வாராவாரம் வெள்ளிக்கிழமை மாலை Fundsindia.com மற்றும் கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்தும் பெர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பான கலந்துரையாடலில் நாளை, 3 ஜூலை 2009 வெள்ளிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு மருத்துவக் காப்பீடு பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்.
இவர் எல்.ஐ.சி நிறுவனத்தின் சேர்மனாக இருந்தவர். கிழக்கு பதிப்பகம் சார்பாக இன்ஷூரன்ஸ் - புதையலா, பூதமா என்ற ஆயுள் காப்பீடு பற்றிய புத்தகத்தையும் ஆக்சிஜன் புக்ஸ் பதிப்பில் Small Print, Big Risk என்ற தலைப்பில் மருத்துவக் காப்பீடு பற்றிய புத்தகத்தையும் எழுதியுள்ளார். இவர் இன்ஷூரன்ஸ் ஆம்பட்ஸ்மேன் ஆகவும் இருந்துள்ளார். இன்ஷூரன்ஸ் துறையில் நிறைய அனுபவம் கொண்டவர்.
கடந்த மூன்று வாரங்களிலிருந்து ஒரு சிறு மாற்றம் இந்த முறை இருக்கும். முதலில் கிருஷ்ணமூர்த்தி சுமார் 30 நிமிடங்கள் இந்தியாவில் கிடைக்கும் மருத்துவக் காப்பீடுகள் பற்றியும் அவற்றின் நிறை குறைகள் பற்றியும் பேசுவார். அதன் பிறகு கலந்துரையாடல்.
சென்ற வாரம் கிரெடிட் கார்ட் பற்றி நடைபெற்ற கலந்துரையாடலின் ஒலிப்பதிவு
வெண்முரசு 75, புதுவையில் நான்
7 hours ago
பொதுவாக உயர் பதவியில், அதுவும் அரசுத் துறை நிறுவனங்களில் பெரும் பதவியில் இருந்தவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கமாட்டார்கள். ஏனென்றால், யாருக்கும் பதில் சொல்லி அவர்களுக்குப் பழக்கம் இருக்காது. பிறரிடமும் அதிகாரத் தொனியிலேயே பேசுவார்கள். இது கலந்துரையாடலில் இருக்கவேண்டிய அடிப்படையான ஜனநாயகத் தன்மையைக் குலைப்பதாக அமைந்துவிடும். திரு. கிருஷ்ணமூர்த்தி விதிவிலக்காக இருப்பாரா என்பது தெரியாது. அப்படி இருந்தால் மகிழ்ச்சியே.
ReplyDeleteதகவலுக்கு நன்றி..
ReplyDelete