இன்று படித்த ஒரு கட்டுரையில் சில முக்கியமான வரிகளை மொழிமாற்றிக் கீழே கொடுத்திருக்கிறேன். சுர்ஜித் பல்லாவின் மூலக் கட்டுரை இங்கே.
ஒரு நபரால் ஒரு நாளைக்கு 30 ரூபாயில் பிழைக்க முடியுமா? (ஏழைமை குறித்த தகவல்கள் எடுக்கப்பட்ட NSS கணிப்பிலிருந்து) 2011-12 ஆண்டில் பல்வேறு வீடுகளில் உணவுக்கு ஆகும் செலவு குறித்த தகவல் இங்கே: கிராமப்புற இந்தியர்களில் மேல் 10% மக்கள் அடிப்படை உணவுக்கு நாள் ஒன்றுக்கு 30.50 ரூபாய் என்று செலவழிக்கிறார்கள். 20-லிருந்து 25 பெர்செண்டைலில் இருக்கும் சுமாரான ஏழை மக்கள் ஒரு நாளைக்கு வெறும் 12 ரூபாய்தான் உணவுக்கெனச் செலவழிக்கிறார்கள். இடைப்பட்ட மக்கள் இதைவிட நான்கு ரூபாய் அதிகம் (அதாவது ரூ. 16) செலவழிக்கிறார்கள். (அடிப்படை உணவுச் செலவு என்பது மொத்த உணவுச் செலவில் பானங்கள், பேக்கேஜ்ட் உணவு (சிப்ஸ் போன்றவை), உணவகங்களில் உண்ணும் உணவு ஆகியவற்றுக்கான செலவை விலக்கிக் கணிப்பது).
(கபில்) சிபால், ழான் ட்ரீஸ், (அமர்த்ய) சென், தொலைக்காட்சி நிருபர்கள், ஆங்கர்கள் ஆகியோர் வசிக்கும் பணக்கார நகரப் பகுதியிலும்கூட அடிப்படை உணவுக்கு ஓர் ஆளுக்கு ஒரு நாள் ஆகும் செலவு ரூ. 40. அதே அளவு உணவு கிராம விலையில் பார்த்தால் (22% குறைவு) ரூ. 33 என்று ஆகிறது. கிராமப்புற உயர்மட்டத்தவர் செய்யும் செலவும் கிட்டத்தட்ட இதேதான். ஏழைகள் ஏதோ ஜீவித்தபடி இருக்கிறார்கள். ஆனால் அவர்களையும் நகர உயர்மட்டத்தவரையும் பிரிப்பது உணவுக்கான செலவு அல்ல. எனவே ஏழைகளுக்கு விலையுயர்ந்த உணவு தரவேண்டும் என்று வெறுங்கனவு காண்பதால் ஏழைகளுக்கு எந்தவிதத்திலும் நன்மை இல்லை; ஏழைமைப் பிரச்னைக்கும் தீர்வு இல்லை.
நீங்கள் கூறுவது மக்களுக்குப் பெரும் சுமையாக இருப்பது சாப்பாட்டுச் செலவு அல்ல, வீட்டு வாடகை, கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்றவையே, ஏனவே உணவுப் பாதுகாப்புத் திட்டம் என்பதைவிட இவற்றில்தான் அரசின் கவனம் அதிகம் தேவைப்படுகிறது என்பது. இது முற்றிலும் சரி. ஆனால் பெரும்பாலோர் இதைப் புரிந்துகொள்ள அல்லது புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
ReplyDeleteசுவாமிநாதன் அங்கலேஷரியா, உலக வங்கியின் வறுமைக்கோடும் ஏறத்தாழ டென்டுல்கர் கோட்டு அளவுதான், இதுவே 180 நாடுகளில் பின்பற்றப் படுகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். வேண்டுமென்றால் இதை 'உட்சபட்சவறுமைக் கோடு' என்று அழைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
டென்டுல்கர் லைன் படி 5 பேர் உள்ள குடும்பத்துக்கு மாதம் ரூ 5000 வரம்பு என்றால் வருடத்துக்கு ரூ. 60,000 ஆகிறது. போன வருடம் வரை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம்தான் வருமான வரிவிலக்கு வரம்பு என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ரூ.60,000 மோசமான வறுமை வரம்பு அல்ல என்று புரியும்.
இந்த ஆண்டு கூட ரூ. 2 லட்சம் சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வருவார்கள்; இதில் சுமார் 3.3 ல் ஒரு பங்குக்குக் கீழே சம்பாதிப்பவர்கள் வறுமையில் இருப்பவர்கள் எனபது சரிதானே? எதிர்கட்சி அரசியல்வாதிகளை விட்டால் வருமான வரி வரம்புக்குக் கீழ் உள்ள எல்லோருமே ஏழைகள் என்று அறிவிக்கச் சொல்வார்கள்!
எங்க வூட்டுலயும் இதவிடக் கம்மியாத்தேன் செலவு ஆவுதுண்ணே.
ReplyDeleteசரியா வெளக்கி இருக்கிய. நன்னி
paarraa..
ReplyDelete(கபில்) சிபால், ழான் ட்ரீஸ், (அமர்த்ய) சென், தொலைக்காட்சி நிருபர்கள், ஆங்கர்கள் ஆகியோர் வசிக்கும் பணக்கார நகரப் பகுதியிலும்கூட அடிப்படை உணவுக்கு ஓர் ஆளுக்கு ஒரு நாள் ஆகும் செலவு ரூ. 40. - சரியாப் பாருங்க US$ 40 ஆ இருக்கப் போவுது ?
ReplyDeleteஎனக்கு ஒன்று புரியவில்லை. மாதம் முப்பது நாளும் எந்த ஓட்டலிலும் சாப்பிடாமல், எந்த டீ கடிக்கும் போகாமல் வீட்டில் எந்தவித விசேஷ உணவும் இல்லாமல் சாப்பிட்டால் இந்த செலவு ஆகுமோ என்னமோ! ஆனால் அது நடைமுறைப்படி சாத்தியமா? பொய்.. பெரிய பொய்.. புள்ளிவிவரம் .. என்ற வரிசை சரிதான் போல!
ReplyDeleteஎனக்கு ஒரு நாள் சமையல் செலவு முப்பது ஐந்து ரூபாய் ஆகிறது.
ReplyDeleteஇது காய்கறி, அரிசி, மளிகை பொருள் & கியாஸ் செலவு மட்டும்.
இதில் பால், அசைவம், சோப்பு, காஸ்மெடிக்ஸ் சேர்க்கவில்லை.
இது இல்லை என்பவர்கள், செலவு கணக்கு எழுதாதவர்கள் அல்லது எழுதியதை பார்க்காமல் உணர்ச்சி மிகுந்து மறுப்பவர்கள்.
சாதாரணமான ஓட்டலில் ஒரு தோசை 30 ரூபாய்.
ReplyDeleteசாதாரணமான ஓட்டலில் ஒரு தோசை 30 ரூபாய்.//////////////
ReplyDeleteஎவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க...
நான்கு நபர்கள் உள்ள வீட்டில் மளிகைச் சாமான்கள் மட்டும் வாங்கும் செலவு மாதம் ரூபாய் சுமார் 3000.00 மட்டுமே ஆகும்.
ReplyDelete(மளிகைச் பொருட்கள் மட்டும்)அதனை 4 ஆல் வகுத்தால் மாதத்திற்கு ஒரு நபர்க்கு ரூபாய் 750.00.இதனை 30 ஆல் வகுத்தால் தினசரி ஒரு மனிதனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு ரூபாய் 25.00 தான்.
ஏன் மற்ற செலவுகள எல்லாம் எதில் சேர்ப்பது
என்றால் ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவுதானே.அதற்குப் பிறகுதானே மற்றதெல்லாம்.
இதுதான் பொருளாதார வல்லுனர்களின் கணிதம்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
ஆகஸ்து 4, 2013 டைம்ஸ் ஒஃப் இந்தியாவில் ஸ்வாமிநாதன் ஐயரின் பதிவும் படிக்கவும். ஓட்டல் சாப்பாட்டு விலை மட்டும் என்ன கணக்கு? வீட்டு சமையல் கணக்கு, ரேஷன் கடையில் மலிவு விலையில் வாங்குவது எல்லாம் கணக்கில் வர வேண்டும்.
ReplyDeleteஆனால் தேசத்திற்கும் மனிதனிற்கும் இப்படி ஒரு சராசரி கணக்கு போட முடியாது என்பது என் சித்தம். இந்த எண்கள் செலவிலும் வரியிலும் விவாதம் செய்யவே உதவும்.
I can prove anything by statistics except the truth
ReplyDeleteGeorge Canning