இன்று சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2008, மாலை 5.30 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தின் மொட்டை மாடியில் நடக்க உள்ள கூட்டத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கலந்துகொண்டு பேசுகிறார்.
வெவ்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்பைச் செய்துவரும் பலரையும் அழைத்து, தங்களுக்குப் பிடித்தமான எதைப்பற்றியும் பேசவைக்கவேண்டும் என்பதுதான் நோக்கம். முதன்மை நோக்கம் எங்களது அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் இதிலிருந்து பயனடையவேண்டும் என்பது. இவற்றுள் சில கலந்துரையாடல்களை சனிக்கிழமை மாலை வைத்து, அதில் பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு செய்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை பொதுவான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். முதலாவது இன்று (இரண்டாம் சனிக்கிழமை இல்லை என்றாலும்) நடக்கும் கூட்டம்.
அடுத்த மாதங்களில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்பதை விரைவில் வெளியிடுவோம்.
இது தவிர வார நாள்களிலேயே எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த சிலர் சில விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். சென்ற வாரம் ப்ராடிஜி தமிழ் எடிட்டர் சுஜாதா, “விலங்கினங்களில் காணக்கிடைக்கும் சில ருசிகரமான தன்மைகள்” என்பது பற்றிப் பேசினார். நான் “லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடரால் உலகம் அழியப் போகிறதா?” என்பது பற்றிப் பேசினேன். இனி வரும் வாரங்களிலும் இப்படித் தொடர்ந்து சில பேச்சுகள் நடக்கும். அவை பற்றி அவ்வப்போது தகவல் தருகிறேன்.
===
கிழக்கு மொட்டைமாடியை அடைய மூன்று தளங்களின் மாடிப்படிகளில் ஏறவேண்டும். லிஃப்ட் கிடையாது. முதியவர்கள், மாடிப்படி ஏறக் கஷ்டப்படுபவர்கள் இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
5 hours ago
Idea சுவாரசியமா இருக்கு. இதனுடைய scope என்னான்னு தெரியல. சும்மா ஒரு camcorder வச்சு record பண்ணி, google-videoவுல போட்டாக்கா நல்லாருக்கும். quick-ஆ 2-3 பட்டன் தட்டினா நடக்குற விஷயந்தான்னு நெனைக்கறேன். சும்மா ஒரு suggestion. Thats all. :-)
ReplyDelete-vikadakavi
Badri,
ReplyDeleteThis comment i regarding the prime objective that you have mentioned in the post..
முதன்மை நோக்கம் எங்களது அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் இதிலிருந்து பயனடையவேண்டும் என்பது.
When I was in an academic set-up I observed more wilingness and openness to participate in such activities by the people. But unfortunately there is a tendency to see such things as a waste of time in a typical corporate set-up(even if we choose topics on areas more closely related to the work area). So it is very nice and encouraging to see that you have a set-up where there is scope and interest for such things.
Please do keep us updated on how the interest of the larger group is sustained over a period of time.
Best regards,
Magesh
இதை ஏன் வீடியோ எடுத்து Youtube இல் போட கூடாது ?
ReplyDelete