Saturday, March 12, 2011

கலைஞர் தொலைக்காட்சி சிபிஐ விசாரணை

சிபிஐ கனிமொழியிடமும், தயாளு அம்மாளிடமும், சரத்குமார் என்பவரிடமும் சில கேள்விகளைக் கேட்டுள்ளது பற்றி செய்திகளைப் படித்திருப்பீர்கள்.

தினகரன் பத்திரிகையில் நடத்தப்பட்ட சில கருத்துக் கணிப்புகளின் விளைவாக கோபம் கொண்டு வெகுண்டெழுந்த அழகிரியின் அடியாட்கள் மதுரையின் தினகரன் அலுவலகத்தை எரித்து அதில் மூன்று ஊழியர்கள் இறந்துபோனார்கள். அதையடுத்து நடந்த அதிரடி மாற்றங்களில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். (ஆ. இராசா அந்த இடத்துக்குச் சென்று பிற்காலத்தில் 2ஜி சர்ச்சை எழக் காரணமாக இருந்தார்!)

கலாநிதி, தயாநிதி மாறன்களின் பலமே சன் தொலைக்காட்சிதான் என்பதையும் அதனால் தம் அவசரத் தேவை ஒரு தொலைக்காட்சி சானல் என்பதையும் புரிந்துகொண்ட கருணாநிதி, அவசர அவசரமாக கலைஞர் தொலைக்காட்சியை ஆரம்பித்தார்.

ரியல் எஸ்டேட் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என்றால் உடன்பிறப்புகளைக் கொண்டு காரியத்தைச் சாதித்துவிடலாம். ஆனால் தொலைக்காட்சி ஆரம்பித்து நடத்துவது எளிதான விஷயமல்ல. ஜெயா டிவியைப் பார்த்தாலே இது தெரிந்துவிடும். தொழில்நுட்பம், புரோகிராம் உருவாக்கும் திறன், டிஆர்பி ரேட்டிங் போட்டிகளில் விளையாடும் திறன் ஆகியவை இருந்தால்தான், தொலைக்காட்சியை நஷ்டம் இல்லாது நடத்தமுடியும். கூட்டம் நம் டிவியைப் பார்த்தால்தான் அதன் வழியாகக் கொள்கை பரப்பு செய்யமுடியும். அதனால்தான் கலைஞர் தொலைக்காட்சியை நடத்த சரத்குமாரைக் கூப்பிட்டு வந்தார்கள். இவர் கலாநிதி மாறனின் கூட்டாளியாக இருந்து வஞ்சிக்கப்பட்டவர் என்கிறார்கள். அதனால் இந்த வாய்ப்பை பழிவாங்கக் கிடைத்த நல்ல வாய்ப்பாக அவர் கருதியிருக்கலாம். (அது எவ்வளவு தவறு என்பதை அவர் அப்போது உணர்ந்திருக்கமாட்டார்!)

இப்போது கிடைக்கும் தகவல்களின்படி, சரத்குமார் 20% (ஸ்வெட் ஈக்விடி?), தயாளு அம்மாள் 60%, கனிமொழி 20% என்ற அடிப்படையில் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொருவரும் என்ன தொகை கொண்டுவந்தனர் போன்ற தகவல்கள் இல்லை. இதில்தான் ஸ்வான் டெலிகாம் புகழ் ஷாஹித் பால்வாவின் ஒரு நிறுவனம் வழியாகப் பங்குகளை வாங்க என்று பணம் தரப்பட்டு, பின் கடனாகவே வைக்கப்பட்டு, அசலும் வட்டியுமாகத் திரும்பத் தரப்பட்டுள்ளது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் எந்தப் பிரச்னையுமே இல்லை. எந்த ஒரு நிறுவனமும் எந்த நிறுவனத்துக்கும் convertible loan note (பங்காக மாற்றக்கூடிய கடன் பத்திரம்) என்ற முறையில் கடன் அளிக்கலாம். அந்தக் கடனை பங்குகளாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது பங்காக மாற்றாமல் வட்டியையும் அசலையும் பெற்றுக்கொண்டு கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

எனவே சிபிஐ ஆராய்ந்து என்ன கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கலைஞர் டிவியில் முதலீடாகக் கொண்டுவந்த தொகை எவ்வளவு? அந்தத் தொகையை தயாளு அம்மாளும் கனிமொழியும் எப்படிக் கொண்டுவந்தார்கள்? அவர்கள் முதலீடு செய்த தொகையை அவர்கள் எப்படிச் சம்பாதித்தார்கள்? அதற்குச் சரியான வருமான வரியை அவர்கள் கட்டியிருக்கிறார்களா?

இதையெல்லாம் தோண்டித் துருவ ஆரம்பித்தால் இந்தியாவில் எந்த அரசியல்வாதியுமே தப்பிக்க முடியாது. எனவே அடிப்படை நோக்கம் இந்த மாபெரும் அரசியல் ஊழலைக் கண்டுபிடித்துத் தடுப்பது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பரவியிருக்கும் இந்த ஊழலில் யார்தான் இல்லை?

தேர்தல் பேரம்தான் காரணம், சிபிஐ விசாரணை எல்லாம் பூச்சாண்டி என்றால், இது ஒருவகையில் மகா அசிங்கம். ஏனெனில் இந்த விசாரணையில் யாரையும் மாட்டவைக்க எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. முக்கியமாக டிபி ரியால்டி ஏன் பணம் கொடுத்தது என்று கேள்விக்கு, ஏன் பணம் கொடுக்கக்கூடாது என்ற மறு கேள்வியைக் கேட்கலாம். யார்தான் இன்னொரு கம்பெனியில் கன்வெர்டிபிள் லோன் நோட்ஸ் வாங்கிக்கொள்ளலாம் என்ற வரைமுறை கிடையாது. இவர் தெரிந்தவரா, தெரியாதவரா என்பதெல்லாம் கேள்வியே இல்லை. நடந்ததெல்லாம் சட்டப்படி நடந்ததாகவே தெரிகிறது. மாறாக, கலைஞர் தொலைக்காட்சி என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தேவையான பணம் தயாளு அம்மாளிடமும் கனிமொழியிடமும் எப்படி வந்தது என்று விசாரணை போகுமானால், அதில் 2ஜி சம்பந்தமே இல்லை. இதுபோன்ற விசாரணையை நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளிடமும் நடத்தவேண்டும். எனவே விரைவில் இந்த சிபிஐ நாடகம் மூடப்பட்டுவிடும். தேர்தல் பேரம்தான் படிந்துவிட்டதே...

இதில் பாவம் சரத்குமார்தான். ஏற்கெனவே தாத்தாவிடம் உடன்பாடு செய்துகொண்ட பேரன்கள் வீடு புகுந்து அவரை அடித்ததாகப் பத்திரிகையில் செய்தி வந்தது. இப்போது சிபிஐ விசாரணை வேறு. அவர் இந்தக் கழக உள்பிரச்னைகளுக்குள் ஈடுபடவே கூடாது. பேசாமல் துஷ்டர்களைக் கண்டு தூர விலகி, பஞ்சாபி, குஜராத்தி டெலிவிஷன் சானல்களை நடத்தி நன்கு சம்பாதிக்கலாம். அவருக்கு வேண்டாம் இந்தக் கேடு கெட்ட தமிழ்நாடு!

28 comments:

  1. சரத் சன் குழுமத்தின் ஜெமினி அலைவரிசையின் (தெலுகு) தலைவராக இருந்தார். சன் குழுமத்தில் தமிழிலிருந்து வெளியேப் போய் உருவாக்கப்பட்ட முதல் சேனல் தெலுகு ஜெமினி தான். ஜெமினி மனதே என்று ஒவராய் சீன் போட்டதால், மாறனால் கல்தா கொடுக்கப்பட்டு வெளிவந்தவர். கொஞ்ச நாள் ஆலோசகராய் சுற்றி பின்னால், கலைஞர் டிவிக்கு வந்தார்.

    இதுப் பற்றிய மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

    ReplyDelete
  2. I think the whole point of the investigation is what did DB Realty/ Swan get in return for the loan/investment, and is there a link between spectrum allocation and the investment into kalaignar TV.

    ReplyDelete
  3. very good badri.now ur intense wish is,there should be no enquiry at all in kalaignar tv.no fact need be brought out.we people can not at all find what is yr real intension is.
    radhakrishnan,madurai

    ReplyDelete
  4. what is the solution in this biggest democracy to put all these politicians in the prison and clean this country? i thought the SC and CBI would not oblige to any of the parties and this action by the CBI on this case is only going to send wrong information to all the politicians in this country..now the bench mark is 1.76 lakh crores loss to the country and who is going to beat it...

    ReplyDelete
  5. இந்த ஆட்சியில் புதிய உரிமம் பெற்றிருக்கும் புரூவரீஸ்:



    டிராபிக்கல் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாக ரேணுகா குமார், சரத்குமார், பிரசன்னா நடராஜன் ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். சரத்குமார் வேறு யாருமில்லை... கலைஞர் டி.வி-யில் 20 சதவிகித பங்குகளை வைத்திருக்கும், அதன் நிர்வாக இயக்குநர். அதன் நிர்வாகப் பொறுப்புகளை முழுமையாக கவனித்து வருபவர். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பெருமளவு பணத்தை லஞ்சமாகக் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டிருக்கும் மும்பை ஷாகித் பால்வாவிடம் 200 கோடிக்கும் மேலாக 'கலைஞர் டி.வி.'-க்குப் பெற்ற சர்ச்சையில் சி.பி.ஐ-யின் கண்காணிப்பில் இருப்பவர் இந்த சரத்குமார்.

    நன்றி: ஜூ.வி 20-பிப்ரவரி -2011

    ReplyDelete
  6. என்ன சொல்ல வருகிறீர்கள் பத்ரி ?
    எந்த விசாரணையும் வேண்டாமா ? இந்த கேடு கெட்ட அனைவரும் நிர்வானமாக்கபடட்டும். அப்படியாவது மக்களுக்கு ஒரு விழிப்பு வரட்டும்.
    உங்களுக்கு தெரியுமா " படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஐயோன்னு போவான்" என்ற வரிகள். உங்கள் அறிவை இப்படி பயன் பட்டுத்த வேண்டாம்.

    தப்பு பத்ரி தவறான பதிவு

    ராமசந்திரன்

    ReplyDelete
  7. பதிவை படித்து முடித்தவுடன் உருவான கோபத்தை ராமச்சந்திரன் சற்று தனித்து உள்ளார்.

    உங்கள் எழுத்தில் ஆரம்பம் முதல் சில முக்கிய பிரச்சனைகள் உண்டு. சில சமயம் சொம்பை நன்றாக துலக்கி பளீரென்று காட்டுறீங்க. சில சமயம் தண்ணீரில் அலசி வைத்து மட்டும் நகர்ந்து போயிடுறீங்க. அதென்ன?

    பெரும்பாலும் அரசியல்பதிவுகள் எழுதும் போது உங்கள் தீர்க்கதரிசனம் எங்கோயோ போய் ஒளிந்து விடுகின்றது. சரத் வீட்டில் மாறன் சகோதரர்கள் சென்று அங்கு நடந்த விசயங்கள் எங்களைப் போன்றவர்களுக்கு கூட எட்டும் அளவிற்கு சிரிப்பாய் சிரித்தது. ஆனால் வஞ்சிக்கப்பட்டவர் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டு நகர்ந்து போய் விடுறீங்க.

    ஏன் இது போன்ற விசயங்களை இட்லி வடை தான் எழுத வேண்டுமா?

    அழகிரியின் அடியாட்கள் என்று தைரியமாக எழுதிய நீங்க எழுதும் ஒவ்வொரு விசயத்திலும் இது போன்று கடை பிடித்தால் தான் உங்களுக்குக்கென்று சில தார்மீக கடமைகள் இருக்கு என்று அர்த்தம்.

    ReplyDelete
  8. உண்மையோ பொய்யோ நல்ல விவாதம்.

    ReplyDelete
  9. supreme court-la irukaravan ellam muttaal. neenga mattum than budhisaali, illaiya badri. kapil sibal evvalavo mel-nu nenaika vaikareenga.

    ReplyDelete
  10. திருட்டு நகையை பெற்று கொண்டு பணம் கொடுத்தால் (ஊழல் பணத்தினை பெற்று கொண்டு அதற்கு பதிலாக பங்குகளை கொடுப்பது போன்று) தவறில்லையா பத்ரி..

    ReplyDelete
  11. வழக்கம் போல வழவழா கொழகொழா. என்னதான் சொல்ல வருகிறீர்கள்? எதிர்ப் பாட்டு படிப்பதே உங்கள் வேலையாகி விட்டது.

    ReplyDelete
  12. I really done understand your point here..

    Do you want to say that the money given by SWAN was not a kick back rather an initial capital?

    I believe this is to distract the fact. SWAN telecom did not gave money to start Kalingar TV (It was started in 2007 and money transaction happened in 2009). Rather the kick back was given in this way...

    Please clarify...

    ReplyDelete
  13. I see an undeserved sense of exasperation at Badri's writings on the spectrum scandal.

    In a comment in his October 2008 post (first on the topic), he said that there is no reason to accuse Raja of corruption (implying that there was no way that there could have been corruption in the process of spectrum allocation) - "ராஜாமீது குற்றம் சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை என்பதே என் கருத்து."

    I think he has come far from that view given the developments of the past several months. He has only questioned the amount touted in the media as the size of the scandal (based on business valuation and fund raising methods).

    In the DB realty/Kalignar TV issue, he has correctly pointed out that the transaction was prima facie done in a legal manner and it would be difficult for CBI to prove impropriety. It is a matter of speculation that the money might not have been given back to DB realty if the scandal did not raise, but apparently the papers are in order.

    I disagree with Badri that the CBI questioning has anything to do with the election negotiations, and I am more hopeful than him that some truth will come out of the investigation. However, to accuse him of carrying the water for corrupt politicians is ridiculous.

    Srikanth

    ReplyDelete
  14. I think we must consider issues at their merit and not be swayed by our emotions.

    CBI's conviction percentage is very poor. So it is important that CBI be not misused to follow on deals which cannot be tried properly in the court and a conviction obtained. To our knowledge, the DB realty investment is done through proper paperwork.

    Guilt by association and moral bankruptcy cannot be tried in a court of law.

    ReplyDelete
  15. I am also generally against holding people like Raja and Shahid Balwa in judicial remand. It gives a false impression that these people have been put in jail, when in reality, the case against them is not even complete.

    Unless one can prove that Raja or Balwa can tamper with the evidence (which I do not believe is possible easily) or that they will escape the country, there is no reason to put them in jail. CBI and other investigative agencies (including Enforcement Directorate) should aim to put together flawless cases and prosecute the culprits.

    It is shameful to see ED not even able to defend itself in the 'bail application' issue of Hasan Ali.

    ReplyDelete
  16. Badri is very right here.
    Unless there is an independent entity for investigating coruption and tax-evations(as pointed out by Mr.Arvind Kejriwaal),we the citizens will continue to be cheated.
    if there had been sincere efforts from ED,CBI,Income tax dept,etc,, kalaignanr tv,sun tv etc. would not have born and people like M.K, M.K.K,Mrs(s)M.K etc, would have behaved like servants of people.

    As Badri points out, the grey deals will be very difficult to be nailed given the poor conviction rate of CBI

    ReplyDelete
  17. Related to Badri's view :

    We still dont know, what evidence did CBI submit for arrest of Raja? and why Raja's bail application was rejected.I mean,what evidence was submitted by CBI to prove quid-pro-pro between Raja and telecom companies.were there any bank-money-trails? i am sure,these evidences were submitted in court. did the media black-out these evidences?

    ReplyDelete
  18. //இதையெல்லாம் தோண்டித் துருவ ஆரம்பித்தால் இந்தியாவில் எந்த அரசியல்வாதியுமே தப்பிக்க முடியாது.//
    என்னதான் செய்யலாம்? கொள்ளையடிப்பவன் அடிக்கட்டும். பொழைக்கத் தெரிஞ்சவன் பொழைக்கறான்னு விட்டுடலாமா? உங்க புதுத் தொடுவான ஊடகத்தில் (New Horizon Media) கம்பெனிக்கு வரவேண்டிய காசில் பெரும் பகுதியை பணியாளர் ஒருவர் (புத்திசாலித்தனமாக)சைடு வருமானமாக தள்ளிக் கொண்டு போனால் இதே மாதிரி வெறும் சர்ச்சை, தக்க ஆதாரமில்லை, ஆடிட்டருக்கு அக்கவுண்டன்சி தெரியவில்லை என்றெல்லாம் பேசுவீர்களா?

    ReplyDelete
  19. //I am also generally against holding people like Raja and Shahid Balwa in judicial remand. It gives a false impression that these people have been put in jail, when in reality, the case against them is not even complete.
    //
    I might be extrapolating, but if the above is the case, even Kasab can't be put in jail till his case is over and he's proved guilty by the court of law.

    ReplyDelete
  20. Arun Ambie ---
    என்னதான் செய்யலாம்? கொள்ளையடிப்பவன் அடிக்கட்டும். பொழைக்கத் தெரிஞ்சவன் பொழைக்கறான்னு விட்டுடலாமா?
    -------------------------------------
    அப்படி தான் மக்களாகிய நாம் விட்டுகிட்டிருக்கோம்.
    எங்கேயோ ஒரு கோபி கிருஷ்ணனும் , பிரஷாந்த் பூஷணும் தான் தங்கள் சொந்த வேலையை விட்டு நமக்காக பாடுபடுகிறார்கள். சிபிஐ வேலையில் பாதியை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். சுப்ரமணிய சுவாமியும் உழைக்கிறார்.

    ReplyDelete
  21. //அப்படி தான் மக்களாகிய நாம் விட்டுகிட்டிருக்கோம்.
    எங்கேயோ ஒரு கோபி கிருஷ்ணனும் , பிரஷாந்த் பூஷணும் தான் தங்கள் சொந்த வேலையை விட்டு நமக்காக பாடுபடுகிறார்கள்//

    ஆனாலும் தமது சொந்த வேலைகளுக்காக பத்ரி மாதிரி ஜால்ராக்களூம்,அல்லகைகளும் இருக்குறாங்களே பாஸ். அவங்க இதை நீர்ந்த்து போக முடிந்தவரைக்கும் எழுதி கிழிக்கறாங்களே? பிரச்னையின் தொடக்கமே அதுதானே.

    ReplyDelete
  22. I remember "Flat Earth Theorists" when I see your arguments regarding 2G Spectrum case. Even if they show video evidence of Raja taking bribe, you would start arguing whether video evidence is legally acceptable. Nobody (Even Jayalalitha)claims 176000 crore is a bribe amount. Every person with commonsense is able to see that there is a big corruption in this case. Many DMK Supporters are also not denying corruption in this case. But your arguments is strange....

    ReplyDelete
  23. பத்ரியின் இந்த பதிவு,அவரது முந்தைய பதிவுகளிலிருந்து சர்ரே மாறு பட்டதாக தொன்று கிறது. இப்பதிவில்,பத்ரி ஊழலை நியாயபடுதவில்லை.
    சிபிஐ முனைப்புடன் செயல் படவில்லை என்றால் , ஊழல் வாதிகளை , மக்களாகிய நாம் சட்டப்படி ஒன்றும் செய்ய இயலாது என்று மட்டும் கூறுகிறார்.நமக்கு ஊழல்வாதிகளை கண்டு உணர்ச்சி கொந்தளிப்பு இருந்தால் மட்டும் போதாது. சட்டப்படி தண்டனை அளிக்க என்ன முயற்சி எடுக்கிறோம் என்பதே முக்கியம்.

    ReplyDelete
  24. பத்ரியின் நோக்கமாக எனக்கு தெரிவது -
    நாமெல்லாம் பத்ரியை கேள்வி கேட்பதை விடுத்தது, சிபிஐ,விகிலன்ஸ் போன்றவற்றை கேள்வி கேக்க தொடங்க வேண்டும் என்பது தான்.
    பத்ரி யாருக்கும் சைடு எடுப்பதாக படவில்லை.
    பக்காவாக ஊழல் செயபோர், பல் பிடுங்கப்பட்ட சிபிஐ-க்கு பயப்பட மாட்டார்கள் என்றே கூறுகிறார்.

    ReplyDelete
  25. 2g விசாரனையிண் ஆரம்பகட்டத்தில் ஊழல் இல்லை என்று சொல்லி புலி வாலை பிடித்து விட்டார். தற்போது உண்மைகள் தெரிந்த பிறகும் விட முடியாமல் தவிக்கிறார். Now you can write article arguing "Earth is flat", "Hitler has not killed jews" "Jayalalitha is not arrogant", "Karunanidhi does not promote nepotism" etc.

    ReplyDelete
  26. i fully agree with abhi.badri should use his inteligence and suggest ways and means to expose
    the 2gscam.only the opposite is being done now.
    radhakrishnan,madurai.

    ReplyDelete
  27. இன்றைய தேதியில் சரத் அப்ரூவராக மாறி தெரிந்த விசயங்களை சி.பி.ஐக்கு கொடுத்தால் நிச்சயம் இரண்டு க.குடும்பங்களும் கம்பி எண்ண வாய்ப்பு உள்ளது. ஆனால் சரத்தின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

    ReplyDelete