Sunday, September 12, 2004

the joker was here

சாரு நிவேதிதாவைத் தெரியுமா? அவரது எழுத்துகள் வசீகரம் மிக்கவை. நான் அவரது நாவல்களையோ, சிறுகதைகளையோ இதுவரை படித்ததில்லை. இப்பொழுது உயிர்மை போன்ற இதழ்களில், மற்றும் சாருஆன்லைன்.காம் இணையத்தளத்தில் இருக்கும் கட்டுரைகளைப் படித்துள்ளேன். ஸீரோ டிகிரி, எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் போன்ற படைப்புகளைப் பற்றிக் கேட்டிருக்கிறேன். இன்னமும் அவற்றைப் படிக்கவில்லை.

சென்ற வாரம் அவரது 'நேநோ' என்னும் சிறுகதைத் தொகுதியை அன்புகூர்ந்து முத்துராமன் எனக்குப் படிக்கக் கொடுத்தான். முன்னுரையில் அசோகமித்திரன் இவ்வாறு சொல்கிறார்:
திரு சாரு நிவேதிதா அவர்களின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு முன்னுரை எழுதக் கேட்டுக் கொண்டபோது தயக்கத்துடன் ஒத்துக் கொண்டதற்குக் காரணம் அவருடைய பல நல்ல சிறுகதைகளை அவை பத்திரிகைகளில் வெளிவந்தபோது நான் படித்திருந்தாலும் அவருடைய வேறு சில படைப்புகள் என் தகுதிக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன.
இந்த மேற்கோள் என்னை மேலும் படிக்கத் தூண்டியது.

முதலில் புத்தகத் தலைப்பிலான கதையைப் படித்தேன். நிச்சயமாக அது அசோகமித்திரனின் தகுதிக்கு அப்பாற்பட்டதாகத்தான் தோன்றியது. அதனால் அடுத்து புரியும்படியான எல்லாக் கதைகளையும் தாண்டித் தாண்டி, அசோகமித்திரனின் தகுதிக்கு அப்பாற்பட்டவற்றை மட்டும் கூர்ந்து படிக்கத் தொடங்கினேன். பின்னொரு நாள், மேலும் விவரமாக சாருவின் படைப்புலகம் பற்றி எழுத விழைகிறேன். அதற்கு முன்னால், சாருவின் the joker was here என்னும் கதை? கட்டுரை? தெரியவில்லை - மீட்சி, 1990 இதழில் வெளிவந்த இந்தப் பிரதியின் முதல் சில வார்த்தைகளை ஒரு பெரிய மேற்கோளாக இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்...

விபச்சாரியின் யோனி வழி வழி ஒழுகும் விந்து குருட்டுப் பிச்சைக்காரனின் தட்டு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் டம்ளர் கரும் பலகை கிராமத்துச் சிறுமியின் மூக்குச் சளி குஷ்டரோகியின் நிணத்தில் மொய்க்கும் ஈ ஜிலேபி ஊறுகாய் முட்டை கால் பந்து கைப்பந்து சுருட்டு கணேஷ் பீடி வில்ஸ் ஃபில்டர் சாலையோரத்து sanitary napkin குடை சடை வடை படை முப்படை எப்படை அடை எடை இடை உடை கடை நடை நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது முடை ராக்கெட் பூசணிக்காய் அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே நட்சத்திரம் ஷூ பாலிஷ் ஷேக்ஸ்பியரின் கவிதை வரி நரி பரி கரி துரி ழுரி புரி ஒட்டகம் கழுதையின் குறி குதிரை வால் வானவில் நிர்மா குர்மா சுர்மா புர்மா மௌனியின் பூணூல் மௌனியின் cock புளி புலி முண்டக்கூவி பரதம் பதம் ரதம் பாதம் தம் தம் தம் தம் தம் தம் தம் தம் தம் ரம் ரம் ரம் ரம் ரம் ரம் ரம் ரம் பம் பம் பம் பம் பம்பம்பம்பம் பும் பும் பும் பும் பும் பூம் பூம் பூம் பூம்பூம்பூம்பூம்பூ ம்பூ ம்பூ ம்பூ ம்ப்ஊம் புஊம் புஊம் புஊம்பு ஊம்பு ஊம்பு ஊம்பு ஊம்பு வறுத்த ஈரல் மம்மியின் panties முனியாண்டி விலாஸ் பிரியாணி முனியாண்டியின் கதை புத்தனின் குசு விசுவின் சிசு தமிள் ஒழுத்தாளனின் வண்ணான் கணக்கு புண்ணாக்கு வெங்காயம் சிந்துபாதின் கன்னித்தீவு வல்லாரை லேகியம் கருணைக் கிழங்கு பேரீச்சம் பழம் நிரோஷாவின் உதடு டிஸ்கோ சாந்தியின் தொடை காந்தியின் விரைக்காத குறி பூந்தி காராபூந்தி காராசேவு குருச்சேவு கொர்பச்சேவு துரு பிடித்த பிளேடு பன்றி வாயிலிருந்து ஒழுகும் பீ தமிள்ப்பீ குயில்ப்பீ குல்ஃபீ அணு தூண் இரும்பு எரும்பு பருப்பு உறுப்பு கருப்பு பல்லியின் நாக்கு யானை லத்தி அல்கூல் வடமூளியில் Bhagன்னா லிங்கம் wanன்னா அல்கூல் பகவான் is equal to லிங்க அல்கூல் மலப்புழு சீனி வெண்டைக்காய் சுண்டைக்காய் துண்டைக்காய் குண்டைக்காய் முண்டைக்காய் களி கலி வலி வளி உளி அலி எலி gas chamber பனிப்பாறை தொன்னூறு லட்சம் மனிதப் பிணங்கள் தாலி மீறிய சீலை கர்மா வர்மா தர்மா சண்டை சாண்டை பண்டை தண்டை கொலுசு புலுசு ஸ்க்ரூ டாலியின் மீசை மாரதோனாவின் கால் வான்கோவின் ஒற்றைக்காது சேகுவேராவின் துண்டிக்கப்பட்ட கை மாவோவின் கொசு வலை polpot-ன் முண்டாசு லார்வா வைரஸ் ஆபிதீனின் கோவணம் சாரு நிவேதிதாவின் ஆபாசக் கடிதம் ஆம்பளை பொம்பளை ...

அப்பா மூச்சிரைக்கிறது. இதற்குக் கொஞ்சம் தாண்டி முழு வரிகள் போல வருகின்றன. ஆனாலும் கிட்டத்தட்ட இதேமாதிரிதான் செல்கின்றது. அசோகமித்திரனின் தகுதிக்கு நிச்சயமாக மேல்தான்.

30 comments:

 1. பத்து நாள் கனவில் வந்ததை அப்படியே சேர்த்து வைத்து கலப்படமாக பேப்பரில் கொட்டியது போல இருக்கிறது.

  டீசண்ட்டா சாரு பாணியிலே சொல்லணும்ன்னா "பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல இருக்கிறது"

  ReplyDelete
 2. ஜீரோ டிகிரி இதை விட கொடுமையா இருக்கும்க...!!

  "நேநோ" கொஞ்சம் பரவாயில்லை.. கதைகள் சில உண்டு....

  ReplyDelete
 3. முந்தைய கமெண்ட் - posted by் - சாகரன்

  ReplyDelete
 4. I have removed 'Anonymoys' posting mode from the default. So if you have a blogger account, that should go through first, and only if the 'anonymous' box is checked, the comment will be anonymous.

  ReplyDelete
 5. இப்பொழுது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 6. சாரு நிவேதிதா எங்கள் வீட்டுப் பக்கத்தில் தான் இருக்கிறார். நான் ஏறுகிற அதே 15ஃஎப் தடத்தில் தான் ஏறுவார். அவர் பக்கத்து சீட்டில் , கடுக்கண் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்குக்கும் அவரிடம், " முன்னல்லாம் நல்லாத்தானே எழுதினீங்க? இப்ப என்ன சார் ஆச்சு " என்று கேட்க ஆவலாக இருக்கும். ஆனால் பயமாகவும் இருக்கும். யதார்த்தம் என்ன என்றால், சாரு, பொதுவாக சித்திரிக்கப் படும் அளவுக்குக் ' கோக்கு மாக்கானவர்' இல்லை. உங்களிடம், அன்பு கூர்ந்து புத்தகம் கொடுத்த அதே குத்துராமனிடம், மன்னிக்க, முத்துராமனிடம், சாரு, துவக்க காலங்களில் எழுதிய தில்லிப் பின்னணியிலான சிறுகதைகள் பட்ரி கொஞ்சம் கேட்டுப் பார்க்கவும். அவசரத்துக்கு, கணையாழிக் களஞ்சியத்தின் முதல் பாகத்தில் இருக்கும் அவரது கதையை, படித்துப் பார்க்கவும். அவர், என்ன காரணத்துக்காக , இது போல இப்போது எழுதினாலும், அவருடைய, நடையை மிகவும் அற்புதமானது என்ட்ரு சொல்லலாம். அதன் காரணமாகத்தான் கோணல் பக்கங்கள் பெருத்த வரவேற்பைப் பெட்ரது. மீண்டும் அவர் ஃபார்ம் - க்கு வருவார் என்று நம்புவோம், அன்புடன் - பிரகாஷ்

  ReplyDelete
 7. எழுத்தாளர்களும், பத்திரிக்கையாளர்களும் சாரு நிவேதிதாவை வெறுத்து ஒதுக்குவதன் காரணம் இப்போது புரிகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள "நேநோ" தொகுதியிலுள்ள சில கதைகள் அவருடையதல்ல ஆபிதீனுடையவை என்பது குறித்து பலத்த சர்ச்சையுண்டு [http://www.geotamil.com/pathivukal/abdeenONSAARU.html]. அபிதீனுடைய எழுத்துக்களை இவர் பயன்படுத்தி பெயர் வாங்கி கொண்டார் என்பதும் இவர் மீது வெகுகாலமாக உள்ள குற்றசாட்டு.

  சாருநிவேதிதா தனக்கு இழைத்த துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்டவதற்காக மட்டுமே ஆபிதீன் ஒரு வலைதளம் வைத்திருக்கிறார் [http://abedheen.tripod.com/]. இது சம்மந்தமாக அந்த தளத்தில் ஆபிதீனுக்கு ஆறுதல் கூறி மடல் இட்டுள்ளவர்களின் பெயர்களை பார்த்தாலே அந்த குற்றசாட்டிலுள்ள உண்மை விளங்கும். அப்படி கடிதம் எழுதியுள்ளவர்களுள் அவரின் முதல் மனைவியும் அடக்கம்.

  மேலும் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு நாவல்களுமே அவர் எழுதியதில்லை காலசுவடில் எழுதிவரும் பிரேம்:ரமேஷ் தான் எழுதினார், பெயர் மட்டும் இவருடையதை போட்டுக் கொண்டார் என்றும் சாருநிவேதிதா குற்றம் சாட்டப்படுகிறார் [http://abedheen.tripod.com/writing/premramesh.html].

  நீங்கள் வசீகரம் என்று குறிப்பிடுவது அவர் நடையையா அல்லது அவர் எழுதும் விசயங்களையா? நடையில் என்றால் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அவர் எழுதும், வலியுறுத்தும் கருத்துக்கள் வசீகரிப்பவையல்ல. அவர் கதைகளைப் பற்றி எனக்கு அவ்வளவாக அறிமுகமில்லை. அவரின் கோணல் பக்கங்களை மட்டும் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். அங்கேயும்- மேலே நீங்கள் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ள இலக்கிய தரமான சொற்கள் இல்லாமல் பெரும்பாலும் கட்டுரைகள் எழுதப்பட்டதில்லை. வாயில் நுழையாத மேல்நாட்டு, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள், புத்தகங்கள் பற்றிய சிலாகிப்பும், உள்ளூர் இலக்கியவாதிகளைப் பற்றிய வசவுகளுமே அவர் எழுத்துகளில் நிறைந்திருக்கும். அல்லது, முந்தின இரவு எந்த பாரில் யாருடன் எத்தனை ரவுண்டு ஏற்றிக்கொண்டார்; அதற்கு பணம் யார் கொடுத்தது, தனக்கு வந்த கடிதங்களில் தன்னை கொஞ்சியும் புகழ்ந்தும் எழுதியுள்ள வாசகிகளின் கடிதங்களை கொண்டு தன் நான்கு பக்க கட்டுரையின் மூன்று பக்கங்களை நிரப்புவது - இதுதான் கோணல் பக்கங்களில் நான் படித்தவரைக் கண்டது.

  -ராஜா

  ReplyDelete
 8. ராஜா,நீங்கள் என்னைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என எண்ணுகிறேன்.நான் சொல்லவந்தது, அவர் முன்னொருகாலத்தில் ஒழுங்காக எழுதினார். பின்னர் என்ன் நடந்தது என்று எனக்குத் தெரியாது. நீங்கள் குறிப்பிடுகிற 'எழுத்து திருட்டு' பற்றிய குற்றச்சாட்டுகளை நானும் அறிவேன். அவற்றில் உண்மையும் இருக்கிறது. நான் குறிப்பிட்டது அவரது சிறுகதைகளைப் பற்றி. ஒரு படைப்பிலக்கியத்தில் நான் முக்கியமான விஷயமாகக் கருதுவது நடை வசீகரத்தைத்தான். கருத்துக்கள் அடுத்தபடி.எழுதுபவர் என்ன விதமான கருத்தை எழுதினாலும், அதைப் படிக்க இயலாத நடையில் இருந்தால், அவை யாரைச் சென்றடைய வேண்டுமோ அவர்களைச் சென்றடையாது. சாருநிவேதிதா, அந்த வகையில்,சாருவின் நடை முக்கியமானது என்று நினைக்கிறேன். - பிரகாஷ்

  ReplyDelete
 9. பிரகாஷ்: எனக்கும் சாருவின் நடை பிடிக்கும். அவரது எழுத்து வசீகரமானது என்று குறிப்பிட்டது நான்தான். அதைத்தான் ராஜா வெறும் எழுத்தையா, சொல்லவந்த விஷயங்களையா என்று கேட்டிருந்தார்.

  சாரு இந்த உயிர்மையில் ஹெலோன் ஹபீலா பற்றி எழுதியிருக்கும் கட்டுரை நல்லதொரு கட்டுரை.

  அதே சமயம் கோக்குமாக்காக சுந்தர ராமசாமியை ஷகீலாவோடு ஒப்பிடுவது, சு.ரா தமிழ் இலக்கியத்திற்கு ஒன்றுமே செய்ததில்லை, சுத்த வேஸ்ட் என்று சொல்வது, என்று தொடங்கி தமிழ் இலக்கிய கர்த்தாக்கள் பற்றிய அவரது அத்தனை கருத்துக்களுமே வழிசல்தான்.

  மேலும் நல்ல போர்னோ இலக்கியத்துக்கும், அறுவருப்பான பேத்தல்களுக்கும் சாருவால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லையோ என்றும் தோன்றுகிறது. உயிர்மை தொடக்க இதழ்களில் இதுபற்றி நிறைய எழுதினார். அதன்பின் மனுஷ்யபுத்திரன் சென்சார் செய்துவிட்டார் போல.

  இந்த இலக்கியத் திருட்டு விவகாரம் எனக்கு அவ்வளவாகப் புரிவதில்லை. அதனால் அதை நான் விட்டு விடப் போகிறேன்.

  எல்லாவற்றையும் விலக்கிப் பார்த்தாலும், சாருவின் நடை எனக்கு மிகவும் பிடித்தமானது.

  ReplyDelete
 10. தமிழ் சூழலில் சாருவின் எழுத்துக்கள் தனித்துவமானதும் முக்கியமானதுமாகும் என்பது என் கருத்து. எனக்கு சாருநிவேதிதவுடன் பழக்கம் கிடையாது. ஆனால் அவருடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவர்கள் சிலருடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. அப்படி அறிந்தவகையில் சாரு மிகவும் போலியான மனிதர். `குறைந்த பட்ச தொடர்புடைய நட்பிற்கு' கூட அவர் லாயக்கற்றவர் என்று கூறவே கேள்விபட்டிருக்கிறேன். சாருவின் ஸ்பெஷாலிடியாக நான் அறிவது, பொய்யை முழுமையாய் தானும் நம்பிகொண்டு சொல்வது. முழுமையாய் தானும் நம்பிகொண்டு சொல்வதால் அதை பொய் என்று கண்டுபிடிக்கும் சாத்தியமற்று போய்விடுகிறது. எந்த பொய்யறியும் கருவியையும் சாருவால் ஏமாற்றிவிட முடியும் என்றே தோன்றுகிறது.

  இதை எல்லாம் தாண்டியே அவருடைய எல்லாவகை எழுத்துகளும் முக்கியமானதாக தெரிகிறது. இவ்வாறு தெரிவதற்கான முக்கிய காரணம் தமிழ் சூழலின் எழுத்து வரட்சியே அன்றி, சாருவுன் எழுதாற்றல் அன்று. ரொம்ப காலமாகவே தமிழிலக்கிய சூழல் பேணிவந்த, அவருடைய பாணியில் சொல்வதானால், தயிர்வடை ஸென்ஸிபிலிடியை உடைத்தவர் அவர்தான். அதிர்சி மதிப்பிட்டிற்காக செய்வதாக, அதே தயிர்வடை சென்ஸிபிலிடிக்கள் கூறலாம். அதனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அதிர்ச்சி அளிப்பதற்காக செய்திருந்தாலும் கூட வர்வேற்கதக்கதகத்தான் தெரிகிறது. தனது தாயை பாலியல் தொலிலாளி என்று சொல்லிகொள்ளும் (அல்லது புனையும்) தைரியம் இங்க்லே யாருக்கும் இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் அதையே முன்வைத்து வசைபாட எத்தனை பெரிய கூட்டம்! நிச்சயமாய் புரியவில்லை, தனது தாய் ஒரு ஸெக்ஸ் வொர்கர் என்று சொன்னதன் மூலம்(அல்லது அப்படி நிஜமாகவே இருப்பதன் மூலம்) என்ன கீழான நிலையை அடைந்துவிட்டார் என்று புரியவில்லை. `கற்போடு' இருப்பதாக நம்பபடும் (என்னையும் சேர்த்து) நமது தாய்மார்களை விட ஸெக்ஸ்வொர்கர் எப்படி கீழனவர் என்று விளங்கவில்லை. `தேவிடிய மவனே' என்ற ஒரு வசைக்கு அததனை முக்கியத்துவமும், கோபமும் தரும் நமது சமூக மதிப்பீட்டில் cஆருவின்()எழுத்தின்) இருப்பு மிக முக்கியமானதாகவே தெரிகிறது. சாருநிவேதிதா என்ற மனிதன் சுய வாழ்க்க்கையில் செய்யும் சமரசங்கள், போலித்தனங்கள், நண்பர்களுக்கன துரோகங்கள் இதை மீறி இந்த முக்கியத்துவம் அப்படியே இருப்பதாக தெரிகிறது.

  சாருவின் எழுத்தின் அடுத்த முக்கியதன்மை அதன் பாப்புலர்தன்மைதான். அதே நேரம் அது பல்பாகவும் மாறிவிடுவதில்லை. சீரிய(அல்லது சீரியஸ்) இலக்கியத்திற்க்கும், வெகு இலக்கியத்திற்குமான இடைவெளியை அழிப்பது பின்னவீனத்துவ எழுத்தின் ஒரு தன்மையாக சொல்லபடுகிறது. சாருவுன் எழுத்து பலவகை வாcஅகர்களுக்கு இடமளிப்பதை காணமுடியும். இதை விட முக்கியதன்மை சாருவின் எழுத்தில் வெளிப்படும் நையாண்டிதன்மை. காமெடி என்ற நகைச்சுவையையோ, ஜெயமோகன் முன்னிலைபடுத்தும் அங்கதத்தையோ நான் குறிக்கவில்லை. பாரடி(ஆங்கிலத்தில் எழுத்து வரமேட்ட்னென்கிறது ஐயா, தமிழ் அங்கிலம் இரண்டிலும் எழுத முடியாதா?) என்பதையே நையாண்டி என்ப்தாக குறிப்பிடுகிறேன். பல நவீன கருத்தாக்கங்கள், நிறுவனங்கள் சருவின் எழுத்தில் சாரளமாய் நையாண்டி செய்யபடுவதை காணலாம். (விளக்கமாக பின்னால் எழுதலாம், இப்போதைக்கு யாருக்கேனும் சோ நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.) உதாரணமாய் ஜீரோ டிகிரியில் வரும் `லால் சலாம்' என்ற அத்தியாயத்தை குறிப்பிடலாம். எக்சிஸ்டென்சியலிசமும் பென்ஸி பனியன் நாவலும் எக்சிஸ்டென்சியலிஸத்தை, குறிப்பாக ஜேஜே சில குறிப்புகளை(மற்றும் தன்னை) நையாண்டி செய்ய எழுதியதாக பார்கலாம்.

  இதை எல்லாம் விட அவருடைய முக்கியமான எழுத்தாக அவர் ஜேஜே சில குறிப்புகளுக்கு எழுதிய விமர்cஅனத்தை பார்கிறேன். 80களில் ஜேஜேக்கு எழுந்த தகுதியற்ற HYPஇற்க்கு எந்த எந்த சரையான எதிர்வினையும் வந்ததில்லை. அதை சொல்லவே அன்றய சூழலில் மிகுந்த தைரியம் தேவைபட்டது. பிரமீள் இது குறித்து எழுதிய விமரசனம் மிகுந்த தனி நபர் விமர்சனமும், சொந்த வெறுப்பும் கொண்டது. மேலும் சில பிரமீளின் (ஜேஜேயின் விதவை மனைவியை முன்வைத்த) பிரமீஈளின் சில
  வக்கரமும் வெளிப்பட, பிரமீள் cஒல்லவந்த விஷயம் அதைல் அடித்து செல்லபட்டுவிடுகிறது. சாருவின் விமரசனமே ஜேஜே ஒரு போலி என்பதையும், சுத்தவாதி என்பதையும், ஜேஜேயிடம் வெளிஉப்பட்வது எக்சிஸ்டென்ஷியலிஸம் அல்ல, பாcஇcஅம் என்பதை சொன்னது. இதை மிக விலாவாரியாய் விளக்கு, ஜேஜே குறித்த பல பிரமைகளை உடைக்கும் விதமாக சாருவின் எழுத்து மட்டுமே வெளிப்பட்டது. இதை அவர் எந்த(சிறு)பத்திரிகையிலும் வெளியிடமுடியாமல் மிகுந்த cஇரமத்திற்க்கு பின் தனி பிரசுரமாக கொண்டுவந்தார். மீதி இருந்தால் பிறகு. --ரோஸாவசந்த்.

  ReplyDelete
 11. தமிழ் சூழலில் சாருவின் எழுத்துக்கள் தனித்துவமானதும் முக்கியமானதுமாகும் என்பது என் கருத்து. எனக்கு சாருநிவேதிதவுடன் பழக்கம் கிடையாது. ஆனால் அவருடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவர்கள் சிலருடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. அப்படி அறிந்தவகையில் சாரு மிகவும் போலியான மனிதர். `குறைந்த பட்ச தொடர்புடைய நட்பிற்கு' கூட அவர் லாயக்கற்றவர் என்று கூறவே கேள்விபட்டிருக்கிறேன். சாருவின் ஸ்பெஷாலிடியாக நான் அறிவது, பொய்யை முழுமையாய் தானும் நம்பிகொண்டு சொல்வது. முழுமையாய் தானும் நம்பிகொண்டு சொல்வதால் அதை பொய் என்று கண்டுபிடிக்கும் சாத்தியமற்று போய்விடுகிறது. எந்த பொய்யறியும் கருவியையும் சாருவால் ஏமாற்றிவிட முடியும் என்றே தோன்றுகிறது.

  இதை எல்லாம் தாண்டியே அவருடைய எல்லாவகை எழுத்துகளும் முக்கியமானதாக தெரிகிறது. இவ்வாறு தெரிவதற்கான முக்கிய காரணம் தமிழ் சூழலின் எழுத்து வரட்சியே அன்றி, சாருவுன் எழுதாற்றல் அன்று. ரொம்ப காலமாகவே தமிழிலக்கிய சூழல் பேணிவந்த, அவருடைய பாணியில் சொல்வதானால், தயிர்வடை ஸென்ஸிபிலிடியை உடைத்தவர் அவர்தான். அதிர்சி மதிப்பிட்டிற்காக செய்வதாக, அதே தயிர்வடை சென்ஸிபிலிடிக்கள் கூறலாம். அதனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அதிர்ச்சி அளிப்பதற்காக செய்திருந்தாலும் கூட வர்வேற்கதக்கதகத்தான் தெரிகிறது. தனது தாயை பாலியல் தொலிலாளி என்று சொல்லிகொள்ளும் (அல்லது புனையும்) தைரியம் இங்க்லே யாருக்கும் இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் அதையே முன்வைத்து வசைபாட எத்தனை பெரிய கூட்டம்! நிச்சயமாய் புரியவில்லை, தனது தாய் ஒரு ஸெக்ஸ் வொர்கர் என்று சொன்னதன் மூலம்(அல்லது அப்படி நிஜமாகவே இருப்பதன் மூலம்) என்ன கீழான நிலையை அடைந்துவிட்டார் என்று புரியவில்லை. `கற்போடு' இருப்பதாக நம்பபடும் (என்னையும் சேர்த்து) நமது தாய்மார்களை விட ஸெக்ஸ்வொர்கர் எப்படி கீழனவர் என்று விளங்கவில்லை. `தேவிடிய மவனே' என்ற ஒரு வசைக்கு அததனை முக்கியத்துவமும், கோபமும் தரும் நமது சமூக மதிப்பீட்டில் cஆருவின்()எழுத்தின்) இருப்பு மிக முக்கியமானதாகவே தெரிகிறது. சாருநிவேதிதா என்ற மனிதன் சுய வாழ்க்க்கையில் செய்யும் சமரசங்கள், போலித்தனங்கள், நண்பர்களுக்கன துரோகங்கள் இதை மீறி இந்த முக்கியத்துவம் அப்படியே இருப்பதாக தெரிகிறது.

  சாருவின் எழுத்தின் அடுத்த முக்கியதன்மை அதன் பாப்புலர்தன்மைதான். அதே நேரம் அது பல்பாகவும் மாறிவிடுவதில்லை. சீரிய(அல்லது சீரியஸ்) இலக்கியத்திற்க்கும், வெகு இலக்கியத்திற்குமான இடைவெளியை அழிப்பது பின்னவீனத்துவ எழுத்தின் ஒரு தன்மையாக சொல்லபடுகிறது. சாருவுன் எழுத்து பலவகை வாcஅகர்களுக்கு இடமளிப்பதை காணமுடியும். இதை விட முக்கியதன்மை சாருவின் எழுத்தில் வெளிப்படும் நையாண்டிதன்மை. காமெடி என்ற நகைச்சுவையையோ, ஜெயமோகன் முன்னிலைபடுத்தும் அங்கதத்தையோ நான் குறிக்கவில்லை. பாரடி(ஆங்கிலத்தில் எழுத்து வரமேட்ட்னென்கிறது ஐயா, தமிழ் அங்கிலம் இரண்டிலும் எழுத முடியாதா?) என்பதையே நையாண்டி என்ப்தாக குறிப்பிடுகிறேன். பல நவீன கருத்தாக்கங்கள், நிறுவனங்கள் சருவின் எழுத்தில் சாரளமாய் நையாண்டி செய்யபடுவதை காணலாம். (விளக்கமாக பின்னால் எழுதலாம், இப்போதைக்கு யாருக்கேனும் சோ நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.) உதாரணமாய் ஜீரோ டிகிரியில் வரும் `லால் சலாம்' என்ற அத்தியாயத்தை குறிப்பிடலாம். எக்சிஸ்டென்சியலிசமும் பென்ஸி பனியன் நாவலும் எக்சிஸ்டென்சியலிஸத்தை, குறிப்பாக ஜேஜே சில குறிப்புகளை(மற்றும் தன்னை) நையாண்டி செய்ய எழுதியதாக பார்கலாம்.("The worst threat to existentialism, is due to non-availability of good quality condoms.")


  இதை எல்லாம் விட அவருடைய முக்கியமான எழுத்தாக அவர் ஜேஜே சில குறிப்புகளுக்கு எழுதிய விமர்cஅனத்தை பார்கிறேன். 80களில் ஜேஜேக்கு எழுந்த தகுதியற்ற HYPஇற்க்கு எந்த எந்த சரையான எதிர்வினையும் வந்ததில்லை. அதை சொல்லவே அன்றய சூழலில் மிகுந்த தைரியம் தேவைபட்டது. பிரமீள் இது குறித்து எழுதிய விமரசனம் மிகுந்த தனி நபர் விமர்சனமும், சொந்த வெறுப்பும் கொண்டது. மேலும் சில பிரமீளின் (ஜேஜேயின் விதவை மனைவியை முன்வைத்த) பிரமீஈளின் சில
  வக்கரமும் வெளிப்பட, பிரமீள் cஒல்லவந்த விஷயம் அதைல் அடித்து செல்லபட்டுவிடுகிறது. சாருவின் விமரசனமே ஜேஜே ஒரு போலி என்பதையும், சுத்தவாதி என்பதையும், ஜேஜேயிடம் வெளிஉப்பட்வது எக்சிஸ்டென்ஷியலிஸம் அல்ல, பாcஇcஅம் என்பதை சொன்னது. இதை மிக விலாவாரியாய் விளக்கு, ஜேஜே குறித்த பல பிரமைகளை உடைக்கும் விதமாக சாருவின் எழுத்து மட்டுமே வெளிப்பட்டது. இதை அவர் எந்த(சிறு)பத்திரிகையிலும் வெளியிடமுடியாமல் மிகுந்த cஇரமத்திற்க்கு பின் தனி பிரசுரமாக கொண்டுவந்தார். மீதி இருந்தால் பிறகு. --ரோஸாவசந்த்.

  ReplyDelete
 12. சொல்ல விடுபட்டடது- ஆபிதீன் கதையை திருடினார் என்பதில் இனியும் சந்தேகப்பட, அல்லது சாருவிடம் ஏதேனும் நியாயம் இருக்கும் என்று நம்ப இனியும் எந்த காரணமும் இல்லை. ஆனால் ரமேஷ்-பிரேம் எ.பென்ஸிபனியனையும், ஜீரோ டிகிரியை திருடியதாக கூறுவது வெறும் நகைச்சுவை. எ+பேன்ஸிபனியன் நாவலுக்கு பிரேம்தான் முன்னுரை எழுதினார், காப்பியடிக்கபட்ட நாவல் என்று தெரியாமலா எழுதினார்? அதே பொலவே ஜீரோ டிகிரி வந்து அத்த்னை காலம் ரமேஷும் பிரேமும் என்ன cஎய்துகொண்டிருந்தார்கள் என்று தெரிஉயவில்லை. மேலும் ஜீரொ டிகிரியில் வெளிப்படும் நையாண்டியை ரமேஷ் பிரேமால் உருவாக்கமுடியும் என்று தோன்ரவில்லை. ரோஸாவசந்த்.

  ReplyDelete
 13. எழுத்துபிழைகளுக்கு மன்னிக்கவும், ரோஸாவசந்த்.

  ReplyDelete
 14. அதென்னவோ தன் படைப்புகளுக்காக ரொம்ப யோசிக்கறவங்களுக்கு இந்த மாதிரி பித்துபிடிச்சு, யாருக்கும் புரியாத நீள நீள வரிகள் எழுதத்தோணுமோ என்னவோ!! நம்ம பெயரிலி சாரின் தகுதிக்கு நேநோ சரியா இருக்கும் :)

  ReplyDelete
 15. ஐயோ சிலந்தி, என்னிலே வலை பின்னுகிறீர்களே. நா நோ சார் ;-) பெயரிலி சார் இந்த நிலைக்கு வந்தப்புறமாச்சும் தன்னைத்தானே சீரியஸா எடுத்துத் தமிழுக்குப் படைப்பிலக்கியமும் தக்கலைமுனிக்குப் படையலும் வெக்கணுமுன்னு கண்ணாடி முன்னே வேண்டுதல் வெச்சுக்க வேணும். வர வர பெயரிலி சாருக்குத் தமிழிலேயே எழுதத் தெரியாது எங்கிறது ஊருக்கே வெளிச்சமாகிட்டு வருது. சார் விரைவில பின்னூட்டுப்பொலம்பல விட்டுட்டு ஏதாச்சும் உருப்படியா எழுதியே ஆவணும். இல்லே, நெட்டிலயே டின்னு கெட்டிருவாங்க. ;-)

  ReplyDelete
 16. //பெயரிலி சார் இந்த நிலைக்கு வந்தப்புறமாச்சும் தன்னைத்தானே சீரியஸா எடுத்துத் தமிழுக்குப் படைப்பிலக்கியமும் தக்கலைமுனிக்குப் படையலும் வெக்கணுமுன்னு கண்ணாடி முன்னே வேண்டுதல் வெச்சுக்க வேணும்.//

  படையலுக்கு, என் கணக்கில் ஒரு தேங்காய், ரெண்டு முழம் சாமந்தியுடன், ஒரு பாக்கெட் சைக்கிள் பிராண்ட் அகர்பத்தியும் சேர்த்துக் கொள்ளவும். வருகிற புண்ணியத்தில் எனக்கும் கொஞ்சம்
  பங்கிருக்கட்டுமே :-)- பிரகாஷ்

  ReplyDelete
 17. ரோஸாவசந்த்: உங்கள் குறிப்புகளுக்கு நன்றி. நானும் சாருவுக்கு தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம் இருப்பதாகவே கருதுகிறேன். நீங்கள் சொல்லியிருந்தவற்றுள் மூன்று விஷயங்களான (1) தயிர்வடை சென்சிபிலிட்டியை உடைத்தது/உடைப்பது (2) சீரியஸ் இலக்கியத்திற்கும், வெகுஜன இலக்கியத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தது/குறைப்பது. அத்துடன் சேர்ந்து (3) விடாது, சோர்ந்து போகாது, மிகத்தீவிரமான எதிர்வினைகள் இருந்த போதிலும் தான் சொல்வதை சொல்லிக் கொண்டேயிருக்கும் போராளித்தனம் ஆகியதும்.

  தமிழ் இலக்கியத்திற்கு இன்னமும் பலரும் வித்தியாசமான முகங்களோடு வரவேண்டும்.

  ReplyDelete
 18. நானும் படித்திருக்கிறேன் அவரின் கோணல் பக்கக்ங்களை. டெல்லி கலவரத்தைவைத்து எழுதிய ஒரு கதை நன்றாக இருந்தது. ராஜாவின் குற்ரச்சாட்டுக்களை நானும் வழிமொழிகிறேன்.
  -காசி

  ReplyDelete
 19. Badri,

  Please include the font face declaration also in the text area like this:

  <textarea name="postBody" rows="10" cols="50" style="font-family:TSCu_InaiMathi, Latha,TSCu_paranar,TheneeUniTx ">

  Thanks,
  -Kasi

  ReplyDelete
 20. காசி: நீங்கள் சொன்னதைச் செய்துவிட்டேன்.

  ReplyDelete
 21. பத்ரி,

  இப்போது சரியாக இருக்கிறது இனி என் தட்டுப்பிழைக்கு யார்மேலும் பழிபோடமுடியாது;)
  நன்றி,
  -காசி

  ReplyDelete
 22. நீங்கள் கொடுத்திருக்கும் www.charuonline.com முகவரி சரியானதுதானா அல்லது அந்த இணைய முகவரி தற்போது உபயோகத்தில் இல்லையா? என்னால் அந்த தளத்திற்கு சென்று பார்வையிட முடியவில்லை.

  ReplyDelete
 23. அது சரியான முகவ்ரிதான். சென்ற வெள்ளிக்கிழமையிலிருந்து, தளம் வேலை செய்யவில்லை. - Raj Chandra

  ReplyDelete
 24. ¾Á¢ú þÄ츢Âò¾¢ø º¡Õ¿¢§Å¾¢¾¡×즸ýÚ ´Õ ¾É¢þ¼õ þÕôÀ¾¡¸§Å ¿¡ý ¸Õи¢§Èý. «Å÷ ±ØÐõ, º¢À¡¡¢Í ¦ºöÔõ À¨¼ôÒ¸û «ó¾Ãí¸ ¯ÚôҸǢý Å¡º¨É§Â À¢Ã¾¡ÉÁ¡¸ þÕì̦ÁýÈ¡Öõ, Ìô¨À¢ĢÕóÐ Á¡½¢ì¸ò¨¾ ¦À¡ÚôÒ Å¡º¸¨Éî º¡¡ó¾Ð. ¿¡õ §¸ûÅ¢§Â ÀðÊá¾ À¨¼ôÀ¡Ç¢¸Ç¢ý ¦À¨à «Å÷ ãÄÁ¡¸ §¸ûÅ¢ôÀ¼§¿Õõ §À¡Ð ²üÀÎõ À¢ÃÁ¢ô¨À§Â, ¦ÅÚôÀ¡¸ ±¾¢¦Ã¡Ä¢ì¸¢§È¡õ ±É ¿¢¨É츢§Èý.

  º¡Õ¨Åô §À¡ýÈ ±ØòÐìÌõ Å¡ú쨸ìÌõ þ¨¼¦ÅÇ¢ º¢È¢§¾ þÕ츢È, ¦ÅÇ¢ôÀ¨¼ò¾ý¨Á Á¢Ìó¾ ±ØòÐì¸¨Ç ¾Á¢Æ¢ø ¿¡ý «¾¢¸õ ºó¾¢ò¾¢ø¨Ä, ƒ¢.¿¡¸Ã¡ƒý §À¡ý§È¡÷ º¢Ä¨Ãò ¾Å¢Ã. Suresh

  ReplyDelete
 25. ¾Á¢ú þÄ츢Âò¾¢ø º¡Õ¿¢§Å¾¢¾¡×즸ýÚ ´Õ ¾É¢þ¼õ þÕôÀ¾¡¸§Å ¿¡ý ¸Õи¢§Èý. «Å÷ ±ØÐõ, º¢À¡¡¢Í ¦ºöÔõ À¨¼ôÒ¸û «ó¾Ãí¸ ¯ÚôҸǢý Å¡º¨É§Â À¢Ã¾¡ÉÁ¡¸ þÕì̦ÁýÈ¡Öõ, Ìô¨À¢ĢÕóÐ Á¡½¢ì¸ò¨¾ ¦À¡ÚôÒ Å¡º¸¨Éî º¡¡ó¾Ð. ¿¡õ §¸ûÅ¢§Â ÀðÊá¾ À¨¼ôÀ¡Ç¢¸Ç¢ý ¦À¨à «Å÷ ãÄÁ¡¸ §¸ûÅ¢ôÀ¼§¿Õõ §À¡Ð ²üÀÎõ À¢ÃÁ¢ô¨À§Â, ¦ÅÚôÀ¡¸ ±¾¢¦Ã¡Ä¢ì¸¢§È¡õ ±É ¿¢¨É츢§Èý.

  º¡Õ¨Åô §À¡ýÈ ±ØòÐìÌõ Å¡ú쨸ìÌõ þ¨¼¦ÅÇ¢ º¢È¢§¾ þÕ츢È, ¦ÅÇ¢ôÀ¨¼ò¾ý¨Á Á¢Ìó¾ ±ØòÐì¸¨Ç ¾Á¢Æ¢ø ¿¡ý «¾¢¸õ ºó¾¢ò¾¢ø¨Ä, ƒ¢.¿¡¸Ã¡ƒý §À¡ý§È¡÷ º¢Ä¨Ãò ¾Å¢Ã. Suresh

  ReplyDelete
 26. I think he was influenced by James Joyce (or merely imitating him) who has written such long passages without any pauses (Finnegan's wake).

  By: V

  ReplyDelete
 27. வணக்கம்.. நிறைய புதிய தகவல்கள்.. நன்றி

  By: mani

  ReplyDelete
 28. அய்யயோ! அச்சசோ புடிச்சிருக்கு! எனக்கு சாருவோட எழுத்து புடிச்சிருக்கு.

  By: சாரு நேசன்

  ReplyDelete
 29. பத்ரி,

  உங்கள் தரத்தை இவ்வளவு தாழ்த்திக் கொள்ளத்தான் வேண்டுமா? குப்பை என்பது ஒருபுறமிருக்கட்டும். தப்புத் தப்பாய் பொருள் சொல்வது வேறு! உதாரணமாய், பகவான் என்பதைப் பிரித்துப் பொருள் கண்டிருக்கும் லட்சணம் ஒன்றே போதும். பக (கன்னடத்தில் பாகா [இரண்டிலும் bha, ga] என்றால் பெண்குறி என்ற பொருள்தான் உள்ளது. மோனியர் வில்லியம்ஸிலிருந்து: भग--वत् 1 [p= 743,3] [L=147787] ind. like a vulva. -வன் என்ற பின்னொட்டுக்கு (suffix) பொருளில்லை. ஏறத்தாழ, தமிழில் சாரியையைப் போன்ற ஒன்று என்று கொள்ளலாம்.

  உங்களுக்கு எழுத விஷயம் கிடைக்காவிட்டால் பேசாமல் அந்தக் காலத்து சரோஜாதேவி புத்தகங்களை மேற்கோள் காட்டலாம். அது எவ்வளவோ மேல்.

  --ஹரி கிருஷ்ணன்.

  ReplyDelete
 30. பத்ரி சொன்னது:
  ==============
  ..(3) விடாது, சோர்ந்து போகாது, மிகத்தீவிரமான எதிர்வினைகள் இருந்த போதிலும் தான் சொல்வதை சொல்லிக் கொண்டேயிருக்கும் போராளித்தனம் ஆகியதும்.

  தமிழ் இலக்கியத்திற்கு இன்னமும் பலரும் வித்தியாசமான முகங்களோடு வரவேண்டும்.....
  ==========
  தான் சொல்வதை சொல்லிக்கொண்டேயிருப்பதைப் போரளித்தனம் என்று சொல்லத் தொடங்கிவிட்டீர்களா! மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்று அந்த நாளில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மூர்க்கன், எருமை, முரடன், காட்டுப் பன்றி எல்லாம் போரளிகள்தான் பத்ரி! பலே!

  ReplyDelete