Tuesday, September 07, 2004

ஈ.வெ.ராமசாமியும் ஆப்ரஹாம் கோவூரும்

ஈ.வெ.ராவின் 125வது பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து பல எழுத்துக்களும், பேச்சுக்களும், விவரணப் படங்களும் ஆக்கப்படுகின்றன. ஈ.வெ.ராவின் பெயர் தமிழ்ப் பகுத்தறிவு இயக்கத்துடன் இணைந்தது.

தென்னிந்தியப் பகுத்தறிவு வரலாற்றில் ஈ.வெ.ரா பெயரோடு மற்றொருவர் பெயரையும் குறிப்பிட வேண்டும். ஆப்ரஹாம் கோவூர் கேரளாவில் பிறந்து, பின் இலங்கைக்குச் சென்று வாழ்ந்து அங்கேயே உயிர் துறந்தவர்.

ஈ.வெ.ரா இந்துமதத்தில் உள்ள மூடப்பழக்க வழக்கங்களை எள்ளினார். ஆப்ரஹாம் கோவூர் அத்துடன் நேரடியாக இந்துமத பாபாக்களுடன் மோதினார். தான் கடவுளின் அவதாரம் அல்லது தெய்வீக சக்தி உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிரூபிப்பதே கோவூரின் முக்கிய வேலையாக இருந்தது. Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, அதன் தலைவராக வெகு காலம் இருந்தார் கோவூர்.

கோவூரின் தந்தை ஒரு கிறித்துவ பாதிரியார். ஆனால் கோவூர் தன் மதத்தைத் துறந்து கடவுள் நம்பிக்கை இல்லாது கடைசிவரை நாத்திகராக வாழ்ந்தவர்.

கோவூர் மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் "Begone Godmen! Encounters with Spiritual Frauds" என்னும் புத்தகத்தை நான் வெகு நாள்களுக்கு முன்னர் (1993) படித்து அப்பொழுதைய soc.culture.tamil இல் அதிலிருந்து சில பகுதிகளை வெளியிட்டிருந்தேன். அந்தப் பதிவுகளின் சுட்டிகள் இங்கே: ஒன்று | இரண்டு | மூன்று

கோவூரும், நாயக்கரும் ஒருவருக்கொருவர் தொடர்பு வைத்திருந்தனரா என்று தெரியவில்லை. காலச்சுவடு செப்டம்பர் 2004 இதழ் 'பெரியார் - 125' என்ற பெயரில் வந்துள்ளது என்றாலும் அதில் பெரியாருக்கு எதிர்மறையானதாகவே பல கட்டுரைகள் உள்ளன. இந்துமத மூடநம்பிக்கைகள், 'மகான்கள்' மீதான மூர்க்கமான பக்தி ஆகியவற்றை பெரியார் எதிர்த்ததைப் பற்றிய விரிவான அலசல் எங்குமில்லை.

10 comments:

  1. கோவூரின் இரு நூல்கள் (உண்மைச்சம்பவங்கள்+மனப்பிரமை+பித்தலாட்டம் தொடர்பாக) தமிழிலே இலங்கையிலே வந்திருக்கின்றன.
    1. கோர இரவுகள்
    2. மன.. பெயர் மறந்துவிட்டது.

    அதியசக்தி, பேய் என்று சொல்லப்பட்டவற்றினை மனப்பிரமை+வியாதி+பித்தலாட்டம் என்று தானே நிரூபித்துக்காட்டியிருக்கின்றார்.

    ஆனால், கோவூர் அரசியற்கூர்மையுடன் சமூகமாற்றத்தினையும் நோக்காக்கிச் செயற்பட்டவரில்லை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. கோவூரின் இரு நூல்கள் (உண்மைச்சம்பவங்கள்+மனப்பிரமை+பித்தலாட்டம் தொடர்பாக) தமிழிலே இலங்கையிலே வந்திருக்கின்றன.
    1. கோர இரவுகள்
    2. மன.. பெயர் மறந்துவிட்டது.

    அதியசக்தி, பேய் என்று சொல்லப்பட்டவற்றினை மனப்பிரமை+வியாதி+பித்தலாட்டம் என்று தானே நிரூபித்துக்காட்டியிருக்கின்றார்.

    ஆனால், கோவூர் அரசியற்கூர்மையுடன் சமூகமாற்றத்தினையும் நோக்காக்கிச் செயற்பட்டவரில்லை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. இரண்டாவது புத்தகம்:
    2. மனக்கோலங்கள்
    ஜனமித்திரன் வெளியீடு என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  4. if my memory is right D.K did make use of kovoors writings and had even few members from cadres to popularise magic shows to disprove claims of godmen.
    manthirama thanthirama was a popular program by DK widely performed in meetings.perhaps they were in touch.

    ReplyDelete
  5. i have not read the recent issue of kalachuvadu, i read it in the web.but i am not surprised if there were not many articles analysing his contributions.unfortunately in many cases the quality of debate in tamil little magazines and discussion groups is so low that i prefer not to engage in them.i saw some recent postings in rkk on periyar.so much is available on periyar in english and tamil and yet third rate articles are cited as proofs.i wonder how many are aware of the writings of rajadurai, gita, marx, rajan kurai, pandian,kovai gnani on periyar.

    ReplyDelete
  6. «ýÒûÇ Ã¡ˆ ¸×¾Áý, ¿£í¸û ¯ñ¨Á¢§Ä§Â Å¢Á÷º¸÷ ሸ׾Áý¾¡É¡? þí§¸ ¦ÀÂ÷§À¡¼¡Áø(«øÄÐ §ÅÚ ¦ÀÂ÷ §À¡ðÎ) º¢Ä÷ ¦ºöÔõ Å¢¨Ç¡ðθǢɡø ¦Ã¡õÀ ºó§¾¸Á¡ö þÕ츢ÈÐ. «Ð×õ ¾Å¢Ã(¾É¢ôÀð¼ ӨȢø) ሸ׾ÁÉ¢¼õ þùÅÇ× Óð¼¡û¾ÉÁ¡É ´Õ ¸Õò¨¾Ôõ ±¾¢÷À¡÷ì¸Å¢ø¨Ä. ¦¸¡ïºõ ¦¾Ç¢×ÀÎò¾ÓÊÔÁ¡? ÀÎòÐõ Àðºò¾¢ø À¾¢Ä¡¸ ²§¾Ûõ ±Ø¾ ¿¡ý §Â¡º¢ì¸Ä¡õ. («§Â¡ò¾¢¾¡º÷ ÀüÈ¢ ¾¢ñ¨½Â¢ø ¦ƒÂ§Á¡¸ý ¦º¡øÄ¢ ÁðΧÁ §¸ûÅ¢ÀðÊÕì¸ ÜÊ ´Õ À¢Ã¸¢Õò¾¢ìÌ ¿¡ý À¾¢ø ¦º¡øÄ¢¦¸¡ñÊÕì¸ Ü¼¡Ð À¡Õí¸û!) --§Ã¡…¡Åºóò.

    ReplyDelete
  7. I went to the `Raj Kauthaman' blog mentioned in the above post. I couldn't even find an e-mail address to contact. Unless 'Raj Kauthaman' clarifies it, it is highly probable that it is another game of the same kumbal--Rosavasanth.

    ReplyDelete
  8. raja.kauvthaman
    do you know that the book by rajadurai and gita in english has iyotheedas in the title and they have written about him extensively.can you cite anything from what they have written or others u have mentioned as anti dalit.if u cant engage in a debate dont stoop to such low levels.

    ReplyDelete
  9. Ravi, I am still not sure that this is Raj Gauthaman. Let us confirm that first and then ask for any reasonable debate. Rosavasanth.

    ReplyDelete
  10. Hope everyone is convinced that it was not Raj Gauthaman who write here.(Hopefully!) Bye! Rosavasanth.

    ReplyDelete