ஒவ்வோர் உள்ளாட்சியும் - பஞ்சாயத், நகராட்சி, மாநகராட்சி - சொத்து வரி வசூலிக்கும்போது Library Cess எனும் நூலக வரியைச் சேர்த்து வசிக்கவேண்டும். இந்தப் பணத்தை பொது நூலகத்துறைக்கு அனுப்பவேண்டும். இந்தப் பணத்தைக் கொண்டு நூலகத்துறை புத்தகங்களை வாங்குவதற்கும் நூலகங்களை நடத்துவதற்கும் புதிய நூலகங்களைக் கட்டுவதற்கும் செலவழிக்கவேண்டும்.
இதைப் பற்றி நான் 31 மே 2006 எழுதிய பதிவு.
அந்தப் பதிவில், லைப்ரரி செஸ் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்று எழுதியிருந்தேன்.
அதே சமயம், தி ஹிந்துவில் வந்திருக்கும் ஒரு செய்தியில் உள்ளாட்சிகள் தாங்கள் வசூலிக்கும் லைப்ரரி செஸ் வரியை நூலகத்துறைக்குத் தராமல் வேறு எதற்கோ செலவு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. உள்ளாட்சிகள் தரவேண்டிய பாக்கி சுமார் 85 கோடி ரூபாய் என்று சட்டமன்ற உறுப்பினர் S.R.ராஜா (திமுக) தெரிவித்துள்ளார்.
இந்தப் பணத்தை உள்ளாட்சிகளிடமிருந்து எப்படிப் பெறுவது என்று தமிழக அரசுக்குத் தெரியவில்லையென்றால் நான் ஓர் ஆலோசனை சொல்வேன். உள்ளாட்சித் துறை ஆண்டுக்கு ஒவ்வோர் உள்ளாட்சி அமைப்புக்கும் பணம் தருகிறதல்லவா? அந்தப் பணத்திலிருந்து தேவையானதைக் கழித்துவிட்டு மீதியைக் கொடுத்தால் போதும்.
லைப்ரரி செஸ் என்பது நூலகங்களின் வளர்ச்சிக்காக என்று வசூலிக்கப்படும் தொகை. இதைக் கையகப்படுத்தி வேறு காரியங்களுக்கு அனுப்ப உள்ளாட்சிகளுக்கு அனுமதியில்லை.
85 கோடி ரூபாயில் பல ஆயிரம் புது நூலகங்களை அமைக்கமுடியும், பல புத்தகங்களை வாங்கமுடியும்..
கருத்தியலும் இலட்சியவாதமும் வேறுவேறு!
2 hours ago
No comments:
Post a Comment