Tuesday, November 05, 2013

‘மங்கள்யான் ஒரு வேஸ்ட்டா?’

இன்று ஹலோ எஃப்.எம் வானொலியில் ஒலிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சிக்காக மங்கள்யான் குறித்த என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். அப்போது ‘மங்கள்யானுக்காக இத்தனை ரூபாய் செலவு செய்யவேண்டுமா? அதனால் என்ன பயன்? இந்தியாவில் இத்தனை ஏழை மக்கள் இருக்கும்போது இந்த ஆடம்பரம் தேவையா?’ என்பதுபோன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இன்று Firstpost தளத்தில் இந்தக் கட்டுரை கண்ணில் பட்டது.

அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஓர் அரசு செய்யும் முதலீடுகள் அனைத்துமே பயனுள்ளவைதாம். அவற்றால் மட்டுமே ஒரு நாடு முன்னேற முடியும். நாட்டில் உள்ள ஏழைகளுக்காக ஓர் அரசு எவ்வளவோ செய்துகொண்டிருக்கிறது. ஏழைகளுக்கு உணவு, இருப்பிடம், பள்ளிகள் என்பவற்றை மட்டுமே கட்டிக்கொண்டிருப்பதுதான் ஓர் அரசின் கடமைகள் என்று நினைப்பது சரியல்ல. கடந்த இத்தனை வருடங்களாக அரசு அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதலீடு செய்தது சொற்பமே.

இஸ்ரோவின் செயற்கைக்கோள்களால்தான் நாம் துல்லியமான பருவநிலைத் தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் இன்று கடும் புயல் அடிக்கும்போதும் எண்ணற்ற உயிர்களைக் காக்கமுடிகிறது. இஸ்ரோ செயற்கைக்கோள்களால்தான் வீட்டில் விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண முடிகிறது. தொலைத்தொடர்பு சாத்தியமாகிறது. இன்று உலகிலேயே செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திலும் ராக்கெட் ஏவுவதிலும் திறன் கொண்ட ஆறேழு நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். அனைவரையும்விடக் குறைந்த செலவில் இதனைச் செய்யக்கூடியவர்களாக உள்ளோம்.

அரசுகள் செய்யும் வீண் செலவுக்குக் கணக்கு வழக்கே இல்லை. தலைவர்களுடைய அல்லது அரசுகளுடைய சாதனைகள் என்று சொல்லி முழுப்பக்கக் குப்பை விளம்பரங்கள். பிறந்த நாள், இறந்த நாள் என்று ஒரு சில மறைந்த தலைவர்களுக்காகப் பல கோடி ரூபாய் வரிப்பணம் நாசமாகிறது. அமெரிக்கப் பத்திரிகைகளில் இவ்வாறு வாஷிங்டன், ஜெஃபர்சன், லிங்கன், ரூஸ்வெல்ட் பிறந்த/இறந்த தினங்களுக்காகக் கோடிக்கணக்கில் அந்நாட்டு அரசுகள் விளம்பரம் செய்வதில்லை.

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் இந்தச் செலவை மட்டும் நீக்கிவிட்டால் ஏழைகளுக்கு வயிறார உணவளித்துவிடலாம் என்பதுபோலப் பேசுவது அபத்தம். ஏழைகளுக்கு இப்போது சில லட்சம் கோடிகளில் உணவுப் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை யார் கொடுக்கப்போகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த மசோதா வந்தவுடனே அனைவருக்கும் வயிறார உணவு கிடைத்துவிடப்போகிறதா என்றால் இல்லை. அவ்வளவு ஓட்டைகள். திருட்டு, லஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம். பணம் இல்லாததால் ஒன்றும் ஏழைகள் திண்டாடுவதில்லை. பணத்தைச் சரியாக சென்றுசேர்க்கவேண்டிய இடத்துக்குச் சென்று சேர்க்க வக்கில்லாத சிஸ்டத்தினாலும் அதிலிருந்து கொள்ளையடிக்கக் காத்திருக்கும் கயவர்களாலும்தான் ஏழைகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. யூனிக் ஐடெண்டிடி எண் என்ற பெயரில் சில ஆயிரம் கோடிகள் செலவாகியுள்ளன. ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெயரில் சில லட்சம் கோடிகள் செலவாகியுள்ளன. மங்கள்யான் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 450 கோடி ரூபாய்.

மாறாக விண்கலம் அனுப்பும் முயற்சி வெற்றியில் முடிந்தால் அது எண்ணற்ற மாணவர்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுக்கும். ஏழை மாணவர்களுக்கும் சேர்த்துதான். நம் நாட்டினர் அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்ந்துள்ளனர்; நானும் நாளை நாடுபோற்றும் விஞ்ஞானியாக, பொறியாளராக ஆவேன் என்று எண்ணம் பெறும் மாணவர்கள் பலர், அதனைச் சாதிக்கவும் செய்வார்கள்.

இந்தத் திட்டத்துக்கு எதிராகப் பேசும் ஆசாமிகளைக் கணக்கில் எடுங்கள் - rogues gallary-தான்.

ஜான் ட்ரீஸ்: “part of the Indian elite’s delusional quest for superpower status”
ஹர்ஷ் மந்தர்: “I think it’s so strongly symbolic of an extremely unequal society”
மனு ஜோசப்: “How can India talk about mining Mars when the fact is that it depends on exploitative foreign companies to mine its own real estate on Earth for minerals in the first place?”

இன்னும் தமிழக அறிவுஜீவிகள்தான் திருவாய் மலரவில்லைபோல. பொறுப்பற்ற புல்லர்கள்!

15 comments:

 1. அதுவும் தனக்குத்தானே அறிவுஜீவி என்று பெயர் சூட்டிக்கொண்டவர்கள் இன்னும் வாய் திறக்காதது ஆச்சர்யந்தான்.

  ReplyDelete
 2. How the World views our efforts to reach Mars can be gauged through the Headline in "Dail Mail UK":
  India sends rocket to Mars to show off its 'technological ability' as part of its $1billion a year space programme (but country will still receive British aid until 2015).
  Some achievement.

  ReplyDelete
  Replies
  1. Yes , some development only. If people are taking "daily mail's" view as WORLD VIEW, i clearly understand why Badri has to write this article.

   Delete
 3. Please read the full article of Manu Joseph . You are misquoting it out of context. He made the same conclusion as yours.

  ReplyDelete
 4. This is required definitely without any questions. What ‘badri’ explained is absolutely correct. To add to his points, satellites are used in Army also. We are investing so much amount army and no one can say anything against that. Army need to be enhanced scientifically and technically to protect our country.
  But one important thing to consider here is,’ Mangalyan’ is not going to help people in india. It is just to explore Mars. This achievement doesn’t mean that india is encouraging students to involve on scientific research. There are lot of differences between india and other countries that sent satellite to mars.

  ReplyDelete
 5. பொன்.முத்துக்குமார்Tue Nov 05, 11:16:00 PM GMT+5:30

  கெட்ட வார்த்த சொல்லி திட்டணும் போல இருக்கு. இவ்வளவு தற்குறியாவா இருப்பானுங்க ? தத்திங்க.

  ஏன், இவ்வளவு ஏழைங்க இருக்கற நாட்டுல இவனுங்கல்லாம் கோமணத்த கட்டிட்டா உலாத்துறானுங்க ? இந்த வெறும்பேச்சு வீணர்கள்-லாம் நல்ல்ல்ல்ல்லா ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகிட்டு அரசாங்கத்த கொறை சொல்ல மட்டும் நல்ல்ல்லா நாக்க (நீ)தீட்டிகிட்டு வந்துடுவானுங்க.

  இவனுங்க வாங்குற சம்பளத்துல பாதிய ஏழைங்க முன்னேற்றத்துக்கு செலவு பண்ண சொல்லணும் அப்போ தெரியும்.

  சும்மாவா சொன்னாரு நம்மாளு 'வாய்ச்சொல்லில் வீரரடி'-ன்னு ?

  ReplyDelete
 6. Please wait for a while, GNANI Sankaran will come with full force.

  ReplyDelete
 7. From a Cost Benefit Analysis, 450 crores for a mission to Mars is actually a good deal, if you look at other projects that spend the similar amount of money - e.g. IIM, Trichy is going to spend same amount to build a new campus for buildings & faculty housing (land is already provided to them) - I am just quoting what you get for that amount and I am not into debating if they need it or not But the issue is not the cost/benefit but how this is going to be looked at at - if it is going to be in the spirit of what you mentioned above, then it is well and good- but if it is going to be part of the "India story" by the media and government to create an image to the people that we are a "Super Power" or telling people that only implementing projects like this or the nuclear test would show to the world that we belong to the league of such "Super Power" nations, then it is wrong - it would only bring complacency which would be detrimental to the nation's under served masses. This exercise has to be seen as the means and not the ends to the "Super Power" status.
  Regards
  -Srini

  ReplyDelete
 8. What is the real purpose of launching mangalyan into space? I came to know from newspapers that it would conduct its research to identify the presence of methane in the atmosphere of Mars in order to prove the existence of life there. What is the sole purpose of identifying this? What we gonna achieve from this? Already NASA has invested so much for the research in Mars. It is a damn waste of money..............

  ReplyDelete
 9. India's Mars orbiter mission is in my opinion is just a show or demonstration of our technological strength (low cost) in space program rather than finding something new than what NASA, ESA, RFSA did or exercising currently. And we should not..keep our satellite program for Information technology and interplanetary probe program in the same platform for discussion.

  ReplyDelete
 10. http://balajiviswanathan.quora.com/Indian-Space-Mission-Poverty-and-Closet-Racism Good one

  ReplyDelete
 11. Not only that.. other countries will now come to India to launch their satelites using ISRO Rockets.. we would earn more than double of the spent 450 crores.

  ReplyDelete
 12. Inthuthuvamum e.ve.ra vin kazhisadai pakuththarivum inaiyum pullithan intha katturai.

  ReplyDelete
 13. மங்கள்யான் திட்டத்துக்கு ஆகும் செலவானது நான்கு மெகா ஹிந்தி சினிமா படங்களுக்கு ஆகும் செலவுக்கு ஈடானது என்று ஓரிடத்தில் ப்டித்தேன்.ஆகவே இதை வீண் செலவு என்று சொல்ல முடியாது. இந்தியாவில் எண்ணற்ற ஏழைகள் பட்டினியால் வாடும் போது மங்கள்யான் எதற்கு என்ற கேள்வி புளித்துப் போன ஒன்று.

  குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்பும் முய்ற்சியே மங்கள்யான்.அதிக திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை உருவாக்கிய பிறகு பெரிய சைஸில் மங்கள்யானைஅனுப்பியிருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.ஏனெனில் இப்போது மங்கள்யானில் எடுத்துச் செல்லப்படும் ஆராய்ச்சிக் கருவிகளின் எடை வெறும் 15 கிலோ.
  இப்போது விட்டால் இன்னும் 2 வருடம் காத்திருக்க வேண்டும் என்ற காரணத்தால் சிறிய சைஸ் விண்கலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அனுப்புவதாகச் சொல்லலாம்.
  எனினும் மங்கள்யான் போன்ற திட்டங்கள் நிச்சய்ம் வீண் செலவு அல்ல
  .

  ReplyDelete
 14. ஒரு புதிய இடத்தை தேடி செல்லும்போது நாம் அந்த இடத்தின் உரிமையை கொண்டாட வாய்ப்பாகிறது. நமது நாளைய சந்ததியற்கு செவ்வாய் கிரகம் துhரம் என்பது மிக சொற்ப தூரமாக மாறலாம். அங்கு சென்று குடியிருப்புகளை ஏற்படுத்தலாம். இன்று நாம் செய்த முயற்சியை காரணம் காண்பித்து செவ்வாயில் நாளை நமது வாரிசுகள் செவ்வாயில் உரிமை கொண்டாடுவார்கள்.

  அமெரிக்கர்கள் ஏற்கனவே செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சி செய்துவிட்டார்கள் என்று கூறுவதைவிட நமது பார்வையில் செவ்வாய் கிரகம் என்ன என்பதை அறியத்தான் இந்த வழித்தேடல்.

  ReplyDelete