Friday, September 17, 2004

சமாச்சார்.காம் - மென்பொருள் பன்மொழியாக்கல்

இந்த வாரம் சமாச்சார்.காம் கட்டுரையில் மென்பொருள் பன்மொழியாக்கல், தன்மொழியாக்கல் பற்றி. யூனிகோடில் இங்கே.

8 comments:

 1. அன்பு பத்ரி,
  அருமை ! மாலும்பல யெலுடுக!

  By: SriRam

  ReplyDelete
 2. தமிழக அரசு பரிந்துரைத்துள்ள யுனிகோடு அகரவரிசை அட்டவணையில் E34 நிரலைக் (column) கவனித்தீர்களா? அதில் உள்ளது என்ன எழுத்து?

  ReplyDelete
 3. அது 'ஸ' உச்சரிப்பு. 'ஸ'வைவிட softஆனது (அப்படித்தான் எனக்கு ஞாபகம்!). கிரந்த எழுத்துகளிலிருந்து வருவது. இப்பொழுதைக்கு 'ஸ1' என்று இதைக் குறிப்போம்.

  பொதுவாக ஸ, ஜ, ஷ, ஹ என்றுதான் (நாகரியில்) வரிசைப்படுத்துவது வழக்கம். ஸ1 உச்சரிப்பு என்னைப் பொருத்தவரை தமிழுக்குத் தேவையில்லை. பாருங்கள்... உங்களுக்கு அது என்ன எழுத்தென்றே தெரியவில்லை! பலருக்கும் அப்படியே!

  ஸ, ஜ, ஷ, ஹ வே தேவையில்லை எனச் சொல்வாரும் உளர்!

  ஆனால் இந்த வரிசையில் புதிய 'ஸ1' ஐக் கொண்டுவந்து வரிசையை மாற்றி அமைத்து,் குழப்பி... தமிழக அரசின் திட்டம் எனக்குப் புரியவில்லை.

  ReplyDelete
 4. நேற்று கொடுத்த பின்னூட்டம் வரவில்லை. Blogger-ல் ஏதேனும் தகறாரா என்று தெரியவில்லை.

  ReplyDelete
 5. இந்த எழுத்து முற்றிலும் புதியது அல்ல. வடமொழியில் இருந்து நாம் பயன்படுத்தும் மற்ற நான்கு முக்கிய கிரந்த எழுத்துக்களோடு இதுவும் மத நூல்கள், விளக்கவுரைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக நாலாயிர திவ்விய பிரபந்தத்துக்கு தனியன்கள் (வணக்கம்/வாழ்த்து?) எழுதியவர்கள் பலரும், முக்கியமாக, பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள் உள்பட, இந்த எழுத்துடன் அமைந்த வடமொழிப் பாக்களைப் பாடியிருக்கிறார்கள். அவற்றின் சரியான சத்தங்களை பிரதிபலிக்க இந்த எழுத்து தேவைப்பட்டிருக்கிறது. இது எவ்வளவுதூரம் வழக்கில் உள்ளது, நமக்கு இன்னும் தேவை, என்பதைப் பற்றி எனக்கு ஒன்றும் சொல்லத்தெரியாது.

  பார்க்க (2,3 ஆம் பக்கங்கள்):
  http://mahadesika.50megs.com/4000pdf/mudhalaayiram.pdf

  ReplyDelete
 6. இந்த சத்த வித்தியாசம் தேவையில்லை என்பதே என் கருத்து.

  இப்பொழுது இன்னமும் முக்கியம் ஆங்கிலத்தில் இருக்கும் ஒருசில சத்தங்களுக்கான தமிழ்க்குறியீடு - உதாரணம் 'Z'. ஜீயா, ஸீயா என்று தடுமாறிக்கொண்டிருக்கிறோம். F மற்றுமொன்று. ஃ - ஐ முன்னால் ஒட்டிவைத்துத்தாண் பிழைக்க வேண்டுமா என்று தெரியவில்லை.

  ஆனால் இதையெல்லாம் உள்ளே கொண்டுவரவேண்டுமென்றால் - கவனிக்க: நான் கொண்டுவரவேண்டும் என்று சொல்லவில்லை - இடம் அதிகம் தேவை, மேலும் தமிழ் purists கடுப்பாகி விடலாம். நம் மொழிக்கு இதெல்லாம் தேவையில்லை என்றும் சொல்லலாம்.

  ReplyDelete
 7. உங்கள் இருவரது விளக்கங்களுக்கும் மிக்க நன்றி! அட்டவணையில் இடப்பட்டிருக்கும் அந்த எழுத்தின் வடிவம், காசி அவர்கள் சுட்டியுள்ள நாலாயிர திவ்யபிரபந்தத்திலுள்ளதைப் போல் (மலையாளத்தில் இதேபோல் 'ஸ1' உள்ளது.) இருந்திருந்தால் ஒருவேளை அடையாளம் கண்டுகொண்டிருப்பேனோ என்னவோ!

  "இந்த சத்த வித்தியாசம் தேவையில்லை என்பதே என் கருத்து." - எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

  ReplyDelete
 8. ஆமாம், ga/ka, da/ta போன்றவற்றிற்கே நம்மிடம் ஒலிக்குறிப்புகள் இல்லை, ஸவுக்கும் ஸ1க்கும் என்ன பெரிய வித்தியாசம்?

  பத்ரி, என்னால் உங்கள் 'ஹிந்து...' இடுகைக்கு மறுமொழி கொடுக்க முடியவில்லை. இது அங்கே வரவேண்டியது:
  -----------------------------------------------------
  அன்புள்ள கார்த்திக்,

  இன்னொன்று, இதை வாசித்த உடனே ஹிந்துவுக்கும் கட்டுரையைப் பற்றியும்/பிழையைப்பற்றியும் ஒரு அஞ்சல் அனுப்பினேன். அந்தக் கடிதத்தைப் பதிப்பிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பைவிட, பிழை சரிசெய்யப்படவேண்டும் என்பதே ஆசை. சரி செய்ய இயலுமா?

  அன்புடன்,
  -காசி

  ReplyDelete