Tuesday, April 04, 2006

சன் டிவி ஐ.பி.ஓ

சன் டிவி நிறுவனம் பங்குச்சந்தையில் தன் பங்குகளை வெளியிட உள்ளது. அதுபற்றி எனக்குக் கிடைக்கும் செய்திகளை அவ்வப்போது இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

Moneycontrol.com (TV18) தளத்திலிருந்து: Sun TV IPO good for long-term investors: Mehta

நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்று ரூ. 875 என்னும் விலை ஓகே என்கிறார் தீபன் மேஹ்தா.

* சன் டிவி (தமிழ் தொலைக்காட்சி சானல்) சீக்கிரமே கட்டண சானலாக மாறப்போகிறதாம். மாதத்துக்கு ரூ. 15-20 வசூலிக்க இருக்கிறார்களாம். இதனால் நிறுவனத்துக்கு 2006-07-ல் ரூ. 70 கோடியும், 2007-08-ல் ரூ. 90 கோடியும் அதிக லாபம் கிடைக்கலாம் என்று கணிக்கிறார்கள்.

* சன் டிவி நிறுவனத்தின் பிரிமியம் (அதாவது பங்கின் முகப்பு விலைக்கு மேல் எவ்வளவு அதிகமாக வைத்து ஐ.பி.ஓவின்போது வெளியிடுகிறார்கள் என்பது) சற்று அதிகமாக இருப்பதாகவே தோன்றுகிறது. இதனால் மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்குவார்களா என்பது தெரியவில்லை.

பங்குச்சந்தை இப்பொழுது அதி உச்சத்தில் இருக்கிறது. சென்செக்ஸ் 11,500 என்பதெல்லாம் இன்றைய நிலையில் தேவையில்லாமல் அதிகம். அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பங்குகளுமே சரியப்போகின்றன. அந்த நேரத்தில் சன் டிவி பங்கும் சரியும். வாங்க விரும்புபவர்கள் அந்த நேரத்தில் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம். சன் டிவி பங்குகளை லிஸ்ட் செய்தவுடன் சடசடவென மேலே போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது.

6 comments:

 1. நான் யோசித்துக் கொண்டிருந்தேன் "economic times" ல் ஜீ டி.வி பங்குளை விட சன் லாபம் தரலாம் என கணித்திருக்கிறார்கள்.

  தமிழக அரசியல் மாற்றங்களால் ஏதேனும் பாதிப்பு வரும் என்று நினைக்கிறீர்களா?

  பொருத்து வாங்கும் யோசனை நல்லதாக படுகிறது.

  ReplyDelete
 2. இதைப் பற்றி பிஸீனஸ் லைன் பத்திரிக்கையில் படித்த மற்றொரு செய்தி.

  ஜீ டிவியின் பங்கு விலையை ஒப்பிடும் போது, சன் பங்கின் விலை குறைவாக உள்ளது. அதனால் பட்டியலிடப்பட்டவுடன், பங்கின் விலை அதைகரிக்கலாம் .

  ஆனால் சன்டிவியின் கார்ப்பரேட் கவர்னன்ஸை ( இதற்கு தமிழ் வார்த்தை என்ன?) பற்றி சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார்கள். பல ஆண்டுகளாக டிவிடெண்ட் தராத நிறுவனம் சென்ற ஒரு ஆண்டுக்குள் இருமுறை டிவிடெண்ட் அறிவித்தது. சுமார் 25 கோடிக்கும் மேலாக டைரைக்டர்களிம் சம்பளம் என கணக்கு காட்டியது. நல்ல நிர்வாகத்தை சன் டிவி த்ரமுடியுமா? என்பதை பொருத்தே இப்பங்கின் விலையேர்றம் அமையும்.

  ReplyDelete
 3. என்னைப் பொருத்தவரை இந்த விலை சற்றுகூடுதலாகவே படுகிறது.

  ReplyDelete
 4. >>>பங்குச்சந்தை இப்பொழுது அதி உச்சத்தில் இருக்கிறது. சென்செக்ஸ் 11,500 என்பதெல்லாம் இன்றைய நிலையில் தேவையில்லாமல் அதிகம். அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பங்குகளுமே சரியப்போகின்றன. அந்த நேரத்தில் சன் டிவி பங்கும் சரியும். வாங்க விரும்புபவர்கள் அந்த நேரத்தில் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம். சன் டிவி பங்குகளை லிஸ்ட் செய்தவுடன் சடசடவென மேலே போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது<<<<

  முற்றிலும் உண்மை. எதற்காக உயர்கிறது எனத் தெரியவில்லை. வெறும் ஹைப்-என்றே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் கூறியது போல, இன்னும் சில மாதங்கள் காத்திருந்து வாங்கலாம்.

  சரியும் என்று கடந்த ஒரு வருடமாக யூகித்திருந்தேன் (கெட்ட எண்ணமல்ல; கணிப்பே).

  ஆனால் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, 11500 தொட்டு விட்டது. இன்னும் உயருமா? அல்லது சரியுமா எனத் தெரியவில்லை.

  ஒரு வேளை, இப்போது வாங்காமல் விட்டு விட்டு, 15000 தொட்ட பிறகு, அப்போதும், "இப்போது வாங்கலாமா, அல்லது சரியுமா", என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டுமா எனத் தெரியவில்லை.

  சென்ற வருடம், செபி அதிகாரியோ, ரிசர்வ் வங்கி கவர்னரோ, இன்னும் ஒரு வருடத்தில் சென்செக்ஸ் 16000 எட்டும் என்றார். பலர் நம்பவில்லை.

  அவர் கூறியது பலித்து விடும் போல.

  ஆனாலும், சன் டி.வி எதற்காக திடீரென்று ஐ.பி.ஓ போகிறார்கள்? சிக்கலைச் சமாளிக்கவா? இதனுடன் சுமங்கலியும் அடக்கமா?

  ReplyDelete
 5. சன் டிவியின் கார்பொரேட் கவர்னன்ஸ் - நிறுவன நல்லாட்சி - மோசம்தான். இதைப்பற்றி நான் ஏற்கெனவே சில இடங்களில் எழுதியுள்ளென்.

  * சீனியர் மேனேஜ்மெண்ட் யாருக்கும் ஸ்டாக் ஆப்ஷன்ஸ் கிடையாது. அவர்களுக்கு சம்பளமும் வெகு குறைவு. அப்படியானால் எப்படி அவர்களைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள்?

  * தகுதியான நிதி மேலாளர் (CFO) கிடையாது. நாளை சரியான விதத்தில் SEBI வரைமுறைகளுக்கு உட்பட்டு, Indian GAAP கணக்கு விதிகளுக்கு உட்பட்டு காலாண்டு, ஆண்டிறுதிக் கணக்குகளை வழங்குவார்களா என்பது சந்தேகம்தான்.

  * சன் டிவி குழமத்தின் செயல்பாடுகள் முழுமையாக வெளியே தெரியவில்லை. ஜெமினி டிவி, உதயா டிவி - இரண்டும் குழுமத்தின்கீழ் வரவில்லை என்கிறார்கள். இது இரண்டிலும் கலாநிதி மாறன் பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ளார். அதேபோல SCV எனப்படும் கேபிள் விநியோக நிறுவனம் இந்த IPO செல்லும் நிறுவனத்தின் குடையின்கீழ் வருவதில்லை.

  * தினகரன் பத்திரிகை, குங்குமம் இதழ் ஆகியவை இப்பொழுது ஐ.பி.ஓ செல்லும் நிறுவனத்தின்கீழ் இல்லை. கலாநிதி மாறன் அதன் முக்கியமான பங்குதாரராக உள்ளார். அவ்வளவே. அப்படியானால் தினகரன், குங்குமம் போன்ற பத்திரிகைகள் சன் டிவியில் விளம்பரம் செய்யும்போது அவை related party transaction என்னும் குடையின்கீழ் வரும். ஆனால் அதுபற்றிய தகவல்கள் ஐ.பி.ஓ red herring prospectus-ல் இல்லை. மிகக்குறைந்த விலையில் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஆனால் சன் டிவி குழுமத்துக்குச் சொந்தமில்லாத நிறுவனங்களுக்கு சன் டிவியில் விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றனவா என்று தெரியவேண்டும். இந்த நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் என்னென்ன என்பது தெரியவேண்டும். இதெல்லாம் வெளியே சொல்லப்படவில்லை.

  இந்த நிறுவனங்களை ஒன்றாக்கி, பின்னர் அந்த மொத்தக் குழுமத்தையும் பங்குச்சந்தைக்குக் கொண்டு சென்றிருந்தால் பிரச்னைகள் ஏதும் இருக்காது.

  * சன் டிவி குழுமத்தின் லாபக் கணக்கு குறைவாக இருப்பது போலத் தெரிகிறது (வெறும் 70 கோடி ரூபாய்கள்தான் நிகர லாபம் சென்ற ஆண்டில் என்கிறார்கள்!). இதனால் வேலையை ஒரு நிறுவனம் செய்ய, பணம் மட்டும் வேறெங்கோ போவதுபோல ஒரு தோற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் பணம் போடும் ஒரு நிறுவனத்தின் மதிப்பு குறைவாக்கப்படுவது போலத் தோற்றமளிக்கும். இது உண்மையா பொய்யா என்று தெரியாத நிலையில் - அதாவது முழுதான transparency இல்லாத நிலையில் - அந்த நிறுவனத்துக்கு பங்குச்சந்தை கொடுக்கும் மதிப்பு குறைவானதாகவே இருக்கும்.

  ReplyDelete
 6. Konjam side track:

  சென்செக்ஸ் 11,500 என்பதெல்லாம் இன்றைய நிலையில் தேவையில்லாமல் அதிகம். அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பங்குகளுமே சரியப்போகின்றன.

  Indha ennam irukkum bodhu sariyadhu.

  Eppozhudhu ellorum 15,000 / 20,000 nu chorus podurangalo appo thaan vizhum :)..

  ReplyDelete