Tuesday, April 16, 2013

மின்சாரம்: இனி சூரியனே கதி

தமிழகத்தில் மின் நிலைமை சீராவதற்கு அடுத்த சில வருடங்களிலும் வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இந்தச் சிக்கலுக்கு கருணாநிதியைக் குறை சொல்வதா, ஜெயலலிதாவைக் குறை சொல்வதா என்று யோசித்துக்கொண்டிருக்கும் கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம். சென்னையில் இருக்கும் நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம், மாதம் ஒன்றுக்கு ஒரு நாள் 8 மணி நேரம் கட். மாநிலத்தின் பிறர் எல்லோரும் பாவப்பட்டவர்கள்.

எப்படி தண்ணீருக்கு private solution ஒன்றைத் தேடிக்கொள்கிறோமோ, அதேபோல மின்சாரத்துக்கும் பிரைவேட் தீர்வு ஒன்றை நோக்கி நாம் செல்லவேண்டியிருக்கும். அது தொடர்பாகத் தகவல் அறிந்துகொள்ளப் பலவற்றையும் படித்து வருகிறேன். சிலருடன் பேசிவருகிறேன். இந்த வேலைகளைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்றிரண்டோடு பேச ஆரம்பித்துவிட்டேன். என்ன செய்வது, செலவு எஸ்டிமேட் என்ன என்பது தொடங்கி நிறையப் பேசியுள்ளோம். இதில் யாராவது ஒருவரை முடிவு செய்து, எப்படியும் மே மாதத்துக்குள்ளாக சூரிய ஒளி மின் அமைப்பை என் வீட்டில் பொருத்திவிடுவேன் என்று நினைக்கிறேன். இதில் மாநில அரசின் சப்சிடி பற்றியெல்லாம் நான் கவலைப்படப்போவதில்லை. வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை.

தமிழகத்தில் சுமார் 10 லட்சம் வீடுகள் ஆளுக்கு ஒரு கிலோவாட் சூரிய ஒளி மின் “ஆலைகளை” நிறுவ முடியும். சுமாராக ஒவ்வொரு வீடும் நாள் ஒன்றுக்கு சுமார் 6 யூனிட்டுகள்வரை தயாரிக்க முடியும் என்று நினைக்கிறேன். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 6 மில்லியன் யூனிட்டுகளை மக்களே உற்பத்தி செய்ய முடியும்.

தமிழக அரசின் சூரிய ஒளி மின்சாரத் திட்டங்கள் எதிர்பார்த்தபடிச் செல்லவில்லை என்கிறது இந்தக் கட்டுரை. நிறுவனங்களை ஈர்க்கும்விதமாக தமிழக அரசு சரியானமுறையில் நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. பேச்சு இருக்கும் அளவுக்குச் செயலில் நம் அரசியல்வாதிகள் ஈடுபடுவதில்லை.

கூடங்குளம் காலதாமதம் ஆகிக்கொண்டே செல்கிறது. புதிதாகப் பெரிய அளவுக்கு அனல் மின் நிலையங்கள் வரப்போவதாகத் தெரியவில்லை. ஜெயங்கொண்டத்தில் வருவதாக இருந்த அனல் மின் நிலையத் திட்டத்திலிருந்து என்.எல்.சி பின்வாங்கிவிட்டது. இப்போது யார் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்நிலையில் ஆண்டுக்கு ஆண்டு மின் தேவை அதிகமாகிவரும் நேரத்தில், ஏற்கெனவே கடுமையான பற்றாக்குறை நிலவும்போது, அவற்றையெல்லாம் தாண்டி உற்பத்தியைப் பெருமளவு அதிகரிக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை. எனவேதான் நாம் அனைவரும் அவரவர்களால் முடிந்த அளவு சொந்த உபயோகத்துக்கு மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்ளவேண்டியிருக்கும்.

நான் ஒரு கிலோவாட் இன்ஸ்டலேஷனைப் பொருத்தினாலும், அதில் ஏசி, மைக்ரோவேவ் ஆகியவற்றை இயக்க முடியாது. பொதுவாக அவை ஒவ்வொன்றும் 2300 வாட் அளவுக்கு மின்சாரத்தை உறிஞ்சக்கூடியவை. அதேபோல இண்டக்‌ஷன் ஸ்டவ் ஒன்று என் வீட்டில் உள்ளது. அது அதிகபட்சமாக 2000 வாட் அளவு மின்சாரம் எடுத்துக்கொள்ளக்கூடியது. தண்ணீரை ஒவெர்ஹெட் டேங்கில் சேர்ப்பதற்கும் அதிக அளவு மின்சாரத்தை இழுக்கும் பம்ப் பயன்படுகிறது. இதற்கெல்லாம் மெயின்ஸிலிருந்துதான் மின்சாரம் தேவைப்படும். குறைந்த வாட்டேஜ் மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய ஏசி, பம்ப், மின் அடுப்பு ஆகியவற்றைத் தயாரிப்பது குறித்து பொறியாளர்கள் யோசிக்கவேண்டும்.

ஒருவிதத்தில் வரும் காலங்களின் அறிவியல் முன்னேற்றத்தைக் கணக்கில் எடுத்தால், ஒரு வீடு முழுவதுமாக சூரிய ஒளி மின்சாரத்தின்கீழ் தன்னிறைவு பெற்றதாக ஆக முடியும் என்று தோன்றுகிறது.

42 comments:

  1. I red,it's not possible to apply subsidy in any-time.Subsidy application are accepted only once in a year for all..Is this true?

    ReplyDelete
    Replies
    1. I do not know much about the subsidy part yet. It may wary from state to state. I read somewhere and kind of surmised that TNEB will be asking every solar home producer to buy a special meter which will monitor the solar units produced and appropriately offer subsidy per unit produced on a monthly basis. This subsidy could be adjusted against the power that you draw from the mains. Alternately, if you have to be paid money by EB, they can do so once a year - or something like that. I am just guessing here. When I find out, I will inform you.

      Delete
    2. The govt. subsidy applications are received once a year.

      Pls contact here for more details.
      Corporate Office:

      TamilNadu Energy
      Development Agency

      E.V.K Sampath Maaligai, 5th
      Email: info@teda.in
      floor, No.68, College Road,
      Chennai-600 006

      Ph: 28222973
      -----------------------------------------------------
      TEDA Office:
      Chairman & Managing
      Director

      Thiru. Sudeep Jain IAS.,
      Ph:28224830, 28236592

      Fax: 28222971

      Email: cmdteda@gmail.com

      Delete
    3. Also this may help you guys..
      http://teda.in/site/index/id/6B2P6C3z6l

      Delete
  2. அரசு பரீட்சாத்த முயற்சியாக சில விஷயங்களை செய்து பார்க்கலாம். குறிப்பாக மின் சிக்கனத்தை வலியுறுத்தலாம். எதுவும் நடப்பது போல் தெரியவில்லை. ஒரே ஒரு நாள் தமிழக மக்கள் அனைவரும் தொலைக்காட்சி உபயோகிப்பதை நிறுத்தலாம். அதன் மூலம் எவ்வளவு மின்சாரம் சேமிக்க முடியும் என பார்க்கலாம். சென்னை தவிர்த்த மற்ற இடங்களில் 12 மணி நேரத்திற்கும் அதிகமான மின் வெட்டு உள்ள போது சென்னை மக்களே முன்வந்து இதைச் செய்யலாம். மின்சிக்கனத்ஹ்தைன் மூலம் உடனடி பயனை தமிழக மக்கள் அனைவரும் அடையலாம். சூரிய மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரியை 5 வருடங்கள் கழித்து தமிழகம் எப்படிக் கையாளப்போகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல வீடுகளில் உள்ள இன்வெர்ட்டர் பேட்டரிகள் அதன் ஆயுட்காலம் முடிந்ததும் வீதிக்கு வரப்போகிறது. தமிழகம் பேட்டரிக் காடாய் மாறும் தூரம் தொலைவில் இல்லை. சிக்கனம் ஒன்றே சிறந்த வழி. வருமானம் குரைவாய் இருக்கும் போது அனாவசியச் செலவுகளைக் குறைப்பதைப் போல் இதையும் செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. நாம் எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவுகள் மோசமானவையாகவே உள்ளன. எண்ட்ரோபி. எனவே மிகக் குறைந்த பக்க விளைவுகள் உள்ள ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அதே சமயம் உயிர் வாழவும்வேண்டும். காடு, மலைகளில் போய் உட்கார்ந்துகொண்டு தவம் செய்து, கனியைப் புசித்து, சந்ததியைப் பெருக்காமல் வாழ்ந்தால் உலகம் மேலும் அதிக சமநிலையில் இருக்கும். ஆனால் என்ன செய்வது? மின்சார வண்டிகளைப் பயன்படுத்தினால் பேட்டரி தொல்லை. பெட்ரோல் வண்டிகளைப் பயன்படுத்தினால் கரியமில வாயு தொல்லை. பெட்ரோலும் விரைவில் தீரப்போகிறது. இரண்டையும் இப்பிடும்போது பேட்டரி தேவலாம் - என்று இப்போதைக்குத் தோன்றுகிறது.

      Delete
    2. எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பேட்டரியைக் கையாளுவதற்கான வழிமுறைகளை இப்போதே தமிழக அரசு வகுக்க வேண்டும். மேலும் சிக்கனத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உடனடி பலனைப் பெறமுடியும்.

      Delete
  3. Sir,
    I had read in a news that in Europe every home is given free installation and maintenance of solar panels. They can use the power from them,and the excess can be sold to a commercial grid.

    Irrespective of giving people free panels and maintenance, the private company running the grid is earning good money. Why cant someone in our country start a business like that?
    -S.Uma, Assistant Professor,DEEE, Anna University,Chennai

    ReplyDelete
    Replies
    1. I do not know if this will be commercially viable - that is give free panels and controller, allow people to use up the power and then buy excess power from them and resell them for commercial use. Then, effectively, what the house owner gives is raw space (and the sun light falling there). When in future, space becomes a premium, this may happen. Until then, the users will have to somehow spend some money per unit of electricity they want.

      Delete
  4. அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்ல முடிவு.ஐம்பது லட்சத்திற்கு மேல் செலவு செய்து வீடு வாங்குபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கும் தமிழகத்தில் ஓரிரு லட்சம் செலவு செய்து சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் பேனல்கள் அமைக்க பலரும் தயங்குவது விந்தை தான்
    இதில் பாட்டரிகள் தான் இரண்டு,மூன்று வருடத்திற்கு ஒருமுறை செலவு வைக்க கூடும்.
    தினமும் மின்சாரம் இல்லாமல் சில மணி நேரம் வாழ பழகி கொள்வது நாட்டிற்கும்,உடல்நலத்திற்கும் நல்லது
    மது,சிகரெட்டிற்கு அடிமையாக இருப்பவர்களை விட பல மடங்கு அதிக அடிமைகள் ஏ சி/குளிர்சாதன பெட்டிக்கு க்கு உண்டு. ஏ சி இல்லாமல் சில மணி துளிகள் கூட அவர்களால் இருக்க முடியாது.வாரிசுகளையும் ஏ சி வகுப்பறைகள் உள்ள பள்ளிகளில் சேர்த்து ஏ சி க்கு அடிமையான அடுத்த தலைமுறையையும் உருவாக்குவதில் பெருமிதமும் அடைகிறார்கள்.
    காற்றில் ஒசான் படலத்தில் ஓட்டை என்றாலும் அதை பற்றி கவலைபடாமல் 24 மணி நேரம் ஏ சி போட்டு கொண்டிருந்த நிலையை மாற்றிய புண்ணியம் மின்வெட்டிற்கு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. பயன்பாட்டைக் குறைக்கச் சொல்வது நல்லதுதான். ஆனால் உண்மையில் சொகுசு வாழ்க்கையை விடுங்கள், நல்ல வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டால் அதற்கு எவ்வளவு மின்சாரம் வேண்டுமோ அதைவிடக் குறைந்த மின்சாரமே இப்போது கிடைப்பதாக உள்ளது. அதிலும் ஏழைகளுக்கு மிக மிகக் குறைவாகவும் பணம் படைத்தோருக்கு மிக மிக அதிகமாகவும் மின்சாரம் கிடைக்கிறது. யாரும் தம் வசதிகளைக் குறைத்துக்கொண்டு மின் பயன்பாட்டைக் குறைக்கப்போவதில்லை.

      ஏசி என்பதையே எடுத்துக்கொள்வோம். தமிழகத்தில் பல நகரங்களில் மிகக் கடுமையான வெப்பம் உள்ளது. சுற்றிலும் மரங்கள் கிடையாது. காற்று மருந்துக்குக்கூட வீசுவதில்லை. எனவே காரிலும் வீட்டிலும் ஒரு சில மணி நேரங்களுக்காவது ஏசி தேவைப்படுகிறது (எனக்கு). என்னைவிட அதிகமாக ஏசி பயன்படுத்துபவர்களைக் குறை சொல்ல எனக்கு உரிமை இருப்பதாகத் தெரியவில்லை.

      பொதுவாகவே அனைத்துவிதப் பயன்பாடுகளும் குறைக்கப்படுதலே நலம் என்பதை உணர்கிறேன் நான். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமே இல்லை என்பதையும் உணர்கிறேன்.

      Delete
    2. மூணு வேலையும் சாங்கிரி,மைசூர்பா என்று கட்டி கொண்டிருந்தவர் ,சக்கரை வியாதி என்றவுடன் அவற்றை கண்டால் காததூரம் ஓடவில்லையா (நூத்துக்கு தொண்ணூறு பேர்)
      ஏ சி விலையை மிகவும் அதிகபடுத்தினால் தன்னால் பயன்பாடு குறைந்து விடும்
      குறிப்பிட்ட உநிட் மேல் பயன்பாடு என்றால் மூன்று மடங்கு கட்டணம் கட்ட வேண்டும் என்றாலும் பயன்பாடு தன்னால் குறைந்து விடும்
      பல கிராமங்களின் மொத்த மின்சார பயன்பாட்டை விட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பயன்பாடு அதிகம்
      அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டாயம் சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும்/பயன்படுத்த வேண்டும் என்று அரசு செய்யலாம்.பெங்களுருவில் சூரிய சக்தி கேயசர் புது வீடுகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

      Delete
  5. சூரியசக்தி + காற்றாலை + பயோ கேஸ்! முதலீடு ஒரே தடவை... லாபமோ, ஆண்டுக் கணக்கில்
    http://thangamtrust.blogspot.in/2012/11/blog-post.html - பசுமை விகடன்

    http://www.poovulagu.net/2012/11/blog-post_25.html
    சூரிய சக்தியில் இயங்கும் பள்ளி!
    28 Solar Panels, 2.5KiloWatts per hour, Total cost 6 lakhs
    " 23 வாட்ஸ் டியூப் லைட், 49 வாட்ஸ் ஃபேன்னு குறைஞ்ச அழுத்தத்துல இயங்குற சாதனங்களைத்தான் பயன்படுத்துறோம். மொத்தம் 24 டியூப் லைட், 24 ஃபேன், 6 சி.எப்.எல்.பல்பு, ஒரு ஆர்.ஓ சிஸ்டம், ஒரு மோட்டார் (ஒன்றரை ஹெச்.பி), 3 கம்ப்யூட்டர், 2 பிரிண்டர், ஒரு எலக்டிரிக் பெல்னு மொத்தப் பள்ளிக்கூடமுமே சோலார் கரன்ட்லதான் இயங்குது"


    குண்டு விளக்குகளை தடை செய்து, CFL விளக்குகளை மானியத்தில் விற்கும் முயற்சியை அரசு எடுக்க, அரசின் மீது பொது நல வழக்கு போட முடியுமா? Heard in Some US states, Govt sells 3 CFL Lamps per Dollar, which is subsidised rate

    ReplyDelete
  6. Hi,
    I was part of a small team from CCCL Infrastructure, till last December, that worked on and developed the 5MW solar PV power plant in Tuticorin Dist (the first under JNNSM Phase I Batch I). Hailing from Bangalore, having lived (studied at IITM and worked thereafter in Core Infra/PPP projects/Solar/Roads etc) in Chennai for nearly a decade has moved me to be part of the solution.
    What I see here is though adoption of it is going to increase everywhere, well marketed companies are bringing in low quality products just to fill the energy gap in Tamil Nadu.

    This is going to affect the market for alternative solutions for low scale residential/commercial users in a bad way. I hope people don't fall in this trap and do their due diligence while adopting such systems available in the market. There are also good products in the market. Net metering is not smart metering though it is useful for a span of 1 political term or maybe 2.

    Hopefully, with some good work we will be able to address some key systemic issues prevailing in our market, including lack of demand measurement, monitoring, management, power management with alternative sources, low power devices and control mechanisms.
    I have quit my job (company not convinced in doing small projects) and now am trying to start-up in the to solve some of these key issues in energy space with initial offering of solutions with solar as source for power.

    ReplyDelete
  7. ஒவ்வொரு ஏ.சி. க்கும் ஆண்டுக்கு ரூ. 10,000 வரி விதிக்கலாம்! (ஆயுள் வரியாக ரூ. 1 இலட்சம்) இதன் மூலம் ஒன்று ஏ.சி. உபயோகம் குறையும் அல்லது அரசுக்கு மின் திட்டங்களைச் செயல்படுத்த வருமானம் வரும்.

    சோலாரைப் பொருத்தவரை, நகரங்களில் பெரும்பான்மையாக இருக்கும் அடுக்ககங்களில் வசிப்பவர்களுக்குச் சொந்தமாக மொட்டை மாடி இருக்காது. அவர்கள் இவற்றை நிறுவ வேண்டும் என்றால் உரிமையாளர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு முயற்சி எடுத்தால்தான். அப்போது கூட அத்தனை வீடுகளுக்கும் சேர்ந்து ஒரே மாடி என்பதால் இடப்பரப்பு போதாது-- பொதுவான காரிடார் விளக்கு போன்ற சில உபயோகங்களுக்கே பயனளிக்கக் கூடும். தனி வீடாக இருந்தாலுமே வாடகை வீடு என்றால் அடுத்த சில ஆண்டுகளில் காலி செய்ய நேரிட்டால், புதிதாகச் செல்லும் இடத்தில் இந்தப் பேனல்களை நிறுவ இடம் இருக்குமா என்பதெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
    அரசு சில விஷயங்களைத் தடை செய்ய வேண்டும்- 1) குண்டு பல்புகள் 2) டியூப் லைட்டுக்கான பழைய பாணி காயில் சோக்குகள் (எலக்ட்ரானிக் சோக் ரூ 120 க்குக் கிடைக்கிறது) 3) பழைய பாணி மின்தடையால் ஆன ஃபேன் ரெகுலேட்டர்கள் 4) 5-நட்சத்திரம் பெறாத சீலிங் ஃபேன்கள் ( 5-நட்சத்திர ஃபேன் 40 வாட்ஸ் மட்டுமே; மற்றவை 80- 100 வாட்ஸ் வரை இருக்கக்கூடும்.)

    நீங்கள் சோலார் அமைத்த பிறகு அதைப்பற்றி விரிவாக புகைப்படங்களுடன் எழுதுங்கள். ஏன், சிறிய கையேடாக புத்தக வடிவிலேயே வெளியிடலாம்!

    சில ஆண்டுகள் முன்பு முதன் முறையாக ஒரு சைனீஸ் டேப்ளட் வாங்கிவிட்டு அதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். இப்போது அதை விடக் குறைந்த விலைக்கே (உதாரணம் பி.எஸ்.என். எல் பென்டா) இந்தியத் தயாரிப்புகளே சந்தையில் மலிந்து விட்டன. இன்று டேப்ளட் குழந்தைகளின் விளையாட்டு சாதனங்களில் ஒன்றாகிவிட்டது! அதுபோல, இன்னும் ஒரு நான்கு வருடங்களில் சோலார் பேனல்கள் என்பவை எல்லா விடுகளிலும் சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிடக் கூடும். (குறிப்பாக மாவட்டங்களில்- மதுரையில் சில நாட்கள் முன்பு வரை 8 - 10 மணி நேர மின் தடை இருந்தது. இப்போது சுமார் 4 மணி நேரமாக இருக்கிறது. எங்களுக்கெல்லாம் 7 - 8 மணி நேர மின்வெட்டு ஒரு பொருட்டே இல்லாத அளவுக்குப் பழகிவிட்டது. 10 - 12 மணி நேரம் என்றால்தான் புலம்பவே செய்கிறோம்!)

    சரவணன்

    ReplyDelete
  8. தமிழ் நாட்டின் இப்போதைய நிலையில் இரண்டு நன்மைகள் :
    அ) மின்சார வாரியம் மீட்டர் ரிப்பேர் செய்யத் தேவை இல்லை. அது வேலை செய்தாலும் ஒன்று தான் இல்லாவிட்டாலும் ஒன்று தான்.
    ஆ) தமிழ் நாடு EARTH HOUR கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆண்டு முழுவதுமே பூமி நேரம் தான்.

    ReplyDelete
  9. சூரிய ஒளி மின்சாம் பற்றி தெளிவாக புரியும் வகையில் பல பதிவுகளை எனது " lawforus.blogspot.com" என்ற பிளாக்கில் தொடர் பதிவாக எழுதியுள்ளேன். Do it yourself என்ற வகையில் தாமாகவே அமைத்துக்கொள்ளும் வகையில் தெளிவாக பதிவிட்டதால் பலர் தாமாகவே தங்கள் வீடுகளில் சிறிய அளவு சிஸ்டத்தை அமைத்துள்ளனர். எனது இ- மெயில் முகவரியில் தொடர்பு கொண்டு ஆலோசனையும் கேட்கிறார்கள். எனது மேற்படி பதிவுகளை இன்னும் விபரமாக ஒரு புத்தக வடிவில் கொண்டு வர டிராப்ட் தயார் செய்து வருகிறேன்.

    திரவிய நடராஜன்

    thiravianatarajan@gmail.com

    ReplyDelete
  10. முடிவு செய்த பிறகு உத்தேச செலவு, சப்சிடி விண்ணப்ப முறைகள் பற்றிய பிராக்டிகல் தகவல்களை அறியத் தாருங்கள்..

    நன்றி.


    ReplyDelete
  11. What is the feasibility of using gobar gas based power generation?

    ReplyDelete
  12. சூரிய மின்சாரம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே கட்டுபடியாகக்கூடியது.தவிர,சூரிய ஒளி சாயவாக விழும் போது அதாவது காலை மாலை வேளைகளில் அதிக அளவில் மின்சாரம் கிடைக்காது. சூரிய ஒளி பேனல்கள் மீது நிழல் விழக்கூடாது.பொதுவில் யூனிட் காஸ்ட் அதிகமாகவே இருக்கும்.மேலை நாடுகளில் தனியார் கம்பெனிகளே மின்சாரம் உற்பத்தி செய்து வினியோகிக்கின்றன. அமெரிக்கா போன்ற அப்படிப்பட்ட நாடுகளிலேயே கிரிட் மின்சாரத்துக்கும் சூரிய மின்சாரத்துக்குமான இடைவெளி அதிகமாக் உள்ளது. அதாவது கிரிட் பேரிடி சாத்தியப்படவில்லை. நம் நாட்டில் மின் வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலை மிகவும் குறைவு. நிறைய மின்சாரம் உபயோகிப்பவர்கள் கட்டும் மின்சாரக் கட்டணமும் மிஞ்சி போனால் யூனிட்டுக்கு ரூ 6 அல்லது 7 என்ற அளவில் தான் உள்ளது.
    சூரிய மின்சாரம் என்பது மின்சார வாரியம் கையைக் கழுவி விட்டு நீயே மின்சாரத்தை தயாரித்துக் கொள் என்று சொல்வதற்கு ஒப்பானதே. நம் நாட்டில் ஏழை மக்கள் கீழ் நடு நடுத்த மக்கள் ஆகியோருக்கு சூரிய மின்சாரம் கட்டுபடியாகாத ஒன்றேயாகும்.
    இலவச கிரைண்டர், இலவச மிக்சி முதலியவை ஒரு புறம் இருக்க வசதியற்ற மக்கள் தவணை முறையில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி டிவி, அயர்ன் முதலியவற்றை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது.இது வரவேற்கத் தக்க விஷயம். இந்த நிலையில் ஒரு மின் விசிறி இரண்டு ட்யூப் லைட் என சிலவற்றுக்கு மட்டுமே மின்சாரத்தை அளிக்கக்கூடிய சூரிய மின்சாரத்தால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.
    பெரிய கம்பெனிகள், பெரிய நிறுவனங்கள் தங்களது மின்சாரத்தில் ஒரு ப்குதியை சூரிய மின்சாரம் மூலம் பெறுகின்ற நிலை வருமானால் அது ஓரளவுக்குப் பயன் த்ரும்.அவ்வளவு தான்.
    மானில மின்சார வாரியங்கள் சூரிய மின்சார நிலையங்களை அமைத்து மின்சாரம் வழங்கும் என்று யாரும் கனவு காண வேண்டாம். ஒரு மதிப்பீட்டின் படி சூரிய மின்சாரத்துக்கான உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு குறைந்தது ரூ15 ஆகும். ஆகவே அவர்கள் யூனிட்க்கு ரூ 15 என்று செலவிட்டு ரூ 7 என்ற விலையில் விற்க இயலாது. இந்தியாவில் அனேகமாக எல்லா மின்சார வாரியங்களும் கடனில் அழுந்திக் கிடக்கின்றன.
    ஒரு மாற்று வழி பெரிய அளவில் எரி வாயுவை இறக்குமதி செய்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதாகும்.
    கூட்டிக் கழித்துப் பார்த்தால் -- பிடிக்கிறதோ இல்லையோ அணுமின்சாரம் தான் ஒரே கதி

    ReplyDelete
  13. Being one of the most insufficient state in Electricity, we failed to plan for suitable energy sources. The worst part of it, our solar implementation policy. It resembles that the Govt want to make a show, but not doing anything productive.

    The initial investment is high and the battery maintenance is a recurring one, which makes it not easily affordable. When we saw the total amount and recurring amout, my father said , better i'll overcome the power problem with inverters. My plan is still on hold. Pls write a post after you deploy the solar system in your house.

    Tnx

    ReplyDelete
  14. The issue is that designing a system that will suit your needs and the cost for that.If there is a consultancy that can do it professionally and give you an estimate about the options and the respective costs then go for it taking into account various factors including maintenance and subsidy available. Dont by what appears in magazines or in media. The performance is likely to be affected by various factors. So what worked for someone may not be the right one for you.

    ReplyDelete
  15. Someone teaching in Anna University can do that research than asking the question. Germany is investing heavily in solar and cost of solar panels has come down over the years. China is producing them so cheap that there are complaints about they dumping it in global market. What works in Germany may not work for India unless there is a massive subsidy for solar power.

    ReplyDelete
  16. திரு. என்.இராமதுரை, அணுமின்சாரத்தை ஆதரிப்பவர்கள் சொல்லும் சூரிய மின்சக்திக்கு எதிராக காலாவதியான காரணங்களையே அப்படியே ஒப்பிக்கிறார். நம்மைவிட குறைந்த சூரிய ஒளியைப்பெறும் நாடுகள் கூட இப்போது இதில் ஆர்வம் கொண்டு நடைமுறைக்குக்கு கொண்டுவர முயல்கிறார்கள்.

    நமக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பதல்ல விசயம். அணுசக்தி நீண்ட நாள் நோக்கில் பாதுகாப்பானதா? செலவு அதிகம் பிடிக்கக்கூடியதா? என்பதுதான் கேள்வி. உதாரணத்துக்கு கல்பாக்கத்துக்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது, எவ்வளவு மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல்களைக் கூட வெளியிட முடியாத அளவுக்கு இருக்கிறது சூழல். ஜனநாயக சூழலில் இதுவே அணுசக்தியின் ஆகப்பெரிய ஆபத்து. செலவு, சுற்றூச்சூழல் இதெல்லாம் விட ‘கேள்விகளுக்கு அப்பாற்பட்டது’ என்ற இடத்தைக் கோருவதே மிகப்பெரிய அபாயம்.

    இந்த இணைப்பில் http://lawforus.blogspot.com/2012/07/blog-post_09.html
    ஒரு சூரிய மின் சக்தி யூனிட்டிற்கு ஆகும் செலவாக ரூபாய் 6.38 குறிப்பிடப்படுகிறது. இதைக் கருத்தில் கொள்ளலாம். மேலும் சாதாரணர்கள் தாங்களே ஒன்றை ஒருவாக்கி அதை நம்பகமாகவும் பயன்படுத்திக்கொள்ள இத்தொழில் நுட்பம் வகையளிக்கிறது (சுட்டி:http://thangamtrust.blogspot.in/2012/11/blog-post.html) . இது மிகுந்த ஜனநாயகத்தனமை கொண்டது. இனி நாம் கையாளப்போகும் ஒவ்வொரு தொழில்நுட்பமும், மருந்தும், நமது மக்களுக்கு, மாநிலத்துக்கு பிறகு நாட்டுக்கு சுயசார்பையும், அதிகார மையத்தை சாராமல் இருப்பதற்கான வகைமையும் பெற்றிருக்கிறதா என்று பார்த்து தேர்வதே (ஜனநாயக)சுதந்திரத்துக்குக்கான அடிப்படை வழி.

    அப்போது அணுமின் கடவுள்கள் இடத்தைக் காலிசெய்ய வேண்டிவரலாம்.

    ReplyDelete
  17. Generation of solar power at home is not a viable project in terms of investment. If you consider the initial investment for 1 KW (around Rs.1,30,000), Interest on such investment, Replacement of Battery once in three years (Rs.30,000 initially, battery cost will increase by 50% once in three years), Maintenance cost of Inverter, the cost per unit works out more than Rs.12/-. The Solar Panels can easily be unscrewed and removed from terrace. Presently, there is no much market for the Solar Panel. Once, everyone started to fix Solar Panel without knowing the cost per unit, the Solar Panel may be stolen easily and sold for few hundreds rupees. Solar Panels cannot be protected by any means. Govt. or Private Sectors should come forward and arrange for Solar Parks at each city in large level and distribute the power with higher cost through the existing EB Poles with separate Kilo Watt Meter. In the absence of EB power, one could avail the Solar power at higher cost (This will be cheaper than Mini Geneset power generation, where the cost per hour is around Rs.30). Alternatively, I suggest to have two Set of inverters (one will be left for charging for couple of days and another one is used in Inverter Mode), which will be cheaper than Solar Power Installations.

    ReplyDelete
    Replies
    1. Dear Leenus: I am aware that cost of solar power is higher and the investment never makes monetary sense. However, it is the civic sense that is making me do this. I feel that I must reduce my reliance on the broken TANGEDCO of my state. Even if my production is around 6 units per day (which is the installation I am going for), my puny 180 Units of power produced and consumed puts that less stress on the hopeless infrastructure of my state.

      I agree with you on all other counts. Solar parks and making higher cost solar power in case of desperation is a good idea. However, such ideas call for infrastructure investment and better panning. However, with better planning, one can anyway provide better quality of power, as in Gujarat.

      I do however think there is a business possibility of private players in villages, producing solar power (partly subsidised by charities and rest paid for by the villagers) and distributing the same to the village houses.

      By the way, I am told Exide offers 5 year warranty on solar batteries. Whether those batteries will last for 5 years with acceptable quality, I need to check myself.

      Delete
    2. Dear Sir,
      I agree with your views of ‘civil sense’. Have you thought of Solar Panel’s safety? I am much hesitant to install Solar Power because the Solar pannels are easily being stolen. Regarding Exide battery with 5 years warranty. I feel it is pointless to discuss about the warranty of the battery because most of the branded battery is not capable of being charged to its full capacity (it charges maximum of 60% of its capacity) by an inverter. We pay Rs.15000/- for battery but we get only Rs.9000 out of it. In this regard, I have already mailed you an article based on my personal experience to your gmail account . However, I am posting that article here so that atleast people get some awareness on the capacity of Branded Batteries available in the market.

      Delete
  18. மிதக்கும் அணுமின் நிலையங்கள் என்ற புதிய ஏற்பாட்டை ரஷியா மேற்கொண்டுள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளில் ரஷியா மிதக்கும் அணுமின் நிலையங்களப் பயன்படுத்த ஆரம்பித்து விடும்.
    பொதுவில்வழக்கமான முறையில் ஓரிடத்தில் அணுமின் நிலையத்தை அமைப்பதானால நிலத்தைத் தேடி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையத்துக்கு விண்ணப்பித்து இன்னும் பல நடைமுறைகளைப் பின்பற்றி முடிப்பதற்குள் பல ஆண்டுகள் ஆகிவிடும். மிதக்கும் அணுமின் நிலையங்கள்இப்படியான பல பிரச்சினைகளைத் தீர்த்து விடும். எங்கு வேண்டுமானாலும் அதை ந்கர்த்திச் சென்று தேவையான பகுதிகளுக்கு மின்சாரத்தை அளித்து விடலாம்.
    இந்தியாவும் இது பற்றிச் சிந்திக்கலாம்.இந்தியாவிடம் இதற்கான தொழில் நுட்பத் திறன் உள்ளது. தேவையானால் ரஷிய தொழில் நுட்ப உதவியைப் பெறலாம்.மிதக்கும் அணுமின் நிலையங்கள் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து தள்ளியே இருக்கும் என்பதால் எதிர்ப்பு இயக்கங்களைத் தவிர்க்கமுடியும்.
    மிதக்கும் அணுமின் நிலையங்களப் பின்னர் கழித்துக் கட்டுவதும் எளிது.
    ரஷியா தவிர, வேறு நாடுகள் மிதக்கும் மின்சார நிலையக் கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்குமானால் அவற்றிடம் ஆர்டர் கொடுத்து விரைவில் மிதக்கும் அணுமின்சார நிலையங்களைப் பெற முடியும். மொத்த மின் உற்பத்தியை விரையில் அதிகரிக்க இது தகுந்த முறையாக விளங்கும்.
    அணுசக்தியால் இயங்கும் சப்மரீன்கள் ஒரு வகையில் மிதக்கும் அணுமின் நிலையங்களே. பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் ஒரு நகரில் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் ( பெயர் நினைவில் இல்லை(அணுசக்தி சப்மரீன் ஒன்றை அந்த நகரின் க்ரையோரமாக நிறுத்தி அந்த சப்மரீனிலிருந்து நகருக்கு மின்சப்ளை செய்யப் போவதாக அறிவித்தார். வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்த மின் ஊழியர்கள் உடனே தங்கள்து வேலை நிறுத்தத் திட்டத்தை வாபஸ் பெற்றனர்

    ReplyDelete
  19. Dear Badri:I am Mathan babu and i invented a couple of technologies which could solve our power shortage.you can find more details from the following web pages

    http://steinbeisindia.com/yahoo_site_admin/assets/docs/Pie_Generator_-_GENIN_-_Technology_Offer.63221555.pdf

    http://steinbeisindia.com/yahoo_site_admin/assets/docs/Green_House_Pump_Tehnology_Offer.63221644.pdf


    ReplyDelete
  20. TUBULAR BATTERY IS NOT CAPABLE BEING CHARGED BY AN INVERTER
    An inverter does two main functions.
    (i)It Converts 220V AC to 12V DC and stores the charge into battery.
    (ii)When there is no power, it converts 12V DC to 220V AC.
    Batteries are available in different capacity such as 100AH, 120 AH, 150 AH / 12V DC etc. Having 80% efficiency, a battery of 150AH should able to deliver 40A discharging current for 3 Hours.(i.e. 120/40).
    When following load is connected:
    3 Ceiling Fans
    4 Tube lights
    then it amounts to (3 x80 VA + 4x60 VA) = 480VA. (to convert Watts into VA, apply additional 20% on watts. eg. Fan 60-70W = 72-84VA ) . So, the above load takes as near to 40A (480VA/12V) discharging current from battery. (It can be confirmed by connecting DC ammeter). If 150 AH battery is fully charged, then for the above load, it should support minimum of 3Hours and maximum of 3Hours 30Mins

    Another Eg: If you connect 2 Fan 2 Tube, ( 2 x 80 + 2 x 60) = 280VA = discharging current of 24Amps. On this load, 150AH battery should support a back up of minimum 5 Hrs and maximum of 6Hrs 30 Mins.)

    The branded batteries are being sold specially for inverters. So, the battery must be capable of being fully charged by inverters. If 150AH battery is charged for 24 hours (excluding power cut time and without used in Inverter Mode) by a charging voltage of 14.4V and initial charging current of 10-12Amps (most of the inverters available in the market come with above specifications) , then theoretically the battery should be charged to its full capacity of 150AH.

    But, practically when 150AH battery is charged by an inverter, it charges to maximum of 80-90AH only. Applying above load, 80AH charged battery gives only 2 hours backup. When above test is carried out ONLOAD (i.e. 3 Fans and 4 Tubes), the battery terminal voltage initially, is somewhere around 12.30V, after 1 hour around 11.90V and after exactly two hours, it gets cut off at 10.50V (most of the inverters are designed for cutoff at 10.50V).

    So, we pay money for 150AH battery but actually we get only 80-90AH capacity out of 150AH. Even, we charge the battery for 5 days, the above condition still prevails. I have tried with many batteries and different inverters, but the fact is that so far, no inverter could able to charge the battery to its full capacity.

    When I take this issue to my battery supplier, they simply escape by saying that due to power cut, battery is not able to chargez to its full capacity. That is not a real fact. Today, not a single branded battery (Semi Tubular or tubular) is designed to charge to full capacity BY AN INVERTER (14.4V Charging Voltage and initial charging current of 10-12A). But, when I made this as a serious complainant with battery supplier, in order to convince me, they put the battery on ’Bench Charge*’ i.e. constant current charge with ultimate peak charging voltage of 16.5V at their shop (which is not possible on inverters) and brought the battery to its full capacity of 150AH. Now, when I tested with the above load, it gave 3H 30Min backup. No doubt, battery is actually manufactured for 150AH capacity BUT NOT DESIGNED TO CHARGE TO ITS FULL CAPACITY BY AN INVERTER.

    Continued....in next page

    ReplyDelete
  21. When the manufacturer specifically state in their broucher that battery should be re-charged through an Inverter at constant potential mode of 14.4V till it reaches to its full charge and thereafter battery should be continued in float charge mode at constant potential of 13.8V, why the branded battery not being charged to its full capacity even if it is left for 5 days of continuous charge?

    A consumer cannot take the battery every time to the dealer for Bench charge to bring it to its full capacity? Due to non charging of battery to its full capacity by an inverter, a consumer is at loss, for his 35-40% of money. When Battery manufacturer gives three years warranty, people are fascinated with warranty without knowing the charging ability of the battery. Technically, if a new battery is being charged only to the maximum of 80-90 AH i.e. around 55-60% of capacity, after one year, the unused portion i.e. remaining 45-40% capacity would be lost its chemical action, called sulphation, which cannot be get back in future.

    I have been discussing here, the charging of a new battery to the level of 80-90AH out of 150AH. Now, just imagine what would be the charging capacity of the same battery after two years?

    When I argued this concept of low capacity battery charging, my battery supplier initially complained about the inverter. So, asked them to connect whichever Brand inverter, he wishes to charge the battery to its full capacity. As the battery supplier couldn’t succeed to my challenge, he simply took his battery and paid me the cost.

    The battery manufactures take advantage of the present power cut and sells the battery, which is not capable of being charged to its full capacity by an inverter. Sometime, battery supplier blame power cut and sometime they blame the inverter manufacturers.

    MY CONTENTION IS THAT WHEN A BATTERY IS NOT CAPABLE OF BEING CHARGED TO MAXIMUM OF ITS CAPACITY BY AN INVERTER, WHICH IS DESIGNED AS PER SPECIFICATIONS GIVEN IN THE BATTERY BROUCHER, WHY IT IS MARKETED BY SAYING THAT IT IS SPECIALLY MADE FOR INVERTER? AS PER CONSUMER PROTECTION ACT, THE WRONG PROPAGANDA TO A CUSTOMER ABOUT THE PRODUCT ITSELF AMOUNTS TO DEFICIENCY OF SERVICE. WHEN THEY SELL BATTERY FOR INVERTERS, IT MUST BE CAPABLE OF BEING CHARGED BY AN INVERTER NOT BY BENCH CHARGE AT BATTERY SUPPLIER’S SHOP.

    It is the duty of Battery manufacturer who make the battery for inverters, to prove their batteries are capable of being charged to its full capacity by an inverter available on the market or at least they should recommend the particular brand of an inverter which achieves the same effect.

    If anyone buy a brand new battery, please carry out above test (keep the inverter switch off) and confirm yourself to know the real capacity of your battery. (If you have frequent power cut and the battery is being utilized intermittently, try the above test when you leave for 2/3 holidays).

    Many inverter user say, their battery really support them in power cut. Charging of battery to its full capacity, can only be ascertained giving above load and note down the back up hours.

    I have even tried with the inverters of battery manufacturer. But, no improvement in the charging capacity.

    To conclude, I wish to state that olden days Automobile Batteries (thin plates) are used for inverters, which is capable of being charged by Inverters to its full capacity. But, presently, the batteries are made with thick plates /tubular plates especially for inverters which are not at all capable of being charged by Inverters available in the market for its full capacity.

    Actually, I am looking forward a Battery capable of being charged by an Inverter to its full capacity. Alternatively, I intend to design a Battery charger to charge the battery with varying voltage of 13 V to 16.5V.

    continued ....next page

    ReplyDelete
  22. Battery Charging Methods
    There are two types of charging:
    (1) Constant voltage charging - available with all inverters, in which the charging voltage for battery is preset to 14.4 V. So, when the drained battery is connected to an inverter, due to potential difference between inverter charging voltage and battery voltage, the charging current is around 10-12A and terminal voltage of battery would be around 12V. After the period of 6-7 Hours of charging, the terminal voltage starts picking up to above 13V, and that instant, due decrease of potential difference, the charging current decreases. Once the battery terminal voltage reaches 14.4V, the current will be somewhat around 1-2 Amp, called floating charge or trickle charge. On that time the inverter automatically decrease its charging voltage to 13.8V and maintain the charging current of 1-2Amps. Since the current is not constant over the period, the charging under this system for 150AH battery would take around 24 hours. (if charged continuously)

    (2) Constant current Charging (Bench Charge): Available only with Battery vendors – This method of charging is used for initial charge of battery by manufacturer and supplier - Initially Current is kept as constant at 12Amp. After few hours, when current decreases to 2-4A due to increase of terminal voltage of battery to 13V, the charger voltage is manually increased to 14V. Now again the current increases to 12Amp and the battery voltage slowly picks up to 14V, again current decreases to somewhat around 2-4A. Then, again charger voltage is increased 16.5V. Again the current increase to 12Amp. Thus, the voltage is manually increased in such a way to maintain a constant current of 12A to charge the battery to its full capacity. In this method, if a battery is charged at constant current of 12A, the 150AH battery reaches its full charge within 13 hours.

    ReplyDelete
  23. இந்த வலைப்பதிவிலேயே இத்தனை வகை யோசனைகள் பதிவானதே முதல்வரும் மின் துறை அமைச்சரும் அத்துறை பொறியாளருக்கும் நிர்வாகிகளுக்கும் எத்தனை யோசனைகளும் திட்டங்களும் குவிந்திருக்கவேண்டும்?

    வாழைப்பழம் மூன்று ரூபாய்க்கு விற்கும் காலத்தில் இட்லி எப்படி ஒரு ரூபாய்க்கும், சோறு ஐந்து ரூபாய்க்கும் விற்க முடியும்? விலையை சந்தை நிற்ணயித்தால் கேட்பது கிடைக்கும். அரசு வள்ளலாக விரும்பினால் மக்கள் பிச்சைக்காரர்களாகவே இருப்பர்.

    ReplyDelete
  24. "தமிழக அரசின் சூரிய ஒளி மின்சாரத் திட்டங்கள் எதிர்பார்த்தபடிச் செல்லவில்லை என்கிறது இந்தக் கட்டுரை". The above line comes with a link. If we are reading this in a printed version, this conveys a meaning that your article conveying the above meaning. You may need to rephase it so as to read the printed version also.

    ReplyDelete
  25. Dear Badri Sir,
    This has reference to an advertisement on Junior Vikadan 24.4.2013 regarding Solar Power installation for 1000W and 1200W.

    1000W Unit comes with 4 Nos. 100AH batteries, 1 KVA inverter and capable of generating 5 Units per day. 1200W Unit comes with 4 Nos. of 150AH batteries, 2 KVA Inverter and capable of generating 6 units per day. The former one costs: Rs.1,65,500/- and the latter one costs: Rs.2,02,500 /-with subsidy.

    The batteries comes with 3 years warranty, inverter with 2 year warranty and solar panels with 10 years warranty.

    If 1000W is installed, then:
    Initial investment: Rs.1,60,500/-
    Interest on investment Rs.1,65,500 @ 9% for next 10 years: Rs.1,44,450
    Replacement cost of 4 Nos. batteries – (once in 3 years) = 3 x 8000 x 4 = Rs.96,000
    Thus total cost for next 10 years = Rs.4,00,950/-
    Total No. of Units can be generated in 10 years = 5 x 365 x 10 years = 18,250 Units.
    Hence, Cost per Unit = 4,10,000/18,250 = Rs.21.96
    (In the above calculation, depreciation for Solar panel, inverter and AMC charges are not accounted)
    Omitting the initial investment and interest thereon, but only considering the replacement cost of batteries alone, the Cost per Unit is = 96,000/18,250 = Rs.5.26

    If 1200W is installed, then:
    Initial investments: Rs.2,02,500/-
    Interest on investment Rs.2,02,500/-@ 9% for next 10 years: Rs.1,82,250
    Replacement cost of 4 Nos. batteries - (once in 3 years) = 3 x 12000 x 4 = Rs.1,44,000
    Thus total cost for next 10 years = Rs.5,28,750
    Total No. of Units can be generated in 10 years = 6 x 365 x 10 years = 21,900 Units.
    Hence, Cost per Unit = 5,28,750/21,900 = Rs.24.14
    (In the above calculation, depreciation for Solar panel, inverter and AMC charges are not accounted)
    Omitting the initial investment and interest thereon, but considering the replacement cost of batteries alone, the Cost per Unit is = 1,44,000/21,900 = Rs.6.57

    I have consulted the company for the prices. They have admitted that Solar Power is viable in the area of non availability of power or people who depend on generators. Moreover, the company confirmed that presently there is no mechanism available to protect solar panels from theft.

    ReplyDelete
    Replies
    1. Dear Leenus,

      The installation I am going for is also costing me close enough - 1.5 KVA invertor, 4x150 AH batteries, 5 x 230 W solar panels.

      (1) No one can guarantee to protect the solar panels. It is like you cannot ask the scooter company to protect the bikes we are parking on the roads.

      (2) The unit cost, if you assign interest on initial investment and depreciation etc. will come to at least around Rs. 18 per unit. It is high. I can easily put up a better inverter and more batteries, and draw from the grid, or as you suggested we can have two inverters, one is a slow charger and the other fast charger.

      However, I am not approaching this from an economics standpoint. I want to be a power producer, which I feel is today necessary. The power deficit in the state is so much, I am not worried about me spending little extra money for the power I need.

      (3) Solar, as you say, is ideal when there is no likelihood of the state government giving them assured, quality power for even 12 hours every day.

      (4) Your calculation on cost per unit based on battery replacement cost is something I cannot fully agree with. I would like to experience it myself to see how correct it is.

      (5) Consider other factors. Grid supplied power is going to become more expensive tomorrow. It is not going to remain at the current app. Rs. 5 a unit. It will go up, most likely quite steeply.

      (6) I expect technology improvements down the line which will make the cost lower and lower going forward, when it can make some sort of economic sense. It is not making economic sense today. The state government can make sensible subsidy offer, which can encourage more people to consider this option, and thereby contributing to more power generation in the state.

      For example, if a company invests in renewable energy, it gets a tax break. But not so for an individual. This aberration should be addressed. In fact, individuals should be given extra incentive.

      Likewise, every unit produced using solar and consumed by the individual should get around Rs 2-3 subsidy. This is the cost the Govt. probably spends today (over and above what they charge us) while supplying electricity to our homes. (Commercial rates are expected to be not subsidised generally.)

      Let me make this clear. I am not expecting these subsidies for myself. I am hoping that measures like this will make more people invest in solar.

      Delete
  26. Dear Badri sir,
    I really appreciate your views of ‘Power Producer’.

    1.Since you have come out with a word ‘scooter’, immediately it raised a question whether an insurance coverage for Solar Panels and Inverter would be available with Nationalized Insurance Companies under the policy head of ‘House Holder Insurance Policy’ .

    2.I really forgot to mention cost escalation of batteries. In the year 1999, 150AH Exide battery was Rs.5300/-, in the year 2002, it was around Rs.6500/- and now , it is around Rs.14000/-. This price hike is mainly due to cost escalation of Lead in the market, which is a main raw material for battery manufacturing. I am sure, after three years, based on the present market for Batteries, surely the cost of 150AH battery would be somewhat around Rs.20,000/-. So, after three years, when the batteries to be replaced, again Rs.80,000 to be invested for four batteries. On next cycle of replacement, the cost will be even more. I have been using inverter since 1995 and replacing the battery once in every 2.5 to 3 years, so I am fully acquainted with the price.

    3.Whether Inverter 1.5kVA supports Fridge Load in addition to Lighting/Fan Load? If it supports Fridge, then 4 batteries are OK otherwise partial energy on 5-6 units generated on a day by Solar Panel may go as unused. Because, lighting/fan load need maximum of 3 Units for a home. Only for lighting/Fan load , 400AH battery is more than enough. If 600AH (4 x 150AH) battery storage is opted, then better to go for higher KVA inverter which supports Fridge load, which is the maximum power consumer in a day, at home.

    4.Just check with the supplier whether any protection mechanism available for Over charging of Battery from Solar Power. My friend has experienced a problem that without such protection, his battery slowly started bulging due to overcharging.


    BADRI SIR, CONGRATS FOR MOVING TOWARDS ‘GREEN POWER’

    ReplyDelete

  27. Dear Badri Sir,

    This is about Solar Power Installation - based on a local enquiry.

    1)Solar Panel (SP) available at the rating of 150W/8Amps/18V DC. It is connected either in Series or Parallel according to the requirement of Ampere Rating to Battery.

    2)By a single SP having above specifications, in a day, about 50-60 Amps current can be stored in Battery

    3)If three SPs are connected in series, the output is 24 Amps /18V, generally given to a Battery Bank of 3 x 100AH which are connected in parallel.

    4)Since the SP output voltage is 18V and the battery needs charging voltage of somewhat 13 to 14.2V , a CHARGER CONTROLLER (CC) is used to control the output voltage and Current for Battery charging.

    5)When CC is used, Output current of SP is first stored in the Battery and then it is converted to 220V AC by a sine wave INVERTER

    6)Cost of 150W Solar Panel 150W = Rs.16500; Cost of CC = Rs.3000; Cost of 1 KVA Inverter = Rs.8000 and Cost of 150AH Battery = Rs.14000.

    7)Based on the above, One Killo Watt installation = Rs.175,000. Usage is limited to Fans and Lights (not fridge)

    8)Alternatively, instead of CC, Power Conditioning Unit (PCU) can be used.

    9)Advantage of PCU:
    a)Controls Charging Current and Voltage
    b)Produce Sinewave output of 220 same like inverter
    c)It can deliver the power directly to the load at day time d)At day time, PCU simultaneously charges battery and also delivers the power to the load
    e)3 KVA PCU (Rs.50000) supports 1.5 Ton Air Conditioner (as a single load) or Fridge+Fans+Lights (depends on the No. of SP used)
    f) 5KVA PCU (Rs.75000) supports all inductive load (AC alone, 1 HP Motor alone, or AC + Fridge+ Lights + Fans)
    g) PCU efficiency is high, so it can deliver 80% of SP power.
    h) When SP power drops to below certain level, PCU automatically changes power distribution from Battery till battery level of 80% and thereafter, it distribute the power from EB. Once EB power is absent, again it delivers power from Battery.

    10) Better to go for configuration of 3KVA PCU + 1000 W + 3 x 150 AH Battery (Rs.2.10 Lakhs) so that Fridge/Lights/Fans can be run directly from PCU at day time. At night, the energy stored in the battery (about 150AH) will support 3 Fans and 4 Tubes for 3.5 hours.

    11)If PCU rating is increased, more of No. electrical gadgets with higher watts, can be used.

    12) SP can be added at later stage, depends on our requirement.

    13)The complete solution is 5 KVA PCU + 3000 W x 3 x150 AH battery.(Rs.4.5 Lakhs)

    ReplyDelete
  28. Hi Badri,

    I agree with your viewpoint regarding the economics of solar for TN. Several people in TN can pay a much higher price for reliable power supply. Getting them off-the-grid is in itself a good opportunity for reducing demand. As you mention, solar panels are not necessarily very efficient for all household tasks. Converting from Light to DC back to AC is wasteful for some cases. As you mention, pumping water and temperature control are two main examples. For pumping water, since it is not necessary to do it overnight, isn't it better to just concentrate solar energy using lenses and heat water to operate steam turbines? Also, for temperature control, looks like a combination of the following can help:

    a) reflecting incident light so that heating is reduced to begin with: (http://www.technologyreview.com/view/513891/solar-cooling-with-photonic-reflector-panel/)
    b) using the temperature of the ground as a heatsink: http://en.wikipedia.org/wiki/Geothermal_heat_pump
    c) using adsorption cooling with water heated by solar panels during the day and heat stored in molten salts during night:(http://www.technologyreview.com/news/423466/using-heat-to-cool-buildings/)

    And finally, regarding battery cost, cheaper/greener batteries are certainly happening:
    http://www.technologyreview.com/view/513256/bill-gates-spreads-his-battery-bets-on-aquion/

    You mentioned that you are talking with companies - is there anyone doing something similar to above?

    Thanks,
    -karthik

    ReplyDelete
  29. Another quick follow-on question: Borg energy seems to be selling small wind turbines in TN (http://www.borgenergy.com/commercial) How good are these? Thanks.

    -karthik

    ReplyDelete
  30. Regarding water pumping, looks like options exist today?
    http://www.sunvention.com/sv/produkte2_e.html
    CSTAR seems to be promoting it in Chennai:
    http://www.cstarindia.com/pillars.php
    has anything tangible come out of these efforts?

    ReplyDelete
  31. pl check new eco friendly power project

    ஒரு சிறிய உதவி..

    மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

    படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

    http://kannimaralibrary.co.in/power9/
    http://kannimaralibrary.co.in/power8/
    http://kannimaralibrary.co.in/power7/
    http://kannimaralibrary.co.in/power6/
    http://kannimaralibrary.co.in/power5/
    http://kannimaralibrary.co.in/power4/
    http://kannimaralibrary.co.in/power3/
    http://kannimaralibrary.co.in/power2/
    http://kannimaralibrary.co.in/power1/

    நன்றி,
    வினோத்.

    ReplyDelete