Friday, April 07, 2006

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு

104வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதா சென்ற ஆண்டு டிசம்பர் 21, டிசம்பர் 22 தேதிகளில் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இந்தச் சட்டத் திருத்தத்தின்படி மத்திய மாநில அரசுகள் தங்களிடம் நிதியுதவி பெறும் கல்விக்கூடங்களிலும் தங்களால் கட்டுப்படுத்தப்படும் சிறுபான்மையினர் அல்லாத பிற தனியார் கல்விக்கூடங்களிலும் ஷெட்யூல்ட் மற்றும் பழங்குடி இனத்தவர் தவிர்த்த பிற பிறபடுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு செய்யலாம். ஆனால் அனைத்து இட ஒதுக்கீடுகளும் ஒன்று சேர்ந்து 50%த் தாண்ட முடியாது. [தமிழகத்தில் ஏற்கெனவே 69% இட ஒதுக்கீடு நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.]

இதையடுத்து நேற்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், மத்திய அரசின் கீழான கல்விக்கூடங்களில் ஏற்கெனவே இருக்கும் ஷெட்யூல்ட், பழங்குடியினருக்கான 22.5% இட ஒதுக்கீட்டுக்கு மேலாக பிற்படுத்தப்பட்டோருக்காக என்று 27% இட ஒதுக்கீடு செய்ய ஒரு திட்டம் உள்ளது என்று தெரிவித்தார். இதனை இவரது அமைச்சரகம் மத்திய கேபினெட்டுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. இதனை கேபினெட் ஏற்றுக்கொண்டால் ஐஐடி, ஐஐஎம், ஜிப்மர், AIIMS தொடங்கி பல்வேறு கல்விக்கூடங்களில் மொத்தமாக 49.5% வரை இட ஒதுக்கீடு அமலில் வரும்.

இதனை முன்னதாகச் செயல்படுத்த முனைந்தவர் முந்நாள் பிரதமர் வி.பி.சிங். அதையடுத்து நிகழ்ந்ததுதான் அத்வானியின் ரத யாத்திரை; பாபர் மசூதி இடிப்பு, பாஜக ஆட்சிக்கு வருகை etc.

நேற்றோ, அத்வானியின் ரத யாத்திரை தொடங்கியது; மற்றொரு புறம் அர்ஜுன் சிங்கின் அறிவிப்பு.

முந்தைய பதிவுகள்:
இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி
இட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

4 comments:

  1. அன்றைய சூழல் வேறு இன்றைய சூழல் வேறு. இட ஒதுக்கீட்டினால் நேரடியாகப் பாதிக்கப்படும் சமுதாயத்தினரில் பெரும் பகுதியினர் இன்றைய அரசியல் சூழலை, யதார்த்தத்தை நன்கு உணர்ந்திருப்பர்; இதனை முழுமூச்சுடன் எதிர்க்கும் திராணி அவர்களுக்கு இல்லாமல் போனாலும், ஒரு அதிருப்தியைக் (dissent) கூட வெளிப்படுத்தும் சூழலில் அவர்கள் இல்லை என்பது போலத்தான் தோன்றுகிறது.

    மேலும், அத்வானியின் இமேஜும், பா.ஜ. கவின் உயர்ஜாதி ஓட்டு வங்கியும் வெகுவாகக் கரைந்துள்ள இன்றைய சூழலில், யாத்திரை பற்றிய அச்சங்கள் அனாவசியமென்றேபடுகிறது.

    மண்டலும், கமண்டலமும் அடுத்தச் சுற்றுக்குத்தயாராவதாகத் தவறாகப் புரிந்துகொள்ளவேண்டாம்.

    ReplyDelete
  2. For those who are against the reservation in IIT/IIMs

    Can you publish a report how many graduates from IIT & IIM are working in INDIA??

    ReplyDelete
  3. Two wrongs do not make right.

    இட ஒதுக்கீட்டினால் கீழ் தட்டு மக்கள் முன்னுக்கு வந்து விடுவார்கள் என்று நம்புவது, மேல் மாடியில் பிரச்சனை என்று அர்த்தம். இட ஒதுக்கீட்டினால் சோம்பேரித்தனமும், திறமையின்மையும் தான் மேலே வரும்.

    Deserve before you desire. This must be the rule.

    ஷங்கர்.

    ReplyDelete
  4. hello badri,
    as an alumnus of IIT, perhaps you are in a better position to comment on the progress made by the Quota students in those institutions...can u pass those directly in your blog?...
    you maybe aware of this link

    http://o3.indiatimes.com/wisenation/archive/2006/03/29/574301.aspx#577293

    thanks

    ReplyDelete