Wednesday, May 30, 2007

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு

நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம், Indian Writing என்ற பெயரில் ஆங்கிலப் பதிப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்தப் பதிப்பு, இந்திய மொழிகளிலிருந்து சிறந்த நாவல்கள், சிறுகதைகளை ஆங்கில மொழியாக்கம் செய்து வெளியிடும்.

முதலில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்ட நாவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளோம்.


முதல் நான்கு நூல்கள்:
  • அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்': Star-Crossed
  • ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன்': Love and Loss
  • ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்': I, Ramaseshan
  • இந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா': Krishna Krishna
இந்த ஆங்கில நாவல்களிலிருந்து வெவ்வேறு பகுதிகளை JustUs Repertory என்ற குழுவினர் படித்து/நடித்துக் காண்பிப்பார்கள்.

இடம்: வித்லோகா புத்தகக்கடை, புது எண் 238/பழைய எண் 187, ரபியா கட்டடம், பீமசேனா கார்டன் தெரு, (ராயப்பேட்டை நெடுஞ்சாலைக்குக் குறுக்காக), மைலாப்பூர் - 600 004

நாள்: 1 ஜூன் 2007, வெள்ளிக்கிழமை, மாலை 6.30 மணி அளவில்

7 comments:

  1. நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.
    என் பெயர் ராமசேஷன் ஏற்கனவே ரஷ்ய மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு லட்சம் காப்பிகள் வரை விற்கப்பட்டதாக படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. Pl. post the audio recording of the event.

    saumya

    ReplyDelete
  3. பத்ரி சார்,
    அரசுடைமையாக்கபட்ட (http://tamil.sify.com/fullstory.php?id=14459505) எழுத்துக்களை ஸ்கான் செய்து, பிடிஎப் கோப்பாக மாற்றி என் வலைதளத்தில் இடலாமா ? இதில ஏதேனும் சிக்கல் உள்ளதா ?

    நன்றி.

    ReplyDelete
  4. கூமுட்டை: இது விஜய் டிவியில் வரும் விஷயங்களை யூடியூபில் ஏற்றுவது போன்ற பாவம் இல்லை. செய்யலாம். ஆனால் ஒரு கேவியட்.

    யாரோ ஒருவர் பதிப்பித்த புத்தகங்களை அப்படியே ஸ்கேன் செய்வது அந்தப் பதிப்பகத்தின் format-ஐ - அதாவது டைப்செட் செய்துள்ளதைக் காப்பியடிப்பதற்கு ஒப்பாகும். அதிலுள்ள 'கண்டெண்ட்' - உள்ளடக்கம் மட்டும்தான் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளது. எனவே முடிந்தால் அதை நீங்களே டைப் செய்து பின் பிடிஎஃப் ஆக்கி வெளியிடலாம். இலவசமாக, காசுக்கு. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

    ஸ்கேன் செய்து வெளியிடும்போது ஒரிஜினல் பதிப்பகம் (இன்னமும் அதற்கு உயிர் இருந்தால்) உங்களைத் தொல்லை செய்யலாம்.

    ReplyDelete
  5. பத்ரி சார்,
    இப்போதெல்லாம் வெறும் பாட்டுகள் மட்டுமே யூடியுபில் வலையேற்றுகிறேன். அதற்கு(ம்) ஆப்பு வைக்கப்படுமா ? தெரிந்தால் சொல்லுங்கள்.

    நல்ல வேளை ஸ்கானர் வாங்கும் முன் கூறினீர்கள். முதலில் இலவச தமிழ் OCR செயலி கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete