Friday, February 20, 2009

வக்கீல்கள் எனும் அநாகரிகர்கள்

நேற்று நடந்துள்ள உச்சகட்ட வன்முறைக் கட்டவிழ்ப்பு முழுமைக்கும் தமிழக வக்கீல்கள்தான் பொறுப்பேற்கவேண்டும். அடிதடி, கல்லெறிதல், தீவைத்தல் என அனைத்துக்கும் காரணம், காவல்துறையின் தாக்குதல்தான் என்று வக்கீல்கள் சொல்வது ஏற்கத்தக்கதல்ல.

அடிப்படையில் வழக்கறிஞர்கள் தங்களது நிலையை மறந்து, வன்முறையில் இறங்கியுள்ளனர் என்பது கடந்த சில தினங்களாக நடந்துவரும் செயல்களிலிருந்து தெரியவரும்.

இலங்கைப் பிரச்னையில் ஈழத்தமிழர் ஆதரவு நிலையில் இருந்து தமிழக வழக்கறிஞர்கள் போராடியது நியாயமானது. தொடர்ச்சியாக நீதிமன்ற அலுவல்களை நடக்கவிடாமல் செய்ததைக்கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி மீது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையிலேயே முட்டை வீசி, அடித்து, தாக்குதல் நடத்தியுள்ளனர் சில வழக்கறிஞர்கள். இந்த நிலையில்தான் நியாயமான போராட்டம் என்பது அராஜக நிலையை அடைகிறது.

ஆனால் அத்துடன் நிறுத்தாமல், தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்யவந்த காவலர்களைத் தாக்கி, சுப்ரமணியம் சுவாமியையும் கைது செய்தால்தான் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லி, அங்கிருந்து தொடர்ச்சியாக, காவல் நிலையத்துக்குத் தீ வைத்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மூன்று பேருந்துகளுக்குத் தீ வைத்து, அராஜகத்தில் தெரு ரவுடிகளைவிட மேம்பட்டவர்கள் தாங்கள் என்று நிரூபித்துள்ளனர், கறுப்பு கோட் சட்ட வல்லுனர்கள்.

நிலைமையைச் சமாளிக்க வந்த ஒரு ஜட்ஜுக்கும் தலையில் அடி. நேற்று நான் பார்த்த செய்தித் துணுக்குகளில், வக்கீல்கள் கல்லெறிந்தபிறகே, காவல்துறையினர் தடியடி நடத்தி, ரவுடி வக்கீல்களை விரட்டியுள்ளனர். இங்கு, காவல்துறையின் அராஜகம் என்றெல்லாம் கூப்பாடு போடுவதில் பிரயோசனமில்லை.

சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

***

வழக்கறிஞர்கள் கூட்டமைப்புக்கான தலைமையை இதில் வெகுவாகக் குற்றம் சொல்லவேண்டும். யாரோ நாலு பேர், இள ரத்தம், கல்லெறியலாம் என்று இறங்கும்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி, போராட்டத்தை சரியான வழியில் செலுத்தத் தெரியாத அந்தத் தலைமையின் காரணமாக, இன்று தமிழக வழக்கறிஞர்கள்மீது அனைவருக்கும் மரியாதை குறைந்துள்ளது. இதை ரிப்பேர் செய்ய வழக்கறிஞர்களுக்கு பல மாதங்கள் எடுக்கும்.

சட்டக்கல்லூரி வன்முறை ஆரம்பித்து இன்றுவரையில் வழக்கறிஞர்கள் என்றால் கத்திக்குத்து, வன்முறை, பஸ் எரித்தல் என்று இருந்தால், நாளை இந்தியாவின் நிலைமை என்னாவது?

வழக்கறிஞர்கள் இன்று தங்கள் நிலையை மட்டுமே எடுத்துச் சொல்லி, மீண்டும் நீதிமன்றங்கள் முன் போராட்டம் செய்யப்போகிறார்களாம். இவர்கள் செய்த தவறுக்கு யார் மன்னிப்பு கேட்கப்போகிறார்கள்?

35 comments:

 1. in tn, it is amazing how debates about an ethnic holocaust gets completely sidetracked in discussing about the safety or otherwise of publicity mongers like sswamy and cho. in this case it is completely the folly of the leadership of lawers. unfortunate really. and sad.
  arul

  ReplyDelete
 2. நாங்க போலீஸ் இல்ல பொறுக்கி என்று ஒரு கூட்டம்,இதுக்கு முன்ன படிக்கும் போதே நாங்கெல்லாம் அப்பவே அப்படி என்ற ரீதியில் சும்மா பூந்து விளையாண்டாங்க. அப்போ கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்த காவல்துறை, இன்று அவர்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும் நேரடியான ஆபத்து என்று வந்ததால் உள்ள இறங்கி ஊடு கட்டுனாங்க பாருங்க...
  ஓரமா நிக்கிற வண்டி இவங்கள என்ன பண்ணுச்சு.. பழைய பகையை தீர்க்க இதான் சமயம் என்று ஒரு ஒரு வண்டியையும் நொறிக்கினாங்க பாருங்க... அப்போ இதெல்லாம் இல்லாத (பதவி, பணம்) அப்பாவி, அந்த நிமிசத்துல நிதானம் இழந்து செய்யற ஒரு சில காரியங்களுக்கு ஒரு வருஷம், அஞ்சு வருஷம் என்று உடம்ப ஓடிச்சு களி திங்க வைக்க இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு..

  ReplyDelete
 3. Tamilnadu lawyers have no regard for any Law. Their rowdyism in the court complex is shocking. All these Lawyers should be punished and suspended from practicing Law.

  ReplyDelete
 4. Arul,

  The real reason is due to the "COWARDICE" of the LTTE benamis in TN.

  Unless they are cowards, why should they resort to violence against Swamy, who is considered to be a "publicity monger", according to experts like you. He has not sought any publicity but it is being given on a platter by the "fools" themselves.

  All these violent acts against Swamy sends across a very clear message to the general public. Why are these "lawyer rowdies" are AFRAID of Swamy and go to the extent of even killing him? If Swamy is only a "publicity monger" nobody will go to kill him, right? so, there must be some "real substance" in whatever he says or does, right? That is why these so-called 'Thamizh Veerans" could not even tolerate his words & they go the extent of tryign to kill him even inside the Judges Chamber in HC.

  So much for the "valour" of these rowdies. LTTE money is playing havoc in TN. Its repurcussion will be felt in the ensuing LS elections. Wait and see.

  ReplyDelete
 5. Law makers are turning law breakers with impunity ! State which once boasted of great legal luminaries is now witness to such a despicable situation.

  ReplyDelete
 6. Its really funny to see some "eminent" people blaming Cho and Su. Swamy for all the nonsense that happened yesterday.

  Times Now தொலைக்காட்சியில் மதிமுக பேச்சாளர் நன்மாறன் என்பவர் சு.சுவாமி ஜாதி பெயரைச் சொல்லி திட்டினார் என்று சால்ஜாப்பு கொடுக்கிறார்.

  யார் எந்த ஜாதியை எப்படியெல்லாம் திட்டுகிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

  ReplyDelete
 7. வக்கீல்கள் ஆட்டோ டிரைவர்கள் போல தான். எல்லாரும் அவர்களை திட்டுவார்கள். பல சமயம் ரவுடிதனம் செய்கிறார்களே என எரிச்சல் வரும். ஆனால் ரோட்டில் விபத்து என்றாலோ பிரச்சனை என்றாலோ உடனே உதவுவது ஆட்டோ டிரைவர்கள் தாம். அது போல சமூக பிரச்சனைகளுக்கு மற்ற துறையினர் சுய நலத்துடன் மௌனம் காக்க, வக்கீல்கள் தான் முதலில் களத்தில் குதிக்கிறார்கள். ஓரிரண்டு சம்பவங்கள் இந்த துறைக்கு களங்கம் ஏற்படுத்தி விடாது.

  ReplyDelete
 8. arunachalam,
  i am no expert as you call me, but i will rather talk about the human suffering on an unprecedented scale that is being inflicted by a 'democratic' government that my country supports. sure the lawyers are behaving in a completely mindless and violent fashion which no one can support or condone. hope you heard what soli sorabji had to say about the police too. and i *am* amazed by the uncanny ability with which some self seekers can turn the focus on themselves every time an important issue crops up. about the rest of your predictions i have no clue, and please do not try to box people in to compartments for the ease of your arguments. easily done, no purpose served .
  arul

  ReplyDelete
 9. First, a 60 year old Subramanian Swamy was attacked inside the court house in front of judges by advocates.

  In an unprecedented and despicable show of intolerance, a group of advocates on Tuesday assaulted Janata Party president Subramanian Swamy and hurled eggs and invectives on him at the Madras High Court hall in full view of a couple of judges. Swamy, who was at the court in connection with the Chidambaram Natarajar temple case, received a couple of punches on his back from the unidentified unruly advocates.

  ..

  Some threw rotten eggs inside the court hall and shouted filthy slogans. The slogans included `Brahmin dog down down’ and ..

  Source : Express Buzz  Next, the police and the lawyers fought a pitched battle straight out of a war movie.

  Though the entire top brass of the city police was present, they could exercise little control over the force. Even when the acting chief justice, flanked by a dozen senior judges, came out of the court and walked towards the battlezone to pacify the warring groups, they were greeted by stones and had to beat a hasty retreat. Justice Arumuga Perumal Adityan who advanced towards the police cordon waving his hands, was lathicharged and suffered an injury on his head. The climax to the clash was the burning of the police station on the campus. As security personnel withdrew from inside the structure, advocates barged in and smashed up the property before setting it on fire.

  Source : Times of India

  One of the judges remarked,

  “There is a limit for everything,’’ Justice Chandru was heard yelling.

  We will not go into the details (but broadly agree with the judge).

  This whole incident is very fishy. Mr Swamy cannot even win 10,000 votes. His opinion on Sri Lanka means nothing just like Cho Ramasamy’s opinion means nothing. 39 of 40 Central MPs are not eligible to participate in the Ooty Dog Show (except Mani Shankar Aiyer - who is a fine specimen). There are only two canines in the Tamilnadu assembly (both not in the ruling coalition). Both of them resemble elephants more than dogs. From the police to education to economy to even temple administration - Brahmins are close to zero.

  Whatever harm ‘Brahmin dog’ deposit loser Koombai Swamy can do, 39 victorious and brave MPs should be able to undo. Whatever harm Rajapalayam Cho Ramasamy can do via his lowly magazine, 22 TV channels and top print media owned by the Real Tamils should be able to undo.

  This caste obsession is making Tamils the laughing stock of the world. The Real Dravidian Tamils should stop pretending like they are still being oppressed by some fancy force. They control the government at the centre in an unprecedented way. Finance, Health, Telecom, Transport,Home, Social Justice - all are with Real Tamils. The only “dog” Chippiparai Mani Shankar is relegated to obscurity.

  Just treat the two old men like comic characters if you wish. Beating up 60 year old people is not very brave. The only place now to show bravery is in the fields of Wanni.If 39 Brave Hot Blooded Tamil MPs and 234 MLAs are not on your side, that is a bigger problem than two powerless old men.

  Ignore them.

  From: http://realitycheck.wordpress.com/2009/02/20/bar-attack/

  ReplyDelete
 10. கல்லெறிந்தால் பதிலுக்கு முரட்டுத்தனமாக தடியடி நடத்துவதா.?

  கூட்டம் கூட்டமாக தரையில்படுத்துகொண்டு கையை உயர்த்தி அடிக்காதீர்கள் என்று கெஞ்சியவர்களையும் அடித்தி நொறுக்கினார்களே அவர்களும் அநாகரிகர்களே..

  ReplyDelete
 11. ஏனிந்த காவல்துறையினர்,நீதிமன்ற வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர்.?

  வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறையினரும் அநாகரிகர்களே

  ReplyDelete
 12. அவர்களை அவர்களின் வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ வைத்து கைது செய்திருந்தால் இவ்வளவு பெரிய கலவரத்தை தவிர்த்திருக்க முடியுமே? பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் இரவோடு இரவாக கைது செய்த போலீசாருக்கு இந்த சின்ன விஷயம் கூடவா தெரிய வில்லை

  ReplyDelete
 13. காஷ்மீர் பிரச்சினை முதல் ஸ்ரீ லங்கா பிரச்சினை வரை சில பிரச்சினைகளின் அடிப்படையில் சிறிய அளவில் துவங்கிய மக்கள் இயக்கங்களை கண்மூடித்தனமாக அரசாங்கங்கள் (போலீஸார்) நசுக்க முற்பட்டதே, அந்த இயக்கங்கள் பெரிய அளவிலான போராட்டங்களாக மாறியதற்கு முக்கிய காரணம் ஆகும். துவக்கத்திலேயே சரியான அணுகுமுறை இருந்திருந்தால், பல பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளப் பட்டிருக்கும். இந்த விஷயத்தில், அரசுக்கும், போலீசாருக்கும் மிகப் பெரிய பொறுப்புக்கள் உண்டு.

  ReplyDelete
 14. ஒரு நாட்டின் அரசு அதன் மக்களுக்கு பெற்றோரை ஒத்தது. குழந்தைகள் தவறு செய்யலாம். பெற்றோர் கண்டிக்கலாம். ஆனால், குழந்தைகளை திருத்துவதைத் தவிர்த்து, பெற்றோரே குழந்தைகளை தாக்க ஆயுதங்களை எடுக்கக் கூடாது என்பதே என் கருத்து. பல சமயங்களில் பிரச்சினைகளைத் தீர்கிறோம் என்று அதிகப் படுத்தும் போக்கையே நம்மால் பார்க்க முடிகிறது.

  ReplyDelete
 15. Badri,
  I am surprised that you wouldn't allow my previous comment (addressed to you and Arul Selvan). There was no personal attack on anybody in that comment. Of course it is entirely within your rights to decide which comments to allow or reject. Unfortunately, I didn't save a copy because I did not expect you to reject it. But now you have proven that you are no different from Cho and Ram in censoring alternate view point. When I posted my comment there were only eight comments. Current count is 11.

  ReplyDelete
 16. Lawyers should know how to behave and uphold the dignity of the profession.So should policemen/police women.In tamil nadu the political culture is so rotten that these two groups of 'professionals' can do anything and get away with that. Many lawyers are doing katta panchyat and act as brokers between parties and police. Such unruly behavir is a
  symptom of a deeper malaise.That suits the
  powers that be. This is the reality.

  ReplyDelete
 17. "Badri,
  I am surprised that you wouldn't allow my previous comment (addressed to you and Arul Selvan)."

  As far as I can see, I have not blocked any comments, except the usual blog aggregating spams. Since you are posting as anonymous, I can't see which anonymous you are and hence cannot respond to which anonymous comment you are referring to.

  ReplyDelete
 18. //Since you are posting as anonymous, I can't see which anonymous you are and hence cannot respond to which anonymous comment you are referring to.//

  Smart answer. I said that the comment was addressed to you and Arul Selvan. To be specific, it begins with:

  //
  Badri and Arul Selvan,

  //

  If you say you haven't really received a comment with this beginning I have nothing more to say.

  ReplyDelete
 19. "Smart answer. I said that the comment was addressed to you and Arul Selvan. To be specific, it begins with:"

  Oh, stop it and grow up. If you have two bits of brain, you will scan and notice that I allow every comment including the ones that call me a bastard. In all my years of blogging, I have blocked only one non-spam comment, a comment by Kasi.

  If you wish, post the damn thing again. I hardly care what you have to say, nor am I going to respond to you. The last thing I want is cretins like you to accuse me of censorship.

  ReplyDelete
 20. Badri,
  Cool down! I am very well grown to my natural size and wouldn't need extra doses of free tonic.

  I have already stated that I haven't saved that "damn thing" to post it again and made it clear "If you say you haven't really received a comment with this beginning I have nothing more to say". Why do have to get pissed off?

  I wrote "Smart answer" since you said "Since you are posting as anonymous, I can't see which anonymous you are and hence cannot respond to which anonymous comment you are referring to.", thinking that you may have more than one anonymous comment pending approval. Now you say that you have allowed all comments, I trust you and blame it on blogger for "swallowing" my comment.

  ReplyDelete
 21. பத்ரி,

  வழக்கறிஞர்கள் இவ்வளவு அனாகரீகமாக நடந்திருக்கக் கூடாதுதான். குறிப்பாக நீதீபதி மற்றும் காவல்துறையினர் மேல் தாக்குதலை ஆரம்பித்துப் பின் அதுவே காவல்துறையினரின் கட்டவிழ்த்து விட்ட அராஜகத்தில் முடிந்திருக்கிறது.

  ஆனால் சுப்பிரமணியசாமியின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் மேல் எந்த வருத்தமுமில்லை. இன்னும் சொல்லப் போனால் ஆனந்தமே. ஏனெனில் புலிகளின் மேலுள்ள தடையைப் பயன்படுத்தி திரை மறைவில் அவன் எத்தனை அப்பாவிகளுடைய குடியைக் கெடுத்திருக்கிறான் என்று தெரிய வந்தால் ஆச்சரியப் படுவீர்கள். நான் அறிந்து மேலை நாடுகளில் குடியுரிமை வாங்கிய சில தமிழகத்து நண்பர்கள் தமிழகம் சென்ற பொழுது சாதாரண பொதுக் கூட்டங்களில் ஈழவிடுதலைக்கு ஆதரவாகப் பேசிய ஒரே காரணத்துக்காக (புலிகளை எங்கும் குறிப்பிட்டுக் கூடப் பேசவேயில்லை) அடுத்த முறை இந்தியா நுழையும் பொழுது எந்தக் காரணமும் இல்லாமல் விசா இரத்து செய்யப் பட்டு திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்கள். 8 ஆண்டுகளாக என்ன காரணமென்று பல முறை கேட்டும் இன்று வரை எந்தப் பதிலும் வராமல் இந்தியா செல்ல முடியாமல் வயதான தாய் தந்தையரைப் பார்க்கக் கூட முடியாமல் துயரத்திலிருக்கின்றனர். இந்திய மத்திய அரசின் ஆவணங்களில் தேடித் தெரிந்து கொண்ட ஒரே உண்மை 'சுப்பிரமணியசாமி'யின் அதிகாரப் பூர்வமான வேண்டுகோளினால் இத்தடை விதிக்கப் பட்டிருக்கிறது. அதிலும் கூட எந்தக் காரணமும் கொடுக்கப் படவில்லை. அவர்கள் எந்தக் காலத்திலும் சுப்பிரமணியசாமியைப் பார்த்தது கூட இல்லை. அதிகார வர்க்கத்திலுள்ள தன்னுடைய தொடர்புகளின் மூலம் இப்படி எத்தனை பேரை புலி ஆதரவாளர்கள் என்று சொல்லி டெல்லியில் போட்டுக் கொடுத்து குடியைக் கொடுத்ததோ அந்த சுப்பிரமணியசாமி.

  நான் இதைக் கூட இங்கு அனானியாக வந்து சொல்வது என்னுடைய பெயரையும் போட்டுக் கொடுத்து தொல்லைகள் கொடுக்கும் என்ற பயத்தினால்தான். என்னுடைய ஐ.பி. முகவரியை வைத்து உங்களுக்கு என்னை அடையாளம் தெரியக் கூடும். உங்கள் மேல் நம்பிக்கையிருக்கிறது.

  ReplyDelete
 22. நான் எந்த ஐபி எண்ணையும் சேகரிப்பதில்லை. அதற்கான வழிமுறைகளை blogger கொடுப்பதில்லை. நானும் தனியாக எந்த மென்பொருளையும் பயன்படுத்துவதில்லை. அதனால் அனானிமஸாக எழுதுபவர்கள் தைரியமாக எழுதலாம்.

  ***

  சுப்ரமணியம் சுவாமி புகார் கொடுத்தார் என்பதால் இந்திய உள்துறை/குடியேறல்/விசா துறை ஒருவருக்கு விசா மறுத்துள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி இருந்தால் அது கடுமையாக எதிர்க்கப்படவேண்டியது.

  சுப்ரமணியம் சுவாமிக்கு இந்த அளவுக்கு இந்திய அரசில் மரியாதையும் ஆதரவும் இருக்கும் என்று என்னால் நம்பமுடியவில்லை. அவரை ஒரு கோமாளியாக மட்டும்தான் என்னால் பார்க்கமுடிகிறது. ஆனாலும் அவர்மீது செலுத்தப்படும் வன்முறையை நான் எதிர்க்கிறேன்.

  ReplyDelete
 23. //சுப்ரமணியம் சுவாமி புகார் கொடுத்தார் என்பதால் இந்திய உள்துறை/குடியேறல்/விசா துறை ஒருவருக்கு விசா மறுத்துள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி இருந்தால் அது கடுமையாக எதிர்க்கப்படவேண்டியது.//

  அவர் புகார் கொடுக்கவில்லை. நான் முந்தையப் பின்னூட்டத்தில் சரியாகச் சொல்லவில்லை. வெளிப்படையாக என்ன காரணமென்று இன்று வரை தெரியவில்லை. ஆனால் இந்திய வெளியுறவுத் துறையில் இந்தியாவுக்குள் நுழைய முடியாத குற்றம் செய்தவர்களின் பட்டியல் ஏதோ இருக்கிறதாம். அங்கு வேலை பார்க்கும் சாதாரணப் பணியாளர்கள் மூலம் அதில் என்ன எழுதப் பட்டிருக்கிறது என்று அறிய முயன்றதில் எந்தக் காரணமும் குறிப்பிடப் படவில்லையென்றும், வெறுமனே சுப்பிரமணியசாமியின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்ததென்றும் சொல்லியிருக்கிறார்கள். அப்பணியாளருக்கு வேறு எந்த விவரமும் தெரியாது, அவர்களுக்கு எந்த அதிகாரமுமில்லை.

  சுப்பிரமணியசாமி, சோ போன்றவர்களுக்கு இப்படியெல்லாம் கூட செய்வதற்கு அதிகார வர்க்கத்தில் ஆட்கள் இருக்கிறது. தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் செய்யப் படும் எத்தனையோ குற்றங்கள் வெளியே தெரிவது கூட இல்லை. திரைமறைவில் அதிகாரத்தைப் பயன்படுத்திக் குற்றங்கள் புரியும் சுப்பிரமணியசாமியை சந்தர்ப்பம் கிடைக்கும் போது தர்ம அடி போடுவதை வேறு என்னதான் செய்ய முடியும்?

  ReplyDelete
 24. //Whatever harm ‘Brahmin dog’ deposit loser Koombai Swamy can do, 39 victorious and brave MPs should be able to undo. Whatever harm Rajapalayam Cho Ramasamy can do via his lowly magazine, 22 TV channels and top print media owned by the Real Tamils should be able to undo//

  சுப்பிரமணியசாமி மீது சில அடிகள் விழுந்தவுடன் அடுத்த நாளே 5000 போலீஸ்காரர்களைக் கொண்டு மொத்த வக்கீல்களையும் காட்டுத்தனமாக தாக்கி பழிவாங்கினார்களே! இது சுப்பிரமணியசாமி, சோ, ஜெயலலிதா, ஜெயந்திரர் போன்றவர்களால் தான் முடியும்.

  சாதாரண மக்களுக்குச் சாத்தியமில்லை.

  இதற்கு முன் எழுதியிருந்தவர் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார்"திரைமறைவு அதிகாரம்"

  ReplyDelete
 25. //ஆனால் சுப்பிரமணியசாமியின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் மேல் எந்த வருத்தமுமில்லை. இன்னும் சொல்லப் போனால் ஆனந்தமே.//இதையே வழக்கறிஞர்கள் எனும் போர்வையில் நடமாடிக்கொண்டிருக்கும் ரவுடிக்கும்பலுக்கும் சொல்லலாமே. எப்படி நீதி மன்றத்துக்குள் காவல்துறை நுழையாது என்கிற "வீரத்தில்" இந்தக் கோழை பாசிசக் கும்பல் காவல்துறை மீது வன்முறையை வீசியது என்பதையும் அதனைத் தொடர்ந்தே காவல்துறை தாக்கியது (அவர்களும் மனிதர்கள்தானே!) என்பதையும் அனைவரும் கண்ணாரக் கண்டோ ம். வழக்கறிஞர்கள் என்கிற பெயரில் நடமாடிக்கொண்டிருக்கும் பாசிச ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துணிந்து செயல்பட்ட காவல்துறைக்கு பாராட்டுக்கள் என்று சொல்லலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக தேசத்தின் ஸ்தாபனங்கள் மீது நம்பிக்கை போவது வருத்ததுக்கு உரியது. தைரியமான பதிவுக்கு நன்றி பத்ரி.

  ReplyDelete
 26. For my views on the high Court violence please see my blog http://jannal.blogspot.com
  maalan

  ReplyDelete
 27. இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்த நாள் முதல் இந்தக் கேவலமான செயலை அருள்செல்வன் என்பவர் செய்து வருகிறார். யார் எங்கு சோவைப் பாராட்டினாலும் உடனே துள்ளிக் குதித்து வந்து வசை பாடுவதே இவரது இழிபிழைப்பாகி விட்டது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தில் வக்கீல்கள் ரவுடித்தனமாக நடந்து கொண்டுள்ளதற்காக பத்ரி கண்டனம் செய்கிறார் அதில் எங்கே ஐயா சோ வருகிறார்? ரவுடி வக்கீல்கள் செய்த பொறுக்கித்தனத்திற்கு ஏன் சோவைத் திட்ட வேண்டும்? ஏனென்றால் அருள்செல்வன் என்ற பிராமண துவேஷியின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வன்மமும் குரோதமும், ஆத்திரமும், தாழ்வுமனப்பான்மையும் பொறாமையுமே காரணம். என்ன ஐ ஐ டி யில் படித்து என்ன பிரயோசனம், இந்த இழிந்த புத்தி மாறவில்லையே. இப்படியும் சில ஜென்மங்கள் வயித்தெரிச்சலோடு அலைகின்றன. இந்த இழிந்த செயலை அருள்செல்வன் என்ற இந்த கேவலமான பிறவி தொடர்ந்து செய்து வருவதை நானும் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து அவதானித்து வருகிறேன். அருள்செல்வன் சாப்பிடும் சோற்றில் எந்த சோ வந்து மலத்தை அள்ளிப் போட்டாரா என்ன? அருள்செல்வன் இம்புட்டு ஆத்திரமும், காழ்ப்பும், வன்மமு உங்களையும் உங்கள் குடும்பத்தையுமே தாக்கும், இதனால் சோ வோ சாமியோ பாதிப்படையப் போவதில்லை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இப்படிப் பட்ட கண்மூடித்தனமான வன்மத்திற்கு பதில் சொல்லியே ஆவீர்கள்.

  பத்ரி: சாமியை கோமாளி என்று அழைத்து உங்கள் புலி ஜால்ராக்களிடம் நல்ல பெயர் எடுத்து விட்டீர்கள். சுவாமியின் சமீபத்திய காரியங்களில் எது கோமாளித்தனம் என்பதை விவரிக்க முடியுமா? எல்லாம் தெரிந்த மேதாவி என்ற எண்ணத்தில் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்துக் கருத்துத் தெரிவித்து நீங்கள்தான் இப்பொழுது இணையத்தில் கோமாளி பட்டம் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். சுவாமி ஆக்க பூர்வமாக தனக்குச் சரியென்ற கொள்கைகளுக்காக சட்டபூர்வமாகப் போராடிக் கொண்டிருக்கிறார். உங்களைப் போல ஏ சி ரூமில் உட்கார்ந்து கொண்டு இணையத்தில் வெட்டியாக எழுதிக் கொண்டிருக்கவில்லை.

  சுவாமி சொன்னாராம் விசா ரத்து செய்தார்களாம் இப்படியும் சில லூசுக்கள் எழுதித் திரிகின்றன. சுவாமி சொல்லி கேட்க்கும் ஆட்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்ன? இணையத்தில் ஏகப் பட்ட பேர்கள் இந்தியாவுக்கு எதிராக எழுதி விட்டு இந்தியாவின் விசாவுக்காக நாய் போலக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் காசில் படித்து விட்டு இந்திய சோற்றைத் தின்று விட்டு இந்தியாவை அசிங்கமாக எழுதும் பிறவிகளுக்கு ஏன் இந்தியா விசா தர வேண்டும்?

  ReplyDelete
 28. நன்றி பத்ரி. அழுகிய முட்டையை எறியும் அநாகரிகத்தை நியாயப் படுத்தியும், அதை தமிழ் உணர்வு என்று வரையறுத்து மொழி மேல் உள்ள மரியாதையை கொச்சைப்படுத்தியும், எழுத்தையோ கருத்தையோ சாதிச் சாயம் பூசி அசிங்கப் படுத்துவதற்கும் சத்தமான குரல்கள் இணையத்தில் ஏராளம். ஆங்காங்கே மெலிதாக ஒலிக்கும் நாணயமான குரல்களில் உங்களுடையதும் ஒன்று.

  ReplyDelete
 29. < அரவிந்தன் சொன்னது…
  கல்லெறிந்தால் பதிலுக்கு முரட்டுத்தனமாக தடியடி நடத்துவதா.? >

  பின்னே? கட்டிப் பிடித்து முத்தம் குடுக்க வேண்டுமா?

  சுப்பிரமணிய சுவாமியின் மீது முட்டை வீசியது, அதுவும் நீதிமன்றத்திற்குள், சட்டத்துக்குப் புறம்பான செயல். அதற்கான தண்டனையை குற்றவாளிகள் அனுபவித்தே ஆக வேண்டும். அதற்கு அடுத்த நாள் இந்தக் கோழைத்தனத்தைப் பார்த்துக் கொக்கறித்த இணய தளங்களும், அதில் "ஆசிட் வீசியிருக்க வேண்டும்" என்று எழுதிய வீரர்களும் சாயங்காலத்துக்குள்ளாகவே வக்கீல் ரவுடிகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய நிலைமை வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. அடுத்த முறை இது போல அராஜகம் செய்யும் முன்பு உடைந்த மண்டைகளும், "அய்யோ சாமி, விட்டிடுங்க" என்று போலீசிடம் கெஞ்சியதும் நினைவுக்கு வரட்டும்.

  ஒரு சந்தேகம்: "ஈழம்" என்ற இல்லாத நாட்டுக்காக இந்திய மண்ணில் பிரச்சினை செய்யும் இந்த வீரர்கள் ஏன் இலங்கைக்குப் போய் தன் "சகோதரர்களுடன்" சேர்ந்து போராடக் கூடாது?

  தன்னிலை விளக்கம்: சுப்பிரமணிய சாமி ஒரு பொய்யர், காரியவாதி, துளிக்கூட நம்பக் கூடாதவர். ஆனால், அவரை எதிர்க்க ஜனநாயக, சட்ட வழிகள் இருக்கின்றன. யார் மீது முட்டை எறிவதும் சரியல்ல.

  ReplyDelete
 30. அன்புள்ள அனானி

  முதலில் சுசுவாமி, சோ போன்றவர்களை பிராமணர்கள் என அடையாளைப்படுத்திக் கொள்வது உங்களுக்கோ அல்லது அவர்களுக்கோ தேவையாக இருக்கலாம். எனக்குத் தேவையில்லை. அவர்கள் பொது வாழ்வில் இருப்பதால் அவர்கள் செயல்களை ஒரு குடிமகன் என்ற அளவில் விமரிசிக்க எனக்கு உரிமை இருக்கிறது. முதலில் இந்த பிராமணர்/பிராமணர் அல்லாதோர் என பிரித்துப் பார்ப்பதை நிறுத்துங்கள். பிறகு மற்றவர்களுக்கு அறிவுரையோ சாபமோ கொடுக்கலாம்.
  அருள்

  ReplyDelete
 31. //உங்களையும் உங்கள் குடும்பத்தையுமே தாக்கும், இதனால் சோ வோ சாமியோ பாதிப்படையப் போவதில்லை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இப்படிப் பட்ட கண்மூடித்தனமான வன்மத்திற்கு பதில் சொல்லியே ஆவீர்கள்//

  இது சாபம் மாதிரி தெரியவில்லை. பகிரங்கமான மிரட்டல். "ஐந்து ஆண்டுகளாக அவதானித்து வருகிறேன் என்று சொல்வதைப் பார்த்தால்" இணையத்தில் வேவு பார்க்கும் ஆசாமி மாதிரி தெரிகிறது. சம்பந்தப்பட்டவர்கள் எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள். பார்ப்பனர்களின் திரைமறைவு அதிகாரம் எத்தனை ஆழம் பாயக்கூடியது என்று யாராலும் மதிப்பிட முடியாது.

  ReplyDelete
 32. பிராமணர் அபிராமணர் என்று பிரித்து இந்த இணையத்தில் மீளாத பகைமையும் வன்மத்தையும் உருவாக்கியதே நீங்களும் உங்களது கும்பலும்தானே? யார் பிரித்துப் பார்க்கிறார்கள்? சோ என்ற பெயரை எங்கே படித்தாலும் ஆக்ரோஷத்துடன் ஓடி வந்து காறி உமிழ்வது நீங்கள்தானே? அதே ஆத்திரத்தையோ கோபத்தையோ ஒரு கருணாநிதி மீதோ, ராமதாஸ் மீதோ என்றாவது உமிழ்ந்தது உண்டா? உங்கள் ஆத்திரம் ஆங்காரம் வன்மம் குரோதம் எல்லாம் சோ வின் பிறப்பின் அடிப்படையில் வந்தது என்பதை தமிழ் இணையத்தைப் படிக்கும் சிறு குழந்தை கூட அறியுமே, பெயரில் மட்டும்தான் அருள் இருக்கிறது. உடம்பு முழுவதும் பிராமண காழ்ப்பு என்னும் விஷம் ஊறி இணையம் எங்கும் வழிகிறதே படித்துக் கொண்டுதானே இருக்கிறேன். எங்கு பிராமணர்கள் பற்றி பேச்சு வந்தாலும் ஓடி வந்து ஒரு எக்காளம், எள்ளல், கேலி குசும்பு எல்லாம் கலந்து நீங்கள் எழுதியதைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பிரிவினையை வளர்த்தது நீங்கள்தான். பொது வாழ்வில் இருக்கும் எத்தனையோ பேர்களை என்றைக்காவது நீங்கள் விமர்சனம் செய்தது உண்டா? அதென்ன சோ மீதும் சுவாமி மீதும் ஜெயலலிதா மீதும் மட்டும் விமர்சனம் எப்பொழுதும் உங்களுக்கு செலக்டிவாக வந்து கொண்டேயிருக்கிறது? கவுண்டர்களிலும் தீவீர ஜாதி வெறியர்கள் உண்டு. ஆனால் ஒரு நாள் கூட இங்கு யாரும் உங்கள் ஜாதியைச் சொல்லி திட்டியது கிடையாது. உங்கள் ஜாதிப் பிரமுகர்களைக் குறி பார்த்து அவர்களை மட்டும் இழிவு படுத்தியது கிடையாது. உங்கள் ம்னதில் வன்மமும், குரோதமும் நிறைந்து இருக்கும் வரை பெயரில் மட்டுமே அருள் இருக்கும் வாழ்விலும் உங்கள் சந்ததிக்கும் அருள் என்றும் வராது. பேசாமல் பெயரை இருள் செல்வன் என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். காழ்ப்புணர்வு உங்களையும் உங்கள் சந்ததியினரையும் கொடுமையாகத் தாக்கும். பொது வாழ்வில் இருக்கும் வேறு எத்தனை பிரமுகர்களை நீங்கள் எத்தனை முறை விமர்சித்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? மனதில் ஆழத்தில் பதிந்து போய் விட்ட தாழ்வு மனப்பான்மையும், பொறாமை உணர்வும், எரிச்சலும், வெறுப்பும், காழ்ப்பும் இப்படி இணையம் முழுவதும் போய் பிராமணக் காழ்ப்பு என்ற விஷத்தைக் கக்க வைக்கிறது. உங்களுக்கு சோ மீது காறித் துப்ப உரிமை இருக்குமானால் அதன் உண்மையன காரணத்தைச் சொல்வதற்கும் சாபமிடுவதற்கும் எனக்கும் உரிமை உண்டு. பதிலுக்கு உங்களைப் போலவே காறித் துப்ப என்னாலும் முடியும். எல்லோரும் எப்பொழுதும் அடி வாங்கிக் கொண்டு மவுனமாகப் போய்க் கொண்டேயிருக்க மாட்டார்கள். இங்கே பேசப் பட்ட விஷயத்திற்கு சம்பந்தமேயில்லாத சோவை சோவை தேவையில்லாமல் இழுத்து வசை பாடியது நீங்கள்தான். அதற்குக் காரணம் உங்களிடம் மண்டிப் போய் இருக்கும் ஜாதித் துவேஷம். படிப்பும் பணமும் மட்டும் சேர்ந்தால் போதாது மனிதத்தன்மையும் வேண்டும்.

  ReplyDelete
 33. அன்புள்ள அனானி

  எதற்குமே ஒரு அளவு உண்டு. இதற்கு மேல் என்னால் நீங்கள் எழுதுவதை சிரிக்காமல் படிக்க முடியாது.என்ன வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள். நன்றி.
  அருள்

  ReplyDelete
 34. திரு. அனானி அவர்களே,


  //பிரிவினையை வளர்த்தது நீங்கள்தான்//

  சாதரண மக்களிடையே பிரிவினையை வளர்த்தது
  யாரென்பதை உங்கள் மனதை தொட்டுச்
  சொல்லுங்கள்?
  சாதரண மக்களுக்கும் கடவுள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் இடையே இடைத் தரகர்களாக இருந்துகொண்டு மக்களிடையே பிரிவினையை வளர்த்தது யாரென்பதை உங்கள் மனதை தொட்டுச் சொல்லுங்கள்?

  ReplyDelete