Monday, February 07, 2011

தேகம் ஆன்லைன் விற்பனை

நியூ ஹொரைஸன் மீடியாவின் புத்தகங்களை மட்டும்தான் முதலில் எங்கள் மின்வணிகத் தளத்தில் விற்பனை செய்துவந்தோம். கடந்த நான்கைந்து மாதங்களாக காலச்சுவடு, தமிழினி, உயிர்மை தொடங்கி வேறு சில பதிப்பகங்களின் புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளோம். மின்வணிக விற்பனை என்பது ஒரு பெரும் கடையில் நடக்கும் விற்பனையைவிடக் குறைவுதான். ஆனால் வரும் சில மாதங்களில் இந்த விற்பனையை அதிகரிக்கச் சில திட்டங்களைத் தீட்டியுள்ளோம்.

கடந்த மாதத்தில் (ஜனவரி 2011), எங்கள் மின்வணிகத் தளத்தில் மிக அதிகமாக விற்பனை ஆன புத்தகம் (அனைத்துப் பதிப்பாளர், எழுத்தாளர்களையும் சேர்த்து), சாரு நிவேதிதாவின் தேகம் நாவல்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. இனி வரும் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் முதல் ஐந்து இடங்களில் உள்ள புத்தகங்கள் எவை எவை என்பதைத் தவறாமல் குறிப்பிட உள்ளேன். மேலும் பல பதிப்பாளர்களின் புத்தகங்களையும் (அவர்கள் அனுமதியுடன்) எங்கள் மின்வணிகத் தளத்தில் சேர்க்கும் வேலை இந்த மாதம் நடைபெறும்.

11 comments:

  1. தேன் வந்து பாயுது காதினிலே....

    ReplyDelete
  2. "எங்கள் மின்வணிகத் தளத்தில்(https://www.nhm.in/shop.)" என்பதில் தாங்கள் கொடுத்திருக்கும் தொடர்பில் ஒரு புள்ளியும் சேர்ந்து இருக்கிறது அகவே அந்த தொடர்பை கிளிக் செய்யதல் உங்கள மின் வணிக தளம் not open. so u have to correct your anchor link

    ReplyDelete
  3. சரி செய்துவிட்டேன். நன்றி.

    ReplyDelete
  4. சரோஜா தேவி நாவல் அதிக விற்பனை. இதில் ஆச்சர்யம் இல்லை???

    ReplyDelete
  5. வணக்கம் சார் . நான் பத்திரிக்கையாளன் . எழுத்தாளன் . திரைப்பட உதவி இயக்குனர் , நடிகர் . புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பீர்களா? சென்ற புத்தகத் திருவிழாவில் புதிய எழுத்தாளர்கள் தொடர்பு கொள்ளவும் என்று சொல்லி ஒரு தொலைபேசி எண் கொடுத்திருந்தீர்கள் . நான் தொடர்பு கொண்டபோது அது பலன் தரவில்லை . உங்களை சந்திக்க முடியுமா? http://susenthilkumaran.blogspot.com மற்றும் su.senthilkumaran@gmail.com . நன்றி

    ReplyDelete
  6. பத்ரி, "இஸ்ரோ சர்ச்சை"- பத்தகம் எப்ப வர்ரது? நாளை மறுநாள் எதிர்பார்க்கலாமா?! என்னமோ எஸ்- பாண்டு என்கிறார்கள், புரியலை!!

    ReplyDelete
  7. தேகம் அதிகமா விக்கறதுல ஆச்சர்யமே இல்லை. சீக்கிரமே, அதன் எண்ணிக்கை 60, 000 பிரதிகளைத் தொட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. சாருவுக்கும் அதே.

    அதுவரை சாருவும் சரி, வாசகனாக நானும் சரி இது போன்ற விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை என்று இருக்கிறோம்.

    :-))))

    ReplyDelete
  8. Dear Badri,

    Any update on Feedle. When we could expect e-books from NHM.

    Vimal

    ReplyDelete
  9. எண்ணிக்கையையும் குறிப்பிடலாமே? குறைந்தபட்சம் ஒற்றை இலக்கமா, இரட்டை இலக்கமா, மூன்று இலக்க எண்ணிக்கையா என்றாவது சொல்லுங்கள்!

    ReplyDelete
  10. dai bookada eludura romba kevalama iruukku

    ReplyDelete