நடுவில் இரண்டு நாள் ஆலப்புழைக்கும் திருவனந்தபுரத்துக்கும் போய்விட்டு வந்தேன். ஆலப்புழையில் 'அஞ்சாதே' படத்துக்கான போஸ்டர் கண்ணில் பட்டது. போஸ்டர் சென்னை தெருக்களில் காணப்பட்ட அதேதான். ஆனால் எழுத்துகள் மலையாளத்தில் இருந்தன.
அதற்குள் மலையாளத்தில் டப் செய்து வெளியிட்டுவிட்டார்களோ என்று கேட்டேன். இல்லையாம். படம் முழுக்க முழுக்க தமிழில்தானாம். ஆனால் போஸ்டர் மட்டும் மலையாளத்தில். படம் நன்றாக ஓடுகிறதாம்.
இது வெறும் தமிழர்கள் மட்டும் பார்ப்பதால் வருவதல்ல. அனைத்து மலையாளிகளும் சந்தோஷமாக தமிழ் (வெகுஜன) சினிமாக்களைப் பார்க்கிறார்கள். விஜய் நடித்த போக்கிரி நம்பர் ஒன் படமாம். 100 நாள் தாண்டி ஓடியதாம்.
ஆனால் பெங்களூருவைப் போலன்றி, தமிழ்ப் படங்களைக் காண்பிப்பதற்கு கேரளாவில் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அப்படி நடக்க வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை. எதிர்காலம் எப்படியோ.
ஆனால் இப்போதைக்கு தமிழ் சினிமாவின் இரண்டாவது பெரிய மார்க்கெட்டாக கேரளா இருக்கிறது என்று தெரிகிறது.
Reflections on Postmodern Literature
5 hours ago

தமிழ்ப்படங்களுக்கு மலையாளத்தில் பெயர் ஒட்டுவது கேரளத்தில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக நடைபெறுகிறது. கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் சுவரோட்டியில் இதைப் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteகேரளத்து சிந்தனையாளர்களும் கெட்டுப்போக ஆரம்பித்துவிட்டார்கள் எனச் சொல்றீங்க.
ReplyDeleteவருத்தமாயிருக்குது
//ஆனால் இப்போதைக்கு தமிழ் சினிமாவின் இரண்டாவது பெரிய மார்க்கெட்டாக கேரளா இருக்கிறது என்று தெரிகிறது.//
ReplyDeleteநீங்கள் சென்ற இரண்டு இடங்களும் தமிழக எல்லையை ஒட்டிய கேரளப்பகுதிகள். அங்கே தமிழ்ப்படங்கள் ஓடுவதில் ஆச்சரியம் இல்லை. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் தமிழ் படங்களை பார்க்க முடியாது. தமிழகத்தின் பட்டித் தொட்டிகளில் எல்லாம் வெளியாகும் கேரள "காலைக் காட்சி" படங்களை ஒப்பிடுகையில், தமிழகம்தான் மலையாளப் படங்களின் இரண்டாவது பெரிய மார்க்கெட் என்று சொல்லலாம்.