Thursday, September 09, 2004

பெஸ்லான் பயங்கரம் பற்றிய பின்னூட்டம்

பாலாஜியின் பெஸ்லான் பயங்கரம் பற்றிய பதிவிற்கான பின்னூட்டம் இது.

பெஸ்லானுடன் அதற்கு முந்தைய வாரத்தில் வெடித்த இரண்டு விமானங்களையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இந்தத் தீவிரவாதிகள் நிச்சயமாக தம்மால் தப்பித்துப் போகமுடியும் என்று நினைத்து இந்தச் செயல்களைச் செய்வதில்லை.

பெரிய அளவில் அரசு, பிற மக்கள் ஆகியோரிடத்தே அச்சத்தை மூட்டுவது. 9/11, பெஸ்லான், இதற்கு முன் ஏற்கனவே ரஷ்யாவின் 'ஆபரா ஹவுஸ்' ஒன்றில் நடந்தது ஆகிய அனைத்துமே ரஷ்ய மக்கள் மனதில் பெருத்த அளவு அச்சம் ஊட்டுவதாக இருந்தது. இதன்மூலம் செச்னியாவில் என்ன நடக்கிறது என்பதையே அறியாமல் இருக்கும் மற்றவர்களுக்கு ஒருவிதத்தில் அதைப்பற்றி தேடி அறிந்துகொள்ள உதவும் என்ற வகையில் இதுபோன்ற செய்கைகளை தீவிரவாதிகள் செய்கின்றனர்.

இதுநாள் வரையிலான தீவிரவாதச் செயல்களில் குழந்தைகளுக்கு எந்தக் கெடுதலும் வராதவாறு வெளியே அனுப்பி விடுவார்கள். பெண்களுக்கும் அவ்வாறே. ஆனால் இப்பொழுது அம்மாதிரியான எந்த 'நல்ல செய்கையும்' இருக்காது என்பதையே நவீனத் தீவிரவாதிகள் காட்டுகிறார்கள். பல பெண்களைக் கொலைசெய்தால் இதனால் இன்னமும் அதிக 'அச்சம்' ஏற்படும். குழந்தைகளைக் கொலை செய்தால் அதன் விளைவு இன்னமும் அதிகமாக இருக்கும் என நினைக்கிறார்கள் போலும்.

எந்தெந்த இஸ்லாமிய அமைப்புகள் இந்தக் கொடுமையைக் கண்டித்தது என்று தெரியவில்லை. அப்படியே அவை கண்டித்தாலும் விடாது செச்னியாவில் ரஷ்ய அரசு செய்யும் கொடுமையையும் ஒப்பீடாகக் கொண்டுவரும். இதை மொத்தமாக நான் தவறு என்று சொல்லமாட்டேன்.

முடிவு? அரசு கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாதத்தையும் சற்று கவனமாகப் பார்க்கவேண்டும். பெஸ்லான் கொடூரத்திலும் ஏற்கனவே உறவினர்களை இழந்த பயங்கரவாதிகள்தான் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்கிறார்கள். ரஷ்ய விமான விபத்துகளிலும் அப்படியே. ராஜீவ் காந்தி கொலையிலும் அப்படியே.

தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க அரசுகள் மக்களின் நியாயமான பிரச்னைகளை சரியாக அணுகவேண்டும்.

ஆனால் உலகின் தற்போதைய பல - பெரும்பான்மையான - பிரச்னைகளில் இஸ்லாம், முஸ்லிம்கள் ஈடுபட்டிருப்பது எதனால் என்ற கேள்வி நியாயமானதுதான். முழுமையாக எனக்குப் புரியாத விஷயம் இது.

5 comments:

 1. இது எல்லாவெற்றுக்கும் மேலாக எனக்குத்தோன்றுவதெல்லாம்... "இந்த மாதிரி தீவிரவாதத்தில் ஈடுபடுவர்களுக்கு குறிப்பாக இழப்பதற்கு எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஈராக்கை தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் இதுதான் தோன்றும். அவர்களிடம் போய் நாம் நம்ப வேளையைக் காட்டினால் குழவிக்கூட்டை கலைத்த கதைதான்..."

  இதற்கு என்ன முடிவு என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் தெரிகிறது... புஷ் மாதிரியோ, இஸ்ரேல் போலவோ, இப்போது ரஷ்யா அறிவித்திருப்பது போலவோ கண்மூடித்தனமான நடவடிக்கை எங்குபோய் விடும் என்று தெரியவில்லை.

  மிகவும் வருத்தத்துடன்,
  அன்பு

  ReplyDelete
 2. Badri,

  sorry for psoting a different request here but thought this is the best place :-)

  Request you to write in tamil - about what are the different taxes existing in India and different states - how is it different w.r.t other countries (say USA, UK or Gulf, china) - why Sales tax - why Central sales tax, Octroi, Enry tax, spl tax on pharma items or petrol prices.

  There is a new rule by Karnataka govt that any item being brought into Karnataka by anyone (in train or bus or other mode) will be checked if they have the receipt of purchasing in KA and paying tax or they will be asked to pay tax. So every one should travel with bills of their personal belongings..

  What is the impact if these taxes are removed. (what if)

  -Mahesh

  ReplyDelete
 3. One reason is that muslims lack leaders like Gandhi or Martin Luther King or Ambedkar. Gandhi believed that an eye for an eye will make the whole world go blind. Exploitation by governments is not something unique to muslims. Dalits in India or blacks in America have seen much more exploitation than say, kashmiris.

  Thoreau

  ReplyDelete
 4. தோரோ: முஸ்லிம்களிடையே காந்தி, அம்பேத்கார் போன்ற அமைதியை விரும்பிய தலைவர்கள் தோன்றவில்லை எனச் சொல்வது தவறு.

  ராஜ்மோகன் காந்தி, கான் அப்துல் காபர் கானைப் பற்றி மிகச் சமீபகாலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதை இப்பொழுதுதான் படிக்க எடுத்துள்ளேன். பக்தூன்களிடையேயும், மஹாத்மா காந்தி அளவிற்கு அஹிம்சையைப் போதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டியவர் 'எல்லை காந்தி'. இந்தப் புத்தகம் பற்றி தீம்தரிகிடவில் ஞானி மிகச்சிறிய அறிமுகம் ஒன்றைக் கொடுத்துள்ளார். நேற்றைய பிசினஸ் ஸ்டாண்டர்டில் ஒரு நல்ல அறிமுகம் வந்துள்ளது.நான் புத்தகத்தைப் படித்து முடித்ததும் 'குதாய் கித்மத்கார்' பற்றி எழுதுகிறேன்.

  ReplyDelete
 5. Badri,

  The leader in case of muslims was Jinnah. And Jinnah ordered his followers to slaughter hindus (day of deliverance and thanksgiving). I am not saying muslims don't have moderate leaders (e.g., our president Kalam who is a role model for many Indian muslims), but the top leadership position is often taken by muslims who promote violence. Gandhi vs. Jinnah - what a contrast. I suspect Ellai Gandhi is more celebrated in India than in Pakistan/Kashmir. Why is that Kashmiris don't invoke Ellai Gandhi and choose a nonviolent path in their struggle?

  ReplyDelete