Friday, February 28, 2014

தமிழக தேர்தல் நிலவரம்

2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் குறித்து தந்தி டிவியில் ஒரு கருத்துக் கணிப்பை அடிப்படையாக வைத்து தொடர் நிகழ்ச்சி ஒன்று நடந்துவருகிறது. இரண்டு நாள்கள் முன்பு அந்நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். திருச்சி, மதுரை, காஞ்சி போன்ற எட்டு தொகுதிகள் பற்றியது. இந்தக் கருத்துக் கணிப்புகளில் கிடைத்த தகவல்களிலிருந்து நான் புரிந்துகொண்டவை:
  1. ஒவ்வொரு தொகுதியிலும் அஇஅதிமுகதான் முன்னிலையில் உள்ளது. திமுக இரண்டாம் இடம்.
  2. திமுகவும் தேமுதிகவும் சேர்ந்தாலொழிய அஇஅதிமுகவைத் தோற்கடிப்பது இயலாத காரியம்.
  3. பாஜக, பல இடங்களில் தேமுதிகவைவிட அதிக வாக்குகள் பெறுவதாகத் தெரிகிறது.
  4. பாஜகவும் தேமுதிகவும் இன்னபிறரும் சேர்ந்தாலும்கூட திமுகவை இரண்டாவது இடத்திலிருந்து நகர்த்த முடியாது. அஇஅதிமுகவை நெருங்கக்கூட முடியாது.
திமுக-தேமுதிக கூட்டணி ஏற்பட்டால், அந்தக் கூட்டணியால் சில இடங்களைப் பெற முடியும். இது நடைபெறாதபட்சத்தில், தமிழகத்தின் 39 இடங்களும் அஇஅதிமுகவுக்கே. பாண்டிச்சேரி விஷயம் எனக்குப் புரியவில்லை.

தேமுதிக-பாஜக கூட்டணி ஏற்பட்டால் அதனால் ஒருவருக்கும் ஓர் இடம்கூடக் கிடைக்காது. பாஜக-தேமுதிக-மதிமுக-பாமக என்று பெரும் கூட்டணி ஏற்பட்டாலும் அந்தக் கூட்டணிக்கும் ஓர் இடம்கூடக் கிடைக்காது.

அஇஅதிமுக, கம்யூனிஸ்டுகளுக்கு ஓர் இடம்கூடக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. கம்யூனிஸ்டுகளால் அஇஅதிமுகவுக்கு எந்த லாபமும் இருப்பதுபோலத் தெரியவில்லை.

தனிப்பட்ட முறையில் இந்தத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரிய ஆதாயம் இருக்கும். தேமுதிகவைவிட அதிக வாக்குகள் பாஜகவுக்குக் கிடைக்கும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக ஆகிவிடும் என்று தோன்றுகிறது. அதாவது தமிழகத்தில் காங்கிரஸின் இடத்தை பாஜக எடுத்துக்கொண்டுவிடும் என்று தெரிகிறது; காங்கிரஸ் பாஜகவின் இடத்துக்குப் போய்விடும்.

கம்யூனிஸ்டுகள்போல, பாமக, மதிமுக ஆகியோரும் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத அமைப்புகளாக ஆகிவருகின்றனர் என்பதும் இந்தக் கணிப்பில் தெரிகிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற தலித் கட்சிகளையும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற இஸ்லாமியக் கட்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அட்வாண்டேஜ் ஜெயலலிதா.

17 comments:

  1. தெள்ள தெளிவாக உள்ளது .40தும் நமக்கே , அம்மா சொல்வது இப்பொழுது புரிகிறது

    ReplyDelete
  2. இந்தப் பாட்டும் உங்க காதுக்குள்ள ஒலிச்சிருக்குமே

    வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே... நான் சொல்றது அம்மா கட்சிக்கு அல்ல சாய்வாலா கட்சிக்கு..

    ReplyDelete
  3. i feel ADMK BJP Allaince will sweep the TN polls for sure..JJ can give only 5 seats to BJP which they will agree with both hands and in future she can be a deputy PM or HOME minister or FINANCE minister too as per her wish

    ReplyDelete
  4. தேர்தல் கணிப்புக்கள் – ஒரு நல்ல பொழுதுபோக்கு – பத்திரிக்கைகளுக்குப் பரபரப்புச் செய்திகள் தர நல்லவாய்ப்பு. வசதிமிக்க கட்சிகளுக்கு விலைகொடுத்து வாங்கக்கூடிய தேர்தல் உத்தி.

    ReplyDelete
  5. விஜயகாந்த்தம், வோட்டுக்களை இழுக்காது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தம் பக்கம் அவர் வரவில்லைஎன்றால், எதிர்ப்பக்கம் போய்விடுவார் என்பதால் அவரைப் பிடிக்க முற்படுகிறார்கள் திமுகவும் பாஜகவும். (2) அடுத்தவனுக்கு வேட்டி துவைத்துப் போட்டுதான் கம்யூனிஸ்ட்டுகள் கட்சி நடத்தவேண்டும்' என்று கண்ணதாசன் இருபத்தைந்து ஆண்டுகள் முன்னாள் சொன்னார். அந்நிலை இன்னும் மாறவில்லை. ஆனால் வடஇந்தியாவில் அவர்கள் சில இடங்களைப் பெற்றால் அப்போது நமக்குப் பயன்படுவார்கள் என்ற தொலைநோக்கில் கம்யூனிஸ்ட்டுகளை இவர்கள் காக்கா பிடிக்கிறார்கள். அடிப்படியில் பாமக.வுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் எந்த வேறுபாடுமில்லை. இதில் பரிதாபத்துக்குரியவர் வைகோ தான். திறமையும் நேர்மையும் இருந்தும் சாமர்த்தியமும் சூழ்ச்சித்திறனும் இல்லாததால் மேலுக்கு வரமுடியாமல் தவிக்கிறார். வழக்கம்போல ஜெ. கட்சிக்குப் போட்டியே இருக்காது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  6. all fixed. havent you heard about the sting operaion on opinion polls

    ReplyDelete
  7. YES THIS TIME CONGRESS WILL BE OUT OF POWER. THERE WILL
    BE AN ALLIANCE BETWEEN BJP AND AIADMK AFTER POLLS, AS
    MODI AND MADAM HAVE A SECRET ALLIANCE PACT. THAT IS WHAT
    WORRIES KALAIGNAR AS MODI AND MADAM WILL BE A WORRYING
    FACTOR FOR KANIMOZHOI AND CO AND KALAIGNAR IS DESPARATE
    TO SAVE HIS CORRUPT FAMILY FROM THE LAW.

    ReplyDelete
  8. Sir,

    You seem to have formed an opinion for 39 seats in TN by attending a show of second set of 8 seats. In the first set of 8 seats they telecasted couple of weeks ago, they predicted BJP to win Kanyakumari & Nagercoil (those two are BJP strongholds) and also predicted DMK to do well in few other seats. You may want to watch that show available in youtube.

    With that being said, like you think ADMK will definitely do well winning more than 25 seats. DMK+ (with out Congress) and BJP+ (with DMDK) will fight out for second position. PuthiyaThalaimurai also predicted the same.

    Thanks.

    ReplyDelete
  9. கூட்டணி பரோட்டா மாவு எல்லாம் தெளிவான பிறகுதான் இன்னும் சரியான தெளிவு கிடைக்கும். அதற்குள் 39 அதிமுகவுக்கு என்பதெல்லாம், சாரி...கொஞ்சம் ஓவர் !...

    பதிவுக்குத் தொடர்பற்ற ஒன்று:உங்கள் பக்கத்தில் உள்ளடக்கத் தேடுபொறி எதையாவது ஒன்றை நிறுவுங்கள்..குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி நீங்கள் எழுதிய எதையாவது தேட நினைத்தால் முடிவதில்லை...

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய ஓட்டு அறிவன் அவர்களுக்கு.

      "உங்கள் பக்கத்தில் உள்ளடக்கத் தேடுபொறி எதையாவது ஒன்றை நிறுவுங்கள்"

      Delete
    2. ஒரு தேடுபொறி மேலே, உச்சாணியில், இடது ஓரத்தில் உள்ளது! கூகிள் பிலாகரே தருவது. அதில் போட்டுத் தேடினால் என் வெவ்வேறு பதிவுகள் வரும். பாருங்கள்.

      Delete
  10. "பதிப்பாளர், கிழக்குப் பதிப்பகம்' என்று போட்டார்களா அல்லது பஜனையாக 'சமூக ஆர்வலர்' என்று போட்டார்களா?
    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. இப்போது புதிய தலைமுறை, தந்தி டிவி இரண்டிலுமே கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி என்றுதான் சொல்கிறார்கள். சிலமுறை பதிப்பாளர் என்றும் சொல்லியிருக்கலாம். கேப்ஷனில் என்ன வருகிறது என்று பார்ப்பது டிவி ஸ்டுடியோவில் கஷ்டம்.

      Delete
  11. These are the views (of my friend Ramesh, Denmark)

    AIADMK may not win as predicted by you because of the following reasons

    1. Anti-incumberency votes
    2. Unknown candidates
    3. Pondicherry is out of question, Congress is going to win there, AIADMK (Omalingam) might not get deposit.
    4. Forward community vote (they were never favourable for DMK) might now split to BJP (I guess, Badri would have voted AIADMK previously, would now vote for BJP)
    5. Tamil nationalists votes (Vaiko, Nedumaran, Thirumurugan etc) will be for BJP atleast (80%%) of them.
    6. If DMK together with PMK and Viduthalai Chiruthai would win about 27 seats.
    7. But without PMK and with DMDK would win 30-32 seats.
    8. Modi might prefer DMK even if DMK have marginally lower seats than AIDMK (we know how Vajbhai suffered).
    9. If congress, DMDK and DMK makes an alliance they are likely to win all seats.

    ReplyDelete
  12. CNN IBN Opinion Poll

    AIADMK = 14 to 20 only
    DMK = 10 to 16
    Cong = 4 to 6
    BJP = 0 (Before DMDK - BJP alliance)

    ReplyDelete
  13. HAD DMK GOVERNMENT CAME TO POWER INSTEAD OF
    AIADMK IN TAMILNADU THOSE THIEVES WOULD HAVE SOLD
    TAMILNADU TO BUSINESS AND REAL ESTATE PEOPLE AND
    WOULD HAVE STASHED THE MONEY IN FOREGIN BANKS. BUT
    LUCKILY DMK WAS DEFEATED. THE SAME SHOULD HAPPEN
    TO CONGRESS THIS TIME. CONGRESS SHOULD BE DEFEATED
    AT ANY COST EVEN AT THE COST OF BJP RETURNING POWER.
    BJP IS BETTER THAN CORRUPT CONG PEOPLE AND PEOPLE
    LIKE CHIDAMBARAM WHO IS ANTI LABOR SHOULD BE DEFEATED
    WHEREEVER HE STANDS THIS TIME

    ReplyDelete