Thursday, March 06, 2014

அமேசான் இந்தியாவில் கிழக்கு புத்தகங்கள்

கடந்த சில தினங்களாக அமேசான் இந்தியா மின்வணிகத் தளத்தில் கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இதனை அமேசானே நேரடியாக fulfill செய்வதால் வாங்குவோருக்குச் சில வசதிகள் உண்டு.
 1. ஒரேயொரு புத்தகம் (100 ரூபாய்க்குக் குறைவாக இருந்தாலும்கூட) வாங்கினாலும் இந்தியா முழுமைக்கும் கூரியர் கட்டணம் கிடையாது.
 2. COD (கேஷ் ஆன் டெலிவரி) வசதியை அளிக்கிறார்கள். கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங் வசதி இல்லாதவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 3. சில குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டும் சூப்பர் ஃபாஸ்ட் ஒரு நாள், இரண்டு நாள் ஷிப்பிங் வசதியை அளிக்கிறார்கள். (அதற்கெனத் தனிக் கட்டணம் உண்டு. நீங்களே தளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.)
பரிசோதனை முயற்சியாக கிழக்கின் சில நூறு புத்தகங்களை மட்டுமே அமேசானின் பெங்களூரு வேர்ஹவுஸில் வைத்திருக்கிறோம். பயன்பாட்டைப் பொருத்து கிழக்கின் அனைத்துப் புத்தகங்களையும் இங்கே வைத்து விற்கலாம் என்றிருக்கிறோம். பயன்படுத்திவிட்டு, நிறை, குறைகளை எழுதுங்கள்.

14 comments:

 1. புதுமைகளைப் புகுத்துவதில் பத்ரிக்கு நிகர் பத்ரி தானே !

  ReplyDelete
 2. Replies
  1. தமிழில் கிண்டிலில் புத்தகங்களை ஏற்ற முடியுமா என்பது குறித்துப் பார்த்துவருகிறோம். சோதனை முயற்சியாக ஒரு புத்தகத்தை ஏற்றியுள்ளோம். எ.கா: http://www.amazon.com/Kanitha-Methai-Ramanujan-Badri-Seshadri-ebook/dp/B00IMEAU06/ref=sr_1_fkmr0_1?ie=UTF8&qid=1394091048&sr=8-1-fkmr0 ஆனால் இது அமேசான் விதிகளுக்கு உட்பட்டதா என்று தெரியவில்லை. அவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றபின்னரே மேற்கொண்டு பிற புத்தகங்களைச் சேர்க்கலாம் என்று திட்டம். மேலும் விலை விஷயத்தில் சில சிக்கல்கள் இருக்கலாம். மின்புத்தகங்கள் குறித்து விரைவில் ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கவும்.

   Delete
 3. We have published Tamil books in Kindle.

  Mahakavi Bharathiyar Full Work - VarNaA Studio.
  http://www.amazon.com/Mahakavi-Bharathiyar-Full-Work-VarNaA-ebook/dp/B00CFS31OW

  Thiruvasagam - Lord Shiva
  http://www.amazon.com/Thiruvasagam-Lord-Shiva-Manikkavasagar-ebook/dp/B00CFS2ZEO

  We can help you in this process.
  Siva
  varnaa@varnaa.com

  ReplyDelete
 4. /பரிசோதனை முயற்சியாக கிழக்கின் சில நூறு புத்தகங்களை மட்டுமே அமேசானின் பெங்களூரு வேர்ஹவுஸில் வைத்திருக்கிறோம். பயன்பாட்டைப் பொருத்து கிழக்கின் அனைத்துப் புத்தகங்களையும் இங்கே வைத்து விற்கலாம் என்றிருக்கிறோம். பயன்படுத்திவிட்டு, நிறை, குறைகளை எழுதுங்கள்./

  you can sell all the books no குறை only நிறை

  ReplyDelete
 5. Is Selling , the only motive of your site ?

  -srinath

  ReplyDelete
  Replies
  1. By site, if you mean my blog, no. Selling is not the only motive. I write about lot of other things, in case you have not noticed. By site, if you are talking about my company's site(s), yes, selling and making money is the only motive.

   Delete
 6. I will be happy to read tamil books in kindle :)

  ReplyDelete
 7. Well done Badri. It's another sales window to get Kizhaku Padhipagam books.

  ReplyDelete
 8. fyi.
  they are not grouped under TAMIL. so not visible easily.

  ReplyDelete
 9. எனது நூக் படிப்பான் மொபி கோப்பைப் படிக்காது. ஈபப் அல்லது பிடிஎஃப் மட்டுமே. நான் என்ன செய்ய? மொபியை ஈபப்பாக்கும் மாற்றிகள் சரியாக மாற்றுகின்றனவா?

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் சின்னச் சின்னப் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால் பொதுவாக EPUB -> MOBI, MOBI->EPUB சரியாகவே வேலை செய்கின்றன.

   Delete
  2. நன்றி. தமிழ் ஈபப் நூல்களையும் ஆவணங்களையும் நூக் வெறும் கட்டங்களாகவே காட்டுகிறது. தமிழ் எழுத்துருவை ஈபப்பிலோ, நூக்கிலோ உட்பொதியவேண்டுமா? உதவிடுக!

   Delete