியின் வழியே ஒரு அரசு செயல்பட வேண்டும்.

    தன்னம்பிக்கைக்கும் இரண்டாம் மொழிக்கும் இடையே இல்லாத தொடர்பை இருப்பதாக காட்டும் மாயையை துண்டிக்கும் போது தாய் மொழியின் சிறப்பு ஒருவரின் கல்வியில் நிச்சயாக வெளிப்படும். நான் ஆறாம் வகுப்பிற்குப் பிறகு, நன்றாக முழு நம்பிக்கையோடு பயின்ற இரு பாடங்கள் 1. கணிதம் 2. தமிழ் இரண்டாம் தாள். இவை இரண்டுமே என் வாழ்வை முன்னோக்கி எடுத்துச் சென்றன. இவைகளிலும் நான் தவறு செய்வேன். இருப்பினும் என் நம்பிக்கைக்கு உரித்தானவை இவை.

    என்னுடுடைய கணித சிறப்பு தேர்வு (10, 12, மற்றும் இளங்கலை கணிதம் எல்லாவற்றிலும் > 93% ) என்னுடைய தாய் மொழியான தமிழ் மொழியே தந்தது.


    நான் விரும்புவது எல்லாம், தமிழ் வழிக்கல்வி நமது ஆழமான சிந்தனை திறனுக்கும் , இரண்டாம் மொழியான ஆங்கிலம் வெளித்தொடர்பிற்கும் ஆனது. அதாவது இரண்டாம் மொழியானது, வெளியில் உள்ள மாற்று சிந்தனைகளை நம் சிந்தனைக்குள் கொண்டுவர ஏதுவாக இருக்கும் அளவிற்கு செய்து , அந்த மொழியில் ஏற்படும் பிழைகள் இயல்பு அவைகள் நமது இழிவு அல்ல என்ற நிலையை பள்ளிகளும் ஆசிரியர்களும் உண்டாக்கினாலே போதும் என்று எண்ணுகிறேன்.

    எனது 10 ஆம் வகுப்பு தமிழாசிரியர் (கூடங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி -1993.) திரு ஆ. தங்கத்துரை அவர்கள் அடிக்கடி கூறுவார், தமிழ் இரண்டாம் தாளை திறம்பட கற்றுப்பார் உனது கணித அறிவு பன் மடங்கு உயரும் என்று.. என்னே ஆச்சரியம்!!!! , எனது வாழ்க்கையில் 100% உண்மை அது.

    எனக்கு தமிழ் இரண்டாம் தாளில் ஒரு ஆசையை உண்டாக்கி அதன் மூலம் வாழ்க்கை ஓட்டத்தில் தன்னம்பிக்கையான அந்தப் படகை பெறச் செய்ததில் தமிழ் இரண்டாம் தாளுக்கும் அந்த ஆசிரியருக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

    ஆங்கிலப் பிழையை அவமானமாக பார்க்கச் செய்து என் படகை மூழ்கடிக்க அதன் வழியிலே வேறு சில ஆசிரியர்களும் இன்னும் சிலரும் இருந்துள்ளனர்.அவர்களை விரல் காட்டி பயனொன்றும் இல்லை. ஏனெனில் அவர்களும் பாதிக்கப் பட்டவர்களே. அவ்வாறு மூழ்கடிக்கப் பட்ட படகுகள், அவர்களில் சிலரின் படகுகள் உட்பட, ஏராளம் உள்ளன தமிழ் நாட்டில்.

    என் தன்னம்பிக்கைக்கு ஆதாரம் தமிழ் இரண்டாம் தாளும் அதன் வழி கிடைக்கப் பெற்ற கணிதமுமே ஆகும். இவை இரண்டுமே மென் பொருள் உற்பத்தியில் ஆங்கிலத்திற்கு எதிராகப் போராடி ஒரு வேலையை பெறச் செய்தன.

    ஆங்கிலப் பிழைகளிலும் அதை திறம்பட பேச இயலாமையிலும் நான் மூழ்கடிக்கப் பட்டிருந்தால் , இன்று ஆங்கிலம் என்னுடன் சண்டையிட தயங்கி இருக்காது. ஆனால், இப்போதும் அவ்வப்போது சண்டையிடும். இருப்பினும் அது என்னை முழுமையாக மூழ்கடிக்க இயலாது. அது தயங்கும். நானும் அதை முழுமையாக வெற்றி கொள்ள இயலாமல் போகலாம். அது பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் அது என்னுடைய இரண்டாம் மொழிதான். அதை நான் ஆள வேண்டிய அவசியம் இல்லை.அது என்னை ஆழ்த்தாமல் இருந்தாலே போதும்.

    என்னுடைய தமிழ் முதல் தாளில் , நான் சிறந்த மதிப்பெண்ணை பெற்றதில்லை இரு குறைகளின் காரணமாகத்தான் அது என்று நினைக்கிறேன். இவ்வளவு நீள எழுத்துக்களை நீங்கள் படிக்கும் போதே தெரிந்து இருக்கும் முதல் குறை என்ன என்று. ஒன்றை படிப்பவர்களின் நாடி அறிந்து குறைவான எழுத்துக்களில் எழுத இயலாமையால்தான் உள்ளது அந்தக் குறை. வள வளா .. :-).. மேலும் என்னுடைய தமிழ் எழுத்தக்களை பேனாவில் எழுதி திரும்ப படிக்கும் போது எனக்கே ஒரு வலி ஏற்படும். இப்போது தட்டுத் தமிழில் அந்தக் குறை இல்லை. நன்றி தட்டுத் தமிழே!!

    ReplyDelete
  7. I had second thoughts about learning in Tamil. This started changing and now I completely believe learning in ones' own mother tongue is good for the long term benefit of a society. This started happening When I was living in London and during one interaction with one of the Englishmen, he asked, so "do you guys think in English?" This happened some 13 years back, Upto that point, I never thought in those terms. I started contemplating on this and slowly came to the view point that I now have.

    If you can't think in a language you can't express it. When you can't express, nobody knows what your thoughts are or what you are capable off. There it dies with you.

    Thanks to Badri for making the point so nicely.

    ReplyDelete
  8. முழுவதுமாக உடன்படுகிறேன்.

    ReplyDelete
  9. பிரச்சினையின் ஆதாரம் என்னவென்று கவனிக்க வேண்டும். ஆங்கிலமோகம் பள்ளிகளுக்கு வந்ததன் காரணமே, இந்தி எதிர்ப்பு தான். இந்தி தெரியாதவன் இன்று தமிழ்னாடு ஒன்றில் தான் இருக்கிறான். இதைத் தமிழக எல்லையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வெளியில் போனாலே புரிந்துகொள்ள முடியும். (நான் அகில இந்தியப் பணியில் இருந்து ஆறு மானிலங்களின் நிலைமையை நேரில் அறிந்தவன்).
    ஒரு தெலுங்கனும் ஒரு கன்னடனும் சந்தித்தால் தங்களுக்கிடையே இந்தியில் தான் பேசுகிறார்கள், ஆங்கிலத்தில் அல்ல. ஒரு மலையாளியும் ஒரு மராட்டியனும் சந்திதால் இந்தியில் தான் பேசிக்கொள்கிறார்கள். ஆங்கிலத்தில் அல்ல. ஆனால் பெங்களூருக்குச் செல்கிற தமிழனால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசமுடிகிறது. ஆங்கிலம் தெரியாத கன்னடன், தான் அவமதிக்கப்படுவதாகக் கருதி, உடனே தமிழனை வெளியே போ என்கிறான். இது தான் அடிப்படைப் பிரச்சினை.
    உள்நாட்டில் மட்டுமல்ல, துபாய் போன்ற அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள், இந்தி அறிவின்மையால், உடன் பணிபுரியும் மலையாளத் தோழர்களுடன் சரிசமமாகப் பழகமுடியாமல் எவ்வளவு இன்னல் படுகிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
    அதாவது, இந்தியாவுக்குள், தொடர்பு மொழியாக மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும், அதற்குரிய சரித்திரபூர்வமான தகுதியைப் பெற்றதும், இந்தி தான், ஆங்கிலம் அல்ல, என்பதை நாம் அங்கீகரித்தே ஆக வேண்டும். பூனை கண்ணை மூடிக்கொள்வதால் சூரியனை மறைத்துவிட முடியாது. ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக இந்தியாவின் எந்த மானிலத்து மக்களும் (சில வட கிழக்கு மானிலங்கள் விதிவிலக்கு) இன்றுவரை மட்டுமல்ல, என்றுமே ஏற்கப் போவதில்லை. எனவே தமிழைக் காப்பாற்றவேண்டும் என்றால், ஆங்கிலத்தின் செல்வாக்கிலிருந்து வெளியில் வரவேண்டுமென்றால், முதலில் தமிழனுக்குத் தேவைப்படுவது, தானும் மற்ற மானிலத்து மக்களைப்போல இந்தியில் திறமை பெறவேண்டியதாகும். தனது இந்தி அறிவின்மை என்னும் தாழ்வு மனப்பான்மை தான் தமிழனை, ஆங்கிலமாயையில் வீழ்த்துகிறது. இந்தியில் திறமை பெற்றால், ஆங்கில மீடியத்தின் தேவை தானாகவே அழிந்துபோகும். அதுவரை என்னதான் நீங்களும் நானும் கரடியாகக் கத்தினாலும், தமிழ் அறிஞர்கள், தமிழ் வாழ்க என்று முழங்கிக் கொண்டே தங்கள் குழந்தைகளை ஆங்கில மீடியத்தில் தான் படிக்க வைப்பார்கள். வசதியற்ற குழந்தைகள் மட்டுமே, வசதிகளற்ற அரசுப் பள்ளிகளில் பயிலும் இன்றைய நிலைமை தான் தொடர்ந்து நீடிக்கும்.
    எனவே, நான் கூறுவது என்னவென்றால்: (1) ஆங்கில மீடியத்தில் படிப்பதால் எந்த நன்மையும் இல்லை.(2)ஆங்கிலத்தையும் இந்தியையும் இரண்டாம் பாடமாகப் படித்தால் போதுமானது. (3) தமிழ் மீடியம் ஒன்று தான் உண்மையான அறிவை மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. தமிழன் முதலில் தமிழில் 12 ம வகுப்பு வரை கல்வி கற்றுக்கொள்ளட்டும். உலகத் தொடர்புக்கு ஆங்கிலத்தையும் படித்துக்கொள்ளட்டும். மொழி விருப்பம் கொண்டவர்கள் அவர்களுக்கு பிடித்த மொழிகளை படித்துக்கொள்ளட்டும். இந்திய மொழிகளில் ஹிந்தியை மட்டும் திணித்தால் போதும் என்பது தவறானது. எதற்கு இந்தியாவிற்கு ஒரு பொது மொழி?. ஹிந்தி , ஆங்கிலம் இரண்டுமே மற்ற மொழியினருக்கு வேற்று மொழி தான். அதில் உலக மொழியை ஹிந்தி பேசுபவரும் கற்றுக்கொள்ளும் போது எதற்கு மற்றவருக்கு மட்டும் மூன்று மொழி?. ஹிந்தி பேசுபவர்கள் மட்டும் தான் இந்தியரா?. மற்ற மொழி பேசுபவர்கள் தாழ்ந்தவரா?. ஒரு தமிழன் கன்னடத்தவரிடம், மலையாளியிடம், மராட்டியனிடம் ஏன் ஹிந்தியில் பேசவேண்டும்?. கன்னடம் , மலையாளம், மராட்டி கற்றுக்கொள்ளட்டுமே?.ஊருக்கு தகுந்தாற் போல் தன்னை தகவமைத்துக்கொள்ளட்டுமே?.இரு வேற்று மொழிக்காரர்கள் ஏன் ஹிந்தியை பொது மொழியாக பேசி தம்மை தாழ்ந்தவராக கருதவேண்டும்?. முதலில் ஹிந்திக்காரர்கள் தமிழை, கன்னடத்தை ஒரு கட்டாயப்பாடமாக வைத்தால் ஏற்றுக்கொள்வார்களா என்று கேளுங்கள்..

      Delete
    2. இதுக்கு பதிலா ஒரு பாட்டில் பாலிடால வாங்கிக் குடிக்கச் சொல்லியிருக்கலாம்.

      Delete
    3. //பெங்களூருக்குச் செல்கிற தமிழனால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசமுடிகிறது. ஆங்கிலம் தெரியாத கன்னடன், தான் அவமதிக்கப்படுவதாகக் கருதி, உடனே தமிழனை வெளியே போ என்கிறான். இது தான் அடிப்படைப் பிரச்சினை. //

      முட்டாள்தனமான கருத்து. பெங்களூரில் கன்னடர்களும் (கொச்சைத்) தமிழ் பேசுவார்கள் என்பதை அறியாதவரின் கருத்து.

      இவரின் கருத்துப்படி கன்னடனின் வருத்தம் நாம் கன்னடம் பேசவில்லை என்பதல்ல, இந்தி பேசவில்லை என்பதற்காக. நல்லா இருக்கு கதை.

      Delete
  10. // நீ நம்புவதை நீயே செய்யாவிட்டால்? அப்போது உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா? //

    எங்கிருந்து தொடங்கப்போவதாக உங்களுக்கு உத்தேசம். இல்லைன்னா சாதாரண மக்கள் கேட்டுக்கொண்டே போய்விடுவார்கள்.

    Start being the change you wish to see. All those commented & OP what is your starting point on this?

    ReplyDelete
    Replies
    1. hmm.. sometimes we tend to know what is the right way or the right thing to do - but still we may not be able to follow. Many of my smoking friends want to quit - but they say practically it has been very hard to quit. But, thinking along the right lines (i.e., whatever you believe is the "right" line) is not bad. That is the first step. That said, I don't agree with Badri's line of reasoning/thinking on this. It is not possible to reverse history now - we need to look for ways to improve the current situation. Less college enrolling, lack of teacher training are problems to be solved - those can not be the reasons for complete reversal.

      Delete
    2. பொன்.முத்துக்குமார்Tue May 14, 11:34:00 PM GMT+5:30

      //எங்கிருந்து தொடங்கப்போவதாக உங்களுக்கு உத்தேசம். இல்லைன்னா சாதாரண மக்கள் கேட்டுக்கொண்டே போய்விடுவார்கள்.//

      "நான் ஆரம்பத்தில் சொன்னதை ஞாபகத்தில் வையுங்கள். நான் முன்வைப்பது ஒரு சிந்தனை மட்டுமே."

      Delete
    3. என் 2.5 வயது மகளுக்குத் தெரிந்தது அம்மா, அப்பா மட்டுமே. டாடி, மம்மி அல்ல. அவரிடம் கூடிய மட்டும் தமிழிலேயே பேசுகிறோம். 5,6 வயது வரை மாண்டிசோரி பள்ளியில் சேர்த்துவிட உத்தேசம். அங்குதான் மக்கடிப்பதை விடுத்துச் சிந்திக்க, கேட்டு அறியக் கற்றுக் கொடுப்பதாக எண்ணம்.

      மழலை, பொம்மைக் கடைகளில் தேடிய வரை ஆங்கில எழுத்துகளைக் கற்றுத் தர விதம் விதமாக விளையாட்டுப் பொருட்கள் உள்ளன. கோவையில் ஓரிடத்திலும் தமிழ் எழுத்துக்களைக் காண முடியவில்லை.

      ஆங்கில விளையாட்டுப் பொருட்களைக் *காப்பியடித்தாவது* தமிழ் மொழி எழத்துக்களை கற்றுத் தரும் பொம்மைகளை யாரும் செய்யக் காணோம்.

      பெங்களூரில் 20 ஆங்கில எழுத்து பொம்மைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு கன்னட எழுத்து பொம்மையைக் கண்டேன்.

      Delete
  11. ஆமாம் இது ஒரு சிந்தனை மட்டுமே. நடைமுறை சாத்தியமற்றது. அந்த கால கட்டத்தை நாம் கடந்து வந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. திரு பத்ரி, தாங்கள் கூறுவதை நூற்றுக்கு நூறு ஆதரிக்கிறேன்.தமிழ் மூலம் அதாவது தாய் மொழி மூலம் கற்பதே மிகவும் சிறந்தது. ஆங்கிலம் மூலம் படித்தால் அது உசத்தி என்பது தவறான கருத்து.இன்று நாம் தமிழிலும் சரியாக எழுதத் தெரியாது. ஆங்கிலத்திலும் சரியாக எழுத வராது என்ற தலைமுறைகளை உருவாக்கி விட்டோம்.
    இதற்கெல்லாம் காரணம் நமது அரசு தான். ஐந்தாம் வகுப்பு வரையிலான அதாவது ஆரம்பக் கல்வியை அளிப்பது என்பது கார்ப்பரேஷன் மற்றும் முனிசிபாலிடிகளின் அடிப்படைக் கடமை. அவர்கள் அதைச் செய்யத் தவறியதால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் துறையினர் ஆரம்பப் பள்ளிகளை ஆரம்பித்தனர். அவை ஆங்கில மீடியத்திலான பள்ளிகளாகவே இருந்தன. இவை புற்றீசல் போல முளைத்த அதே நேரத்தில் முனிசிபாலிடி கார்ப்பரேஷன் ஆரம்பப் பள்ளிகள் த்ரம் குறைய அரம்பித்தன.இந்தக் கட்டத்தில் பள்ளி நடத்துவது நல்ல பணம் பண்ணும் வியாபாரமாகியது. மானில அரசு தேவையான அளவுக்கு அரசுப் பள்ளிகளை (தமிழ் வழியிலான்) பள்ளிகளைத் தொடங்க முன் வரவில்லை.அவ்வப்போது ஆண்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பள்ளிகளைத் தொடங்கி நல்ல பணம் ப்ண்ணிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள்து வியாபாரத்தைக் கெடுக்க ஆளும் கட்சிகள் விரும்பவில்லை.
    தனியார் ப்ள்ளிகள் தங்கள் பள்ளியில் பணி புரிகின்ற ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம் கொடுத்து கசக்கிப் பிழிந்து வேலை வாங்கினர். இதில் வேடிக்கை என்ன்வென்றால் அந்த ஆசிரியர்களில் பலர் முறையாக ஆசிரியர் பணிக்கான பயிற்சி பெறாதவர்கள்.ஆனால் அப்பள்ளிகளில் ஒழுங்கு இருந்தது.கண்டிப்பு இருந்த்து.
    அதே நேரத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட அரசுப் பள்ளிகளில் நிர்வாகம் சீர் கெட்டது. இது தான் தனியார் பள்ளிகளை மேலானவையாக் காட்டின.அரசுப் பள்ளிகளின் நிலைமையை உயர்த்த வேண்டும் என்று காலம் தாழ்ந்து உணரப்பட்டது.
    நாடு பிடிக்க வந்த ஆங்க்லேயர்கள் முதன் முதலில் தமிழகத்தில் தான் காலடி வைத்தார்கள் என்ற காரணத்தாலோ என்னவோ நம் மானிலத்தில் ஆங்கில மோகம் ஏற்பட்டுள்ளது.
    கல்வித் தரத்துக்கும் பாடமொழிக்கும் தொடர்பே கிடையாது. ஆனால் ஒரு கால கட்டத்தில் ஆங்கில வழிக் கல்வி தான் உயர்ந்தது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது.இது மிக ஆழமாகப் பதிந்து விட்டது. இது துரதிருஷ்ட வசமானதே.
    இந்த ஆங்கில மோகம் ஏற்கெனவே நமது கலாச்சாரத்தைப் பாதித்து விட்டது. வ்ருகிற ஆண்டுகளில் நாம் அனைவரும் வெல்ளைக்காரர்களாக அனேகமாக அமெரிக்கர்களாக மாறிவிடுவோம். நமது நாளிதழ்கள், வார மாத இதழ்கள்,சினிமாப் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவை இதை நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
    தமிழ் வாழ்க என்று போலியாக்க் கோஷம் போட்டவர்கள், போடுகிற்வர்கள் தான் அனைத்துக்கும் காரணம்.

    ReplyDelete
  13. பொன்.முத்துக்குமார்Tue May 14, 12:42:00 AM GMT+5:30

    நல்ல கட்டுரை பத்ரி. சிந்தனை என்ற அளவிலேயே நின்றுவிடும் அபாயம்தான் இதன் எதிரி.

    ஆங்கிலம் போன்ற ஒரு மொழியானது அதை பேசத்தெரியாதவர்களுக்கு ஏற்படுத்தும் அதீத தாழ்வு மனப்பான்மை – குறிப்பாக கிராமப்புற இளையோர்களுக்கு – மிக அபத்தமாக இருக்கிறது.

    ஆங்கிலம் தெரியாதவர்கள் நகர்ப்புறத்தில் எப்படி மிருகத்தை பார்ப்பது போல பார்க்கப்படுகிறார்கள் என்பதை சென்னையில் வேலை பார்த்த நாட்களில் கவனித்திருக்கிறேன். அருவருப்பாக இருக்கும்.

    என்னுடன் இளநிலை அறிவியல் பட்டபடிப்பு முடித்த நண்பன் ஒருவன் சென்னைக்கு டேட்டா என்ட்ரி ஆபரேடர் வேலைக்கு வந்தான். வேலையும் கிடைத்து சேர்ந்தவன் அங்கே எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள் என்பதாலும் இவனால் ஆங்கிலத்தில் பேச இயலவில்லை என்பதாலும் வேலையை விட்டு ஊருக்கே போய்விட்டான். (இத்தனைக்கும் டேட்டா என்ட்ரி ஆபரேடர்-கள் அவ்வளவாக ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடும் அதிகாரிகளுடன் நேரடியாக பேசக்கூடிய வாய்ப்புகள் மிகக்குறைவே)

    அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தும் எனக்கும் பிழையற எழுதுதல் ஒரளவு கைவரப்பெற்றாலும் இன்னும் முழுதும் பிழையற பேசுதல் இயலவில்லை. தமிழில் யோசிப்பதை முதலில் ஆங்கிலத்தில் மனதிற்குள் மொழிபெயர்க்கவேண்டிய தேவை இருப்பதால் மெதுவாக பேசவேண்டி உள்ளது. இது நல்லதே.

    மேலும் நமது 'கம்பி நீட்டிட்டான்' போல ஆங்கிலத்தில் வழங்கும் idioms and phrases. நல்ல வேளை கூகுளாண்டவர் துணை இருக்கிறதோ தப்பித்தோமோ.

    திரும்பிசெல்லல் இனி இயலாது என்பதால், மாணவர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்கூட) ஆங்கிலம் பிழையற பேச / எழுத கற்றுக்கொடுப்பதும், குறைந்தது பத்தாம் வகுப்பு வரையில் தமிழ் கட்டாய பாடமாக இருக்கவேண்டியதுமே குறைந்தபட்ச சாத்தியம்.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்.

    ReplyDelete
    Replies
    1. Agree with the last paragraph. Can't reverse. We have to try to improve the situation.

      Delete

    2. அப்படியே மோகன்தாசும் நெனச்சிருந்தா?

      Delete
  14. http://ramachandranwrites.blogspot.in/2011/06/blog-post.html


    தேர்தலில் வென்ற எல்லா மக்கள் பிரதிநிகளும் கட்டாயமாக தங்களின் பிள்ளைகளை அரசு நாம் தான் சேர்க்கவேண்டும் என்பதை சட்டப்படி கட்டாயம் என்று செய்தால் போதும். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மகனோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரின் பேத்தியோ படிக்கும் பள்ளி, உடனடியாக தரம் உயர்ந்து விடும்.


    அரசியல் வாதிகள் இதை செய்யாமல், அரசு உழியர்கள் நிச்சயம் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்

    ReplyDelete
  15. பத்ரி சார், உங்களது பேச்சு அருமையாக இருந்தது. தமிழ் கல்வி மூலம் நம் மாணவர்களின் தன்னம்பிக்கையையும் வெகுவாக உயர்த்தமுடியும் என்பதை நான் முற்றிலும் அமோதிக்கிறேன்

    ஒரு முறை Reunion என்ற French காலனியில் உள்ள ஒரு தபால் அலுவலகத்தில் இந்தியாயுக்கு தபால் அனுப்ப சென்றேன். அவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடியதில் கடைசிவரை அவர்களுக்கு எனது கோரிக்கையை புரிய வைக்கமுடிவில்லை. தோல்வியுடன் வெளியே வந்தஉடன், தபால் நிலையத்திற்குள் என் அருகில் நின்றவர் மிக சகஜமாக என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடினார். நான் அவரிடம் கேட்டான் ‘ இது வரை தபால் அலுவலகத்தில் இந்த கடிதத்தை இந்திய அனுப்பவேண்டும் என நான் அலுவலர்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணும்போது நீங்களும் அருகமையில்தான் இருந்தீர்கள், தாங்கள் எனது பேச்சை பிரெஞ்சு மொழியில் அலுவலர்களுக்கு மொழிபெயர்த்து கூறியிருக்கலாமே என்று கேட்டதற்கு, அவர் ‘நான் அப்படி செய்தால் நீங்கள் எங்கள் மொழியை என்றுமே கற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஆகவே அடுத்த முறை Reunion வரும்போது பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ளுங்கள்’, என்றார். அவருக்கு பிரெஞ்சு மொழி மீது உள்ள பற்றை கண்டு மிகுந்த மரியாதையை கொண்டேன். ஆனால் தமிழர்கள் ஆகிய நாம் எந்த அளவுக்கு தமிழ் மேல் பற்று கொண்டுள்ளோம் என்பதை சிந்திக்கவேண்டும்.

    வளரும் இளைய தலைமுறைக்கு தமிழ் மேல் அக்கறையை கொண்டு வர தமிழக அரசு, மெடிக்கல் மற்றும் பொறியியல் படிப்பு சேர்கையில் +2 தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரு மாணவன் பெற்ற மதிப்பெண்களை கட் ஆப்க்கு கணக்கில் கொள்ளும் வகையில் ஒரு அரசனை வெளியிடவேண்டும். இன்றைய சூழ்நிலையில் தமிழ் வளர, அரசு தமிழை மாணவர்களிடம் திணித்துதான் ஆகவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. **
      அவர் ‘நான் அப்படி செய்தால் நீங்கள் எங்கள் மொழியை என்றுமே கற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஆகவே அடுத்த முறை Reunion வரும்போது பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ளுங்கள்’, என்றார். அவருக்கு பிரெஞ்சு மொழி மீது உள்ள பற்றை கண்டு மிகுந்த மரியாதையை கொண்டேன்.
      **

      இதை ஒரு தமிழர் தமிழகத்தில் *இந்தி*யரிடம் சொல்லியிருந்தால் 'தமிழனின் திமிர், பிரிவினைச் சதி' என கூவப்பட்டிருக்கும்.

      Delete
  16. அருமையான பதிவு சார்... ஆழ்ந்து யோசிக்க வைக்கும் சிந்தனை... இறுதியில் நீங்க அடுக்கும் பகுதிகள், எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது

    ReplyDelete
  17. Do you send your kids to a Tamil medium school?

    ReplyDelete
  18. ஆங்கிலம் படிக்க விருப்பம் இருப்பவர்கள் மட்டும் படிக்கட்டும். உண்மை, நான் பொறியியல் மாணவி. சிறுவயதில் இருந்து ஆங்கில வழிக் கல்வி தான் கற்றேன். மூன்று பள்ளிகளில் படித்திருக்கிறேன். அதில் சிறுவயதில் படித்த பள்ளி ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி தான் என்ற போதிலும், அங்கு படித்தவரை எனக்கு ஆங்கிலம் பேச வராது! படித்து பரிட்சையில் எழுதி முதல் மதிப்பெண் வாங்கி விடுவேன் ஆனால். பிறகு ஒரு பள்ளிக்கு மாற்றினார்கள் அப்பாவிற்கு வேலை மாற்றம் ஆனபோது. அந்தப் பள்ளியில் ஆங்கிலத்தில் மட்டும் தான் பேச வேண்டும். அங்கு சென்று ஒரு மாதம் கடினமாக இருந்தது. பிறகு ஆங்கிலம் பேசப் பழகிவிட்டேன். அடுத்து பயின்ற பள்ளியும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, அங்கும் ஆங்கிலம் தான் பேசினார்கள். அங்கும் என்னால் பேச முடிந்தது. நான் ஆங்கில வழிக் கல்வியே சிறுவயதில் இருந்து படித்ததால், எனக்கு சிறுவயதில் ஆங்கிலம் பேச வராத போதிலும், நடுவில் பேசியே ஆக வேண்டும் என்ற நிபந்தனை வந்த போது, கொஞ்சம் கடினமாக இருந்த போதிலும், பேசிவிட்டேன், அடிப்படையில் நிறைய ஆங்கிலத்தில் எழுதி பழக்கம் இருந்ததால்.

    ஆனால், இன்று நான் பொறியியல் படிக்கிறேன். என்னுடன் நிறைய பிள்ளைகள் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் படிக்கிறார்கள், அவர்களில் பலர் ஆங்கில வழியில் படிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதில் வெகு சிலரே ஆங்கிலத்தில் பயில பழகி இருக்கிறார்கள்.

    என் தோழி ஒருத்தி, பள்ளியில் நிறைய மதிப்பெண்கள் பெற்று பொறியியல் சேர்ந்தவள், சிறுவயதில் இருந்து அவளது பள்ளியில் அவள் தான் முதல் மதிப்பெண். ஆனால், தமிழ் வழிக் கல்வி பயின்றவள். இப்போது கல்லூரியில் வந்து எல்லாம் ஆங்கிலம் என்றதும், அவளுக்குக் கடினமாக இருக்கிறது. இதுவரை முதல் மதிப்பெண் மட்டுமே வாங்கிப் பழகியவளுக்கு, இங்கு வந்து ஆங்கிலம் என்ற காரணத்தால் அவளது மதிப்பெண் குறைந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    அவளது தன்னம்பிக்கை சுத்தமாக இப்போது அடிபட்டுவிட்டது. அவள் படிப்பதற்கே தகுதி அற்றவள் என்பது போல நினைக்கத் தொடங்கிவிட்டாள். மேல் படிப்புப் படிக்கலாம், வேலைக்குச் செல்லலாம் என்று பள்ளியில் படிக்கும் போது நம்பிக்கையோடு இருந்தவள், இப்போது இந்த நான்கு ஆண்டுகள் மட்டும் போதும், எனக்கு படிப்பே வரவில்லை என்று சொல்கிறாள்.

    காரணம், ஆங்கிலம், இதே பாடத்தைத் அவள் இப்போது தமிழில் படித்திருந்தால், உறுதியாகச் சொல்ல முடியும் என்னால், அவள் முதல் மதிப்பெண் இப்போதும் பெறமுடியும் என்று.

    இங்கு எனக்குத் தெரிந்து, ஆங்கில வழிக் கல்வி, தமிழ் வழிக் கல்வி எது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், சிறுவயதில் இருந்தே ஆங்கில வழிக் கல்வி என்றால் ஆங்கில வழிக் கல்வி. தமிழ் என்றால் இறுதி வரை தமிழிலேயே படிக்கலாம். நடுவில் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ மாறும் போது தான் பிரச்சனை வருகிறது என்பது எனது கருத்து.

    உதாரணமாக இப்போது என்னை தமிழில் பொறியியல் படிக்கச் சொன்னால், எனக்குக் கடினமாக இருக்கும். ஆனால், என்னால் படிக்க முடியும், காரணம் தமிழ் என் தாய் மொழி. இதுவே, தமிழ் வழிக் கல்வி பயின்ற ஒரு மாணவரால், இதே போல ஆங்கிலவழியில் படிக்க இயலுமா என்பது சிறிது சந்தேகம் தான். ஆனால், பழகப் பழக வந்துவிடும். ஆனால், பழகும் வரை பலரும் தாக்குப் பிடிப்பதில்லை என்பது தான் இங்கு பிரச்சனை.

    தங்களது பதிவு, அருமை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. * இதுவே, தமிழ் வழிக் கல்வி பயின்ற ஒரு மாணவரால், இதே போல ஆங்கிலவழியில் படிக்க இயலுமா என்பது சிறிது சந்தேகம் தான். ஆனால், பழகப் பழக வந்துவிடும். ஆனால், பழகும் வரை பலரும் தாக்குப் பிடிப்பதில்லை என்பது தான் இங்கு பிரச்சனை.*

      ஏன் பள்ளியிறுதி விடுமுறை (60) நாட்களில் எளிய ஆங்கிலம் கற்பதைப் (rapid, capsule based) பற்றி யாரும் யோசிக்கவில்லை?

      Delete
  19. பள்ளி கல்வியால் அனைவரையும் அறிவாளியாக .சிறந்த படிப்பாளியாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கை ஆச்சரியத்தை தருகிறது.
    குறிப்பிட்ட மொழியில்,தாய்மொழியில் கற்றால் அனைவரும் அறிவாளியாகி விடுவர்,உலகில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நூயுடன்களும் ,போசெகளும் ஓடி விளையாடுவார்கள் என்ற எண்ணம் சரியானது தானா
    பள்ளி கல்வியின் முக்கியமான நோக்கம் சிறுவர்களின்,மாணவர்களின் வாழ்வை ஒழுங்கு படுத்துதல்.நேரத்திற்கு எழுந்திருத்தல்.வகுப்பின் போது காலைகடன்கள் வந்தால் சிரமம் என்பதால் காலைகடன் கழித்தலை எழுந்தவுடன் செய்வதற்கு உடலை பழக்குதல்
    பல்வேறு குடும்பங்களை சார்ந்த குழந்தைகளுடன் பழகுதல்,ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுதல்,பகிர்தல்,நட்பு பாராட்டுதல்,நண்பர்களை பெறுதல்.ஆசிரியர் என்பவரை மதித்தல்,பல்வேறு துறைகளை பற்றி அறிதல் ,ஒன்றாக விளையாடுதல்,ஒன்றாக பயணம் செய்தல் போன்றவற்றோடு சில விஷயங்களை புத்தகங்களின் வாயிலாக,ஆசிரியரின் வாயிலாக தெரிந்து கொள்ளுதல்.
    பள்ளிகளை கிரிக்கெட்,கால்பந்து அகாடமி போல எண்ணுதல் சரியான ஒன்றா.அகாடேமிகள் தோனியை,ரூணியை,செரெனாவை உருவாக்காது.அவர்கள் அவர்களை செம்மை படுத்தி கொள்ள வழியை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்வார்கள்.
    படிப்பும் அதே தான்.குறிப்பிட்ட பள்ளி,குறிப்பிட்ட வகை பயிற்சிமுறை,தாய்மொழி கல்வி பல அறிவாளிகளை உருவாக்கும் என்ற கூற்றில் உண்மை குறைவு.அனைவருக்கும் அடிப்படை அறிவு தருவது தான் பள்ளியின் கடமை.

    ReplyDelete
  20. 1. "ஆனால் ஆங்கிலத்தின் தேவையே இல்லாத நிலையிலும் ஆங்கிலத்தை வற்புறுத்திப் புகுத்தும் நிலை நம் மாநிலத்துக்கு, நம் நாட்டுக்குச் சரிதானா என்ற கேள்வியை, விவாதத்தை உங்கள்முன் வைப்பதே என் நோக்கம்." - The premise of the article is that English is not required for a significant number of people in Tamil Nadu. This basic premise is flawed. True, a person who does not have ambitions outside Tamil Nadu does not need to learn any other language to survive. But not knowing English will prevent the person from acquiring a wide spectrum of jobs where his technical skills would have been otherwise appreciated. By learning only Tamil, the person is curtailing his/her own future ambitions.

    A few more observations about the article:

    2. The comparison to countries such as France, Germany, England and Japan - These are countries that have accumulated huge amounts of knowledge capital in their native languages and continue to add significant technical expertise through innovations. By contrast, our country's contribution to research is still extremely small.

    3. "உலகை வெல்ல ஆங்கில அறிவு நிச்சயம் அவசியம். அது தேவை என்று நினைப்பவர்களால் அதனை எந்நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்." - This contradicts what is stated earlier in the article - "இப்படியெல்லாம் இருந்தும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மிக அதிகமான பேர் எந்தப் பாடத்தில் தோல்வி அடைகிறார்கள்? ஆங்கிலப் பாடத்தில்தான்." - English is not a technical subject, but a language. Expertise can be achieved only by practice, as opposed to only learning the grammar in class. Our comfort with Tamil also comes from using the language so frequently. So a good professional level grasp/comfort of English (or any other language) is very harder to obtain later on in life if you haven't learnt it from childhood.

    4. "ஆனால் ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேரும் 100 பேரில் எத்தனை பேர் இன்று கல்லூரிக்குப் போகிறார்கள் தெரியுமா? இந்திய அளவில் 13.8 பேர்தான். தமிழகத்தில் சுமார் 19 பேர்." - References for the numbers, please.

    ReplyDelete
    Replies
    1. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/focus-on-increasing-gross-enrolment-ratio-minister/article4483479.ece

      "At present, Tamil Nadu’s GER in higher education was 18 per cent against the national average of 13."

      A better and more accurate data was available in a Times of India report this month, which said, GER for India is 13.8, TN is 19, Maharashtra above 20%.

      http://www.ey.com/Publication/vwLUAssets/Private_sector_participation_in_Indian_higher_education/$FILE/Private_sector_participation_in_Indian_higher_education.pdf

      Page 7

      The Gross Enrollment Ratio (GER) currently stands at about 13.8%, with West India having the highest GER of 25.7%.

      Here, I suspect the West GER number. It can't be this high, because Gujarat's GER is low. Maharashtra's is above 20 but below 21. Goa may be high but too small a population.

      ===

      I disagree with all your assertions otherwise, but will stay away from arguments for now. The English lovers are a difficult lot to argue with! I will be happy to take you around on one of my travels so we can go and visit a few villages in TN, so you can see for yourself what is going on.

      Delete
    2. Excellent points made by Bharath. I almost totally agree. We should think of English as a tool or technology like electricity, paper, internet, not merely a language.

      The fear of losing Tamil is greatly exaggerated.

      Delete
    3. //These are countries that have accumulated huge amounts of knowledge capital in their native languages and continue to add significant technical expertise through innovations. //

      Dude,

      Do your bit to learn how to type in Tamil.
      Do your contribution in translating content from other languages (English?) into Tamil. May be start with Tamil Wikipedia.

      //By contrast, our country's contribution to research is still extremely small.//

      Because we rote and vomit in English.

      Delete

  21. 5. " அப்படி மொழிபெயர்ப்பவர்களுக்குப் பன்மொழி அறிவு கட்டாயம் வேண்டும். ஆனால் அனைவருக்கும் அல்ல." - How is this scalable when the demand for our expertise is going to come from outside Tamil Nadu? The need for the language does not end with acquiring knowledge. You need it while interacting with business partners. Assuming that our businesses are going to be isolated to Tamil Nadu is a very serious and wrong assumption.

    6. "அப்பள்ளிகளின் கல்வித் தரம் மட்டுமல்ல, அங்குள்ள வசதிகளும் குறைந்துகொண்டே போகின்றன." - Is it English that is responsible for this?

    7. "இப்பள்ளிகளில் தமிழில் பேசினாலே அது குற்றமாகக் கருதப்படுகிறது. தமிழ் என்றால் அசிங்கம், ஆங்கிலம் என்றால் உசத்தி என்ற கருத்தாக்கம் கொண்ட பள்ளிகள் இவை. " - It is not that schools forbid students to speak in Tamil. These school forbid students to speak in any language other than English. This comes from their appreciation of the fact that a language is acquired by practice, not in the classrooms as mentioned in (3). Further, the people join such schools know what they are getting into. One of the main USP's (maybe not unique, but still a selling proposition) of these schools is their focus on English. So this cannot count as 'forcing' English on anyone. The students enrolled here have been enrolled because they will be conversing in English.

    8. "ஆறாம் வகுப்பு முதல் ஒருவர் விரும்பினால் மட்டுமே ஆங்கிலமும் ஒரு மொழிப்பாடம், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் இல்லை, கல்லூரியில் ஒருவர் விரும்பினால் ஆங்கில வழிக் கல்வி" - This is fine if the person knows what he is getting into when he does chooses Tamil over English. But as rightly mentioned in the article, most of the students enrolled in government schools are from economically backward families, who often lack the awareness about how useful English is and hence will not be able to make an informed decision. This is where the government steps in.

    9. The article contends that as long as we have good translators who can bridge the communication gap, all education can happen in Tamil. This is over simplification and is contingent on a lot of factors:
    a. The translation of scientific material should be done before people start dumping English all together. Further, this translation has to be a continuous process, not something that can be done once and forgotten.
    b. The translation is required not only in classrooms where a theorem/concept is translated, but in everyday work. This brings the question of scalability in the picture.
    c. The translator solution will work only when the jobs performed of high productivity. In India, a significant number of jobs are still menial, even in the IT industry.

    ReplyDelete
  22. தமிழ் மீடியத்தில் படித்து விட்டு வந்து மருத்துவ கல்லூரியில்,பொறியியல் கல்லூரிகளில் மிகவும் சிரமப்படுவோர் பலர் உண்டு.அவர்கள் ஆங்கில வழியில் படித்த மாணவர்களை விட ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களை படிக்க அதிக சிரமபடுவார்கள்.
    உயர் படிப்பு என்பதை சிரமம் இல்லாமல் ஆக்க முடியாது.ஆனால் ஆங்கிலத்தில் பெரும்பான்மையான புத்தகங்களை கொண்ட அல்லோபதி கல்வியை படிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் ஆங்கில வழி கல்வியில் படித்தால் சிரமம் குறைவு.உனானி மருத்துவம் படிக்க விருப்பம் உள்ளவர் உருதுவோ,பாரசீகமோ தெரிந்து வைத்திருந்தால் மிகவும் உதவும்.சித்த மருத்துவம் தமிழ் வழி கல்வி படித்தவருக்கு ஆங்கில வழி கல்வி படித்தவரை விட எளிதாகும் .ஆங்கில மருத்துவத்தை படித்து விட்டு ,சித்த மருத்துவத்தின் மேல் கொண்ட காதலால் அதை ஆழ்ந்து படித்து அதில் ஆரய்ச்சி செய்பவர்கள்,சிறந்து விளங்குபவர்களும் உண்டு
    அடிப்படை கல்வியின் பாடங்களை குறைத்து மாணவ மாணவிகளை அதிக அளவில் இயற்கையோடு ஒன்றிய வேலைகளில்,தோட்டகலை ,மீன் வளர்ப்பது,மரம்,செடி,பூக்களின்,மிருகங்களை பார்த்து அறிந்து கொள்ளுதல்,தபால் நிலையத்தில் உள்ள பணிகள்,ரயில் நிலையத்தின் பல்வேறு பணிகள்,விமானநிலையத்தின் பணிகள்,காவல்துறையின் பணிகள்,பயிற்சி,ராணுவத்தின் பயிற்சி,பல்வேறு வகை ஆயுதங்கள்,விளையாட்டு வீரர்களின் பயிற்சிகள் போன்றவற்றை நேரில் சென்று பார்த்து அறிந்து கொள்ளுதல் எந்த மொழி கல்வியை விட அதிக ஆற்றலை,ஊக்கத்தை கொடுக்கும்

    ReplyDelete
  23. லீனஸ். லிTue May 14, 02:33:00 PM GMT+5:30

    பத்ரி சார்
    நான் எனது ஆரம்ப பள்ளி கல்வியும் PUC தமிழ் வழி கல்வியில்தான் பயின்றேன். பின்னர் Marine Radio Officer படிப்பதற்காக பம்பாயில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்தேன். அந்த கல்லூரியில் அனைவரும் ஆங்கிலத்தில் பேசினார்கள். எனக்கு அப்போது ஒரு வாக்கியம் கூட ஆங்கிலத்தில் பேசமுடியாத நிலை. என் நிலையை அறிந்து கொண்ட ஒரு பேராசிரியர், வேன்றுமென்றே அவர் வகுப்பு எடுத்து முடித்தவுடன் என் நிலைமையை கிண்டல் செய்யும் நோக்குடன் என்னை அவர் எடுத்த பாடத்தை விளக்க சொல்வார். எனக்கு அவர் எடுத்த பாடம் புரிந்திருந்தாலும் என்னால் அதை மற்றவர்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கும் அளவு ஆங்கில புலமை இல்லாததால் வெருமென எந்திரித்து நிற்பேன். அவர் என்னை பார்த்து ‘ நீ எல்லாம் ஆங்கிலம் தெரியாமல் ஏன் இந்த படிப்பை படிக்க வருகிறாய், உட்கார்’ என்று அனைத்து மாணவர்களுக்கு முன்னர் கிண்டல் பண்ணுவார்.

    பின்னர் MRO பாஸ் செய்து முதலவதாக ஒரு கிரேக்க நாட்டு கப்பலில் பணிக்கு சேர்ந்தேன். அந்த கப்பலின் கிரேக்க நாட்டு கேப்டனை விட எனது ஆங்கிலம் கொஞ்சம் சிறப்பாக இருந்ததால் பயம் இல்லாமல் அவர்களுடன் ஆங்கிலத்தில் (இலக்கண பிழையோடு) உரையாட ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தில் என்னால் சரளமாக பேச முடிந்தது. பின்னர் British Officers கூட வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தபோது என் ஆங்கில தவறுகளை திருத்திகொண்டேன். பிறகு Wren and Martin Grammar Book வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில இலக்கணம் கற்று கொண்டேன். இந்த தொடர் அனுபவத்தால் இன்று ஒரு வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை ஆயத்தில் என்னால் எனது வாதங்களை மாண்புமிகு நீதியரசர்கள் முன்னர் ஆங்கிலத்தில் எடுத்து வைக்கமுடிகிறது.

    எந்த பேராசிரியர் என்னை ஆங்கிலம் தெரியாது என்று கிண்டல் செய்தாரோ அவருக்கே பல வருடங்கள் கழித்து Radar Communication Subject-யை ஆங்கிலத்தில் அவருக்கே பாடம் எடுத்தேன்.

    கப்பல் பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆங்கிலத்தை விட ‘ஸ்பானிஷ்’ மொழி தெரிந்தால் உலகத்தில் பல நாடுகளை பிரச்சினை இன்றி சுற்றிவரலாம் என்பதுதான் என் கருத்து.

    எனது இந்த ஆங்கில மொழி கற்ற அனுபவத்தை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வேன். தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கில மொழியை பற்றிய பயத்தை விலக்கி தானாகவே முன்வந்து பேச ஆரம்பித்தாலே அனைவராலும் ஆங்கிலம் சிறப்பாக பேசமுடியும்.
    பம்பாயில் சில காலங்கள் இருந்ததால் என்னால் இன்று ஹிந்தியும் பேசமுடிகிறது. ஆகவே என்னை பொறுத்தவரை ஒருவன் ஒரு மொழியில் திறம்பட வேண்டும் என்றால் அவனுக்கு அதற்கான சந்தர்ப்பங்களும் அமைய வேண்டும்.

    ReplyDelete
  24. i AM VERY MUCH FOR YOUR RECOMMENDATION THAT

    1. TAMIL MEDIUM UPTO CLASS10
    2. ENGLISH FROM CLASS 6 AND MUST APPEAR FOR
    EXAM , BUT NOT COUNTED FOR ALL SUBJUCT PASS
    3. ENGLISH SPOKEN CLASSES TO BE ENCOURAGED
    AND NEWS PAPER READING IN ENGLISH TO BE CONDUCTED AND EXPLAINED BY THE TEACHER.

    THIS WILL ENHANCE THE SELF ESTEEM OF THE TAMIL CHILD , CONFIDENCE LEVEL WILL GO

    ReplyDelete
  25. I agree with your say: class 6 english starting but no pass requirement in class10 exam

    but spoken english lessions, and class reading of current affairs in English news paper along with a tamil paper to be encouraged

    ReplyDelete
  26. திரு பத்ரி சார் மிக மிக நேர்த்தியான கட்டுரை. புரிந்துகொள்ளுதலே அறிவின் வளர்ச்சிக்கு ஆதாரம். அந்தவகையில் தாய் மொழியில்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. ஆங்கிலம் பேசுவதை உயர்வாகக்கருதுவேர்ர் நிச்சயம் தாழ்வு மனப்பான்மை உள்ள மனநோயாளிகள் என்பது எனதுகருத்து.
    அவர்கள் தங்கள் கட்டுரையைப் படித்தால் மனவியல் மருத்துவம் போல சுகம்பெறுவர் என்பது என் நம்பிக்கை.

    ReplyDelete
  27. // நீ நம்புவதை நீயே செய்யாவிட்டால்? அப்போது உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா?//

    கல்வித் துறையில் ஆர்வமும் பல தன்னார்வ நிறுவனத் தொடர்புகளும் உள்ள நீங்கள் உங்கள் பிள்ளைகளை ஒரு அரசு உதவி பெறும் நல்ல தனியார் பள்ளியின் தமிழ் வழி கல்விக்கூடத்தில் சேர்த்து படிக்க வைப்பது ஒன்றும் இயலாத செயல் அன்று.

    ஆங்கில வழியோ தமிழ் வழியோ தற்கால கல்வி முறையின் சீர்கேட்டைப் பார்த்து, பேசாமல் என் மகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டுப் பாடமாகவே சொல்லிக் கொடுத்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் :)

    மற்றபடி, உங்கள் கருத்துகள் அனைத்துடனும் உடன்படுகிறேன்.

    ReplyDelete
  28. நூறு வருடம் முன்வரை தாய்மொழியை தவிர இன்னொரு மொழியை அறியாதவர் தான் பெரும்பாலோனோர் .அப்போது ஒவ்வொரு ஊரில் இருந்தும் ஐன்ஸ்டீனும் நுடனும் உருவானார்களா என்ன
    தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும் எனபது சரி.ஆனால் தாய்மொழி வழி கல்வி மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை
    பெரும்பாலான மேல்படிப்பு புத்தகங்கள் ஆங்கிலத்தில் தான்.அல்லோபதி படிக்க ஆங்கில வழி கல்வி சரி.சித்த மருத்துவம் படிக்க தமிழ் வழி கல்வி உதவும்.
    தமிழ்வழியில் படித்து பின்பு மேற்படிப்பு படித்தவர் யாரும் தங்கள் வாரிசுகளை தமிழ் வழி கல்வியில் சேர்ப்பது இல்லையே ஏன்.தாங்கள் பட்ட கஷ்டம் தங்கள் குழந்தைகள் படகூடாது என்பதால் தானே
    அது மிகவும் உதவும் என்றால் ,ஏன் வேண்டும் என்றே தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வி பயில அனுப்புகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. பூவண்ணன் சார்......

      உண்மை........உங்கள் கருத்தோடு ஒத்துப்போகும் நிலை வரும் என்று நினைத்ததே இல்லை.....

      Delete
  29. சுமார் நூறு வருத்திற்கு முன் (1910 என்று வைத்துக்கொள்வோம்), ஒரு கோடி தமிழர் இருந்தனர், எழுதப்படிக்கத் தெறிந்தவர் சுமார் 8 லக்ஷம். இன்று தமிழகத்தில் 6 கோடி தமிழர் உள்ளனர், எழுதப்படிக்கத் தெறிந்தவர் சுமார் 3 கோடி. இரண்டும் பெருகும். இதில் 2 கோடிகளுக்கு ஆங்கிலம் மட்டுமே எழுதப்படிக்கத் தெறிந்தாலும், தமிழுக்கு லாபம் தானே? ஏன் இந்த ஆங்கிலப் பூச்சாண்டி?

    சீனாவின் (உலகின்) ஆங்கில வெறியைப் பற்றிய டெட் உரை - www.ted.com/talks/jay_walker_on_the_world_s_english_mania.html‎

    ReplyDelete
  30. இங்க அரசுப்பள்ளிகள்-ல தாய் (தமிழ்) மொழி வழிக்கல்விக்கு ஆதரவு தெரிவிச்ச எத்தனை பேர் அவுங்க பிள்ளைகள அரசுப்பள்ளிகள்ல படிக்க வைக்கிறாங்க/வச்சாங்கன்னு தெரில...!! #Doubt

    ReplyDelete
  31. தமிழ் முலம் கற்பித்தலே சாலச் சிறந்த்து. இதை வலியுறுத்துபவர்கள் பலரும் ஆங்கிலத்தை 6 வது வகுப்பில் கற்க ஆரம்பிக்கலாம். ஆங்கிலத்தில் பாஸ் செய்யத் தேவையில்லை என்றெல்லாம் கருத்து கூறுகின்றனர், இது தவறு.தமிழ் மூலம் படிப்பது என்பது வேறு. ஆங்கிலம் கற்பது வேறு.
    இன்றைய உலகில் ஆங்கில அறிவு மிக அவசியம். த்மிழில் க்ல்வி கற்கிற அதே நேரத்தில் பள்ளிகளில் ஆங்கில மொழி வகுப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று விதியை அமலாக்கலாம்.ஆங்கிலத்தில் பேச தனிப் பயிற்சி அளிக்கலாம்.
    ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி, தங்களது கருத்துகளைக் கோர்வையாக எடுத்துக் கூறப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இன்றையப் பள்ளிகளில் மாணவர்களைப் பேச விடுவதே இல்லை.
    இன்று டிவியில் காட்டப்படும் குறிப்பிட வகை நிகழ்ச்சியில் பேசுகின்றவர்கள் பிரமாதமாக வெளுத்துக் கட்டுகிறார்கள். அப்ப்டிப் பேச அவர்கள் பல நாட்கள் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.அவர்களால் பயிற்சி அளிக்கும் போது ப்ள்ளியில் ஆசிரியர்களால் இவ்விதம் பயிற்றுவிக்க முடியாதா?

    ஆங்கிலப் பாடமாக இருந்தாலும் சரி, தமிழ்ப் பாடமாக இருந்தாலும் சரி --குறிப்பாகத் தமிழ் விஷயத்தில் அளவுக்கு மீறி இலக்கணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இலக்கணம் இருக்கட்டும். வாய் திறந்து பேச மாண்வர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  32. பத்ரி - தெளிவான கருத்துக்கள்; சிறப்பான நடையில் முன்வைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    என் ஆய்வகத்தில் பல சீன மாணவ, மாணவியர் உண்டு. இந்தியரும் கூட. சேர்ந்த முதல் வாரத்தில் சீனர்கள் ஆங்கிலம் தெரியாமல் எல்லாவற்றிலும் தத்தளிப்பார்கள். பெருநகரிலிருந்து வரும் இந்தியர்கள் நுணிநாக்கு ஆங்கிலத்தில் (ஏகப்பட்ட தவறுகளுடன்) சரளமாக பொருந்திப் போவார்கள். இதே நிலை, மூன்றாம் வருடத்தில் தலைகீழாக மாறியிருக்கும் அடிப்படை கணித, அறிவியல் பயிற்சியுடன், சுயமாக சிந்திக்கும் வலுக்கொண்டு, ஆய்வகத்தில் கடின உழைப்பாளிகளாக சீனர்கள் மேலெழும்பி வருவார்கள். பெரிதும் புத்தகத்தின் பயிற்சி வினாக்களைக்கொண்டே படித்த (கற்றுக்கொண்ட அல்ல) இந்தியர்கள் சுயமாகச் சிந்திக்கும் திறனின்றி, கடின உழைப்புக்கான மனோதிடமும் இன்றி சோம்பிப்போவார்கள். நான் பெரிதும் பொதுமைப்படுத்துவதாகத் தோன்றாலாம். ஆம் இது கட்டாயம் பொதுமைப்படுத்தல்தான்.

    இந்தக் கல்விமுறை சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதன் மூலம் நாம் பிறரின் கீழ் வேலைசெய்யும் திறனை வளர்த்தெடுக்க உதவுகிறது என்பது ஓரளவு உண்மை. ஆனால் இதே கல்விமுறைதான் நாம் சுயசிந்தனையாளர்களாக மாறுவதைத் தடுக்கிறது. பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஐ.டி துறையில் வேலை கிடைத்தாலும், இந்தியாவிலிருந்து சுயதேவைகளுக்கான கணினி பயன்பாடுகள் வளரவில்லை என்பதைக் காட்டயம் கவலையுடன்தான் பார்க்க வேண்டும். - வெங்கட்

    ReplyDelete
  33. பத்ரி, அருமையாகவும் தெளிவாகவும் கூறியிருக்கின்றீர்கள். தெளிவாகப் பார்த்திருக்கின்றீர்கள். இரண்டே இரண்டு இடங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலுமும் முழு உடன்பாடு.
    (1) //நாட்டின் மிகச் சிறந்த அறிவுஜீவிகள் அனைவரும் இந்தியாவின் கல்வி ஆங்கில வழியிலேயே இருக்கவேண்டும் என்கிறார்கள்.// ---இது உண்மை இல்லை. அனைவரும் என்பதற்கு மாறாக சிலரோ-பலரோ இருக்கலாம்.
    (2) //நீ நம்புவதை நீயே செய்யாவிட்டால்? அப்போது உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா?
    நான் ஆரம்பத்தில் சொன்னதை ஞாபகத்தில் வையுங்கள். நான் முன்வைப்பது ஒரு சிந்தனை மட்டுமே.//
    ஏன் நல்ல தமிழ்வழிப் பள்ளிக்கூடமே இல்லையா? இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதிக கட்டணம் வாங்கி நன்றாக நடத்தாத ஆங்கிலவழிப் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனவே. உள்ள நிலவரத்தை யாரும் சரியாக அலசவில்லை என்றே நினைக்கின்றேன்.

    கண்மணி இராசன் அவர்களின் கருத்துகள் மிகச்சரியானவை. நானும் தமிழ்வழியில் தான் பயின்றேன். பொறியியல் படிக்க (அண்ணா பல்கலையில்) ஆங்கிலத்துக்கு மாறிய போது ஒரே ஓர் ஆண்டு மட்டுமே கடினமாக இருந்தது. ஆனால் மாணவருக்கு மாணவர் அவர் எதிர்கொள்ளும் இடர்ப்பாடு வேறுபடலாம். நாங்கள் படித்தபோது இப்பொழுது இருப்பது போன்ற ஆங்கில மோகமோ, ஆங்கிலத்தில் பேச வேண்டிய போலித்தனங்களோ கிடையாது. பாடங்களை ஆங்கிலத்தில் படிப்போம் எழுதுவோம். ஆனால் புரிந்துகொள்வதெல்லாம் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசித்தான். கண்மணியின் உடன்பயிலும் மாணவி இன்னும் சிறிதே முயன்றால் அனைத்திலும் முதல் தரமாகத் தேற இயலும். பலர் உருசியாவுக்குப் போய் மருத்துவத்தை உருசிய மொழியில் பயிலுகின்றார்கள், இன்னும் சிலர் இடாய்ச்சுலாந்துக்குப் போய் (செருமனிக்குப் போய்) இடாய்ச்சு மொழியிலேயே பயிலுகின்றார்கள். இதற்கெல்லாம் சில மாதங்கள் சிறப்பு மொழி பயிற்சி மட்டும்தான் தேவை. ஆங்கிலத்தில் பயிற்சி தேவை எனில் 3-5 மாதங்களில் சிறப்புப் பயிற்சி எடுத்து தேவையான திறனைப் பெறலாம். இதனைப் பல்கலைக்கழகங்களே செய்து தரலாம். ஆனால் இந்தத் தாழ்வு மனப்பான்மை கொள்வதும், ஏற்படுவதும் அதனை ஊட்டுவது மாபெரும் தவறு. ஆங்கிலமே தெரியாவிட்டாலும் ஒருசிறிதும் இழிவே இல்லை. துறையறிவும், தன்னம்பிக்கையும், நல்ல உள வளர்ச்சியுமே மிக முக்கியம். கல்வி கற்றல் என்பது சிந்திக்கக் கற்றல், அது ஆங்கிலத்தில் சரளமாகப் எழுத, பேசத் தெரிவதில் இல்லை. அப்படி நினைப்பது ஓர் அறியாமை. எம்மொழியிலும் சிந்திக்கலாம். வருங்காலத்தில் எந்த மொழியில் இருந்தும் எந்த மொழிக்கும் ஓரளவுக்குத் தரமான மொழிமாற்றம் உடனுக்குடன் கிட்டும். எனவே ஆங்கிலம் அவ்வளவு முக்கியம் இல்லை. நன்றாக சிந்திக்கக் கற்று நல்ல அறிவுத்திறன் (இது நினைவாற்றலைப் பொருத்ததல்ல; ஒப்பிக்கக் கற்பதல்ல) பெறுதலே குறிக்கோளாக இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியே சிறந்தது.

    ReplyDelete
  34. பொன்.முத்துக்குமார்Thu May 16, 09:52:00 PM GMT+5:30

    தமிழ் வழி கல்வி என்பது இன்றைய சூழலில் சாத்தியமாகாத ஒன்று. காரணம் நமது கல்வித்துறை என்பது பெரும்பாலும் சிந்தனையை ஊக்குவிக்காததாகவும் பாடப்புத்தகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருப்பதாகவும் இருப்பதால், யார் நல்ல நினைவாற்றல் உள்ளவரோ அவரே அதிக மதிப்பெண்கள் பெற்று அறிவாளி மாணவர் என்று மதிப்பிடப்படுகிறார்.

    உலகமயமாக்கலுக்குப்பிறகு - அதுவும் குறிப்பாக கடந்த 10-15 ஆண்டுகளில் - இந்தியாவில் பெருகிய வேலை வாய்ப்புக்கள் பெரும்பாலானவை பன்னாட்டு நிறுவனங்களால் அவர்களுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டவையே. ஆகவே இவை ஆங்கில மொழி தேவையை ஒட்டியே அமைந்திருப்பது இயல்பே.

    இந்த அடிப்படையை மாற்றாமல் - தமிழ் மட்டும் அறிந்த துறைசார் நிபுணர்கள் / அறிவாளிகள் புலம்பெயர் தேவை இன்றி தமிழ் நாட்டிலேயே நல்ல சம்பளத்துடனும் சமூக அந்தஸ்துடனும் வாழ வழிவகை செய்யாமல் தமிழ் மீடிய கல்வி என்பது வேலை வாய்ப்பை கடினமாக்கும் என்று கருதுகிறேன்.

    ஆங்கிலத்தில் தனியாக சிறப்பு பயிற்சி எடுத்தால் மட்டும் போதுமா என்று எனக்கு தெரியவில்லை. காரணம் பாடங்கள் சார்ந்த சொல்லாடல்களை தனிப்பயிற்சி பெறுவதன்மூலம் மட்டுமே ஆங்கிலத்தில் சொல்ல இயலுமா ?

    உதாரணமாக நிகழ்தகவு, வகைகெழு என்றெல்லாம் தமிழ் வழிக்கல்வியில் படித்து வந்திருக்கும் மாணவரால் தனிப்பயிற்சி மூலம் மட்டுமே இவற்றை ஆங்கிலத்தில் probability, calculus என்று பேச / எழுத இயலுமா ?

    முதலில் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் பட்டதாரியாக முடியாது என்ற நிலையை ஏற்படுத்த முடிந்தாலே அதுவே இன்றைய நிலையில் பெரும் சாதனை.

    போகவேண்டிய தூரம் அதிகம். இந்த சிந்தனையாவது நம்மிடையே சற்று உரத்த அளவில் இருப்பது நல்லதே.

    பத்ரி போன்றவர்கள் இதை உரக்க சொல்வது நல்லபடியாக கவனம் ஈர்க்கும் - ஈர்க்கவேண்டும்.

    ReplyDelete
  35. கணினின்னு ஒன்னும் மொபைல் போனுன்னு ஒன்னும் பிள்ளைகள் கண்ணுல பிறந்ததும் படறதை மறந்துட்டு பேசறீங்களே! :D

    http://www.amachu.me/2013/பார்த்த-முதல்-நாளே/

    யாரும் மிஸ் லீட் ஆகாத வரை சரி.

    ReplyDelete
  36. பத்ரி,

    நீங்கள் இரண்டு விசயங்களை முன் வைக்கின்றீர்கள்

    1. பாடங்களின் வடிவமைப்பு. (design) கல்வி திட்டம் வளமான சமூக உருப்பினர்களை உருவாக்குவதில்லை. திறமையாக மனப்பாடம் செய்வதையும், தேர்வுகளை நல்லப்படியாக எழுதுவதையும் மட்டுமே ஊக்குவிக்கின்றது.

    2. பாடங்கள் வழங்கப்படும் விதம். (delivery mode) மாணவர்கள் சிந்திக்கும் மொழியில் இல்லாமல் , புதிதாய் கற்றுக் கொள்ளும் மொழியில் வழங்கப் படும் பொழுது எதிர் மறை விளைவுகள் வரும்.

    நல்ல கருத்துகள். உங்கள் பிள்ளைகள் எப்படி இந்த சிக்கல்களை கையாள்கின்றார்கள். என் அண்ணண் மகள் இப்பொழுது ஆங்கில மீடியத்தில் மூன்றாவது படிக்கின்றாள். அவளது பாடமுறை அவளுக்கு பிடித்து இருக்கின்றது. பாடத்தை பற்றி யோசிப்பது ஆங்கிலத்தில் இருப்பதாக சொல்கிறாள். சிறு நகரத்தில் இருக்கும் தங்கை பிள்ளை தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் எழுதி நல்ல மார்க் வாங்கி உள்ளான். பொறுப்பான பையன். தங்கை, மாமாவுக்கு உதவியாக கடையிலும் உதவி செய்வான். எந்த டாபிக் பற்றி சொன்னாலும் கேட்க கூடிய பொறுமை உண்டு. என் மனைவி கிராமபுற கான்வெண்ட் படித்தாள், அவளுக்கு அதில் சிரமம் இல்லை. நல்ல வாசிப்பு உண்டு.

    இந்த சோம்பல், தயக்கம், கருத்துகளை முன் வைத்தலில் கூச்சம் போன்றவை குடும்ப பின் புலம் பொறுத்தும் மாறும் என்றே நினைக்கின்றேன். கடை வேலைகள் தெரிந்த தங்கை பையன் எதற்கும் தயங்குவதில்லை. செல்லமாக வளர்ந்த பெரியம்மா பையன் எதையும் சொல்ல மொழி சார்ந்த கூச்சமும், கருத்து சார்ந்த தயக்கமும் கொள்வான்.

    ReplyDelete
  37. தமிழகத்தில் எல்லோரும்
    மொழிப்பாடமாக தமிழை அவசியம் படித்தல் நலம். மேலும்
    முதலிலிருந்தே அறிவியலையும் கணிதத்தையும் அனைவரும்
    ஆங்கில வழியிலும், சரித்திர பூகோள பாடங்களை தமிழிலேயும்
    படித்தால் தமிழறிவும் அழியாது. மேல் படிப்புகளில் நம் மாணவர்களின்
    ஆங்கிலப்புலமையும் அவர்களை மேம்படுத்தும். இக்கருத்தை
    ஏற்கனவே சிலர் தெரிவித்துள்ளனர். ஆங்கில வழியா? தமிழ் வழியா?
    என வாதிடுபவர்கள் இரண்டுக்கும் இடையிலான இவ்வழியையும்
    சிந்திக்கலாமே?

    ReplyDelete
  38. Electives are a joke in this resource scarce country. Ask an Engineering student in Tamil Nadu how electives are truely 'electives'. Management decides electives based staff availability. When 20+ kids can't talk about their right to choose their electives, how will 10+ kids be able to manage. In the urban schools parents proxy the student's wish and will force English. In the rural schools, teachers will deny the right of the student to choose English even if one wishes because of their lack of confidence. While it might solve the problem of forcing English through nose, it will create new ones.

    ReplyDelete
  39. சிவராஜ் பாஸ்கரன்Wed May 29, 12:25:00 PM GMT+5:30

    சிறப்பானக் கட்டுரை. அனைத்து தளங்களிலும் மொழிப் பயன்பாட்டைக் குறித்து சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
  40. I STUDIED IN TAMIL MEDIUM UPTO SSLC (11th STD) IN GOVT HIGH SCHOOL. THEN PUC AND ENGG DEGREE IN ENGLISH MEDIUM. IN PUC, I FOUND IT DIFFICULT FOR FIRST TWO MONTHS.
    STILL WITHOUT GRAMMER MISTAKE I COULD NOT WRITE OR SPEAK.
    STILL I AM THINKING IN TAMIL ONLY. I DONT KNOW HINDI ALSO.

    MY CHILDREN & GRAND CHILDREN IN ENGLISH MEDIUM SCHOOLS.
    I DONT THINK THEIR IQ IS LESS. BUT THEY ARE THINKING IN ENGLISH.

    MY POINT IS DIFFERENT. MY MOTHER TONGUE IS NOT TAMIL.
    SO I COULD NOT SPEAK MIN MY MOTHER TONGUE. IS IT O.K?

    THERE ARE SO MANY PEOPLE IN TAMIL NADU, WHOSE MOTHER TONGUE IS NOT TAMIL. IN WHICH LANGUAGE, THEY HAVE TO STUDY?
    WE HAVE TO FORGO OUR LANGUAGE BECAUSE WE SETTLED IN TAMIL NADU!

    ANOTHER POINT. NOW A NEW CASTE SYSTEM IS THERE IN EDUCATION.

    ICSE SCHOOL
    CBSE SCHOOL
    MATRICULATION SCHOOL
    GOVT SCHOOL.

    NOWADAYS LOWER MIDDLE CLASS PEOPLE ARE ALSO OPTING MATRICULATION SCHOOL. WHY?

    GOVT HIGH SCHOOLS SUPPLY PEOPLE FOR MENIAL JOBS AND LOW CADRE POLITICIANS. OUR SOCIETY WANTS TO MAINTAIN THIS NEW EDUCATION CASTE SYTEM. IF ANYBODY WANTS TO CHANGE THE SYSTEM, SO MANY SWEET COATED THEORIES WILL COME!

    UPTO 12th STD, ONLY GOVT SCHOOLS SHOULD BE THERE. ALL PRIVATE SCHOOLS TO BE TAKEN OVER BY GOVT. THE MEDIUM OF INSTRUCTION MAY BE DECIDED LATER. HOW MANY PEOPLE WILL BE READY TO CHANGE THE NEW CASTE SYSTEM?

    GOPALASAMY

    COLLEGE EDUCATION BY PRIVATE BODIES.

    ReplyDelete
  41. உங்கள் பக்கத்தை பார்த்தால், உண்ணதமான விஷயங்களில் தணியாத ஆர்வம் கொண்டவர் போல் தோன்றுகிறது. ஆனால் மொழி மீதும் அபரீதமான பாசம் கொண்டுள்ளீர்கள்.

    பின்வரும் கருத்தில் நியாயம் இருப்பதாக கருதினால், நீங்களும் ஏற்று உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்…

    மொழி மீதான எனது புரிதலில் தவறு இருப்பதாக தாங்கள்
    கருதினால், தயவுசெய்து தங்கள் கருத்தினை பதிவு செய்யவும்.

    மொழி என்பது மனதில் உள்ளதை சொல்ல பயன்படும் ஒலி மற்றும் வரி வடிவம் அவ்வளவுதான்! அஃறிணை வடிவமான ஒலி மற்றும் எழுத்துகளை உயர்திணை வர்க்கமான தாய்க்கும் மேலாக கருதுவதும், அதற்காக உயிரையும் கொடுப்பேன் என்பதும் ஒரு மனமுதிர்ந்த செயல் அல்ல.

    சொல்லப்போனால் உலக மக்கள் அணைவரும், UNESCO நிறுவனம் பரிந்துரைக்கும் ஒரு-மொழி(unilingualism) கொள்கையை ஏற்று பரந்த மனப்பான்மையுடன் தமது மொழிகளை கைவிட்டு அணைவரும் ஒரே மொழியில் படித்து, எழுதி, பேசவேண்டும்.

    உலகம் முழுவதும் ஒரே மொழி மட்டுமே பயன்படுத்துவது என்பது உடனடியாக நடக்க கூடியது அல்ல என்றாலும், அதற்காக ஒத்துழைப்பு தருவது உலக மக்கள் அணைவரின் கடமையாகும்.

    எப்படி உலக மக்கள் ஒன்றிணைத்து ஒரேவிதமான எண்களையும்(அரபு எண்கள் 1,2,3..), அளவீட்டு முறைகளையும் (metric measurement system) பின்பற்றி பயன் பெறுகிறோமோ, அதேபோல் உலகம் முழுவதும் ஒரே மொழியை மட்டுமே பயன்படுத்தினால் அளப்பரிய நன்மைகள் உண்டாகும்…

    தாய்-மொழியை கைவிடமாட்டேன் என நம் முன்னோர்கள் எண்ணியிருந்தால், இன்னமும் நாம் செய்கை மொழியில்தான் பேசிக்கொண்டிருப்போம்.
    ஏனெனில் செய்கை மொழிதான் நமது முதல் தாய்மொழி

    அணைவரும் ஒரே மொழியில் படித்து, எழுதி, பேசினால்....

    1. உலகம் முழுவதும் ஒரே ஒரு மொழிதான் பயன்பாட்டில் இருக்கும்

    2. மொழி வெறி, மொழிச்சண்டைகள் தவிர்க்கப்படும்.

    3. அறிவு பகிர்வு ஈஸியா நடக்கும்.

    4. ஒரு சாதாரண வியாபாரி கூட ஈசியா ஏற்றுமதி இறக்குமதி செய்வார்.

    5. அடிப்படைகல்வி ஒரு மொழியில் (தமிழ்) படிச்சிட்டு பட்டப்படிப்பு இன்னொரு மொழியில் (இங்கிலீஷ்) படிக்கமுடியாமல் நிகழும் தற்கொலைகளை தவிர்க்கலாம்

    அப்படி ஒரேமொழியை ஏற்பது எனில்,ஒவ்வொரு மொழியினரும் தமது மொழிதான் ஏற்கப்பட வேண்டும் என விரும்பலாம். புதிதாக ஓர் மொழியை ஏற்பதைவிட தெரிந்தோ தெரியாமலோ அல்லது விரும்பியோ விரும்பாமலோ பல நாடுகளில் பரவிவிட்ட இங்கிலிஷை மட்டுமே படித்து, எழுதி பேச பயன்படுத்தலாம்.

    மொழி போதையிலிருந்து விடுபடுவோம் உலகோடு இணைந்து அடுத்த
    தலைமுறையையாவது இனி முன்னேற விடுவோம்

    // கவனிக்க... நமது பண்பாட்டையோ, கலை கலாச்சாரத்தையோ, பண்டைய மருத்துவ முறைகளையோ, கட்டிட மற்றும் சிற்பகலை நுட்பங்களையோ கைவிட சொல்லவில்லை, உலகோடு இணைந்து செயல்பட மொழியை மட்டுமே.... //

    ReplyDelete