Saturday, February 21, 2009

கிழக்கு 5 வருடக் கொண்டாட்டம்

நியூ ஹொரைசன் மீடியா (கிழக்கு பதிப்பகம்) தொடங்கி ஐந்தாண்டுகள் முடிவடைந்துள்ளன.

ஒரு சிறு கொண்டாட்டமாக, மைலாப்பூர் வடக்கு மாடவீதி, வேலூர் லட்சுமியம்மாள் கல்யாண மண்டபத்தில் பிப்ரவரி 21-23 (இன்று தொடங்கி) மூன்று நாள்கள் சிறப்பு புத்தகக் காட்சி நடைபெறுகிறது. (கபாலீசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில், ஹோட்டல் சரவணபவனுக்கு அருகில்.) இன்று மாலை, உமாஷங்கர் ஐ.ஏ.எஸ், மாலன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

வரும் நாள்களில் தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் இதுபோன்று புத்தகக் காட்சிகள் நடத்த உள்ளோம்.

12 comments:

  1. Congrats! I have observed you folks since inception, and one thing that has really impressed me is that you constantly keep trying to innovate, be it in subject matters, formats, promotions,markets, or channels. I wish you the very best ahead, and hope you guys do well.

    ReplyDelete
  2. //ஐந்தாண்டுகள் முடிவடைந்துள்ளன.//

    பத்ரி,

    கிழக்கு பதிப்பகக் குழுவினருக்கு வாழ்த்துகள். குறுகிய காலத்திலேயே உங்கள் பதிப்பகம் பதிப்புலகிலும் வாசகர்களிடத்திலும் மிகப் பரவலான கவனத்தை பெற்றுள்ளதை என்னால் உணர முடிகிறது. புத்தகங்களை திறமையாக சந்தைப்படுத்துவது முதல் ஒலிப் புத்தகங்களை குறுந்தகடுகளாக கொண்டு வருவதுவரை பல்வேறு புதுமையான உத்திகளை கையாளுவதன் மூலம் இந்தத் துறையில் நீண்ட காலமாக ஆனால் முன்னேற்றமேயில்லாத பல பதிப்பகங்களை உங்கள் குழு மிகச் சுலபமாக கடந்து சென்று கொண்டிருக்கிறது.

    மீண்டும் வாழ்த்துகள்.

    கிழக்கு புத்தகங்களின் மீதான விமர்சனங்களை இன்னொரு சமயத்தில் சாவகாசமாக சொல்கிறேன். :-)

    ReplyDelete
  3. Congrats Badri. You, Raghavan, Marudhan and team are doing a great job. Expecting more and more interesting topics from you guys. Suresh Murali

    ReplyDelete
  4. Congratulations. You are blazing a glorious trail in the world of Tamil publishing. Wish you all the best.

    ReplyDelete
  5. Congrats NHM & Team! Badly missing it :-(

    Venkat

    ReplyDelete
  6. மனமார்ந்த வாழ்த்துகள் பத்ரி!!
    மேன்மேலும் வளர கிழக்கு குழுவினர்க்கு ALL THE BEST!!

    ReplyDelete
  7. வாழ்த்துகள் பத்ரி, புத்தகங்களின் வடிவமைப்பு தாள் அச்சு, பெரும் வகைகள் ஆகியவை சிறப்பாக உள்ளன. ஆனால் ஆங்கில வார்த்தைகள் அதிகமாக இருப்பதாய் எனக்குப் படுகிறது. நிலமெல்லம் இரத்தம், புத்தகம் எல்லாம் ஆங்கிலம். கொஞ்சம் முயற்சி எடுத்தால் இன்னும் சிறப்பான தமிழை கொன்டு வரலாம். அமேசான் கின்டிலில் கிழக்கு வந்தவுடன் பதிவிடுங்கள், எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசை.

    ReplyDelete
  8. தமிழ்ப் பதிப்புலகத்தில் மேற்கத்திய உத்திகளைப் பயன்படுத்தி ஒரு புதுமையைத் தொடங்கி வைத்தது கிழக்கு. அதற்கு என் பாராட்டுகளும், மேலும் வாழ்த்துகளும்.

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  10. திரும்பிய பக்கம் எல்லாம் காரைக்குடி புத்தக கண்காட்சியில் கிழக்கு , வர்த்தக ரீதியில் பெரிய விடயங்களை சாதித்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கிழக்கில் " Variety" இல்லை என்ற ஒரு பேச்சு அடிபடுகிறதே , பல புத்தகங்கள் வரலாறு , புரட்சி போன்றவற்றை ஒட்டியே உள்ளன !

    ReplyDelete