Thursday, April 06, 2006

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வழக்கு

தொடரும் இந்த வழக்கில் நேற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி AP ஷா இவ்வாறு சொல்லியுள்ளார்.
We are not impressed with the arguments that some deemed universities have better infrastructure than other technical institutions, and hence, they need not subject themselves to inspection [from AICTE].
மேலும் நீதிபதிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றாலும் அந்தக் கல்வி நிறுவனம் AICTE விதிமுறைகளுக்குக் கட்டுப்படவேண்டும் என்று சொல்லியுள்ளனர்.

முழுச்செய்தி

பல்கலைக்கழக மான்யக் குழு (UGC) வழக்கறிஞர் வேறு தனி வாத்தியம் வாசிக்கிறார். யார் பக்கம் இவர் வழக்காடுகிறார் என்று புரியவில்லை.
Mr. Chandru [counsel for UGC], however, said that by trying to exclude the UGC's jurisdiction over deemed universities, the AICTE was attempting to arrogate to itself more powers.
AICTE இப்படி ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை. AICTE தமக்கு உள்ள உரிமையைப் பற்றி மட்டும்தான் வாதாடுகிறதே தவிர UGC-யின் வேலைகளைத் தாங்கள் எடுத்துக்கொள்வதாக எங்குமே சொல்லவில்லை.

இதற்கிடையில் All-India Medical and Engineering Colleges Association என்ற அமைப்பின் தலைவர் TD நாயுடு தம் அமைப்பையும் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று வாதாடுகிறார்! இவரது பின்னணி என்ன? இவர், இவரது அமைப்பின் வண்டவாளங்களை தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் அம்பலம் செய்ததை என் பதிவில் ஏற்கெனவே எழுதியுள்ளேன். அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களாக தமிழகத்தின் இரண்டு பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் தங்களை வேறு கல்லுரிகளுக்கு மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த இரண்டு கல்லுரிகளுள் ஒன்று திருவள்ளூரில் உள்ள தீனதயாள் பொறியியல் கல்லூரி. அதனை யார் நடத்துகிறார் தெரியுமா? திருவாளர் TD நாயுடு!

தனது தகிடுதத்தங்கள் ஒருபுறம் இருக்க, நாயுடு, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு மாணவர்களை ஏமாற்றுகின்றன என்று சொல்ல வந்திருக்கிறார்!
The deemed universities did not comply with the mandatory regulation such as the 15:1 student-teacher ratio, he said. The UGC did not have monitoring agencies all over India to inspect the deemed universities, and the function was entrusted with the AICTE, he said.
தனது அனுமதியில்லாமல் நாயுடுவின் கல்லூரி மாணவர்களைப் பிற கல்லூரிகளுக்கு மாற்றக்கூடாது என்று தமிழக அரசை AICTE தடுத்துள்ளது. (Source: Sun TV)

When the executives fail us completely, and the legislatures do not care, our only hope is judiciary. Sadly.

முந்தைய பதிவு
நிகர்நிலைகள் AICTEக்குக் கட்டுப்பட்டவை

No comments:

Post a Comment