Thursday, November 05, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 14: எமோஷனல் இண்டெலிஜென்ஸ் பற்றி சோம.வள்ளியப்பன்

இட்லியாக இருங்கள். இந்தத் தலைப்பு பயங்கர காண்ட்ரவர்ஷியலானது. சோம.வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தை எழுதிக் கொடுத்து, பா.ராகவன் அதனை எடிட் செய்து முடித்தபின், தலைப்பு என்ன வைப்பது என்ற விவாதம் தொடங்கியது. எமோஷனல் இண்டெலிஜென்ஸ் என்றால் யாருக்கும் புரியாது என்று ராகவன் முடிவு செய்தார். என்ன பெயர் வைப்பது என்பதே பெரிய சண்டையாகி, கடைசியில் வாயில் நுழைவதுபோல ஒரு பெயர் வேண்டும் என்று யாரோ சொன்னார்கள். வாயில் நுழைவது என்றால் இட்லி அல்லது வடை என்றுதான் வைக்கவேண்டும் என்று யாரோ சொல்லியிருக்கவேண்டும். இட்லி என்பதே எமோஷனல் இண்டெலிஜென்ஸின் ‘அடை’மொழியானது. இதன் காரணமாக புத்தகத்தின் தலைப்பு ‘இட்லியாக இருங்கள், இட்லி சாப்பிடுங்கள்’ என்று மாறியது. புத்தகத்தின் உள்ளேயும் இட்லி நுழைந்தது. இட்லி நுழைந்த காரணத்தால் இட்லி மாவு வந்தது.

ஆனால் வாங்குபவர்களுக்குப் பெரிய குழப்பம். இது என்ன சமையல் புத்தகமா? இந்தப் புத்தகம் விற்காது என்று பலர் நினைத்தனர். ஆனால் புத்தக விற்பனை தொடர்ந்தது. பிறகு ‘இட்லி சாப்பிடுங்கள்’ என்ற பகுதி தலைப்பிலிருந்து விடுபட்டது. ஆனாலும் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு புத்தகத்தை விற்பது எளிதாக இல்லை. கடைசியாகப் புத்தகம் வாங்கிய ஒருவர் கூட, “நீங்க குஷ்புவைப் பத்தியா இந்தப் புத்தகத்துல சொல்றீங்க?” என்று கேட்டுவிட்டார்.

இந்தப் புத்தகத்தின் தலைப்பை மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். எமோஷனல் இண்டெலிஜென்ஸ் என்றால் தமிழில் என்ன பெயர் வைக்கலாம் என்று தமிழ் ஆர்வலர்கள் சிந்திக்கட்டும். என்ன பெயராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இந்தக் கருத்தாக்கம் நம் மக்களுக்கு அவசியமானது.

ஆஹா FM 91.9 MHz-ல் நடந்த பாட்காஸ்டை இங்கேயே கேட்க:தரவிறக்கம் செய்துகொள்ள

சோம.வள்ளியப்பனின் அனைத்துப் புத்தகங்களையும் வாங்க

ஆடியோ புத்தகமாக வாங்க

***

14 வாரங்கள் தொடர்ச்சியாக வந்த இந்த பாட்காஸ்டுக்குச் சென்ற வாரம் (1 நவம்பர் 2009) விடுமுறை. மீண்டும் 8 நவம்பர் 2009 முதல் 15-வது வார நிகழ்ச்சி தொடர்கிறது. சித்த மருத்துவம் பற்றிய நிகழ்ச்சி. மருத்துவர் அருண் சின்னையா, தீனதயாளனுடன் பேசுகிறார். அலோபதி மருத்துவத்துக்கும் சித்த மருத்துவத்துக்கும் என்ன வித்தியாசம்? சாதாரண நோய்களுக்கு இரண்டு மருத்துவமுறைகளும் எப்படி வெவ்வேறு வகையில் சிகிச்சைகளை மேற்கொள்கின்றன? சித்த மருந்துகள் எப்படி உருவாக்கப்படுகின்றன? அவற்றை வீட்டிலேயே செய்யமுடியுமா? நம் நாட்டில் கிடைக்கும் விதவிதமான கீரைகளுக்கு என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன? அவற்றை உட்கொண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? எதுபோன்ற நோய்களை எதிர்கொள்ளலாம்? போன்ற பலவற்றைப் பற்றியும் உரையாடல் இருக்கும்.

3 comments:

 1. Badri,

  I bought this one with other Soma Valliappan's Alla Alla Panam series online at NHM book shop (after listening to the podcast audio file that was uploaded). I have listened to the complete audio and I really appreciate the work done by Mr Valliappan.

  He has explained the science behind it (which I did not expect and a really welcome one) and at every case he took a simple to understand example from day to day life.

  The only gripe I have is - I do not like that title or any reference to Idly in an otherwise serious and informative audio book. I am personally against simplifying anything as it takes the seriousness out of it. IMO, it can even be named as EQ or EI. If people need to know about it, let them also learn/know about it.

  The voice of Sundararaman also is very good and I was able to get the message the author intends to convey.

  I request Soma Valliappan to come up with books on other related topics.

  Thanks

  Venkat

  ReplyDelete
 2. திரு பத்ரி,

  நன்றி !

  ReplyDelete
 3. பத்ரி, ‘இட்லியாக இருங்கள்’ என்ற தலைப்பு புத்திசாலித்தனமானது என்றே சொல்வேன். எமோஷனல் இண்டெலிஜண்சை மொழிபெயர்த்திருந்தால் புத்தகம் இந்த அளவுக்கு விற்றிருக்கிறது. நானும் எனது நண்பர்களும், ‘இட்லி டெக்னாலஜி’, ‘அவன் சரியான இட்லிடா’ போன்ற சொற்றொடர்களை பயன்படுத்துகிறோம். இப்புத்தகம் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது எனது பரிந்துரை.

  ReplyDelete