Monday, August 06, 2007

சென்னை வலைப்பதிவர் பட்டறை

யூட்யூப் ஆதரவில், எழுதுவதற்கு பதில் முகத்தையும் காட்டி பேசியும் விட்டேன். வலைப்பதிவர் பட்டறைக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டாமா?



தமிழ் வலைப்பதிவர் பட்டறை

9 comments:

  1. நன்றி. ஒலிப்பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன்.

    உங்கள் கண்ணாடியில் கணினித் திரை பிரதிபலிக்கிறது. கணினி முன் அமர்வதைத் தவிர்க்கலாம். எழுதி வைத்ததை வாசிக்காமல் எங்களைப் பார்த்து spontaneousஆகப் பேசினால் இன்னும் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  2. கடைசி வரிகள் அருமை. இவ்வளவு பெரிதாக செய்வது ஒரு புறம் இருக்க,

    வாராவாரம் கல்லூரிகள், பள்ளிகள், மற்ற நிறுவனங்களுக்குப் போய் மடிக்கணினியில் செய்முறை விளக்கம் காண்பித்து அவர்கள் கணினியில் தமிழ் செயல்படுத்திக் கொடுக்கும் முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும். குறுவட்டு, கணிச்சுவடி பிரதிகளையும் வினியோகிக்கலாம்.

    புத்தகக் கண்ணாட்சிகளிலும் தன்னார்வலர்கள் அனுமதி பெற்று இலவச பயிற்சி அளிக்க முயற்சி செய்யலாம்.

    4-5 பேர் சேர்ந்து செயல்பட்டால் தொடர்ந்து நடத்த முடியலாம். பேசிப் பார்க்கிறேன்.

    அன்புடன்,
    மா சிவகுமார்

    ReplyDelete
  3. //அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டாமா?//

    அடுத்த கட்டத்திற்குச் சென்றிருக்க வேண்டியது, கீழ்க்கண்ட காரணங்களால் தடைப்பட்டு விட்டது:

    - உங்கள் முகக்கண்ணாடியில் தெரியும் கணினித் திரை பிரதிபலிப்பைத் தவிர்த்திருக்கலாம்.

    - காமிராவை நோக்கிப் பேசியிருக்கலாம்.

    - எழுதி வைத்துக் கொண்டு படிப்பதை விட, இயல்பாக, பேச்சு நடையிலேயே பேசியிருக்கலாம். (கடினம்தான் :) )

    - sarcasticஆன வரிகளையும் அதே தீவிர முகத்துடன் வாசிக்காமல், கொஞ்சம் (லேசாகப் புன்னகைத்து) உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கலாம்.

    (இவ்வளவையும் மாங்கு மாங்கென்று தட்டச்சிய பிறகுதான் மேலே அனானியின் பின்னூட்டத்தைப் பார்த்தேன். 'உழைப்பு' வீணாக வேண்டாமே என்று இதை அப்படியே வெளியிடுகிறேன் :) )

    ReplyDelete
  4. உண்மைதான். ஒரு கையில் கேமரா செல்பேசியைப் பிடித்துக்கொண்டு - அதுவும் என்ன பிடிக்கிறது என்பது தெரியாமல் இருக்க - பேசும்போது நிறைய தடங்கல் இருந்தது. அதனால் எழுதிவைத்துப் படித்தேன். அப்பொழுது கணினித்திரையைப் பார்த்துப் பேசினேன். அது கண்ணாடியில் இப்படிப் பிரதிபலிக்கும் என்று யோசிக்கவில்லை.

    வரும் சில பதிவுகளில் ஓரளவுக்கு மேம்பட்ட தரத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  5. அருமை. நானும் வாரம் ஒரு வீடியோ பதிவு போட இருக்கிறேன். நிறையப்பேர் செய்ய செய்ய ஒரு Critical Mass உருவாகும் என்பது என் கருத்து. அப்படி உருவாகும் பட்சத்தில் வாசகர்களின் எண்ணிக்கையும் கூடும்என்று நினைக்கிறேன்.மேலே காணப்படும் மற்றவர்களின் ஆலோசனைகளை செயல்படுத்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ஓசை செல்லா

    ReplyDelete
  6. அண்ணா பல நல்ல விடயங்களை சொல்கியிருக்கிறீர் தமிழ் இனத்தில் இப்படி தன்னார்வலர்கள் இருக்கிறார்கள் என்கின்ற போது பெருமையாக இருக்கிறது

    ReplyDelete
  7. உங்க யுட்யூப் மேட்டர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.... ஆனா ஆடியோ மட்டும் உங்களோடதா இருக்கட்டுமே... வீடியோவில சானியா மிர்சாவோ, ஜூலியா ராபர்ட்சோ இருந்தா ஷோக்கா இருக்குமே!!! :-)

    ReplyDelete
  8. பத்ரி,

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    /* வலைப்பதிவர் பட்டறைக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டாமா */

    பட்டறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதை இப் பதிவு மூலம் நிரூபித்துக் காட்டி விட்டீர்கள்.

    ReplyDelete